Flash News
கட்டுரை
களுதாவளை பொது நூலகத்திற்கு ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான நூல்கள் அன்பளிப்பு
[ Thursday, 27 October 2016 ,08:05:33 ]

மட்டக்களப்பு – மண்முனை, தென்எருவில்பற்று பிரதேச சபைக்குப்பட்ட களுதாவளை பொது நூலகத்திற்கு ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான நூல்கள் கையளிக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வு நேற்று புதன்கிழமை மாலை களுதாவளை கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது சமயம், பொதுஅறிவு, விளையாட்டு, சுகாதாரம், கணணி, விஞ்ஞானம், உள்ளிட்ட பல விடயங்களை உள்ளடக்கிய ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான புத்தகங்களை இலவசமாக களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயத்தின் தலைவர் கா.வ.வேலாயுதபிள்ளை, மேற்படி பொது நூலகத்தின் நிர்வாகம் மற்றும் வாசகர் வட்டத்தினரிடம் ஒப்படைத்தார்.

மேலும் இதன்போது களுதாவளையைச் சேர்ந்த சமூகசேவகரான அல்போன்ஸ் என்பவரும் ஒரு தொகுதி நூல்களை மேற்படி பொதுநூலகத்திற்கு கையளித்தார்.

அண்மையில் நடைபெற்ற பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட விளையாட்டுப் போட்டியில், இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றெடுத்த, களுதாவளை மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த ஜெ.ரிசானன் மற்றும், விளையாட்டுப் போட்டியில் வர்ணச்சாதனை பெற்ற கே.சந்திரகுமார், ஆகிய மாணவர்கள் இதன்போது பாராட்டப்பட்டு, வெற்றிக் கேடயங்களும் வழங்கப்பட்டன.

மேலும் இதன்போது பாடசாலை மாணவர்கள் 100 பேர் கட்டணமின்றி மேற்படி பொது நூலகத்தில் அங்கத்தவர்களாக இணைத்து கொள்ளப்பட்டனர்.

வாசகர் வட்டத் தலைவர் சு.சிவரெத்தினம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் எஸ்.குபேரன், சனசமூக அபிவிருத்தி உத்தியோகஸ்தர் டொறின் பிரபாலினி சுரேஸ் றொபேட், மற்றும், ஆலய நிர்வாகத்தினர், களுதாவளைக் கிராம பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.






சிறப்புச் செய்திகள்
அறிவித்தல்கள்
பெ திருமதி வேலுப்பிள்ளை மாரிமுத்து
பி யாழ். மிருசுவில்
வா யாழ். மிருசுவில்
தி 24-01-2017
பெ திருமதி தியாகராஜா மனோன்மணி
பி யாழ். வடமராட்சி கிழக்கு
வா யாழ். வடமராட்சி கிழக்கு
தி 23-01-2017
பெ திருமதி நேசமலர் காலிங்கராஜா
பி யாழ். இணுவில்
வா லண்டன்
தி 22-01-2017
பெ திரு சின்னத்துரை முருகேசு
பி யாழ். புத்தூர்
வா கனடா
தி 22-01-2017
பெ திருமதி சற்குணவதி தர்மராஜா (வனஜா)
பி கொழும்பு
வா நெதர்லாந்து Roermond
தி 21-01-2017
பெ திரு நாகேந்திரா நடராஜா
பி யாழ். உரும்பிராய்
வா கொழும்பு ரத்மலானை
தி 21-01-2017
பெ ஆறுமுகம் ரகுநாதன்
பி திருகோணமலை
வா திருகோணமலை
தி 19-01-2017
பெ திரு ஆறுமுகம் பசுபதிபிள்ளை
பி யாழ். புங்குடுதீவு
வா பிரான்ஸ்
தி 20-01-2017