Flash News
கட்டுரை
சங்கிலியன் பூங்கா மலர்க் கண்காட்சி; இன்று நிறைவு
[ Friday, 11 November 2016 ,06:16:25 ]

வட மாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு நல்லூர் சங்கிலியன் பூங்காவில் கடந்த 5 ஆம் திகதி ஆரம்பமான மலர்க் கண்காட்சி இன்று வெள்ளிக்கிழமை 11 ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது.

வட மாகாண சுற்றாடல் அமைச்சினால் தாவர உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர்களின் பங்கேற்புடன் ஒழுங்குசெய்யப்பட்ட குறித்த கண்காட்சியைப் பார்வையிடுவதற்காக தினமும் ஆயிரக்கணக்கானோர் செல்கின்றனர்.

அத்தோடு, இந்தக் கண்காட்சியில் மரக்கன்றுகளையும் பூச்செடிகளையும் வாங்கிச் செல்கின்றனர்.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக எண்ணிக்கையில் பயன் தரு மரக்கன்றுகளும் நிழல் மரக்கன்றுகளும் பூச்செடிகளும் விற்பனையாகி வருவதாக மலர்க் கண்காட்சியில் பங்கேற்றுள்ள பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த மலர்க் கண்காட்சிக்கு செல்லும் பார்வையாளர்களை கிளைவிட்ட தென்னை மரம் ஒன்றும் அதிகளவில் கவர்ந்து வருகின்றது.

தென்னை மரங்கள் கிளை விடுவது மிகவும் அரிதாகவே நிகழும் அபூர்வம். சங்கிலியன் பூங்காவில் நுழைவு வாசலுக்கு எதிரே உள்ள வளவிலேயே இந்த அபூர்வத் தென்னை மரம் காணப்படுகிறது.

கண்காட்சிக்கு செல்கின்ற பார்வையாளர்கள் இந்தக் கிளைத் தென்னையைப் பார்வையிடுவதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.






சிறப்புச் செய்திகள்
அறிவித்தல்கள்
பெ திருமதி அபிதகுசலாம்பிகை தியாகேந்திரன்
பி யாழ். பருத்தித்துறை
வா யாழ். பருத்தித்துறை
தி 28-02-2017
பெ திரு சூசைப்பிள்ளை கிளமென்ற் பெர்னான்டோபிள்ளை
பி யாழ். ஊர்காவற்துறை
வா யாழ். ஊர்காவற்துறை
தி 27-02-2017
பெ திருமதி குமாரவேலு நாகம்மா
பி யாழ். நெடுந்தீவு
வா யாழ். நெடுந்தீவு
தி 26-02-2017
பெ திரு சிவசுப்பிரமணியம் சிவகணேசன்
பி யாழ். ஏழாலை
வா யாழ். ஏழாலை
தி 26-02-2017
பெ செல்வி சுகண்யா சிவஞானம்
பி புத்தளம் முந்தல்
வா லண்டன் Kingston
தி 25-02-2017
பெ திருமதி வைரமுத்து சிகாமணி
பி யாழ். அளவெட்டி
வா நெதர்லாந்து
தி 25-02-2017
பெ Dr. வயித்திலிங்கம் பாலசேகரம்
பி யாழ். கரம்பன்
வா பிரித்தானியா Ilford
தி 25-02-2017
பெ திருமதி மரியாம்பிள்ளை கனகம்மா
பி யாழ். நீர்வேலி
வா யாழ். சாவகச்சேரி
தி 24-02-2017