Flash News
கட்டுரை
ஆளப்போவது யார்? 04 – மகா.தமிழ்ப் பிரபாகரன்
[ Tuesday, 26 April 2016 ,08:19:10 ]

“தாய் கழகமாம் திராவிட முன்னேற்றக் கழகத்தில் நீங்கள் வந்துச் சேரக் கூடிய இந்த நிலையைத் தாங்கிக் கொள்ள முடியாதவர்கள் இன்றைக்கு விமர்சனம் செய்யத் தொடங்கி இருக்கிறார்கள். ஏதோ தேமுதிகவை கரைக்கின்ற முயற்சியில் நான் ஈடுபட்டுள்ளதாகவும், ‘ஸ்டாலின் ஆப்பரேட்ஸ்’ என்று பத்திரிக்கைகளில் செய்திகள் வெளிவரக்கூடிய நிலை இன்றைக்கு ஒருபுறம் நடந்து கொண்டுள்ளது.  அத்தகைய செயலில் நானோ, கழகத்தில் இருக்கக் கூடியவர்களோ ஈடுபட வேண்டிய அவசியமே இல்லை. ஏனென்றால் அது  தானாகவே கரைந்து கொண்டிருக்கும் கட்சி” என தேமுதிக உட்பட மற்ற கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்வின் போது தெரிவித்தார் திமுக பொருளாளர் ஸ்டாலின். ஏப்ரல் 1 அன்று பேசிய இந்த பேச்சின் சம்பவம் ஏப்ரல் 5 அன்று தேமுதிகவில் நிகழ்ந்தது.

இதற்கிடையே நடுரோட்டில வச்சு தலைய தனியா எடுத்துடுவேன்.  நான் சொன்னா வெட்டறதுக்கு என்கிட்ட நூறு பேரு இருக்கான். அந்த நாய் பயலுக்கு வெட்றதுக்கு ஒரு பய கிடையாது. தெருவுல கிடக்கான். என்கிட்டே இருக்குற ஆளு பூரா உனக்கு தெரியும்.

இனிமேல் என்னை பத்தி பேசினான்னா வீட்டுக்குள்ள விட்டு வெட்ட விட்டுடுவேன். நான் சொன்னேன்னு சொல்லுங்க. அந்த **** பையனுக்கு போன் போட்டால் எடுக்க மாட்டேன்றான். அந்த ***** மகன் எனக்கு ஒண்ணும் வேலை செய்ய வேண்டாம். திமுகவுக்கே வேலை செய்யட்டும். இவனால நான் ஒண்ணும் ஜெயிக்கல.இவன் என்ன ***** பையன் செஞ்டுவான் அங்க. இந்த ஜாதியைக் காட்டி மிரட்டுறது, ஆளைக் காட்டி மிரட்டுறது  எல்லாம் என்கிட்டே காட்டக் கூடாது. பாலகிருஷ்ணன் கிட்ட வச்சுக்க சொல்லு. என்கிட்டே காட்டினான் என்றால் நடு ரோட்டுல நானே வெட்டிப்புடுவேன். என்ன விளையாடுறானா?’ இப்படி ஒரு பேச்சை செய்தி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சராக இருக்கும் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசியதாக வாட்ஸ் அப்பில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுவும் தேர்தல்நேர பரபரப்பு என சொல்லிவிட்டது அமைச்சர் தரப்பு.

இப்படியான நிலையில் அதிமுகவின் வேட்பாளர் பட்டியல் போயஸ் கார்டனிலிருந்து வெளியானது. 227 தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்களும் 7 தொகுதிகளில் கூட்டணி வேட்பாளர்களும் நிற்பதாக வெளியான அப்பட்டியல், கூட்டணிக்காக காத்துக் கொண்டிருந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வேல்முருகனுக்கும், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஜான்பாண்டியனுக்கும் பெரும் அதிர்ச்சியை தந்தது. இதற்காக செய்தியாளர் சந்திப்பை நடத்திய வேல்முருகன், ‘பேச வந்த அந்த தலைமையிடம் நீங்கள் கூட்டணியில் இல்லை. உங்களுக்கு இடம் இல்லை. உங்களை வெளியேற்றுகிறோம். நீங்கள் உங்கள் பாதையை தீர்மானித்துக் கொள்ளலாம்னு சொல்லலாமில்ல. இத சொல்றதல அவங்களுக்கு ஒன்னும் சங்கடம் இல்லயே. அத வந்து நேரடியா சொல்லலனா கூட தொலைப்பேசி வாயிலாக்கூட சொல்லலாம். அப்படி சொல்லவில்லை என்றால் தான் நாங்கள் அடுத்தக்கட்ட முடிவ எடுப்போம்னு சொல்லிட்டன்’…அதற்கு கூட்டணி முறிஞ்சிருச்சி அல்லது காத்திட்டு இருக்கீங்களா என செய்தியாள ஒருவர் கேட்க…அதற்கு வேல்முருகன்,’காத்துக்கிட்டலாம் இல்ல சார். பூட்டிடாங்க, கதவ சாத்திட்டாங்க. வெளியேறிட்டோம்ன்றன்’ என சிரித்துக் கொண்டு வேதனையை காட்டினார்.

அப்படி என்றால் அதிமுகவில் இருந்து வெளியேறிவிட்டேன் என்று அப்படின்னு சொல்லங்க என செய்தியாளர் கோர…அதற்கு வேல்முருகன்,’அதிமுகவிலிருந்து நான் வெளியேறயல சார். ஒரு பெரிய கட்சிய நான் அவமானப்படுத்திட்டு மேதாவித்தனத்தோட இவர் கட்சி ஆரம்பிச்ச நாலு வருசத்துல 14 சீட் கேட்டு வெளியேறிட்டார்னுவாங்க. நான் கேட்டேன். பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தது. எனக்கு அவர்கள் கொடுக்க வேண்டிய இடங்கள் கொடுத்து என்னை சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் சேர்த்துக் கொள்ளாமல் அவர்களாகவே என்னை வெளியேற்றி இருக்கிறார்கள். நான் வெளியேற்றப்பட்டவனாக இருக்கிறேன். ஆக என்னுடைய என் கட்சி தொண்டர்களிடத்தில் அடுத்தக்கட்ட நிகழ்வை குறித்து ஆலோசித்து கொண்டிருக்கிறேன். கூட்டணியில சேத்துக்கிட்டு அவங்க தான் வெளியேற்றிவிட்டோம் என்று அறிவிக்க வேண்டும்’ என்றார்.

ஸ்டாலின் தேமுதிகவை தானாகவே கரைந்து கொண்டிருக்கும் கட்சி எனக் குறிப்பிட்டதை தேமுதிகவின் 3 எம்.எல்.ஏ.களும் 5 மாவட்டச் செயலாளர்களும் 2 மாநில நிர்வாகிகளும் வெளியேறி நிகழ்த்திக் காட்டும் விதமாக செயல்பட்டனர்.  

தேமுதிக எம்எல்ஏக்கள் வி.சி.சந்திரகுமார் (கொள்கை பரப்பு செயலாளர்), சி.எச்.சேகர், எஸ்.ஆர்.பார்த்திபன், மற்றும் துணைச் செயலாளர் தேனி முருகேசன், உயர்மட்டக் குழு உறுப்பினர் கே.ஆர்.வீரப்பன், மாவட்ட செயலாளர்கள் ஜெ.விஸ்வநாதன் (வேலூர் மத்தி), என்.கார்த் திகேயன் (திருவண்ணாமலை), செஞ்சி சிவா (விழுப்புரம்), இமயம் என்.எல்.சிவக்குமார் (ஈரோடு தெற்கு மாநகர்), பி.செந்தில்குமார் (ஈரோடு வடக்கு) இவர்களே விஜயகாந்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கியவர்கள்.

இவர்கள் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்த போது எம்.எல்.ஏ. சந்திரகுமார்,’கட்சியின் செயற்குழு, பொதுக் குழு கூட்டங்களிலும், மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திலும், வேட்பாளர் நேர்காணலின்போதும், அதிமுகவை வீழ்த்த திமுகவுடன் இணைவதுதான் சரியான முடிவாக இருக்கும் என்று 95 சதவீத கட்சி நிர்வாகிகள் கூறினர். வேட்பாளர் நேர்காணலுக்கு வந்தவர்களிடம்கூட, ‘‘திமுகவில் இத்தனை சீட் தருவதாக கூறுகி றார்கள். கூட்டணி அமைக்க லாமா?’’ என்று விஜயகாந்த் கேட்டார்.

பெரும்பாலான தேமுதிகவினரின் மனநிலைக்கு எதிரான முடிவை விஜயகாந்த் எடுத்துள்ளார். மக்கள் நலக் கூட்டணியுடன் கூட்டணி சேருவது தற்கொலைக்கு சமம். எனவே, தொண்டர்களின் மனநிலையை புரிந்துகொண்டு மக்கள் நலக் கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேற வேண்டும். இது தொடர்பாக ஏற்கெனவே மார்ச் 24-ம் தேதி விஜயகாந்திடம் கடிதம் அளித்துள்ளோம். ‘‘வேட்புமனு வாபஸ் பெறுகிற வரைகூட கூட்டணி பற்றி பேசலாம். பொறுமையாக இருங்கள்’’ என்றார் விஜயகாந்த். ஆனால் எங்கள் கோரிக்கை தொடர்பாக இதுவரை அவர் முடிவு எடுக்கவில்லை. எனவே, தற்போது பத்திரிகைகள் வாயிலாக அவருக்கு கோரிக்கை விடுக்கிறோம். வரும் தேர்தலில் திமுக வெற்றி பெறுவதும், அக்கட்சித் தலைவர் கருணாநிதி முதல்வராக பதவி ஏற்பதும் உறுதி. ஆகவே, திமுகவுடன் தேமுதிக கூட்டணி சேருவதே சரியாக இருக்கும்.

நாங்கள் தேமுதிகவில் இருந்து விலகவில்லை. எங்கள் கோரிக் கைகள் குறித்து புதன்கிழமை(ஏப்ரல் 6) மதியத்துக்குள் விஜயகாந்த் நல்ல முடிவு எடுப்பார் என்று நம்புகிறோம். இல்லாவிட்டால், எங்கள் அடுத்தகட்ட முடிவு பற்றி அறிவிப்போம்’ என்றார்.

தேமுதிகவில் இருக்கையில் ஊடகங்களை அணுகவதை தவிர்த்த இவர்களில் பலர் விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்று குற்றச்சாட்டுகளையும் குறைகளையும் அடுக்கினர். 

10 நிர்வாகிகளையும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் நீக்கி புதிய நிர்வாகிகளை நியமித்து சந்திரகுமாரின் கோரிக்கைக்கு பதிலை தந்தார் தேமுதிகவின் தலைவரான விஜயகாந்த். 

போட்டி தேமுதிகவாக சந்திரகுமார் சவால்விட, இதற்கு பதில் கொடுக்க அடுத்த நாளே வைகோ பத்திரிகையாளர் சந்திப்பை கூட்டினார். அதில் வைகோ,’தமிழக அரசியல் எவ்வளவு கெட்டுப்போச்சுன்னு பாருங்க அண்ணா திமுகவும் இதே தொழில் தான். எம் எல் ஏ.களை பணம் கொடுத்து கூப்பிடறது. அடுத்த தடவ உங்களுக்கு எம் எல் ஏ சீட் கொடுக்கறன்றது. உன்ன மந்திரி ஆக்கறன்னு கூப்பிடறது. மைபா பாண்டிராஜன்ன மந்திரி ஆக்கறன்னு கூட்டிட்டு போனாங்க தேமுதிகவில இருந்து. அவரு பணத்துக்காக போகல…ஆச வார்த்த காட்டறது. திமுகவோடு கூட்டணி வெச்சா விஜயகாந்த் நல்லவரு, கூட்டணி வைக்கலன்னா அந்த கட்சிய உடைக்கணும்னு …. இந்த சந்திரகுமாருக்கு ரீச்சண்டா தான் பணம் பட்டுவாடா ஆயிருக்கும் ஏன்னா மார்ச் 28,29,30 எங்க நாலுப்பேரோட இருந்தார்’ என வைகோ பேசிக்கொண்டிருக்க…ரொம்ப வீரம்மா பேசனாருன்னு ஜி.ராமகிருஷ்ணன் எடுத்து கொடுத்தார்.

சந்திரகுமாரை பற்றி தொடர்ந்த வைகோ,’அண்னே நான் கன்னியாகுமரியில தங்கிட்டு நாளைக்கு காலைல பத்து மணிக்கு வந்தறனாரு சந்திரகுமாரு. சரி கன்னியாகுமரியில் சூரியன் உதயம் பார்க்க போறாரு போலிருக்கு, பாத்திட்டாரில்ல உதயசூரியன்ன…சரிங்க பிரதர் காலைல வாங்கனேன். 11 மணி இருக்கும் எப்ப சந்திரகுமாரு வந்துட்டாரா வந்துட்டாரான்னே…இப்ப தான் வந்தாரு. கோர்டூல அந்த சேவகன் இன்னாரு பேரச் சொல்லி மூணு தடவ கூப்பிடுவான் பாருங்க, அது மாதிரி. அது அக்கூஸ்ட்ட கூப்பிடறதுக்கு, இது அக்கூஸ்ட் தான…பணம் வாங்கறது. மூணு நாள்ல பேசற பேச்ச பாத்தீங்கனா ஜெயலலிதாவையும் அட்டாக் பன்னாரு…கலைஞரையும் அட்டாக் பன்னாரு. நான் கூட கேப்டன்கிட்ட சந்திரகுமாரு பிரமாதமா பேசனாறுங்கன்னேன். நேத்து இவ்வளவு கதைய எடுத்து விடறாரே…பச்ச துரோகமய்யா இது. இதவிட பால்ல விசத்த கொடுத்து விஜயகாந்துக்கு விசத்த கொடுத்துருக்கலாம் நீ. சோத்துல விசத்த போட்டிருக்கலாம்…போடுவீங்க நீங்க. அந்த மாதிரி ஆளுங்க. நாங்க நம்பனவுங்களுக்காக தலைய கொடுப்பம், நம்பனவுங்களுக்காக உயிர கொடுப்பம். இத ரொம்ப கடுமையான வார்த்தைகள்ல சொல்லணும்னா வேற ஒரு தொழில் இருக்கு. இன்னோரு தொழில் பன்னலாமேன்னு கேட்டரலாம். அது தறி நெசவா இருக்கும். உழுவறதா இருக்கும். உழவு செய்யறதா இருக்கும். பிசினஸ் பன்றாதா இருக்கும். வேற ஒரு தொழில். உலகமெல்லாம் பிரசித்தி பெற்று ஆதி மனிதன் காலத்துல இருக்கிற தொழில். அதை சட்டபூர்வமாக்க வேண்டும் என்று சிலர் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்த தொழில்ல செய்யலாம் இவங்க. கலைஞரும் செய்யலாம் இவங்களும் செய்யலாம். நான் ஒண்ணும் தப்பா சொல்லலீங்க. அவருக்கு நாதஸ்வரம் வாசிக்கிற தொழிலும் தெரியும். அதனால சொன்னன். ஒண்ணும் இழிவா சொல்லிடல. தலைசிறந்த இசை  தமிழிசை. அதற்காக உயர்வா சொல்றன் அண்ணன் கலைஞர’ என்ற வைகோ பக்கம் தாக்குதல் திரும்பியது.

திமுக தலைவர் கருணாநிதியை சாதிவைத்து இழிவாக பேசிவிட்டார் வைகோ என ஆங்காங்கே அவரின் உருவபொம்மைகள் திமுக தொண்டர்களால் எரிக்கப்பட்டன. கூட்டணியில் இருப்பவர்களும் தனிநபர் விமர்சனத்தில் எங்களுக்கு உடன்பாடில்லை என்றனர்.

இந்த களேபரங்களுக்கு இடையே அதிமுகவின்  வேட்பாளர் பட்டியலில் திருத்தத்துக்கு மேல் திருத்தம் என வந்துக் கொண்டிருந்தது.

                                                                            -  போடங்கம்மா ஓட்டு…

மகா.தமிழ்ப் பிரபாகரன்

சிறப்புச் செய்தியாளர்

சிறப்புச் செய்திகள்
அறிவித்தல்கள்
பெ திருமதி அபிதகுசலாம்பிகை தியாகேந்திரன்
பி யாழ். பருத்தித்துறை
வா யாழ். பருத்தித்துறை
தி 28-02-2017
பெ திரு சூசைப்பிள்ளை கிளமென்ற் பெர்னான்டோபிள்ளை
பி யாழ். ஊர்காவற்துறை
வா யாழ். ஊர்காவற்துறை
தி 27-02-2017
பெ திருமதி குமாரவேலு நாகம்மா
பி யாழ். நெடுந்தீவு
வா யாழ். நெடுந்தீவு
தி 26-02-2017
பெ திரு சிவசுப்பிரமணியம் சிவகணேசன்
பி யாழ். ஏழாலை
வா யாழ். ஏழாலை
தி 26-02-2017
பெ செல்வி சுகண்யா சிவஞானம்
பி புத்தளம் முந்தல்
வா லண்டன் Kingston
தி 25-02-2017
பெ திருமதி வைரமுத்து சிகாமணி
பி யாழ். அளவெட்டி
வா நெதர்லாந்து
தி 25-02-2017
பெ Dr. வயித்திலிங்கம் பாலசேகரம்
பி யாழ். கரம்பன்
வா பிரித்தானியா Ilford
தி 25-02-2017
பெ திருமதி மரியாம்பிள்ளை கனகம்மா
பி யாழ். நீர்வேலி
வா யாழ். சாவகச்சேரி
தி 24-02-2017