Flash News
கட்டுரை
ஸ்ரீலங்காவில் தொழிலாளர் பற்றாக்குறை ; வெளிநாட்டு முதலீடுகள் பாதிப்பு?
[ Monday, 25 April 2016 ,11:10:24 ]

அந்நியச் செலாவணியை உள்ளீர்த்து வெளிநாட்டு முதலீடுகளின் கேந்திர நிலையமாக மாறுவதற்கு முயற்சிக்கும் ஸ்ரீலங்காவில் தொழிலாளர்களுக்கான பற்றாக்குறை அதிகரித்துள்ளது.

தொகுப்பு - துவாரகி சுந்தரமூர்த்தி

ஸ்ரீலங்கா வெளிநாட்டு நேரடி முதலீடுகளின் கேந்திர நிலையமாக மாற முயற்சித்துவரும் நிலையில், கட்டுமானத்துறையானது அதிகரித்துவரும் தொழிலாளர் தட்டுப்பாடு காரணமாக முதலீடுகளை உள்வாங்க சிரமப்படலாம் என முன்னணி நிறுவனங்களின் வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.  

எதிர்வரும் வாரங்களில் தொழிலானது முழுவேகத்தில் வளர்ச்சியடைய மிகவும் சிரமப்படக்கூடும் என்பதனை மேற்கோள்காட்டியுள்ள கட்டுமானத் தொழில்களின் சபையானது,

ஸ்ரீலங்கா அரசாங்கத்தால் திட்டமிடப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் முழுஅளவில் முன்னெடுக்கப்படும் போது தொழிலாளர் பற்றாக்குறை ஏற்படும் என எச்சரித்துள்ளது.  

பொதுமக்களின் கடுமையான எதிர்ப்பின் காரணமாக இந்தியா மற்றும் சீன நாடுகளின் தொழிலாளர்களை உள்ளெடுப்பதில்லை என ஸ்ரீலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ள போதும்,

கட்டுமான தொழிற்துறையில் வெளிநாட்டு வேலையாட்களின் தேவை பாரியளவில் காணப்படுவதாக தான் கருதுவதாக கட்டுமான தொழிற்துறையின் துணைத் தலைவர் டி.டி.விஜயமன்னி குறிப்பிட்டார்.

Daily Ft எனப்படும் ஸ்ரீலங்காவின் ஆங்கில ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மக்கள் கட்டுமான துறையில் ஈடுபட தயக்கம் காட்டுவதால் திறன்வாய்ந்த மற்றும் திறன்குன்றிய தொழிலாளர்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகின்றது. வேலைகளைச் செய்து முடிப்பதில் கட்டுமான நிறுவனங்கள் கடும் சவாலை எதிர்நோக்குகின்றன.

இதனால் சில கட்டுமான நிறுவனங்கள் ஒரு வருட குறுகிய கால அடிப்படை வீசாவில் இந்திய தொழிலாளர்களைப் பெற்றுக்கொள்ள அனுமதியைப் பெற்றுள்ளனர்.

 

ஸ்ரீலங்கா அரசாங்கம், துறைமுக நகரம் மற்றும் மாநகரமாக்கல் போன்ற திட்டங்களை ஆரம்பிக்கும்போது தொழிலாளர் தட்டுப்பாடு அதிகளவில் எற்படக்கூடும் என்பதால் வெளிநாட்டு வேலையாட்களை மேலும் அதிகளவில் அழைக்க வேண்டிவருமெனினும் இதனை அரசாங்கம் வெளிப்படையாக ஒப்புக்கொள்ள விரும்பவில்லை என அவர் சுட்டிக்காட்டினார். 


அதிகரித்துவரும் தொழிலாளர் பற்றாக்குறைக்கான தீர்வாக அரசாங்கமானது தொழிற்பயிற்சித் திட்டங்களுக்காக வரவுசெலவுத்திட்டத்தில் 500மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.  

தொழிற்சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி நிஷாங்க என்.விஜேரத்ன மேற்படி நடவடிக்கையைப் பாராட்டியுள்ளதாக குறிப்பிட்ட அவர்,

2016 ஆம் ஆண்டு முடிவில் 10 ஆயிரம் பயிற்சியளிக்கப்பட்ட தொழிலாளர்கள் தமது பயிற்சியை முடித்து இருப்பார்கள் என மேலும் தெரிவித்தார்.

மேற்படி திட்டமானது நூற்றுக்கும் மேற்பட்ட முன்னணி கட்டுமான நிறுவனங்களின் பங்களிப்புடன் 10 ஆயிரம் இளைஞர்களை 2016 இறுதிக்குள் பயிற்சியளிப்பதற்காக செயற்படுகின்றது.

இளைஞர்கள் கட்டுமான தொழிலில் ஈடுபட தயக்கம் காட்டுவதால் விசேட திட்டங்களை அமுல்ப்படுத்த வேண்டுமென 6 வருடங்களுக்கு முன்னே நாம் அப்போதைய அரசுக்கு முன்மொழிந்தபோதும் எமக்கு பதில் எதுவும் கிடைக்கவில்லை.

தச்சுவேலைகள் மற்றும் கட்டுமான வேலைகள் தொடர்பான கற்கைநெறிகள் கடந்த வருடமே பாடசாலைக் கல்வித்திட்டத்தில் இணைக்கப்பட்டன. இனியும் இதற்கான பலன்களைப் பெற சிலகாலம் பொறுத்திருக்க வேண்டும்.

இனியும் அதற்கான நேரம் எங்களிடம் இல்லை என்பதே பிரச்சினையாக உள்ளது. பல்லில்லலாத வாய் போன்றது என விபரிக்கப்படும் கட்டுமான தொழில் அபிவிருத்தி சட்டமானது பலனற்றதாக விளங்குவதும் மேலும் ஒரு தடையாக அமைகின்றது.

மேற்படி சட்டமானது சிறந்த முறையில் அமுல்படுத்தப்பட சில சட்டமூலங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் என வலியுறுத்தும் கட்டுமான தொழிற்சபை அவற்றில் குறைந்தது 25 ஆவது உடனடியாக அமுல்படுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கின்றது. 

ஒப்பந்தகாரர்களின் பதிவானது கட்டாயப்படுத்தப்படவேண்டும். கட்டுமான அபிவிருத்தி கட்டுப்பாட்டுச் சபையானது இதனை 1970 இல் இருந்து செய்துவருகின்ற போதிலும், இது சட்டத்தால் இன்னும் உறுதிசெய்யப்படவில்லை.

சுற்றறிக்கைகளை வெளியிடுவதன் மூலம் இதனைச் செய்வதை இனிமேலும் ஏற்க முடியாது. இது சட்டபூர்வமாக முன்னெடுக்கப்பட வேண்டும்.

புள்ளிவிபரவியல் திணைக்களத்தால் தொடுக்கப்பட்ட அறிக்கையின்படி உள்ளூர் கட்டுமான தொழில் மூலம் DGP க்கான பங்கானது 2015 இன் மூன்றாம் காலாண்டு பகுதியில் 95 ஆயிரத்து 189 மில்லியனாக அதிகரித்துள்ளது.

மேற்படி துறையிலிருந்து 2002 தொடக்கம் 2015 வரையான காலப்பகுதியில் சராசரியாக 47,012.86 மில்லியனானது DGPக்கான பங்களிப்பாக உள்ள அதேவேளை 2015 இன் நான்காம் காலப்பகுதியில் உச்ச பெறுமதியை எட்டியிருந்தது என கட்டுமான தொழிற்துறையின் துணைத் தலைவர் டி.டி.விஜயமன்னி நேர்காணிலின்போது மேலும் குறிப்பிட்டார்.

சிறப்புச் செய்திகள்
அறிவித்தல்கள்
பெ திருமதி அபிதகுசலாம்பிகை தியாகேந்திரன்
பி யாழ். பருத்தித்துறை
வா யாழ். பருத்தித்துறை
தி 28-02-2017
பெ திரு சூசைப்பிள்ளை கிளமென்ற் பெர்னான்டோபிள்ளை
பி யாழ். ஊர்காவற்துறை
வா யாழ். ஊர்காவற்துறை
தி 27-02-2017
பெ திருமதி குமாரவேலு நாகம்மா
பி யாழ். நெடுந்தீவு
வா யாழ். நெடுந்தீவு
தி 26-02-2017
பெ திரு சிவசுப்பிரமணியம் சிவகணேசன்
பி யாழ். ஏழாலை
வா யாழ். ஏழாலை
தி 26-02-2017
பெ செல்வி சுகண்யா சிவஞானம்
பி புத்தளம் முந்தல்
வா லண்டன் Kingston
தி 25-02-2017
பெ திருமதி வைரமுத்து சிகாமணி
பி யாழ். அளவெட்டி
வா நெதர்லாந்து
தி 25-02-2017
பெ Dr. வயித்திலிங்கம் பாலசேகரம்
பி யாழ். கரம்பன்
வா பிரித்தானியா Ilford
தி 25-02-2017
பெ திருமதி மரியாம்பிள்ளை கனகம்மா
பி யாழ். நீர்வேலி
வா யாழ். சாவகச்சேரி
தி 24-02-2017