Flash News
கட்டுரை
சத்துருக்கொண்டான் மனிதப்பேரவலத்தின் 26 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று
[ Friday, 9 September 2016 ,09:18:16 ]

மட்டக்களப்பு மாவட்டத்தில் 1990 ஆம் ஆண்டு செப்ரம்பர் மாதம் 9 ஆம் திகதி மாலை சத்துருக்கொண்டான் இராணுவ முகாமுக்குள் அழைத்துச் செல்லப்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 26 வருடங்கள் பூர்தியாகின்றன.

சத்துருக்கொண்டான், பனிச்சையடி, பிள்ளையாரடி, கொக்குவில் ஆகிய கிராமங்களில் வீடுகளில் தங்கியிருந்த பொது மக்களை இராணுவ முகாமில் கூட்டம் ஒன்று உள்ளதாக தெரிவித்து இராணுவம் அழைத்து சென்றதுடன் ஆண்கள் வேறு, பெண்கள் வேறு பிள்ளைகள் வேறாக தரம் பிரிக்கப்பட்டனர். 

இவற்றில் 5 பிள்ளைகள் விசேட தேவையுள்ள பிள்ளைகள், 42 பிள்ளைகள் 10 வயதிற்குட்பட்ட பிள்ளைகள், 85 பேர் பெண்கள், 28 பேர் முதியவர்கள் கொலை செய்யப்பட்டனர்.

இதுமாத்தரமன்றி கொலை செய்யப்பட்ட மக்கள் குழிகளில் தூக்கி வீசப்பட்டனர்.   அன்று மாலை 8.00 மணியளவில் பெரும் அவல ஒலி அந்த பூமி எங்கும் ஒலித்து.

இவ்வாறு வெட்டி குழியில் வீசப்பட்ட ஒருவர் அக்குழியில் விழாமல் துரதிஸ்ட வசமாக வெளியில் வீசி எறியப்பட்டார். இவ்வாறு வெட்டு காயங்களுடன் தடுப்பு வேலியருகே வீசப்பட்ட நபர் தப்பிச்சென்று அருகே இருந்த பற்றைக்குள் ஒழிந்து, மறுநாள் காலையில் அமெரிக்க மிசன் பாதிரியரால் காப்பாற்றப்பட்ட அந்த பொதுமகனால் தான் சத்துருகொண்டானில் இடம்பெற்ற படுகொலையின் அவலம் வெளி உலகிற்கு தெரியவந்தது.

இன்றுபோல் அன்றும் சர்வதேசமும், ஸ்ரீலங்கா அரசாங்கமும் மௌனம் காக்க, சத்துருக்கொணடானில் மறக்கமுடியாத அவலம் அரங்கேறி முடிந்தது.

பின்னர் மனித உரிமை ஆணைக்குழு மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் போன்ற அமைப்புக்கள் சத்துருக்கொண்டான் இராணுவ முகாமிற்கு சென்று நடந்த சம்பவத்தை முகாமிற்கு பொறுப்பான இராணுவ அதிகாரியிடம் தெரிவித்தபோதும் அவ்வாறான சம்பவம் ஒன்று அங்கு இடம்பெறவில்லை என கங்ஙகணம் கட்டினார் அன்றைய சத்துருக்கொண்டான் முகாமின் பொறுப்பதிகாரி.

இதற்கு பொறுப்பான இராணுவ அதிகாரிகளாக இம்முகாமில் கடமையாற்றிய கப்டன் காமினி வர்ணகுலசூரிய, கெரத் மற்றும் விஜயநாயக்க மேலும் இதற்கான கட்டளை அதிகாரி கேணல் பெசி பெனாண்டோ இக் கொலைக்கான முக்கிய குற்றவாளிகளாக இனங்காணப்பட்போதும் அவர்கள் இன்று வரை சதந்திர மனிதர்களாக நடமாடிக்கொண்டிருக்கின்றனர்.

நீதி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் காலத்திலும், அதன் பின்னர் மஹிந்த ராஜபக்ச ஆட்சி காலத்திலும், ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சி காலத்திலும் அமைக்கபட்ட விசாரணை ஆணைக்குழுவில் வாக்கு மூலங்கள் மக்கள் தொடர்ச்சியாக பதிவு செய்தார்கள்.

மேலும் இக்கொலை சம்பந்தமாக ஓய்வு பெற்ற நீதிபதி கே.பாலக்கிட்ணர் விசேட குழு ஐனாதிபதியினால் நியமிக்கப்பட்டு விசாரணை இடம் பெற்றது. இவ்விசாரணையில் அடையாளம் காணப்பட்ட இலங்கை இராணுவ அதிகாரிகள் காமினி வர்ணகுல சூரிய, கேரத், மற்றும் விஐய நாயக்க இவர்களுக்கு கட்டளை அதிகாரிகளாக கேணல் பேசி, பெர்ணாண்டோ ஆகியோர் குற்றவாளியாக இனம் காணப்பட்டு தீர்ப்புக் கூறப்பட்டது. 

ஆனால் இதுவரையும் எவ்வித விசாரணையும் இடம்பெறவில்லை. இந்த விசாரணைகள் எல்லாம் வெறும் கண் துடைப்பு நாடகமாக மாத்திரம் அரங்கேற்றப்பட்டது.

 

இந்த நிலையில் இன்றும் தமக்கு சர்வதே நீதி விசாரணை வேண்டும் என தெரிவித்து தம் உறவுகளின் மரணத்திற்கு நீதி கோரி ஒவ்வொரு ஆண்டும் நினைவு தினங்களை அனுஷ்டித்து வருகின்றனர்.

 

சிறப்புச் செய்திகள்
அறிவித்தல்கள்
பெ திருமதி சந்திரசேகரம்பிள்ளை திருபுரிநாகேஸ்வரி அம்மா
பி யாழ். வட்டுக்கோட்டை
வா திருகோணமலை
தி 04-01-2017
பெ திருமதி பத்மினிதேவி பத்மநாபபிள்ளை
பி யாழ். கோண்டாவில்
வா அவுஸ்திரேலியா sydney
தி 04-01-2017
பெ திருமதி சரஸ்வதி கணேஸ்(மம்மி)
பி யாழ். சரசாலை
வா லண்டன்
தி 03-01-2017
பெ திரு சீமாம்பிள்ளை மரியநாயகம்
பி மன்னார் ஒலிமடு நானாட்டான்
வா மன்னார் ஒலிமடு நானாட்டான்
தி 02-01-2017
பெ திருமதி மங்களேஸ்வரி மேனன்
பி யாழ். சங்குவேலி
வா லண்டன்
தி 02-01-2017
பெ திருமதி இராஜேஸ்வரி சிறிஸ்கந்தராஜா(கெங்கா)
பி யாழ். நீராவியடி
வா ஜெர்மனி Kaufbeuren
தி 01-01-2017
பெ திரு கோவிந்தர் சோமசுந்தரம்
பி கிளிநொச்சி பூநகரி
வா கிளிநொச்சி பூநகரி
தி 26-12-2016
பெ திரு பாலசுப்பிரமணியம் அதீஸ்
பி கனடா
வா கனடா
தி 26-12-2016