Flash News
கட்டுரை
மீட்கப்பட்ட தற்கொலை அங்கியும் அரசியல் தலைமைகளின் கருத்துக்களும்
[ Saturday, 2 April 2016 ,12:12:17 ]

தொகுப்பு - லியோணி மரியநாயகம்

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட A32 பாதையில் உள்ள மறவன்புலவு பிரதேச வீடொன்றிலிருந்து தற்கொலை அங்கி மீட்கப்பட்ட சம்பவம் குறித்த பிரதேசத்தை மட்டுமன்றி ஸ்ரீலங்கா முழுவதிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட நபர் குறித்து பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தற்கொலை அங்கி மீட்கப்பட்ட சம்பவம் குறித்து பல தரப்பினரும் பலவிதமான கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

இந்த விடயம் தொடர்பாக சர்ச்சையான கருத்து ஒன்றை முன்வைத்த முன்னாள் அமைச்சர் ஜி.எல்பீரிஸ் கொழும்பு குற்றப்புலனாய்வு தலைமையகத்தில் இன்று சனிக்கிழமை முன்னிலையாகி விளக்கமளித்தார்.

எவ்வாறாயினும் இது ஒரு திட்டமிட்ட சதி என தமிழ்த்தரப்புக்கள் தெரிவிக்கின்றன. எனினும் நடந்தது என்ன என்பது தொடர்பான உண்மையான விபரங்கள் கைதுசெய்யப்பட்ட நபரிடம் இருந்து இதுவரை பெறப்படவில்லை விசாரணைகளும் தொடருகின்றன.

தற்கொலை குண்டு தாக்குதல் அங்கி மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இராணுவச்சிப்பாய் ஒருவரிடமும் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கில பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் மன்னார் பிரதேசத்தில் இருந்து வெடிபொருட்களை எடுத்துவந்ததாக எழுந்த செய்திகளின் பின்னர் மன்னார் - மாந்தை பிரதேசத்தில் உள்ள பிரதான வீதிகளில் சோதைனைச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.  

தற்கொலை குண்டு தாக்குதல் அங்கி மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான அரசியல் தலைவர்கள் பலரது கருத்துக்கள்,

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

இலங்கையை பிளவுபடுத்த பலர் திட்டம் தீட்டிவருகின்றனர். நாட்டில் பாதுக்கப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ

இலங்கையின் தேசிய பாதுகாப்பு வீழ்ச்சியடைந்துள்ளமைக்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும். தேசிய பாதுக்கப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

புலிகள் மீண்டும் தலைதூக்கும் செயற்பாடு இதன்மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. நாடு பாதுகாகப்பாக உள்ளதா என அரசாங்கம் அறிவிக்கவேண்டும்.

சாவகச்சேரி பகுதியில் மீட்கப்பட்ட தற்கொலை அங்கி பழைமையானதொன்றாக இருக்கமுடியாது.

மக்களை ஆறுதல்படுத்துவதற்காக அரசாங்கத்தினால் இது பழைமையானதொன்று என்ற தகவல் வெளியிடப்பட்டதே ஒழிய அது பொய்ப்பிரசாரமே.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 

சாவகச்சேரியில் மீட்கப்பட்ட வெடிபொருட்கள் குறித்து முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச என்னிடம் வலியுறுத்தியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தற்போது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இது தொடர்பாக எதிர்வரும் வாரம் நாடாளுமன்றத்தில் அறிக்கை ஒன்று சமர்பிக்கப்படவுள்ளது.

போர் நடந்த பகுதிகளில், போருக்கு பின்னர் ஆயுதங்கள் மீட்கப்படுவது வழமையானது.

மீட்கப்படும் ஆயுதங்கள் தொடர்பில் வட பகுதியிலுள்ள தமிழ் மக்கள் தொடர்ந்தும் தகவல்களை வழங்கி வருகின்றனர்.

அத்துடன் ஸ்ரீலங்காவில் தீவிரவாதிகள் அல்லது வேறு குழுவினர் செயற்படுகிறார்களா என்பது தொடர்பில் விசாரணை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி

தேசிய பாதுக்காப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படவில்லை. நாட்டின் பாதுகாப்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் தலைதூக்கினால் அதனை எதிர்கொள்வதற்கு ஸ்ரீலங்கா பொலிஸாரும் பாதுகாப்பு அமைச்சும் தயாராகவே உள்ளனர்.

சாவக்கச்சேரி சம்பவம் பயங்கரவாதத்தை தலைதூக்கச் செய்வதற்கான ஊக்கமளிப்பு பிரச்சினையல்ல, மாறாக அது ஒரு தேசிய பாதுகாப்பு தொடர்பிலான பிரச்சினையாகும்.

புலிகளின் மீளுருவாக்கம் என்பதை முன்னிலைப்படுத்தி நாட்டில் சிலர் குழப்பங்களை ஏற்படுத்த முற்படுகின்றனர்

எவ்வாறாயினும் அவ்வாறு தலைதூக்கினாலும் அதனை மேற்கொள்வதற்கும், எதிர்கொள்வதற்கும் பொலிஸாரும், பாதுகாப்பு அமைச்சும் தயாராகவே இருப்பதாக கூறினார்

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்

சாவகச்சேரியில் மீட்கப்பட்ட வெடிப்பொருட்கள், வெள்ளவத்தைக்கு கொண்டு வரப்படுவதற்காக வைக்கப்பட்டிருந்திருக்கலாம்.

நவ சமசமாஜ கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ன

யாழ்ப்பாணம்- சாவகச்சேரியில் இடம்பெற்ற தற்கொலை அங்கி மீட்கப்பட்ட சம்பவம் ஒன்றிணைந்த எதிர்கட்சியினரின் சதியாக இருக்கலாம்.

இராணுவத்திற்குள் இருக்கும் அரசியல் இலாபம் கொண்டவர்கள் மூலம் இதனை மேற்கொண்டு சர்வதேசத்திற்கு காண்பிக்க செய்தார்களா என விசாரணை நடத்தப்படவேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் நாட்டை பிளவுபடுத்தி ஆட்சியை கைப்பற்றும் சிந்தனையில் உள்ளார்கள்.

வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம்

தற்கொலை அங்கி மீட்கப்பட்ட விவகாரத்தில் அரசாங்கத்திற்குள் இருக்கும் சதிசெய்யும் குழுவினர் தொடர்பு பட்டிருக்கின்றனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் மீள ஒன்றிணைகிறார்கள் என்ற அச்சத்தை ஏற்படுத்தி தமிழ் மக்கள் மீது பழியைச் சுமத்தி துன்புறுத்தும் ஒரு நாடகமே அரங்கேற்றப்பட்டிருகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன்

முன்னாள் அமைச்சர், ஜீ.எல். பீரிஸிற்கு, புனர்வாழ்வு அளிக்க வேண்டும். சாவகச்சேரியில் வெடிகுண்டுகளும் தற்கொலை அங்கியும் கண்டெடுக்கப்பட்டதாக அரசாங்கம் கூறியுள்ளதாகவும், இதுவொரு வெளிப்படையான நாடகம்.

பல்வேறு இடங்களில் புலனாய்வுப்பிரிவு மற்றும் பொலிஸ், இராணுவத்தை அரசாங்கம் வைத்துக்கொண்டு சாவகச்சேரியிலும் மன்னாரிலும் வெடிகுண்டுகள் எடுக்கப்பட்டதாக ஒரு செய்தியை பரப்பியுள்ளது.

இராணுவத்தினரால் கூட இவ்வாறு பொருட்கள் கொண்டு வந்து வைக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளதாக தெரிவிக்கின்றன.

இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட வெடிபொருட்கள் ஒருகாலத்தில் விடுதலைப் புலிகளோ அல்லது இராணுவத்தினரோ பயன்படுத்தியதாக இருக்கலாம்.

வெடிகுண்டுகள் வைக்கப்பட்டதாக, ஒரு இடத்திற்கு கொண்டு சென்ற காரணத்திற்காக கட்டாயப்படுத்தப்பட்டு பல இளைஞர் யுவதிகள் சிறைகளில் இன்றும் கைதிகளாகவுள்ளனர். அவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், வெள்ளவத்தைக்கு வெடிபொருட்கள் கொண்டு வருவதை ஜீ.எல். பீரிஸ் அறிந்தும் ஏன் அரசாங்கத்திற்கு சொல்லவில்லை? அப்படியென்றால் அவருக்கும் புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

முன்னாள் போராளிகள், போரால் பாதிக்கப்பட்ட மக்கள், காணாமல் போன குடும்பங்கள், சிறையில் உள்ளவர்கள் நிம்மதியாக வாழ முடியாமல் தொடர்ந்தும் ஒரு யுத்த சூழலில் வைத்திருப்பதற்கு அரசாங்கம் முனைவது ஏன்?...

எது எவ்வாறக இருப்பினும், யுத்தம் முடிவுற்ற பின்னர் வடக்கு கிழக்கு பகுதிகளில் அரசாங்கத்தினால் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வெடிபொருட்கள் மீட்கப்பட்ட பின்னரே பொது மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டனர்.

சாவகச்சேரியில் மட்டுமன்றி யுத்தம் இடம்பெற்ற பல்வேறு பகுதியகளிலும் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுவருகின்றன.

இதனால் தமிழ் மக்கள் மத்தில் அச்சமான சூழல் காணப்படாவிட்டாலும், சோதைனைச்சாவடிகள் அமைக்கப்படுகின்றமை யுத்தகாலத்தை நினைவுபடுத்துகின்றன.

சதித்திட்டம் தீட்டும் சிலரது செயற்பாடுகளால் தாம் தொடர்ச்சியாக சிறைவாசம் அனுபவிப்பதாக நீண்டகாலமாக சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இவ்வாறான நிலையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன என்பதை புரிந்துகொள்ள முடியாவிட்டாலும், அவர்களது மௌனம் பல கேள்விகளை எழுப்புவதாக புத்திஜீவிகள் தெரிவிக்கின்றனர். 

சிறப்புச் செய்திகள்
அறிவித்தல்கள்
பெ திருமதி அபிதகுசலாம்பிகை தியாகேந்திரன்
பி யாழ். பருத்தித்துறை
வா யாழ். பருத்தித்துறை
தி 28-02-2017
பெ திரு சூசைப்பிள்ளை கிளமென்ற் பெர்னான்டோபிள்ளை
பி யாழ். ஊர்காவற்துறை
வா யாழ். ஊர்காவற்துறை
தி 27-02-2017
பெ திருமதி குமாரவேலு நாகம்மா
பி யாழ். நெடுந்தீவு
வா யாழ். நெடுந்தீவு
தி 26-02-2017
பெ திரு சிவசுப்பிரமணியம் சிவகணேசன்
பி யாழ். ஏழாலை
வா யாழ். ஏழாலை
தி 26-02-2017
பெ செல்வி சுகண்யா சிவஞானம்
பி புத்தளம் முந்தல்
வா லண்டன் Kingston
தி 25-02-2017
பெ திருமதி வைரமுத்து சிகாமணி
பி யாழ். அளவெட்டி
வா நெதர்லாந்து
தி 25-02-2017
பெ Dr. வயித்திலிங்கம் பாலசேகரம்
பி யாழ். கரம்பன்
வா பிரித்தானியா Ilford
தி 25-02-2017
பெ திருமதி மரியாம்பிள்ளை கனகம்மா
பி யாழ். நீர்வேலி
வா யாழ். சாவகச்சேரி
தி 24-02-2017