Flash News
கட்டுரை
கைப்பேசிகளும் சிறைக்கைதிகளும்
[ Wednesday, 25 May 2016 ,11:49:05 ]

ஸ்ரீலங்காவிலுள்ள சிறைச்சாலைகளில் சிறை நிர்வாகத்தினரால் கைதிகளின் விடுதிகள் அடிக்கடி சோதனைக்குட்படுத்தப்படுவதும் அதிலிருந்து அதிகளவான கையடக்க தொலைபேசிகள் மீட்கப்படுவதும் மிக நீண்ட காலமாக இடம்பெற்று வருகின்றமை பலரும் அறிந்ததே.

-புலோலியூர் காவியா-

எனினும் கைதிகளின் கைகளுக்கு தொலைபேசிகள் எவ்வாறு கிடைக்கின்றது எனப் பார்ப்பதை விட எத்தகைய நெருக்கடிக்குள்ளும் என்ன விலைகொடுத்தும் ஏன் இந்த கைதிகளுக்கு கைப்பேசிகள்? என சற்று ஆராய்வதே இப்பந்தியின் இலக்காகும்.

ஒரு சிறைக்கைதிக்கு பின்னால் எத்தகைய பொறுப்புக்களும் பிரச்சினைகளும் இருக்கின்றதென்பது அவரவருக்கே வெளிச்சம். எவ்வாறாயினும், கைதி என்ற பட்டம் சூட்டி சிறைக்குள் வந்துவிட்டால் சிறை ஒழுங்கு விதிகளுக்கு கட்டுப்பட்டே ஆக வேண்டும் என்பதுக்கு மாற்றுக்கருத்து இருக்கமுடியாது.

இந்த நிலையில் சிறைக்கூடங்களில் கைதிகளுக்கான நலத்திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றதா? அல்லது எந்தளவில் மேற்கொள்ளப்படுகின்றது. எனும் கேள்விகளுக்கு விடை தேடுவது அவசியத்திலும் அவசியம். விளக்கமறியல்     கைதிகளாயினும் சரி தண்டனைக் கைதிகளாயினும் சரி அவர்களுக்கும் மனைவி, பிள்ளைகள் என்றே அல்லது தாய் தந்தையென்றோ சில உறவுகள் இருக்கத்தான் செய்கின்றது.

அவர் தம் குடும்பங்கள் தினம் எதிர்கொள்ளும் சமூக, பொருளாதார, கலாச்சார பிரச்சினைகள் தொடர்பான கரிசனைகள் கைதிகளுக்கு இல்லையென்று யாரும் மறுத்துரைக்க முடியாது. நவீன இயந்திர உலகில் அன்றாடம் மக்கள் முன் படர்ந்து விரிகின்ற பிரச்சினைகள் ஆயிரமாயிரம். சுதந்திரமாக வெளியில் நடமாடுகின்றவர்களுக்கே ஈடுகொடுக்க முடியாத இன்னோரன்ன பிரச்சனைகள் இருக்கின்ற போது தமது தலைமை உறவுகள் சிறையிலிருக்கையில் அக் குடும்பங்களின் நிலை? சிறைக்குள்ளிருக்கின்ற கைதிகள் தமது உற்றார் உறவினர்களை பார்த்துக் கதைப்பதற்கு வழங்கப்படுகின்ற மிகக் குறுகிய 15 நிமிடத்துக்குள் எத்தனை விடயங்களை அளவலாவ முடியும்?

அதுவும் ஒரு தடவைக்கு சுமார் 15 முதல் 20 வரையிலான கைதிகளை உறவினர் சந்திப்பு அறைக்குள் அனுமதிக்கிறார்கள். இதற்குள் உறவினர்களுக்கும் கைதிகளுக்குமிடையில் கண்ணாடி மற்றும் கம்பி நெற்றுக்கள் கொண்டு தடுத்துள்ளதால் சுமார் 4 அடி இடைவெளிக்கு அப்பாலிருந்தே கதைக்க முடியும். பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் மாதம் ஒரு தடவையோ அல்லது இரண்டு மாதத்திற்கு ஒரு தடவையோ தமது உறவுகளை பார்க்க வருகின்றவர்களுக்கு எத்தனை விடயங்கள் கதைக்க வேண்டியிருக்கும்.

கைதிகள் தமது பிள்ளைகளுடன் மனம் விட்டு பேச வேண்டும் என ஆவலாக இருப்பார்கள். சிறைச்சாலை நிர்வாகத்தினர் இவற்றினை சற்று சிந்திப்பார்களாயின் கைதிகளுக்கான தொலைபேசித் தேவையின் அவசியத்தை புரிந்துகொள்வார்கள் என நம்பலாம். எனவே சிறைக் கைதிகளுக்கு சட்டபூர்வ தொலைபேசி சேவை வழங்கப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்.

அதற்கமைய கடந்த வருடம் வெலிக்கடை சிறைச்சாலையில் மட்டும் கைதிகெளுக்கென மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான தொலைபேசி வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இதிலும் பெருங்குறை யாதெனில், வெலிக்கடை சிறைக்கூடத்தை பொருத்தமட்டில் கிட்டத்தட்ட 50 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு கைதிகள் இருக்கின்றனர்.

இந்த நிலையில் அவர்கள் தம் உறவுகளுடன் தொடர்புகொள்ளக்கூடிய எந்தவொரு பொறிமுறையும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. இது தொடர்பில் பிறநாட்டுக் கைதிகள் கவலை கொண்டுள்ளதுடன், அவர்களை சட்டத்திற்கு மாறாகச் செயற்படத் துண்டியுள்ளது. எவ்வாறாயினும் நாட்டின் ஏனைய எந்தவொரு சிறைச்சாலைக்கும் தொலைபேசிச் சலுகை செய்து கொடுக்கப்படவில்லை.

அதற்கு மாறாக கைதிகளின் சட்டவிரோத தொலைபேசி பாவனையை எவ்வாறெல்லாம் தடுக்கலாம் என்றும் அதற்காக பல இலட்சங்களை செலவழித்து ஸ்கேனர்கள், ஜாமர்கள், கெமராக்கள் பொருத்தும் நடவடிக்கையில் நிர்வாகம் ஈடுபட்டு வருகின்றது.  இச் செலவீனத்திலிருந்து சிறு பகுதியை எடுத்து பாதுகாப்பு மிக்க நிலையான தொலைபேசி மையங்களை சிறைக்கைதிகளுக்கு ஏற்படுத்திக் கொடுக்க தயங்குவது ஏனென்று புரியவில்லை.

சட்டவிரோத கைபேசிப் பாவனைகள் சிறைக்குள் தடை செய்யப்பட வேண்டியது அவசியமே. ஏனெனில் சிறைக்குள் இருந்தவாறு கப்பம் பெறுதல், கொலைச் சம்பவங்களுக்கான ஒப்பந்தங்கள் பேசுதல், அச்சுறுத்தல் மற்றும் மோசடிகளில் ஈடுபடுதல் போன்ற பல்வேறு குற்றச்செயல்களுக்கு சட்டவிரோத கைப்பேசிகள் காரணமாகவிருந்த பதிவுகள் ஏராளம்.

கடந்த காலத்தில் சிறைக்கூடங்களில் பல     கலவரச் சம்பவங்கள் நடந்தேறியுள்ளது. அச் சந்தர்ப்பங்களில் எல்லாம் இந்த சட்டவிரோத கைப்பேசிகள் பல கைதிகளின் உயிர்களை காப்பாற்றுவதற்கு வழி வகுத்துள்ளதென்பது குறிப்பிடத்தக்கது. சிறைகளுக்குள் அரங்கேற்றப்பட்ட அல்லது தற்செயலாக இடம்பெற்ற அனைத்து வன்முறைக் கலவரங்களின் போதும், சிறைக் கள நிலைமைகளையோ, சேத விபரங்களையோ உடனடியாக உண்மைத் தன்மையுடன் வெளியிட்டு இருந்ததா என நோக்க வேண்டியே இருந்துள்ளது.

அத்தருணங்களில் சம்பவம் தொடர்பான உண்மை நிலவரங்களை வெளியில் தெரிவித்து கைதிகள் தமக்கான பாதுகாப்பினை தாமே உறுதிப்படுத்திய நிகழ்வுகள் அனேகமுள்ளது. இதனால் நீண்ட காலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் போர்க் கைதிகள் பெரும் அனர்த்தங்களிலிருந்து பாதுகாக்கப்பட்டுள்ளார் என்பது இவ்விடத்தில் சுட்டிக்காட்டத்தக்கது. இன்று அனேகமான நாடுகளில் சிறைக்கைதிகளுக்கு மென்போக்கு புனர்வாழ்வு ரீதியிலான செயற்றிட்டங்களையே பெரிதும் செயற்படுத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் அவர்களுக்கான உணவு, குடிநீர், இருப்பிடம், உறவினர்களுடனான தொடர்பாடல், பாதுகாப்பு, சுகாதாரம், பொழுதுபோக்குஇ தொழிற்பயிற்சி என பல்வேறுபட்ட நலத்திட்டங்கள் அமுலில் வந்துள்ளது. இதுதவிர குறிப்பிட்ட காலம் சிறைவாசம் அனுபவிப்பவர்களுக்கு அவர்களின் குடும்பத்துணையுடன் தங்கிச் செல்வதற்கும் சில மேற்கு நாடுகளில் சலுகை வழங்கப்பட்டுள்ளது.

இதனால் கைதிகளின் மன உளைச்சல் தளர்த்தப்பட்டு உள மேம்பாடு ஏற்படுத்தப்படுகின்றது. இவை சிறை வன்முறைகளுக்கு ஏதுவான மனநிலைகளை கட்டுப்படுத்தி கைதிகளுக்கொரு ஆற்றுப்படுத்தலை தோற்றுவிக்கின்றது. ஒருவனை தீவிரத் தன்மையிலிருந்து மாற்றுவதற்கு வனபோக்கு ஒருபோதும் வடிகாலாக அமையாது. மாறாக மென்போக்கு மூலமே மூலமே நல்வழிப்படுத்த முடியுமென நம்பப்படுகிறது.

எமது நாட்டு சிறை அதிகாரிகள் பலரும் பல நாடுகளுக்குச் சென்று சிறைச்சாலை, கைதிகள் மேம்பாடு தொடர்பிலான பயிற்சிப் பட்டறைகளில் கலந்து கொள்கின்ற போதும் அவற்றை இங்கு நடைமுறைப்படுத்த முயற்சிப்பதாகத் தெரியவில்லை. இந்நிலையில், சிறைச்சாலைகள் அனைத்தும் சீர்திருத்தப் பள்ளிகளாக்கப்பட்டு நாளைய சமூகத்தில் கைதிகளும் நற்பிரஜைகளாக நிமிர, ஆக்கபூர்வமான வேலைத் திட்டங்களை முன்னெடுக்க வேண்டுமென்பதே சமூக நோக்கங்களின் எதிர்பார்ப்பாகும்.

சிறப்புச் செய்திகள்
அறிவித்தல்கள்
பெ திருமதி அபிதகுசலாம்பிகை தியாகேந்திரன்
பி யாழ். பருத்தித்துறை
வா யாழ். பருத்தித்துறை
தி 28-02-2017
பெ திரு சூசைப்பிள்ளை கிளமென்ற் பெர்னான்டோபிள்ளை
பி யாழ். ஊர்காவற்துறை
வா யாழ். ஊர்காவற்துறை
தி 27-02-2017
பெ திருமதி குமாரவேலு நாகம்மா
பி யாழ். நெடுந்தீவு
வா யாழ். நெடுந்தீவு
தி 26-02-2017
பெ திரு சிவசுப்பிரமணியம் சிவகணேசன்
பி யாழ். ஏழாலை
வா யாழ். ஏழாலை
தி 26-02-2017
பெ செல்வி சுகண்யா சிவஞானம்
பி புத்தளம் முந்தல்
வா லண்டன் Kingston
தி 25-02-2017
பெ திருமதி வைரமுத்து சிகாமணி
பி யாழ். அளவெட்டி
வா நெதர்லாந்து
தி 25-02-2017
பெ Dr. வயித்திலிங்கம் பாலசேகரம்
பி யாழ். கரம்பன்
வா பிரித்தானியா Ilford
தி 25-02-2017
பெ திருமதி மரியாம்பிள்ளை கனகம்மா
பி யாழ். நீர்வேலி
வா யாழ். சாவகச்சேரி
தி 24-02-2017