Flash News
கட்டுரை
அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ள திறந்த சமுதாயங்கள்
[ Monday, 2 January 2017 ,10:56:37 ]

கட்டுரையாளர்-    ஜோர்ஜ் சோரஸ்- தலைவர் -திறந்த சமூதாய மன்றங்கள்

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவுசெய்யப்படமுன்னர் நான் எனது நண்பர்களுக்கு ஒரு விடுமுறை வாழ்த்துச்செய்தியை அனுப்பியிருந்தேன். அதிலே தற்போதைய நிலையை வழமைபோன்றதன்று பிரச்சனைக்குரிய உலகில் உங்களுக்கு சிறப்பானது நடக்க வாழ்த்துக்கள்' என எழுதியிருந்தேன். தற்போது இந்தச் செய்தியை உலகிலுள்ள ஏனையவர்களுடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன். இதைச் செய்யமுன்னர் நான் யார் நான் எதற்காக முன்னிலையாகிநிற்கின்றேன் என்பதைக் கூறவிரும்புகின்றேன். 


தமிழில் : ஏ.​அருண்.


நான் 86 வயதுள்ள ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த யூத இனத்தவன். இரண்டாம் உலகப் போரின் இறுதியில் அமெரிக்க குடியுரிமையைப் பெற்றுக்கொண்டவன். எனது சிறுவயதிலேயே எத்தகைய அரசியல் ஆட்சிமுறை நிலவுகின்றது என அறிந்துகொள்வது முக்கியமென கற்றுக்கொண்டிருந்தேன். 1944ல் ஹிட்லரின் ஜேர்மனி ஹங்கேரியை ஆக்கிரமித்திருந்தமையே எனது ஆரம்ப கால அனுபவமாகும். என்னுடைய தந்தை நிலைமையின் பாரதூரத்தை உணர்ந்திருக்காவிட்டால் நான் மரணத்தை தழுவியிருக்கக்கூடும். 

அவர் தன்னுடைய குடும்பத்திற்கும் ஏனைய பல யூதர்களுக்கும் போலியான அடையாள ஆவணங்களை ஏற்பாடு செய்திருந்தார். அவரது துணையினால் பலரும் உயிர்பிழைத்துக்கொண்டனர். 

 

1947ம் ஆண்டில் கம்யூனிஸ ஆட்சியின் கீழிருந்த ஹங்கேரியி;ல் இருந்து தப்பிழைத்து நான் இங்கிலாந்தில் குடிபுகுந்தேன். லண்டன் ஸ்கூல் ஒவ் எக்கனமிக்ஸில் மாணவனாக இருந்த காலப்பகுதியில் தத்துவாசிரியர் கார்ல் பொப்பரின் செல்வாக்குக்குள் நான் ஈர்க்கப்பட்டேன். நான் எனக்கே தனித்துவமான தத்துவத்தை விருத்திசெய்தேன். அது நம்பகத்தன்மையற்ற நிலைமை மற்றும் நெகழ்ச்சிதன்மை ஆகியவற்றை இரு தூண்களாகக் கொண்டமைந்திருந்தது. நான் இருவகையான அரசியல் ஆட்சிமுறைகளுக்கிடையில் இதனை வடிவமைத்திருந்தேன். அதிலொன்று மக்கள் தமது தலைவர்களை தெரிவுசெய்கின்ற முறைமையாகும். இதன்படி இதன் படி தம்மைத்தேர்;ந்தெடுத்தவர்களின் நலன்களைக் காக்க வேண்டியது தலைவர்களின் கடமையாகும். மற்றையது யாதென்றால் ஆட்சியாளர்கள் தமது நலன்களைக் காத்துக்கொள்வதற்காக தமக்கு முன்பாகவுள்ள விடயங்களைத் திரிவுபடுத்துகின்ற முறைமையாகும். கார்ல் பொப்பரின் செல்வாக்குக்கு உட்பட்டு நான் முதலாவது முறைமையை திறந்த முறைமை எனவும் இரண்டாவது முறைமையை மூடிய முறைமை எனவும் அழைத்தேன். இந்த வகைப்படுத்த மிகவும் எளிமையானது. வரலாற்றுக்காலத்தில் பல மாறுபாடுகள் வரைமுறைகள் இருந்துள்ளன. நன்கு இயங்குகின்ற மாதிரிகள் முதற்கொண்டு தோல்வியடைந்த நாடுகள்வரையில் பல வித்தியாசமான படிக்கட்டுகளில் அரசாங்கங்கள் காணப்பட்டன. இருந்தும் இரு ஆட்சிமுறைகளுக்கிடையிலான வித்தியாசம் பயனள்ளதாக இருந்தது என நான் கண்டதோடு முன்னைய முறைமையை ( திறந்த முறைமை) ஊக்குவிப்பவனாகவும்; பின்னைய முறைமையை (மூடிய முறைமை) எதிர்ப்பனாகவும் மாறினேன். 

 

வரலாற்றில் தற்போதைய காலகட்டமானது மிகவும் துன்பகரமானதென நான் காண்கின்றேன். திறந்த சமுதாயங்கள் நெருக்கடி நிலையை எதிர்நோக்கியுள்ளன. அத்தோடு பாஸிஸ சர்வாதிகார முறையிலிருந்து மாபியா ஆட்சியாளர்கள் என பல்வேறு வகையான அடைக்கப்பட்ட சமுதாயங்கள் அதிகரிக்கும் போக்கு காணப்படுகின்றன. எப்படி இது நடைபெறமுடியும்? தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் வாக்காளர்களின் நியாயபூர்வமான எதிர்பார்ப்புக்களையும் அபிலாஷைகளையும் பூர்த்திசெய்வதற்குத் தவறியமை காரணமாக தற்போதைய வடிவத்திலான ஜனநாயகத்தின் மீதும் முதலாளித்துவத்தின் மீதும் ஈடுபாடற்றவர்களாக மாறிவிட்டுள்ளமையே இதற்கான ஒரே விளக்கமாக என்னால் தரமுடியும். அதாவது மிக எளிமையாக இன்னமும் கூறுவதென்றால் உயர்வர்க்கத்தவர்கள் தங்களது ஜனநாயகத்தை திருடிக்கொண்டுவிட்டார்கள் என அதிகமான மக்கள் உணர்கின்றமையே இதற்கு காரணமாகும். 

 

ஜனநாயகம் தற்போது நெருக்கடியை எதிர்கொண்டு நிற்கின்றது. உலகின் முன்னணி ஜனநாயகமாக திகழ்கின்ற அமெரிக்கா அதன் ஜனாதிபதியாக ஒரு சர்வாதிகார போக்கு கொண்டவரைத் தேர்ந்தெடுத்துள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்டதன் பின்னர் தனது காட்டுக்கூச்சலை ட்ரம்ப் வெகுவாக குறைத்துக்கொண்டுள்ளபோதிலும் அவர் தன்னுடைய நடத்தைக் கோலத்தையோ ஆலோசகர்களையே இன்னமும் மாற்றிக்கொள்ளவில்லை. அவருடைய அமைச்சரவையானது செயற்திறனற்ற தீவிரப்போக்குடையவர்களையும் ஓய்வுபெற்ற ஜெனரல்களையும் கொண்டதாகவே கட்டமைக்கப்பட்டுள்ளது. 

 

முன்னோக்கி நிற்கும் விடயங்கள் யாவை?

 

ஜனநாயகமானது அமெரிக்காவில் நெகிழ்திறன் கொண்டதாக தன்மை நிருபித்துக்கொள்ளும் என்பதி;ல் எனக்கு நம்பிக்கையுள்ளது.  நிறைவேற்று அதிகார பீடத்தினால் ஏற்படக்கூடிய அதிகப்படியான அழுத்தங்களை சந்திப்பதற்கு அமெரிக்காவி;ன் அரசியல்சாதனமும் ஊடகத்துறை உட்பட அதன் நிறுவனங்களும் சக்திகொண்டவையாக உள்ளன.அந்தவகையில் சர்வாதிகாரப் போக்கைக்கொண்டவர் உண்மையான சர்வாதிகாரியாக மாறுவதை தடுக்கக்கூடிய வல்லமையுண்டு.  அண்மைக்காலத்தில் உள்நாட்டில் காணப்படும் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண்பதில் அமெரிக்கா முன்னுரிமை காண்பிக்கும். இதனால் இலக்குவைக்கப்படும் சிறுபான்மையினர் பாதிக்கப்படுவர்.

 

அமெரிக்காவினால் உலகின் ஏனைய பகுதிகளில் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கும் ஊக்குவிப்பதற்கும் அமெரிக்காவினால் முடியாது போகும். மறுமுனையில் சர்வாதிகாரிகளுடன் ட்ரம்ப் அதிகமாக நெருங்கும் வாய்ப்புக்கள் உண்டு.

 

இது அமெரிக்காவுடன் அத்தகையவர்களில் சிலர் நெருங்கிவந்து உறவாடிக்கொள்ளவும் ஏனையோர் எவ்வித தலையீடுகளும் இன்றி தமது நடவடிக்கைகளை முன்கொண்டு செல்லவும் வழிசமைத்து;ககொடுக்கும். ட்ரம்ப் அடிப்படைக்கொள்கைகளைகளைக் காப்பதை விடவும் உடன்பாடுகளை எட்டிக்கொள்வதையே விரும்புவார்.

 

துரதிஷ்டவசமாக அவை அவரது முக்கிய ஆதரவுத்தளத்தினரிடையே பிரபலமிக்கதாக அமைந்துவிடும்.  

 

ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்காலம் குறித்து நான் மிகவும் கவலைகொண்டிருக்கின்றேன்.

 

அது ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடினின் ஆதிக்கத்திற்குள் வரக்கூடிய ஏதுநிலை காணப்படுகின்றது.

 

அவருடைய ஆட்சி முறையானது திறந்த சமுதாயத்தினுடைய வடிவத்துடன் பொருந்தக்கூடியதன்று.

 

அண்மைக்கால உலக மாற்றநிகழ்வுகளில் இருந்து நேர்மறையாக பயன்பெறுகின்றராக அன்றி அவற்றைக் கொண்டுவருவதற்காக கஷ்டப்பட்டு காரியமாற்றியவராக புடின் விளங்குகி;ன்றார். அவர் தன்னுடைய ஆட்சியின் பலவீனத்தை விளங்கிக்கொண்டார்.

 

ஜோர்ஜியா உக்ரேய்ன் மற்றும் பல பாகங்களி;ல் இடம்பெற்ற வர்ணப் புரட்சிகளினால் அவர் அச்சுறுத்தலுக்குள்ளானார். ஆரம்பத்தில் அவர் சமூக ஊடகங்களைக் கட்டுப்படுத்த விழைந்தார்.

 

ஆனால் பின்னர் மிகச் சிறப்பான நகர்வை மேற்கொண்டு சமூக ஊடக நிறுவனங்களின் வியாபார மாதிரிகளை தனக்கேற்றவாறு மாற்றி தவறான தகவல்களையும் போலிச்செய்திகளையும் பரப்ப வழிசெய்தார். இவை தேர்தல்தொகுதிகளிலுள்ள மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியதுடன் ஜனநாயகங்களையும் ஸ்திரமற்றதாக்கியது.

 

இப்படித்தான் அவர் ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு துணைபுரிந்தார். இதேவிடயம் ஐரோப்பிய ஒன்றியத்தில் 2017ல் நடைபெறவுள்ள தேர்தல்களிலும் நெதர்லாந்து ஜேர்மனி மற்றும் இத்தாலியில் நடந்தேறலாம்.

 

பிரான்ஸில் தற்போதுள்ள இரண்டு முக்கிய போட்டியாளர்களும் புட்டினுக்கு நெருங்கியவர்கள். இவர்களில் யார் பிரான்ஸ் தேர்தலில் இவ்வாண்டில் வெற்றிபெற்றாலும் ஐரோப்பாவில் புடினின் ஆதிக்கம் உறுதியாகிவிடும் என்பது திண்ணம். 1990களின் ஆரம்பத்தில் சோவியத் ஒன்றியம் கடந்துபோனதைப் போன்ற நிலை ஐரோப்பிய ஒன்றியம் எதிர்நோக்கப்போகின்றது. ஐரோப்பிய ஒன்றியத்தை காப்பாற்ற வேண்டும் என விரும்புபவர்கள் தம்மாலான அனைத்தையும் செய்வதன் மூலம் சிறந்த பெறுபேறை அடைய வழிகோலவேண்டும். 

 

வழி மூலம்   Project Syndicate

கட்டுரையாளர்-    ஜோர்ஜ் சோரஸ்- தலைவர் -திறந்த சமுதாய மன்றங்கள்.

தமிழில் : ஏ.​அருண்.

 

சிறப்புச் செய்திகள்
அறிவித்தல்கள்
பெ திருமதி வேலுப்பிள்ளை மாரிமுத்து
பி யாழ். மிருசுவில்
வா யாழ். மிருசுவில்
தி 24-01-2017
பெ திருமதி தியாகராஜா மனோன்மணி
பி யாழ். வடமராட்சி கிழக்கு
வா யாழ். வடமராட்சி கிழக்கு
தி 23-01-2017
பெ திருமதி நேசமலர் காலிங்கராஜா
பி யாழ். இணுவில்
வா லண்டன்
தி 22-01-2017
பெ திரு சின்னத்துரை முருகேசு
பி யாழ். புத்தூர்
வா கனடா
தி 22-01-2017
பெ திருமதி சற்குணவதி தர்மராஜா (வனஜா)
பி கொழும்பு
வா நெதர்லாந்து Roermond
தி 21-01-2017
பெ திரு நாகேந்திரா நடராஜா
பி யாழ். உரும்பிராய்
வா கொழும்பு ரத்மலானை
தி 21-01-2017
பெ ஆறுமுகம் ரகுநாதன்
பி திருகோணமலை
வா திருகோணமலை
தி 19-01-2017
பெ திரு ஆறுமுகம் பசுபதிபிள்ளை
பி யாழ். புங்குடுதீவு
வா பிரான்ஸ்
தி 20-01-2017