Flash News
கட்டுரை
அக்கரப்பத்தனை ரீப்பலிகன் சர்வதேச பாடசாலையில் கண்காட்சி
[ Monday, 5 December 2016 ,05:23:48 ]

அக்கரப்பத்தனை ஹோல்புறூக் பிரதேசத்திலுள்ள ரீப்பலிகன் சர்வதேச பாடசாலை மாணவர்களினால் கழிவுப் பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்ட பொருட் கண்காட்சி நடைபெற்று வருகின்றது.

இந்த கண்காட்சி நேற்று முதல் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் போத்தல்கள் டயர்கள் மற்றும் ஏனைய பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்ட பொருட்களே இவ்வாறு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

குறித்த பாடசாலையில் 300 ற்கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.