Flash News
கட்டுரை
சதாம் உசைன்- மஹிந்த ; உதாரணம் காண்பிக்கும் பௌத்த தேசியவாதிகள்
[ Thursday, 23 June 2016 ,05:43:45 ]

ஈராக்கின் முன்னாள் ஜனாதிபதி சதாம் உசைன் தூக்கிலிட்டு கொல்லப்படுவதற்கு ஈராக் அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட நீதிபதிகள்தான் காரணம் என்றும் சுட்டிக்காட்டியுள்ள பௌத்ததேசியவாதிகள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவையும் நல்லாட்சி அரசாங்கம் நியமிக்கும் உள் நாட்டு நீதிபதிகள்தான் துாக்கிலிடப்போகின்றனர் என குற்றம்சுமத்தியுள்ளனார்.

-துவாரகி சுந்தரமூர்த்தி - 

குறிப்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் இந்த கருத்தை முன்வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழர்களின் 30 ஆண்டுகால அஹிம்சைப் போராட்டம் தோல்வியடைந்து அதற்கு அடுத்து இடம்பெற்ற 30 ஆண்டுகால ஆயுதப்போராட்டம் அழிக்கப்பட்ட நிலையில், சதாம் உசைன் துாக்கிலிடப்பட்ட முறையை உதாரணம் காண்பித்து குறைந்தபட்ச உள்ளூர் விசாரணையை தடுக்கின்ற முயற்சியில் இவர்கள் ஈடுபடுகின்றனரோ என்ற சந்தேகம் வலுவடைந்துள்ளது.

உள்ளக விசாரணை அல்ல சர்வதேச விசாரணைதான் வேண்டும் என தமிழ் மக்கள் வலியுறுத்தி வரும் நிலையில் உள்ள நாட்டு விசாரணை கூட நடத்தக் கூடாது என்ற தொனியில் பௌத்ததேசியவாதிகள் முன்வைக்கும் கருத்துக்கள் சிங்கள மக்கள் மத்தியில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய நிலைமை காணப்படுகின்றது.

அதுவும் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் 32 ஆவது கூட்டத் தொடர் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில் இவ்வாறான கருத்துக்கள் தமிழ் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆட்சிக்காலத்தில் ஜே.வி.பியின் பின்புலத்துடன் உருவாக்கப்பட்ட தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தமிழ்த்தேசிய அரசியலை அழிக்கும் நோக்கத்துடன் செயற்பட்டு வருகின்றது.

இந்த இயக்கத்தில் தற்போது மின்சக்தி எரிசக்தி அமைச்சராக பதவி வகிக்கும் பாட்டலி சம்பிக்க ரணவக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான உதய கம்மன்பில, விமல் வீரவன்ச உட்பட பல பௌத்த மதகுருமார்கள் மற்றும் இனவாத நோக்கத்துடன் கருத்துரைக்கும் பலரும் பதவிவகித்தனர்.

மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத்தில் பதவி வகிக்கும் அமைச்சர்கள் சிலரும் மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் பதவிவகித்த மூத்த அரசியல்வாதிகள் சிலரும் தமிழீழ விடுதலைப் புலிகளை மாத்திரமல்ல தமிழர்களின் நியாயமான அரசியல் கோரிக்கைகளையும் அடியோடு ஒழிக்க வேண்டும் என்ற நோக்குடன் தான் இன்றுரை செயற்படுகின்றனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எஸ்.டபிள்யு. ஆர்.டீ.பண்டாரநாயக்கா, தஹநாயக்கா, சிறீமாவோ பண்டாரநாயக்கா, சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்க, மகிந்த ராஜபக்ஸ என தொடர்ந்து ஆட்சியமைத்தவர்களுள் இறுதியாக மஹிந்த ராஜபக்ச தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்துவிட்டேன் என மார்தட்டிக் கொண்டிருந்தார்.

மஹிந்தவுக்குப் பின்னர் ஆட்சியமைத்த மைத்திரிபால சிறிசேன நல்லாட்சி அராங்கம் என்ற போர்வையில் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கம் என்ற பெயரில் ஆட்சியமைத்தார்.

இது இவ்வாறிருக்க தமிழ் மக்களுக்கு கடந்த 60 வருடங்களாக அரசியல் ரீதியாக இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நியாயம் வேண்டும் எனக்கோரி சர்வதேச நாடுகள் உட்பட பல்வேறு தரப்பினராலும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்ட நிலையில், ஜெனீவா மனித உரிமைச் சபையும் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

ஸ்ரீலங்கா தொடர்பான பிரேரணை கடந்த 2015 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதும் அதன் இறுதி அறிக்கையை தற்போது ஆரம்பமாகியுள்ள 32 ஆவது ஜெனிவா அமர்வின்போது சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.

இதன் பின்னர் ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கென காணாமற் போனோர் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கென குழுக்கள் நியமிக்கப்பட்டன.

எனினும் குறித்த ஆணைக்குழுக்களின் முன்னிலையில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இருதரப்பிலும் முன்வைக்கப்பட்டன. அதில் அதிகளவில் ஸ்ரீலங்கா இராணுவத்தின் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

எனினும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் நியமிக்கப்பட்ட இந்த விசாரணைக்குழு தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சியில் ஆணைக்குழுவின் கால எல்லை நிறைவடைவதற்குள் அதன் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டு எதிர்வரும் யூலை மாதம் குறித்த ஆணைக்குழு கலைக்கப்படவுள்ளது.

அதேவேளை வடக்கு கிழக்கில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்கு சர்வதேச நீதிபதிகள் அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும், சர்வதேச தகவல் தொழில்நுட்ப உதவிகள் மாத்திரம் பெற்றுக்கொள்ளப்படும் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகள் உருவாவதற்கு என்ன காரணம் என்றும், அக்காரணிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி கூறியிருக்கிறார்.

பயங்கரவாதிகளின் ஒரே நோக்கம் ஸ்ரீலங்காவை பிரிப்பதாகும். இதற்காகவே மேற்குலக நாடுகள், இந்தியா மற்றும் புலம்பெயர் தமிழர்கள் (ஜனாதிபதியின் வார்த்தையில் பயங்கரவாதிகள்) ஆகியோர் செயற்படுகிறார்கள்.

இந்த நோக்கத்தை அடைவதற்காகவே புதிய அரசியலமைப்பையும் உருவாக்குவதற்கான அழுத்தங்களைப் பிரயோகித்திருக்கின்றார்கள்.

அத்துடன் பயங்கரவாதம் ஏற்பட காரணமான விடயங்களை தீர்க்காவிட்டால் வடக்கில் உள்ள இளைஞர்கள் மீண்டும் ஒருமுறை ஆயுதம் ஏந்தவேண்டிய நிலை ஏற்படும் என்றும் ஜனாதிபதி கூறியிருக்கின்றார்.

இந்த பேச்சில் ஜனாதிபதி மறைமுகமாக கூறியிருப்பது என்ன? இப்பிரச்சினைகளைத் தீர்க்காதவிடத்து, மீண்டும் தமிழர்கள் ஆயுதம் ஏந்த வேண்டும் என்ற மறைமுக செய்தியையே ஜனாதிபதி வழங்கியிருக்கிறாரா என்று கேள்வியெழுப்பியுள்ள கலாநிதி குணதாஸ அமரசேகர ஜனாதிபதியின் இந்தக் கூற்றை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றும் அடித்துச் சொன்னார்.

இதேவேளை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, கடந்த வாரம் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியிருந்தார். இதன்போது யுத்தத்தின்போது இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு ஸ்ரீலங்கா இராணுவத்தினருக்கு தண்டனை வழங்கப்படுமாக இருந்தால் அதனை ஏற்றுக்கொள்ளும் மனோநிலையில் அவர்கள் இல்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

இவர் இவ்வாறு கூறியதன் பின்னணியில் பல்வேறு காரணங்கள் காணப்படுகின்றன. அதாவது மஹிந்த ராஜபக்ச ஆட்சியில் இடம்பெற்ற குற்றங்களுக்கு தண்டனை வழங்கப்படுமாக இருந்தால் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆட்சியில் இருந்தபோது இடம்பெற்ற படுகொலைகளுக்கு அப்போது முப்படைத் தளபதியாக இருந்த சந்திரிக்கா பொறுப்புக் கூறவேண்டிய தேவை ஏற்படும்.

இவ்வாறு அவர் பொறுப்புக் கூறவேண்டிய தேவை ஏற்பட்டால் அவரது ஆட்சிக்காலத்தில் இருந்த கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகள் ஆகியோரிடமும் இந்த விடயம் தாக்கத்தைச் செலுத்தும்

ஸ்ரீலங்கா இராணுவத்தில் உள்ளோர் முற்றுமுழுதாக சிங்களவர்கள். எனவே சிங்கள மக்களிற்கும் ஆட்சியாளர்களிற்கும் இடையில் முறுகல் ஏற்படும். விடுதலைப் புலிகளை அழித்த படைவீரர்களை தற்போதைய அரசாங்கம் காட்டிக்கொடுத்தவிட்டது என்ற குற்றச்சாட்டுக்கு இலக்காக நேரிடும். எனவேதான் சந்திரிக்கா இந்தக் கருத்தை முன்வைத்துள்ளார் என்று கூறலாம்

இவ்வாறுதான் ஒவ்வொரு ஆட்சியாளர்களதும் மனோநிலை காணப்படுகின்றது. ஏனெனில் எஸ்.டபிள்யு.ஆர்.டீ பண்டாரநாயக்கா ஆட்சிக்காலம் முதல் தற்போது வரை தமிழ் மக்கள் மீதான அழிப்பு என்பது வெவ்வேறு வடிவங்களில் தொடர்ந்து கொண்ருக்கின்றது.

இதற்கிடையில் தற்போது ஆட்சியிலுள்ள மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சார்ந்திருந்தாலும் கூட மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரித்து அவர்களுடன் இணைந்து ஆட்சியமைப்பது சுதந்திரக் கட்சிக்குள் பனிப்போரை ஏற்படுத்தியுள்ளது.

சிறப்புச் செய்திகள்
அறிவித்தல்கள்
பெ திருமதி அபிதகுசலாம்பிகை தியாகேந்திரன்
பி யாழ். பருத்தித்துறை
வா யாழ். பருத்தித்துறை
தி 28-02-2017
பெ திரு சூசைப்பிள்ளை கிளமென்ற் பெர்னான்டோபிள்ளை
பி யாழ். ஊர்காவற்துறை
வா யாழ். ஊர்காவற்துறை
தி 27-02-2017
பெ திருமதி குமாரவேலு நாகம்மா
பி யாழ். நெடுந்தீவு
வா யாழ். நெடுந்தீவு
தி 26-02-2017
பெ திரு சிவசுப்பிரமணியம் சிவகணேசன்
பி யாழ். ஏழாலை
வா யாழ். ஏழாலை
தி 26-02-2017
பெ செல்வி சுகண்யா சிவஞானம்
பி புத்தளம் முந்தல்
வா லண்டன் Kingston
தி 25-02-2017
பெ திருமதி வைரமுத்து சிகாமணி
பி யாழ். அளவெட்டி
வா நெதர்லாந்து
தி 25-02-2017
பெ Dr. வயித்திலிங்கம் பாலசேகரம்
பி யாழ். கரம்பன்
வா பிரித்தானியா Ilford
தி 25-02-2017
பெ திருமதி மரியாம்பிள்ளை கனகம்மா
பி யாழ். நீர்வேலி
வா யாழ். சாவகச்சேரி
தி 24-02-2017