Flash News
கட்டுரை
யுத்தம் நடத்திய சந்திரிக்கா நல்லிணக்க காரியாலய தலைவரானது எப்படி?
[ Thursday, 16 June 2016 ,07:54:16 ]

பதினொரு வருடங்கள் ஜனாதிபதியாக பதவி வகித்தபோது வடக்கு கிழக்கில் யுத்தத்தை நடத்தி பல அழிவுகளுக்கு காரணமான சந்திரிக்கா நல்லிணக்க காரியாலயத்தின் தலைவராக எவ்வாறு பதவி வகிக்க முடியும் என விமர்சகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

- ஷாலினி  யோகராஜா - 

1994ஆம் ஆண்டில் இருந்து 2005ஆம் ஆண்டு வரை பதவியில் இருந்தபோது பல்வேறு கொலைகள், பாலியல் வல்லுறவுகள், கடத்தல், காணாமல்போதல் போன்ற பல்வேறு யுத்தக்குற்றச் செயல்களுக்கு காரணமாக இருந்த சந்திரிக்கா நோர்வேயின் ஏற்பாட்டில் இடம்பெறவிருந்த சமாதான முயற்சிகளையும் குழப்பியவர் என்பது சர்வதேச சமூகத்திற்கு தெரிந்த தகவல். சமாதான தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் சந்திரிக்கா மீது குற்றம் சுமத்தியிருந்தமை அதற்கு உதாரணமாகும்.

இந்த நிலையில் காணாமல் போனோர்களின் உறவினர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்இநிவாரணங்களை வழங்கும் என தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க காரியாலயத்தின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா கொழும்பில் ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

அதாவது இல்லாதோருக்கான சான்றிதழ் வழங்குவது இன்றைய நிலையில் பல்வேறு தரப்பினராலும் பேசப்படும் ஓர் முக்கிய விடயமாக மாறியுள்ளது. இதுமாத்திரமன்றி இதுவரை காலமும் காணமல்போனோர் தொடர்பான விசாரணைகளை மேற்காண்டு வரும் பரணகம ஆணைக்குழு தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவும் ஜுலை மாதம் 15 ஆம் திகதியுடன் கலைக்கப்படவுள்ளதாக அதன் தலைவர் பரணகம தெரிவித்துள்ளார்.

இரண்டாம் சாட்சியாளர்களான இராணுவம் மற்றும் உயர் அதிகாரிகள் சிலரை விசாரணைக்கு உட்படுத்த கால அவகாசம் இல்லை என பரணகம ஆணைக்குழு தெரிவிக்கும் அதேவேளை அரசியல் தலையீடுகளும் இரண்டாம் கட்ட விசாரணையை மேற்கொள்ள தடையாகவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இரண்டாம் சாட்சியாளர்களை விசாரணை செய்ய அனுமதியில்லை என இந்த ஆணைக்குழு கூறியுள்ளமை மக்களிற்கு ஏமாற்றமாகவே அமையும். இந்த ஆணைக்குழுவில் ஏற்கனவே நம்பிக்கையில்லாத போதும் பரணகம இவ்வாறு கூறியிருப்பதன் மூலம் அந்த விசாரணைகள் பயனற்றவை என்றே கூறலாம் என விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அதேவேளை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா 1994 ஆம் ஆண்டு ஆட்சி பீடமேறிய காலம் முதல் இன்றுவரை இடம்பெற்ற பாலியல் வன்முறை சம்பவங்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை. இவ்வாறு ஒரு சூழலில் அவர் நல்லிணக்கம் தொடர்பான காரியாலயத்தின் தலைவராக அவர் செயற்பட்டு வருகிறார்.

யாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளீர் கல்லூரி மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி 1996 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 7 ஆம் திகதி ஸ்ரீலங்கா இராணுவத்தின் கூட்டுப்பாலியல் வன்முறைக்கு உட்படுத்தபட்டு படுகொலை செய்யப்பட்டார். அதுமாத்திரமன்றி அவரை தேடிச்சென்ற தாய், சகோதரன், துணையாக சென்ற ஒருவர் உட்பட மூவரும் கொன்று புதைக்கப்பட்ட அவலமும் அம்மையாரின் ஆட்சியில் அரங்கேறியது.

யாழ்ப்பாண புங்குடுதீவில் 29 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயார் சாரதாம்பாள்இ 1999 ஆம் ஆண்டு டிசம்பர்28 ஆம் நாள் பலரால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில் சருகுகளுக்கும்இ இலைகளுக்கும் நடுவே உயிரற்ற உடலை பொதுமக்கள் கண்டெடுத்தனர்.

2005 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் திகதி தர்ஷினி இளையதம்பி என்ற 20 வயதான இளம்பெண் புங்குடுதீவில்கடற்படையினரால் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட பின்னர் பாழடைந்த கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார்.

தர்ஷினி பலரால் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டிருப்பதற்கான தடயங்கள் அவரது உடலில் காணப்படுவதாக வைத்திய அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

1997 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி, அம்பாறை மத்திய முகாமைச் சேர்ந்த இராணுவச்சிப்பாய்களால் நான்கு குழந்தைகளின் தாயான கோணேஸ்வரி முருகேசுப்பிள்ளை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு அந்தரங்க உறுப்பில் கிரனைட் வைத்து படுகொலை செய்ததும் இவரின் ஆட்சியில் தான்.

அம்மையாரின் ஆட்சி காலத்தில் இடம்பெற்ற இவ்வாறான மிகவும் கண்டிக்கத்தக்க பாலியல் பலாத்காரங்களுக்கு நீதி தேவதை கண்ணை மூடிக்கொண்டார்.

இவற்றையெல்லாம் மறைத்துவிட்டு சர்வதேச சமூகத்திற்கான கண்துடைப்பு நாடகத்தை மீணடும் சந்திரிக்கா அம்மையார் அரங்கேற்ற தொடங்கியிருக்கின்றார் என்பதே நிதர்சனம்.

இதேவேளை சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் எஸ்.டபிள்யு.ஆர்.டீ பண்டாரநாயக்கா, தகநாயக்கா, சிறீமாவோ பண்டாரநாயக்கா, சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்க, மகிந்த ராஜபக்ஸவையோ அல்லது டீ.எஸ்சேனநாயக்கா – டட்லி சேனநாயக்கா – சேர் ஜோன் கொத்தலவால – ஜே.ஆர் ஜெயவர்த்தனா – ரணசிங்கபிரேமதாஸா, டீ.பி. விஜயதுங்க – ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் தொடரும் ஐக்கிய தேசிய கட்சியோ தமிழ் மக்களிற்கு தீர்வை பெற்றுக்கொடுத்துவிடும் என யாரும் நம்பிக்கொண்டிருக்க முடியாது.

இந்த இரு கட்சிகளும் இனவாதத்தையே தமது அரசியல் இருப்பின் மூலதனாமாகக் கொண்டு செயற்படுகின்றார்கள் என்பதை யாரும் மறந்து விட முடியாது.

இந்த நிலையில் காணாமல்போனவர்கள் மற்றும் கடத்தப்பட்டவர்கள் தொடர்பாக ஸ்ரீலங்கா இராணுவம் ஒருபோதும் ஒத்துக்கொள்ளும் என தான் எதிர்பார்க்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

அவ்வாறு எனின் மக்களிற்கு எவ்வாறான தீர்வு கிடைக்கப்போகின்றது? பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ச்சியாக ஏமாற்றப்படபோகின்றார்களா? 2009 ஆம் ஆண்டு காலத்தின் பின்னரான அரசியல் சூழலில் நல்லிணக்கம்இபொறுப்புக்கூறலின் காத்திரமான முன்னேற்றம் இடம்பெறுகின்றதா என்பது ஓர் வினாவாகவே தொக்கி நிற்கின்றது.

ஆட்சியில் இருக்கும்போது இராணுவத்தைக் கொண்டு தமிழர்கள் மீது பாலியல் வல்லுறவுகள் உள்ளிட்ட வன்முறைகளை கட்டவிழ்த்து விடுவார்கள். பின்னர் பதவியை விட்டு விலகியதும் அவர்களுக்கு சுடலை ஞானம் பிறக்கும். ஆகவே சந்திர்க்காவுக்கும் அவ்வாறு சுடலை ஞானம் பிறந்தாலும் பௌத்த தேசியவாத அரசியலமைப்பின் மூலமான தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வைக் காண முடியாது என்பதை சிங்கள அரசியல் தலைவர்கள் நேரடியாக ஏற்றுக் கொள்வார்களா?

இதேவேளை 1983 ஆம் ஆண்டில் இருந்து நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் அறிக்கைககள் ஒவ்வொன்று குப்பைத்தொட்டியில் போடப்பட்ட வரலாறுகள்தான் உண்டு. ஆகவே பரணகம ஆணைக்குழுவின் அறிக்கைக்கும் அந்த நிலைதான் ஏற்படும் என்பதில் சந்தேகம் இல்லை.

 

சிறப்புச் செய்திகள்
அறிவித்தல்கள்
பெ திருமதி அபிதகுசலாம்பிகை தியாகேந்திரன்
பி யாழ். பருத்தித்துறை
வா யாழ். பருத்தித்துறை
தி 28-02-2017
பெ திரு சூசைப்பிள்ளை கிளமென்ற் பெர்னான்டோபிள்ளை
பி யாழ். ஊர்காவற்துறை
வா யாழ். ஊர்காவற்துறை
தி 27-02-2017
பெ திருமதி குமாரவேலு நாகம்மா
பி யாழ். நெடுந்தீவு
வா யாழ். நெடுந்தீவு
தி 26-02-2017
பெ திரு சிவசுப்பிரமணியம் சிவகணேசன்
பி யாழ். ஏழாலை
வா யாழ். ஏழாலை
தி 26-02-2017
பெ செல்வி சுகண்யா சிவஞானம்
பி புத்தளம் முந்தல்
வா லண்டன் Kingston
தி 25-02-2017
பெ திருமதி வைரமுத்து சிகாமணி
பி யாழ். அளவெட்டி
வா நெதர்லாந்து
தி 25-02-2017
பெ Dr. வயித்திலிங்கம் பாலசேகரம்
பி யாழ். கரம்பன்
வா பிரித்தானியா Ilford
தி 25-02-2017
பெ திருமதி மரியாம்பிள்ளை கனகம்மா
பி யாழ். நீர்வேலி
வா யாழ். சாவகச்சேரி
தி 24-02-2017