Flash News
கட்டுரை
ஆளப்போவது யார்? – 03 : மகா.தமிழ்ப் பிரபாகரன்
[ Monday, 11 April 2016 ,10:46:48 ]

இவங்க நாலு பேரும் கிங் மேக்கரா நாங்க இருக்கறம். நீங்க கிங்கா இருங்கனாங்க. உடனே கையெழுத்து போட்டு கொடுத்துட்டன், இது மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்கள் வைகோ,திருமாவளவன், முத்தரசன், ஜி.ராமகிருஷ்ணன் அமர்ந்திருக்க இவர்களால் அறிவிக்கப்பட்ட முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த் க்கள் நலக்கூட்டணி-தேமுதிக இடையே ஏற்பட்ட உடன்பாடு பற்றி கூறியவை.

தேமுதிகவிற்கு 124 தொகுதிகள்-மக்கள் நலக் கூட்டணிக்கு 110 தொகுதிகள் என்ற தொகுதி உடன்பாட்டின் அடிப்படையில் இவர்களிடையே கூட்டணி ஏற்பட்டுள்ளது.  

தேர்தலுக்கு முன்பு முதல்வர் வேட்பாளர் என்கிற பேச்சுக்கே இடம் இல்லை, அது தவறு என்ற மக்கள் நலக் கூட்டணியின் சுயமரியாதையும் தோழமையும், விஜயகாந்த்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்ததற்கு மகாபாரத விளக்கம் சொல்லப்பட்டது.

தருமர் விஜய்காந்த்

கூட்டணி அறிவிப்பின் போது பேசிய வைகோ, பத்திரிகையாளர்களுக்கு சொல்றன், தொலைக்காட்சி ஊடகங்களுக்கு சொல்றன், எங்களை அழிக்க நினைக்கும் அண்ணா திமுக, சிதைக்க துடிக்கும் திமுக, புழுதிவாரி தூற்றுகின்ற சில பெரியவர்கள் எல்லோருக்கும் சொல்கிறேன். அவர என்ன வேணாலும் விமர்சிக்கலாம். என்னவேணாலும் கேள்விக் கேட்கலாம் என்று நினைத்தால் என்ன வேணும்னாலும் கேளுங்கள். ஆனால் தருமரை(விஜயகாந்த்) நெருங்க விடமாட்டோம்.  பீமனும்(திருமாவளவன்) அர்ஜூனுனனும்(வைகோ) பக்கத்தில் இருப்போம். எங்களத் தாண்டி தான் அவர்கிட்ட போக முடியும். அதுக்கு முன்னாடி நகுலனும்(ஜி.ராமகிருஷ்ணன்) சகாதேவனும்(முத்தரசன்) முன்னாடி நிக்கறாங்க என்றவர் எல்லாவற்றிருக்கும் முதலமைச்சர் வேட்பாளர் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை எனவும் அறிவித்தார். அப்படியே மக்கள் நலக் கூட்டணியை கேப்டன் விஜயகாந்த் கூட்டணியாகவும் பறைசாற்றினார் அர்ஜூனன் வைகோ.

2011 சட்டமன்ற தேர்தலில் வென்ற போது ஊடகவியலாளர்களிடம் உங்களை சந்திக்க நானே வருகிறேன் என்ற ஜெயலலிதா, இன்று காவல் கண்ணாடிகளின் வழியே ஊடகங்களை கவனித்துக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே ஊடகவியலாளர்கள் கேள்விக் கேட்டாலே ஜெயலலிதாவின் கேள்வியாகவே எண்ணித் துப்பும் முன்னாள் எதிர்க் கட்சித் தலைவரும் இந்நாள் முதல்வர் வேட்பாளருமான விஜயகாந்துக்கு, ஜெ.வின் கவச முகமூடியை மக்கள் நலக் கூட்டணி அணிவித்துள்ளது.

தொகுதி பங்கீட்டையும் விஜயகாந்த் முதல்வர் வேட்பாளர் என்பதையும் ஒப்பந்தமாக கையெழுத்திட்டுக் கொண்ட தேமுதிக-மநகூ, மந கூட்டணி வலியுறுத்தும் கூட்டணி ஆட்சிமுறையை சொல்லளவில் மட்டும் உறுதி செய்துகொண்டுள்ளனர்.

தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி ஆரோக்கியமானதா? தேமுதிகவோடு மக்கள் நலக்கூட்டணி சேர்ந்ததால் ‘மாற்றம்’ என இருந்த கொஞ்ச நஞ்ச மதிப்பும் இல்லாமலாகிவிட்டது, வைகோ இருக்க விஜயகாந்துக்கு முதல்வர் தகுதி வந்துவிட்டதா ? ஏன் அதை விட மேலான நல்லக்கண்ணு ஐயா இருக்கிறாரே, ஏன் திருமாவளவன் முதல்வர் வேட்பாளர் என்ற விவாதம் எழும் போது மட்டும் ‘முதல்வர் வேட்பாளர்’ முறை தவறானது என பேசினார்கள். இப்போது மட்டும்…’ என விவாதங்களும் நடந்துக் கொண்டிருந்தன. இதற்கு மத்தியில் கருணாநிதியின் ராஜதந்திரமும் சாணக்கியத்தனமும் வைகோவுக்கு வாய்த்துள்ளதாகவும் பேசப்பட்டது. எப்படி இருந்தாலும் ஆளும் அதிமுகவிற்கும்- மீண்டும் ஆளத் துடிக்கும் திமுகவிற்கும், புதிதாய் ஆள்வதற்கு எண்ணும் தேமுதிக-மக்கள் நலக்கூட்டணி தடைக்கற்களாக இருக்கும் என நம்பப்படுகிறது.

பூஜ்யத்தில் கட்சி; கண்டெய்னரில் கோடிகள்

உதிரி கட்சிகளாக சித்தரிக்கப்படும் கட்சிகள் கூட பாஜகவுக்கு செல்ல தயங்க, ‘விஜயகாந்த் எடுத்த முடிவு ஒரு தவறான முடிவு. அவர் பா.ஜ.க.வோடு இணைந்திருந்தால் எந்த நோக்கத்திற்காக கடந்த காலங்களில் பேசி வந்தாரோ அது நிறைவேறி இருக்கும். பூஜ்யத்துடன் பூஜ்யம் சேர்ந்தால் எந்த மதிப்பெண்ணும் இல்லை’ என தமிழ்நாடு பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கணக்கு சொல்லியுள்ளார்.

பூஜ்யம் என்று தெரிந்த பிறகும் தேமுதிக அலுவலகத்திலும், விஜயகாந்தின் இல்லத்திலும் பாஜகவினர் காத்துக் கிடந்தது ஏன்?’ என தமிழிசைக்கு பதில் கொடுத்த வைகோ, அதோடு தமிழ் மாநில காங்கிரஸ் எங்கள் கூட்டணிக்கு வரும் என எதிர்ப்பார்ப்பதாகவும் கூறினார்.

மார்ச் 23 தேமுதிக-மக்கள் நலக்கூட்டணி அமைந்ததிலிருந்து அடுத்த சில நாட்கள் பூஜ்யம் முதல் கோடிகள் வரை, கணக்கு கதையாகவே அரசியல் சூழல் நகர்ந்தது.

‘500 கோடி பணம்;80 தொகுதிகள் இது திமுக தரப்பிலிருந்து, ஒரு ராஜ்ய சபா; ஒரு மத்திய மந்திரி;தேவையான பணம் என்று பாரதீய ஜனதா தரப்பிலிருந்து சொல்லியும் விஜய்காந்த் உதறி எரிந்திருக்கிறார்’ என்று வைகோ கூற, விஜயகாந்த் மனைவி பிரேமலதா, சும்மா சும்மா பேரம் பேசினங்களா, பேரம் பேசினங்களா என்று சீப் பால்டிக்ஸ்ச பேசாதிங்க’ என்று ஊடகங்களிடம் பொங்கி விட்டுச் சென்றார்.  

500 கோடி ரூபாய் குற்றச்சாட்டுக்கு பதலளித்த திமுக ஸ்டாலின்,முதலில் பேச்சுவார்த்தையே நடைபெறவில்லை. ஒருவேளை பேச்சுவார்த்தை நடந்திருந்தால் வைகோ சொன்னது உண்மையாக இருந்திருக்கலாம். ஆனால், பேச்சுவார்த்தையே நடைபெறாதபோது அவர் சொன்னது எப்படி உண்மையாக இருக்க முடியும் ? விஜயகாந்த் அவர்களுடைய மனைவி பிரேமலதா அவர்கள் ஏற்கனவே இதற்கான பதிலை சொல்லி இருக்கிறார். ஆனாலும் இப்படியொரு அபாண்டமான குற்றச்சாட்டை வைகோ அவர்கள் திமுக மீது சுமத்தி இருக்கும் காரணத்தினால், இதில் சட்டப்படி உரிய நடவடிக்கையை தலைவர் கலைஞர் அவர்கள் நிச்சயமாக எடுப்பார். பொறுத்திருந்து பாருங்கள்’ என முடித்துக் கொண்டார்.

 

இதனிடையே செய்தி தொலைக்காட்சி ஒன்றில் பேட்டியளித்த வைகோ அங்கும் திமுகவின் 500 கோடி பேரத்தை உறுதியாக கூறினார். ‘திமுக தரப்பில் 500 கோடி ரூபாய் கொடுக்க முன்வந்தார்கள், 80 இடங்கள் கொடுக்க முன்வந்தார்கள் என்பது உங்களுடைய குற்றச்சாட்டு. அதுவே தவறு. திமுக தரப்பில் 1000 கோடி ரூபாய் 59 இடங்கள் கொடுக்க முன்வந்தார்கள் என சமூகவலைத்தளங்களில் வந்தது. அதுமட்டுமல்ல அதிமுகவின் பி-டீமாக செயல்படுகின்ற திரு.வைகோ அவர்கள் தலைமையில் இயங்குகிற அந்த அமைப்புக்கு 1500 கோடி ரூபாய் பணம் கொடுக்கப்பட்டது என்று…’ என தொகுப்பாளர் கேட்க, ‘இண்டெர்வியூவ இதோட கேன்சல் பண்ணிக்கிறன்’ என்று வைகோ வெளியேறினார்.

ஒரு பெண்ணை பார்த்து நீ கற்புள்ளவளா? என்பதை போன்ற கேள்வி, என்னை பார்த்து, 1,500 கோடி ரூபாய் பணம் வாங்கி கொண்டேன் என்ற கேள்வி. ஒரு பெண்ணை பார்த்து அப்படி கேட்கும் போதே, அவளின் கற்பை சந்தேகத்திற்கு உரியதாக்கிவிடுகிறது’ என பின்னர் விளக்கம் கொடுத்தார் வைகோ.

ஜெயலலிதாவின் பி-டீம்; 1500 கோடி கணக்கில் திமுகவின் 500 கோடி மறைய அடுத்து கண்டெய்னர் புயலை கிளப்பினார் மதிமுகவினரால் புரட்சிப்புயல் என அழைக்கப்படும் வைகோ.

லஞ்ச ஊழலில் சேர்க்கப்பட்ட பல ஆயிரம் கோடி ரூபாய் மேடம் ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களாவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக எனக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் உறுதியாக நம்புகிறேன். மேலும் உறுதி செய்யப்படாத தகவலின் அடிப்படையில் சிறுதாவூர் பங்களா வளாகத்திற்குள்ளாக மூடி மறைக்கப்பட்ட நிலவறைகள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும், அதில் சட்ட விரோதமாக லஞ்ச லாவண்யத்தில் பெற்ற பணம் பதுக்கப்பட்டு, மறைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிய வருகிறது’ என்ற குற்றச்சாட்டை பொதுத் தளத்திலும் தேர்தல் ஆணையத்துக்கும் குற்றச்சாட்டாக தெரிவித்தார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ. அதிமுக அமைச்சர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணமாக இவை பேசப்பட்டது. ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களாவில் அப்படியான லாரிகளும் பரப்புரை வாகனங்கள் போல் நின்றிருந்த காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின..

கருணாநிதி அவரது மகன்களை சந்தித்தாலே அரசியலாக பேசப்படும் நிலையில், அழகிரி சந்திப்பு மார்ச் 24 நடைபெற்றது. கேப்டன் கூட்டணி அறிவிப்புக்கு பின் இந்த சந்திப்பு நடைபெற்றதால் ’வைகோ அழகிரியை தன் பக்கம் சாய்த்து விடுவாரோ? என்ற பயத்தில் தான் கருணாநிதி அழைத்திருக்கிறார்’ என தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் இச்சந்திப்பு பார்க்கப்பட்டது. ஆனால் சம்பந்தப்பட்டவர்களின் தரப்பில், இது அரசியலற்ற தனிப்பட்ட சந்திப்பு என்பதோடு முடித்துக் கொள்ளப்பட்டது.

நாம் தமிழர்-ஆம் ஆத்மி

ஆம் ஆத்மி கட்சிக்கு தமிழகத்தில் வாக்குகள் இல்லை என சீமான் விவாதம் ஒன்றில் தெரிவிக்க, ‘2011 சட்டமன்ற தேர்தலிலும் 2014 நாடாளுமன்ற தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி அதிமுகவுக்கு ஆதரவாக எடுத்த நிலைப்பாடும் தற்போது ஊழல் எதிர்ப்பு நாடகமும் மக்களிடம் நாம் தமிழர் கட்சியை தோலுரித்து காட்டிவிட்டது என்பதே மெய். வருகின்ற 2016 சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதியிலும் டெபாசிட் தொகையை இழக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை’ என சீமானுக்கு பதிலளித்துள்ளது தமிழக ஆம் ஆத்மி கட்சி.

சந்திக்க முடியாத ஜெயலலிதா

54 பேர் கொண்ட பாஜகவின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியானதை ஒட்டி, பாஜக ஆளும் மத்திய அரசைச் சேர்ந்த அமைச்சர் தமிழக முதல்வர் தொடர்பாக ஒரு குற்றச்சாட்டினை எழுப்பினார்.

‘தமிழக மின் திட்டங்கள் பற்றி விவாதிப்பதற்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை தன்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை’ என மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார். இதே கருத்தையும் மத்திய சாலை போக்குவரத்து நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பொன் இராதாகிருஷ்ணனும் வழிமொழிந்தார். இந்த மொழிதலும் வழிமொழிதலும் தேர்தலுக்கு அசைப்போடும் பொருளாக மாறிப்போனது.

‘எதிர்வரும் தமிழ்நாடு சட்டப் பேரவை தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை எவராலும் வெல்லவே இயலாது என்னும் நிலையில், இது போன்ற தரம் தாழ்ந்த பொய்யான குற்றச்சாட்டுகளை அரசியல் ஆதாயத்திற்காக வைப்பது கண்டனத்துக்குரியது’ என தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா மத்திய அரசையும் அமைச்சர்களையும் முதல்வராக சந்தித்ததாக சந்திப்புகளை வரிசைப்படுத்தினார்.

மத்திய அமைச்சர்களின் இந்த குற்றச்சாட்டுக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா எந்த பதிலும் விளக்கமும் கூறாமல் இரண்டு அமைச்சர்களை விட்டு அறிக்கைகள் கொடுக்கச் சொல்லியிருக்கிறார். அந்த அறிக்கைகளும், மத்திய அமைச்சர்களை வசைபாடும் அறிக்கைகளாக இருக்கிறதே தவிர, அவர்கள் நேரடியாகச் சாட்டிய குற்றச்சாட்டுகளுக்கு பதில் கூறுவதாக இல்லை’ என ஓ.பன்னீர் செல்வத்துக்கு பதில் அறிக்கை கொடுத்தார் கருணாநிதி.

 

பாமகவின் அணுகுமுறை

உங்கள் ஊர், உங்கள் அன்புமணி’ என்பதன் வாயிலாக தமிழகத்தின் பல பகுதிகளில் மக்களை சந்திக்கும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார் பாமகவின் முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ்.

’இந்தியாவிலேயே, அதிக நகர்ப்புற வளர்ச்சி அடைந்த மாநிலம் தமிழகம். ஒரு மாநிலம் நகர் மயமாகிறது என்றால் அது வளர்ச்சி இல்லை. வாழ்வாதாரம் இல்லாமல் கிராமத்தில் இருப்பவர்கள் நிலம், வீட்டை விற்றுவிட்டு நகர்புறங்களில் அன்றாட கூலிகளாகச் செல்கின்றனர் என்பதுதான் அர்த்தம். மக்களை அதிகம் பாதிக்கும் இரண்டு விஷயங்கள் மது மற்றும் ஊழல். திமுக, அதிமுகவால் இந்த இரண்டையும் ஒழிக்க முடியாது. இந்த முறை ஆட்சியை பிடிக்க பிரிட்ஜ், வாஷிங்மெஷின் கொடுக்க உள்ளனர். மீண்டும் ஒருமுறை ஏமாற வேண்டாம். நாங்கள் மது, ஊழலை ஒழித்து கல்வி, சுகாதாரத்தை இலவசமாக கொடுப்போம். விவசாயம், தொழில் வளத்தை பெருக்கி முன்னேற்றத்தை கொடுப்போம்’ என மதுரையில் நடந்த நிகழ்வில் அன்புமணி குறிப்பிட்டுள்ளார். இந்த அம்சத்தில் பாமகவின் தேர்தல் பரப்புரை அமைந்துள்ளது.

-                                                                                                                                                                                                      - போடங்கம்மா ஓட்டு...

 

ம  

    மகா.தமிழ்ப் பிரபாகரன்

சி  சிறப்புச் செய்தியாளர்


கடந்த தொடரை வாசிக்க: 2016 ஆளப்போவது யார் ? 02 a

சிறப்புச் செய்திகள்
அறிவித்தல்கள்
பெ திருமதி அபிதகுசலாம்பிகை தியாகேந்திரன்
பி யாழ். பருத்தித்துறை
வா யாழ். பருத்தித்துறை
தி 28-02-2017
பெ திரு சூசைப்பிள்ளை கிளமென்ற் பெர்னான்டோபிள்ளை
பி யாழ். ஊர்காவற்துறை
வா யாழ். ஊர்காவற்துறை
தி 27-02-2017
பெ திருமதி குமாரவேலு நாகம்மா
பி யாழ். நெடுந்தீவு
வா யாழ். நெடுந்தீவு
தி 26-02-2017
பெ திரு சிவசுப்பிரமணியம் சிவகணேசன்
பி யாழ். ஏழாலை
வா யாழ். ஏழாலை
தி 26-02-2017
பெ செல்வி சுகண்யா சிவஞானம்
பி புத்தளம் முந்தல்
வா லண்டன் Kingston
தி 25-02-2017
பெ திருமதி வைரமுத்து சிகாமணி
பி யாழ். அளவெட்டி
வா நெதர்லாந்து
தி 25-02-2017
பெ Dr. வயித்திலிங்கம் பாலசேகரம்
பி யாழ். கரம்பன்
வா பிரித்தானியா Ilford
தி 25-02-2017
பெ திருமதி மரியாம்பிள்ளை கனகம்மா
பி யாழ். நீர்வேலி
வா யாழ். சாவகச்சேரி
தி 24-02-2017