Flash News
கட்டுரை
அனர்த்தம் தொடர்பாக விசேட கவனம் செலுத்த அமைப்பு அவசியம்
[ Monday, 23 May 2016 ,13:17:59 ]

சீரற்ற காலநிலையால் இலட்சக்கணக்கான மக்கள் வீடுகளையும் சொத்துக்களையும் பலர் உயிர்களையும் இழந்துள்ளனர்.

பல இடங்களில் பெருந்தோட்ட மக்களும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இம் முறை பெருந்தொகையான பெருந்தோட்ட மக்கள் மண்சரிவு அபாயத்தினால் அல்லது தமது வீடுகளில் வெடிப்பு ஏற்பட்டிருப்பதனால் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

அவர்களின் இயல்பு வாழக்கை பாதிக்கப்பட்டிருக்கிறது. தமிழ் முற்போக்கு கூட்டணி அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இவ்வாறான இடங்களுக்கு விஜயம் செய்து மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் எனவும் பாதிக்கப்பட்வர்களுக்கு வீடுகளை கட்டித் தருவதாகவும் வாக்குறுதி வழங்குகின்றனர்.

மக்கள் துயரில் பங்குபற்றி அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதற்கு இந்த அரசியல் வாதிகள் எடுத்துள்ள முயற்சி மக்களின் பாராட்டை பெற்றிருக்கிறது என பிரிடோ நிறுவன வெளிகள இணைப்பாளர் எஸ். கே சந்திரசேகரன் தெரிவித்தார்

எனினும் இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே மக்களின் நம்பிக்கையை தக்க வைத்துக்கொள்ள முடியும்.

மேலும் அரச சேவைகள் பெருந்தோட்ட பகுதிகளுக்கு இன்னும் திருப்திகராமான கிடைக்காத சூழலில் அனர்த்த முகாமைத்துவ அல்லது இடர் முகாமைத்துவ அமைச்சின் சேவைகள் பெருந்தோட்டங்களுக்கு எந்தளவு கிடைக்கின்றன என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

அனர்த்த முகாமைத்துவம் என்பது அனர்த்தங்கள் ஏற்பட்டவுடன் மக்களுக்கு உதவுவது என்றே அரசு அதிகாரிகள் உட்பட மக்களும் எண்ணிக்கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது.

ஆனால் அனர்த்தங்களை தவிர்பதற்கு முடியுமான அனைத்தையும் செய்வதே அனர்த்த முகாமைத்துவத்தின் முக்கிய பங்காக இருக்க வேண்டும்.

பெருந்தோட்டங்கள் பல மண்சரிவுக்கு உட்படும் ஆபத்து தொடர்ந்தும் உள்ள சூழ்நிலையில் மண்சரிவு ஏற்படக்கூடிய இடங்களை அடையாளம் கண்டு மக்களுக்கு மாற்று ஏற்பாடுகளை செய்து அனர்த்தங்களை தவிர்ப்பதற்காக முன்னேற்பாடுகள் தொடர்ச்சியாக, திட்டமிட்ட முறையில். கிரமாக செய்யப்பட வேண்டியதன் அவசியமாகும்.

அரசு சேவைகள் விசேடமாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயல்பாடுகள்   பெருந்தோட்ட பகுதிகளுக்கு சரியாக கிடைப்பதில் உள்ள பொறிமுறை சிக்கல்களை கவனத்தில் கொண்டு பெருந்தோட்ட பகுதிக்கென அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான விசேட ஏற்பாடுகளை மேற்கொள்வது குறித்து மலையக அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சிந்திக்க வேண்டும்.

புதிய கிராமம், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சு தனது பணிகளை முன்னெடுத்து செல்ல அதிகார சபை ஒன்றை ஏற்படுத்துவதற்காக பணிகளை முன்னெடுத்து செல்லும் இந்த வேளை,

எதிர்காலத்தில் பெருந்தோட்ட பகுதிகளில் அனர்த்தங்கள் ஏற்படும் முன்னரே அவற்றை முகாமைத்துவம் செய்வது குறித்த கொள்கை ஒன்றை வகுப்பதும் அதனை விரைவில் நடைமுறைக்கு கொண்டுவருவதும் அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெருந்தோட்ட பகுதியில் ஏற்பட்டுள்ள அனர்த்தங்களின் தாக்கத்தை குறைப்பதற்கு மக்கள் மத்தியில் விழிப்புணர்வு எற்படுத்துவது தொடர்பாக பிரிடோ பணியாளருக்கு நடத்தப்பட்ட செயலமார்வில் கருத்து தெரிவித்த பிரிடோ நிறுவன வெளிக்கள இணைப்பதிகாரி. சந்திரசேகரன் இவ்வாறு தெரிவித்தார்.   

சிறப்புச் செய்திகள்
அறிவித்தல்கள்
பெ திருமதி சந்திரசேகரம்பிள்ளை திருபுரிநாகேஸ்வரி அம்மா
பி யாழ். வட்டுக்கோட்டை
வா திருகோணமலை
தி 04-01-2017
பெ திருமதி பத்மினிதேவி பத்மநாபபிள்ளை
பி யாழ். கோண்டாவில்
வா அவுஸ்திரேலியா sydney
தி 04-01-2017
பெ திருமதி சரஸ்வதி கணேஸ்(மம்மி)
பி யாழ். சரசாலை
வா லண்டன்
தி 03-01-2017
பெ திரு சீமாம்பிள்ளை மரியநாயகம்
பி மன்னார் ஒலிமடு நானாட்டான்
வா மன்னார் ஒலிமடு நானாட்டான்
தி 02-01-2017
பெ திருமதி மங்களேஸ்வரி மேனன்
பி யாழ். சங்குவேலி
வா லண்டன்
தி 02-01-2017
பெ திருமதி இராஜேஸ்வரி சிறிஸ்கந்தராஜா(கெங்கா)
பி யாழ். நீராவியடி
வா ஜெர்மனி Kaufbeuren
தி 01-01-2017
பெ திரு கோவிந்தர் சோமசுந்தரம்
பி கிளிநொச்சி பூநகரி
வா கிளிநொச்சி பூநகரி
தி 26-12-2016
பெ திரு பாலசுப்பிரமணியம் அதீஸ்
பி கனடா
வா கனடா
தி 26-12-2016