Flash News
கட்டுரை
முன்னாள் போராளிகள் கொழும்புக்கு அழைப்பு; நல்லாட்சி அரசாங்கத்தின் நோக்கம் என்ன?
[ Friday, 29 April 2016 ,11:35:29 ]

குற்றச்சாட்டுக்கள், காரணங்கள் இல்லாத கைதுகள், கடத்தல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லையானால் எதிர்காலத்தில் வடக்கு கிழக்கில் எவ்வாறான நிலை அமையும் என்பது குறித்து யாரும் கூறமுடியாது. ஆகவே அமைதியை வலியுறுத்தும் சர்வதேசம் இது தொடர்பில் கூறப்போவது என்ன? 

- லியோணி மரியநாயகம் -

புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு அரசாங்கத்தினால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த அழைப்பிற்கு அமைவாக கொழும்பிற்கு சென்ற புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் 34 பேரை கல்விச் சுற்றுலா நோக்கில் புனர்வாழ்வு அமைச்சு கொழும்பிற்கு அழைத்து வந்துள்ளது.

அத்துடன், இவர்களை நுவரெலியா, கண்டி, கேகாலை ஆகிய பகுதிகளுக்கு அமைச்சு அழைத்துச் சென்றதோடு, இன்று வெள்ளிக்கிழமை பத்தரமுல்லையிலுள்ள எங்கள் கிராமம் என்ற பகுதிக்கும் அழைத்துச் சென்றது.

நல்லாட்சி அரசாங்கத்தினால் விடுக்கப்பட்ட இந்த அழைப்பின் உள்நோக்கம் என்ன? என்பது தொடர்பில் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள், அவர்களது குடும்பத்தினர் ஆகியோருக்கு மட்டுமன்றி பலர் மத்தியில் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

அண்மைக்காலமாக புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் கைது செய்யப்படுகின்றமை மற்றும் விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றமை தமிழ் மக்கள் மத்தியில் அச்சத்தை தேற்றுவிக்கின்றது. அத்துடன் இவ்வாறான கைதுகள், கடத்தல்கள் கடந்த ஆட்சிக் காலத்தை நினைவுபடுத்துவதாக தமிழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.

புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளை இனம் காண்பதற்காக இந்த நடவடிக்கையா? அல்லது புனர்வாழ்வு அளிக்கப்படாத முன்னாள் போராளிகளை இனங்கண்டு அவர்களை சிறைக்குள் தள்ளும் சிந்தனையுடன் அரசாங்கம் இவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதா என முன்னாள் போராளிகளின் குடும்பங்கள் கேள்வி எழுப்புகின்றனர்.  

அன்றாட உணவிற்காக கூலி வேலை செய்து போராடிக் கொண்டிருக்கும் முன்னாள் போராளிகள், சமூகத்தில் அதிகளவில் இருக்கின்றார்கள். அதனைவிட, யுத்தத்தினால் தமது அவையங்களை இழந்து எழுந்த நடக்கமுடியாது, தமது சொந்த தேவைகளை பூர்த்தி செய்வதற்கு ஏனையவர்களை எதிர்பார்க்கும் இவர்களால், துப்பாக்கிகளை கையிலெடுத்து மீண்டும் போராட முடியுமான என நல்லாட்சி அரசாங்கம் சித்திக்க வேண்டும்.

அண்மையில் விடுதலை செய்யப்பட்டு குடும்பங்களுடன் இணையும் முன்னாள் போராளிகள் மீண்டுமொரு போராட்டத்தை தாம் விரும்பவில்லை எனவும், இவ்வாறான சிந்தனை சிறைகளில் உள்ள கைதிகளுக்கோ அல்லது விடுதலையாகிய எமக்கோ இல்லை என தெரிவித்திருந்தனர்.

நடப்பது அனைத்தையும் கண்ணூடாக காணும் நல்லாட்சி அரசாங்கம், சிங்கள மக்களை எதிர்த்து தமிழ் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாத நிலைப்பாட்டில் உள்ளதா அல்லது கடந்த ஆட்சியின் மன நிலையே நல்லாட்சி அரசாங்கத்திற்கு இருக்கின்றதா என பல்வேறு கேள்விகள் எழுகின்றன.

எந்த ஆட்சியிலும் தீர்வு கிடைக்காது என்ற எண்ணம் கடந்த காலங்களில் தமிழ் மக்கள் மத்தில் இருந்தாலும் கூட, நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு தமிழ் மக்களே காரணம் என்ற உண்மை தற்போது மறைக்கப்பட்டு வருகின்றது.

தமிழ் இளைஞர்களை அரசாங்கம் கைதுசெய்து வருகின்ற நிலையில், தமிழ் அரசியல் தலைமைகளை கைது செய்யுமாறு தென்னிலங்கையைச் சேர்ந்த இனவாதிகள் அரசாங்கத்தை வற்புறுத்துகின்றனர்.

இவ்வாறு தமிழர்கள் அனைவரையும் சிறைக்குத் தள்ளும் சிந்தனையில் நல்லாட்சி அரசாங்கம் செயற்படுகின்றதாக என்ற எண்ணம் எழுகின்றது. தமிழ் மக்களிடம் காணப்படும் ஆயிரக்கணக்கான பிரச்சினைகளை தீர்த்து வைக்காமல் மீண்டும் மீண்டும் அவர்களை துன்பப்படுத்தி பார்க்கும் ஆட்சியாளர்களையே தொடர்ச்சியாக காணக்கூடியதாக உள்ளது.  

கடந்த காலங்களில் இருந்த இவ்வாறான மனநிலையே தற்போதைய ஆட்சியாளர்களுக்கும் இருகின்றது என்பது அண்மைக்காலமாக இடம்பெறும் நிகழ்வுகள் கோடிட்டுக் காட்டுகின்றன. எனினும் கடந்த காலங்களில் இடம்பெறாத சமூக சீர்கேடுகள் அண்மைக்காலமாக வட மாகாணத்தில் இடம்பெறுகின்றமை தொடர்பாக சித்திக்க வேண்டியுள்ளது.

இவை இடம்பெறுவதற்காக காரணங்கள் கண்டுபிடிக்கப்படாவிட்டாலும் கூட, திட்டமிடப்பட்ட முறையில் சமூகச் சீரழிவுகள் இடம்பெறுகின்றனவா என்ற சந்தேகம் எழுகின்றது. தண்டனை பெற்று விடுதலை செய்யப்படும் நபர்கள் மீண்டும் மீண்டும் கைதுசெய்யப்படுகின்றமை, குறித்த நபர்களை மட்டுமன்றி அவர்களது குடும்பங்கள், தமிழ் சமூகத்தை சீண்டிப் பார்க்கும் ஒரு செயற்பாடாக நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகள் அமைந்துள்ளன.

எனினும், நல்லாட்சி அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகள் தமிழ் மக்களைப் பிரதிபலிக்கும் தமிழ் அரசியல் தலைமைகள் தட்டிக்கேட்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் வலியுறுத்துகின்றனர். கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற அநீதிகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு போராடினாலும் கூட, இதுவரை அவை எட்டாக் கனியாகவே இருக்கின்றது.

வடக்கு, கிழக்கில் இடம்பெறும் கைதுகள் தொடர்பாக பொதுமக்கள் அச்சமடையத் தேவை இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தாலும் கூட, கணவன்மாரை, பிள்ளைகளை இழுத்துச் சென்று சிறைக்குள் அடைக்கும் காட்சிகளை மனைவிமாரும் பெற்றோரும் எவ்வாறு பார்த்துக் கொண்டிருக்க முடியும்?

யுத்தத்தின் காயங்கள் ஆற்றப்பட முன்னர், மீண்டும் ஒரு போராட்டத்திற்கு வடக்கு, கிழக்கு இளைஞர்களை இழுத்துச் செல்லும் விதமாகவே தற்போதைய அரசியல் சூழல் காணப்படுகின்றது. போராட்டத்தில் பெற்ற வெற்றி, தோல்வியைவிட தமிழ் இளைஞர்கள் அனுபவித்த உடல், உள ரீதியான சித்திரவதைகளே அதிகம். இவர்கள் மீண்டும் போராட முற்படவில்லை. நீண்ட நாட்களாக பிரிந்து வாழும் குடும்பங்களுடன் இணைந்து வாழ விரும்புகிறார்கள்.

குற்றச்சாட்டுக்கள், காரணங்கள் இல்லாத கைதுகள், கடத்தல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லையானால் எதிர்காலத்தில் வடக்கு கிழக்கில் எவ்வாறான நிலை அமையும் என்பது குறித்து யாரும் கூறமுடியாது. ஆகவே அமைதியை வலியுறுத்தும் சர்வதேசம் இது தொடர்பில் கூறப்போவது என்ன?     

சிறப்புச் செய்திகள்
அறிவித்தல்கள்
பெ திருமதி அபிதகுசலாம்பிகை தியாகேந்திரன்
பி யாழ். பருத்தித்துறை
வா யாழ். பருத்தித்துறை
தி 28-02-2017
பெ திரு சூசைப்பிள்ளை கிளமென்ற் பெர்னான்டோபிள்ளை
பி யாழ். ஊர்காவற்துறை
வா யாழ். ஊர்காவற்துறை
தி 27-02-2017
பெ திருமதி குமாரவேலு நாகம்மா
பி யாழ். நெடுந்தீவு
வா யாழ். நெடுந்தீவு
தி 26-02-2017
பெ திரு சிவசுப்பிரமணியம் சிவகணேசன்
பி யாழ். ஏழாலை
வா யாழ். ஏழாலை
தி 26-02-2017
பெ செல்வி சுகண்யா சிவஞானம்
பி புத்தளம் முந்தல்
வா லண்டன் Kingston
தி 25-02-2017
பெ திருமதி வைரமுத்து சிகாமணி
பி யாழ். அளவெட்டி
வா நெதர்லாந்து
தி 25-02-2017
பெ Dr. வயித்திலிங்கம் பாலசேகரம்
பி யாழ். கரம்பன்
வா பிரித்தானியா Ilford
தி 25-02-2017
பெ திருமதி மரியாம்பிள்ளை கனகம்மா
பி யாழ். நீர்வேலி
வா யாழ். சாவகச்சேரி
தி 24-02-2017