Flash News
கட்டுரை
யேர்மனியில் நடைபெற்ற பிரிகேடியர் தமிழ்ச்செல்வனின் நினைவேந்தல்
[ Tuesday, 8 November 2016 ,06:01:00 ]

யேர்மனி - நொய்ஸ் மற்றும் தலைநகர் பேர்லினில் பிரிகேடியர் தமிழ்ச்செல்வனின் நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. 

பிரிகேடியர் தமிழ்ச்செல்வனுடன் வீரச்சாவடைந்திருந்த லெப். கேணல் அலெக்ஸ், மேஜர் கலையரசன், மேஜர் மிகுதன், லெப். மாவைக்குமரன், லெப். ஆட்சிவேல் மற்றும் மேஜர் செல்வம் ஆகிய மாவீரர்களின் 9 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வும் மிக உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

தேசியக் கொடி ஏற்றப்பட்டு பிரிகேடியர் தமிழ்ச்செல்வனுடன் உயிர்நீத்த ஏனைய மாவீரர்களுக்கும் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டன.

அதனைத் தொடர்ந்து மாவீரர்களுக்கு மக்களால் மலர் மற்றும் சுடர் வணக்கம் செலுத்தப்பட்டு, விடுதலை நோக்கிய அரங்க நிகழ்வுகளும் இடம்பெற்றன.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் உன்னத அர்ப்பணிப்பைச் செய்த மாவீரர்களை நெஞ்சில் நிறுத்தி, எத்தடைவரினும் எமது தாயக விடுதலை போராட்டத்தை தளராத துணிவோடு தமிழீழம் மலரும் வரை தாங்கிச் செல்வோம் என உறுதியெடுத்து தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்னும் தாரக மந்திரத்தை அனைவரும் ஓங்கியொலித்து உணர்வு பூர்வமாக நிகழ்வு நிறைவடைந்தது.







சிறப்புச் செய்திகள்
அறிவித்தல்கள்
பெ திருமதி வேலுப்பிள்ளை மாரிமுத்து
பி யாழ். மிருசுவில்
வா யாழ். மிருசுவில்
தி 24-01-2017
பெ திருமதி தியாகராஜா மனோன்மணி
பி யாழ். வடமராட்சி கிழக்கு
வா யாழ். வடமராட்சி கிழக்கு
தி 23-01-2017
பெ திருமதி நேசமலர் காலிங்கராஜா
பி யாழ். இணுவில்
வா லண்டன்
தி 22-01-2017
பெ திரு சின்னத்துரை முருகேசு
பி யாழ். புத்தூர்
வா கனடா
தி 22-01-2017
பெ திருமதி சற்குணவதி தர்மராஜா (வனஜா)
பி கொழும்பு
வா நெதர்லாந்து Roermond
தி 21-01-2017
பெ திரு நாகேந்திரா நடராஜா
பி யாழ். உரும்பிராய்
வா கொழும்பு ரத்மலானை
தி 21-01-2017
பெ ஆறுமுகம் ரகுநாதன்
பி திருகோணமலை
வா திருகோணமலை
தி 19-01-2017
பெ திரு ஆறுமுகம் பசுபதிபிள்ளை
பி யாழ். புங்குடுதீவு
வா பிரான்ஸ்
தி 20-01-2017