Flash News
கட்டுரை
நாளைய வன்முறையற்ற சமூகத்தை உருவாக்க சிறுவர்களை காக்க ஒன்றிணைவோம்'
[ Saturday, 1 October 2016 ,11:52:44 ]

ஒக்டோபர் முதலாம் திகதி  கொண்டாடப்படும் அனைத்துலக சிறுவர் தினத்தின் தொனிப்பொருள் 'இன்றைய சிறுவர்களே நாளைய மனித குலத்தை தக்க வைப்பவர்கள் ஆவர்'  இன்றைய சிறுவர்கள் அனைத்து அம்சங்களிலும் விருத்தியடைந்தவர்களாக இருந்தால் மட்டுமே எதிர்கால மனித சமூகத்தினை தக்க முடியும் என பிரிடோ நிறுவன தலைவர் மைக்கல் ஜொக்கிம் தெரிவித்தார்.

பெருந்தோட்ட பகுதிகளில் சிறுவர் அபிவிருத்தியில் அக்கறை காட்டி வரும் நிறுவனம் என்ற வகையில் பிரிடோ  நிறுவனம் இத் தொனிப்பொருளைக்கொண்டு சிறுவர் தின விழாவை முன்னெடுக்கவுள்ளது. 

சினிமா மோகம் பெருந்தோட்ட சமூகத்தை பெரிதும் ஆக்கிரமித்திருக்கிறது. ஆபாசப் படங்களை பார்க்கும் வாய்ப்பு வளர்ந்தவர்களுக்கு மட்டுமின்றி சிறுவர்களுக்கும் மிக இலகுவாக  கிடைக்கிறது. மதுபானம்  ஹெரொயின் போன்ற போதை பொருட்களும் சிறுவர்களும் பயன்படுத்தும்  மென் போதைப் பொருட்களும் தாராளமாக கிடைக்கின்றன.

இவற்றோடு பெற்றோர்கள் விசேடமாக தாய்மார்கள் வெளிநாடு செல்வதும் அதிகரித்துள்ளது. இக்காரணிகள் அனைத்துமே பெருந்தோட்ட சிறுவர்களை ஆபத்துக்குள்ளாக்கும் சூழ் நிலைகளாகும். 

இதனால் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகங்கள், வன்முறைகள் என்பன பெருமளவு அதிகரித்துள்ளன. அத்தோடு பல சிறுவர்கள் தற்போது கைவிடப்பட்டுள்ளனர். 

ஒரு புறம் மலையக சமூகத்தின்  கல்வித்தரத்தை கட்டியெழுப்ப ஆசிரியர் சமூகம் கடும் முயற்சிசெய்யும் இதேவேiளயில் சில புல்லுருவி ஆசிரியர்களும் இந்த பாலியில் வல்லுறவுக் கயவர்களாக மாறி சிறுவர் சமூகத்தை அச்சுறுத்துவதோடு நமது சமூகத்தை தலைகுனிய  செய்து வருகின்றனர். 

பாலியல் ரீதியில் செயல்படும் ஆசிரியர்கள் மட்டுமல்ல  பாடசாலைகளில் அனுமதி ;ஊழல்களில் ஈடுபடும் ஆசிரியர்களும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறையாளர்கள் என குறிப்பிடவேண்டும் .

சிறுவர்கள் வளர்ந்தவர்களால் வன்முறைக்கு உள்ளாக்கப்படும் வேளையில் சிறுவர்களே வன்முறையாளர்களாக மாறிவிடுகின்றனர்.

அண்மைக்காலமாக மலையக பிரதேசத்தில் பதினொன்று, பன்னிரண்டு  வயது கொண்ட சிறுவர்கள் தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இது சிறுவர்கள் தமக்கெதிராக நடைமுறைபடுத்தும் வன்முறையாகும் அண்மையில் பன்னிரன்டு பதின்மூன்று வயதுக்குட்பட்ட சிறுவர்கள்  கைத்தொலைபேசியில் ஆபாச படங்களை பார்த்ததன் விளைவாக பத்து வயதுக்குட்பட்ட சிறுமிகள் இருவரை  பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய  இரு சம்பவங்கள் பெருந்தோட்ட பகுதியில் பதிவாகியுள்ளன. 

இந்த சம்பவங்கள் படிப்படியாக சிறுவர் சமூகம் வன்முறைக்கு  ஊக்குவிக்கப்பட்ட  சமூகமாக மாறிவருவதற்கான முன்னடையாளமாகும்.

இச் சம்பவங்கள் பெருந்தோட்ட சமூகம் உளவியல் ரீதியாக நோயுற்ற சமூகமாக மாறி வருவதை காட்டுகிறது. இந்த பின்னனியில் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் ரீதியிலான மட்டுமல்ல, வேறு வகையான  வன்முறைகளில் ஈடுபடும் அனைவருக்கும் கடுமையான தண்டனை  வழங்க வேண்டும்.

சிறுவர்களுக்கு எதிரான வன்முறையாளர்கள் அடையாளம் காணப்பட்டு சமூகத்திலிருந்து ஒதுக்கப்படும் என்ற ஒரு நிலமையை உருவாக்க வேண்டும். 

சிறுவர்களை வேலைக்கு அமர்த்தும் தரகர்கள் இப்போது அன்று போல சுதந்திரமாக நடமாட முடியாமைக்கு  காரணம் அவர்களுக்கு எதிரான சமூக உணர்வு கட்டியெழுப்பட்டதாகும்.

மலையக பகுதிகளில் ஆசிரியர்கள் மாணவரின் கல்வித்தரத்தை உயர்த்துவதில் மட்டுமின்றி பெற்றாருக்கு கீழ்படிதல், நன்றியுணர்வோடு வாழுதல், மனிதர்கள் என்ற வகையில் தங்களுக்கு தனியான மதிப்பு உள்ளதை உணர்த்த முயற்சி செய்ய வேண்டும்.

எதிர்கால சமூகத்தை கட்டியெழுப்பும் ஒரு பாரிய சவாலை தாங்கள் எதிர்நோக்குவதை ஆசியர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும். 

பெற்றாரும் தங்கள் பிள்ளைகள் மத்தியில் விழுமியங்கள் வீழ்ச்சியடைவதற்கு  காரணமாக இருககாமல்  விழுமியங்களை ஏற்படுத்த கூடியவர்களாக செயலபடவேண்டுமென இவர் கேட்டுக்கொண்டார்.

சிறப்புச் செய்திகள்
அறிவித்தல்கள்
பெ திருமதி அபிதகுசலாம்பிகை தியாகேந்திரன்
பி யாழ். பருத்தித்துறை
வா யாழ். பருத்தித்துறை
தி 28-02-2017
பெ திரு சூசைப்பிள்ளை கிளமென்ற் பெர்னான்டோபிள்ளை
பி யாழ். ஊர்காவற்துறை
வா யாழ். ஊர்காவற்துறை
தி 27-02-2017
பெ திருமதி குமாரவேலு நாகம்மா
பி யாழ். நெடுந்தீவு
வா யாழ். நெடுந்தீவு
தி 26-02-2017
பெ திரு சிவசுப்பிரமணியம் சிவகணேசன்
பி யாழ். ஏழாலை
வா யாழ். ஏழாலை
தி 26-02-2017
பெ செல்வி சுகண்யா சிவஞானம்
பி புத்தளம் முந்தல்
வா லண்டன் Kingston
தி 25-02-2017
பெ திருமதி வைரமுத்து சிகாமணி
பி யாழ். அளவெட்டி
வா நெதர்லாந்து
தி 25-02-2017
பெ Dr. வயித்திலிங்கம் பாலசேகரம்
பி யாழ். கரம்பன்
வா பிரித்தானியா Ilford
தி 25-02-2017
பெ திருமதி மரியாம்பிள்ளை கனகம்மா
பி யாழ். நீர்வேலி
வா யாழ். சாவகச்சேரி
தி 24-02-2017