Flash News
கபாலி : திரைவிமர்சனம்!!
[ Friday, 22 July 2016 ,12:26:13 ]

25 வருட சிறை வாழ்க்கையை முடித்துவிட்டு சிறையிலிருந்து வெளியே வருகிறார் ரஜினி. வெளியில் வரும்போதே அவர் மலேசியாவில் வாழும் தமிழர்களுக்காக போராடித்தான் சிறை சென்றார் என்பது தெரிய வருகிறது. சிறையில் இருந்து வெளியே வரும் அவரிடம் ஜோன் விஜய், 25 வருடத்தில் மலேசியாவில் நடந்த மாற்றங்களை அவரிடம் விளக்கிக் கொண்டு வருகிறார். 

அப்போது, 43 கேங்க் என்ற கேங்ஸ்டர் கும்பல் மாணவர்களை போதை மருந்துக்கு அடிமையாக்கி இருப்பதையும், அதுமட்டுமில்லாமல், கொலை, கடத்தல் வேலைகளை செய்துவருவதாகவும் ரஜினியிடம் கூறுகிறார். முதலாவதாக 43வது கேங்கை சேர்ந்த லிங்கேஷை சந்திக்கிறார்கள். அவனது கும்பலை அடித்து துவம்சம் செய்துவிட்டு, தான் வெளியில் வந்துவிட்டதாக அவனின் பாஸிடம் தெரியப்படுத்துமாறு சொல்லிவிட்டு, தமிழர்கள் வாழும் பகுதிக்கு செல்கிறார். 


அங்கு கபாலி பெயரில் போதை மருந்துக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வு கூடம் நடத்தப்பட்டு வருகிறது. அதில் போதைக்கு அடிமையான ரித்விகாவும் சிகிச்சை பெற்று வருகிறார். அந்த கூடத்துக்கு ஆசிரியராக கலையரசன் இருக்கிறார். 

இதையெல்லாம் பார்த்து ரஜினி, தனது பெயரில் நல்லவை நடப்பதை  நினைத்து பூரித்துப் போகின்றார். அப்போது மாணவர்களிடையே நடக்கும் உரையாடும் நிகழ்ச்சியில் தான் கேங்ஸ்டராக எப்படி மாறினேன் என்பதை எடுத்துக் கூறுகிறார். இதன்பிறகு பிளாஸ்பேக் விரிகிறது. 

பிளாஸ்பேக் காட்சியில், ரஜினி சிறைக்கு போகும்போது, நிறைமாத கர்ப்பிணியான தனது மனைவி ராதிகா ஆப்தே, குண்டுக் காயத்துடன் கிடப்பதை பார்த்துவிட்டுத்தான் செல்கிறார். இதனால், தற்போது சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் தனது மனைவி உயிருடன் இருக்கின்றாரா, தனது குழந்தைக்கு என்ன நடந்தது என்ற குழப்பத்திலேயே இருக்கின்றார். 


இந்நிலையில், கிஷோரின் கும்பலில் போதை மருந்து வினியோகம்  செய்துவரும் மைம் கோபியை ரஜினி கொன்றுவிடுகிறார். இதையடுத்து, கிஷோர், இனி ரஜினியால் தனது தொழிலுக்கு இடைஞ்சல் இருக்கும் என்றுகூறி அவரை தீர்த்துக்கட்டப் பார்க்கின்றார். 

இதன் பின்னர் ரஜினி தனது மனைவியையும் குழந்தையையும் கண்டுபிடித்தாரா, கிஷோரின் அராஜகத்தை அடித்து ஒடுக்கினாரா என்பதுதான் படத்தின் மீதிக்கதை. 

படத்தின் மிகப்பெரிய பலமே ரஜினிதான். வழக்கமான மாஸ் காட்சிகள் மட்டுமில்லாது சென்டிமெண்ட் காட்சிகளிலும் வெளுத்து வாங்கியிருக்கின்றார். ஆரம்பத்தில் சிறைச்சாலையில் வெளிவரும்போதே இவர் தமிழர்களுக்காக பாடுபட்டவர் என்று தெரியவருகின்றது. இவர் படத்தில் பேசும் முதல் வசனமே மகிழ்ச்சி என்று சொல்லும்போது நமக்கே மகிழ்ச்சி வருகின்றது. 

சண்டைக் காட்சிகளில் இன்னமும் தன்னுடைய அதே ஸ்டைலில் நடித்து கலக்கியிருக்கின்றார். 'வயதானாலும் உங்க அழகும், ஸ்டைலும் குறையல' என்ற படையப்பா வசனம்தான் நமக்கு ஞாபகம் வருகின்றது. அதேபோல் பாடசாலை மாணவர்களிடம் தான் எப்படி கேங்ஸ்டராக மாறினேன் என்பதை விளக்கும் காட்சியிலும் அசத்தியிருக்கிறார். 

ரஜினியின் நண்பராக கூடவே வரும் ஜோன் விஜய் நடிப்பில் அசத்தியிருக்கிறார். இவருக்கான வசனங்கள் எல்லாம் மிகவும் யதார்த்தமாக இருக்கிறது. அதை யதார்த்தமாக செய்துவிட்டு கைதட்டல் பெறுகிறார். தன்ஷிகாவுக்கு இப்படத்தில் மாறுபட்ட கதாபாத்திரம். ஸ்டைலான பெண்ணாகவும் அழகாகவும் இருக்கின்றார். இடைவேளைக்குப் பின்னர் இவரது கதாபாத்திரம் அப்படியே மாறுவது அனைவருக்கும் ஆச்சர்யத்தை கொடுக்கும்.  நாசரின் நடிப்பும் அற்புதம். 


கிஷோர் மிரட்டலான வில்லனாக அசத்துகிறார். கலர் கலரான உடையில் ஹைடெக் வில்லனாக தெரிந்தாலும், உள்ளூர் ரவுடிபோல்தான் நமக்குத் தெரிகின்றார். லிங்கேஷ், ரஜினிக்கு இணையாக அவருக்கு எதிரில் அமர்ந்து பேசும் காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளார். 

மெட்ராஸ் படத்தில் பார்த்த கலையரசன், இப்படத்தில் அப்படியே நேர் எதிராக வந்து நிற்கிறார். குழந்தைத்தனமான முகத்தில் யதார்த்தம் கலந்து நடித்திருக்கிறார். தினேஷ், ரஜினிக்கு பாதுகாவலராக வந்திருக்கிறார். படம் முழுக்க ரோபோ படத்தில் வரும் சிட்டி போல் படத்தில் ரஜினி செய்யும் கட்டளைகளை செய்துவருகிறார். இருந்தாலும், இறுதிக்காட்சிகளில் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்கின்றார். 

சூப்பர் ஸ்டாரின் மனைவியாக வரும் ராதிகா ஆப்தே, தனது கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். வயதான கதாபாத்திரத்திலும், ரஜினியுடன் இவர் செய்யும் காதல் காட்சிகள் எல்லாம் ரசிக்கும்படியாக இருக்கின்றது. 25 வருடத்திற்குப் பின்னர் தனது கணவனை பார்த்து கண்கலங்கி நிற்கும் காட்சிகளில் எல்லாம் நம்மையும் கலங்க வைத்துவிடுகிறார். 


படத்தில் 43 கேங்கின் தலைவராக வரும் மலேசியா நடிகர் வின்ஸ்டன் சா, தோற்றத்திலேயே மிரட்டுகிறார். இவருக்கும் ரஜினிக்கு இணையான மாஸ் காட்சிகளை அமைத்திருக்கிறார் இயக்குனர். போதைக்கு அடிமையான பெண்ணாக வரும் ரித்விகாவின் கதாபாத்திரத்தை அழகாக உருவாக்கியிருக்கிறார்கள். இவர் ரஜினியை எதிர்த்து பேசும் காட்சிகளில் கைதட்டல் பெறுகின்றார். 

இயக்குனர் பா.ரஞ்சித், ரஜினிக்கு ஏற்ற கதையை உருவாக்கி, அதை தனது பாணியில் உருவாக்கியிருக்கின்றார். படத்திற்கு மிகப்பெரிய பலமே யதார்த்தமான வசனங்கள்தான். ஆங்காங்கே, ரஜினி பேசும் வசனங்கள், பஞ்ச் வசனங்கள் இல்லாவிட்டாலும், ரசிகர்களை விசிலடிக்க வைத்துள்ளது. 

ஆனால், ஒருசில காட்சிகளால் படத்திற்கு தொய்வு இருக்கின்றது. ரஞ்சித் இயக்கியிருந்த இரண்டு படங்களும் ரஞ்சித் பெயரைச் சொல்லும்படமாக இருந்தது. ஆனால், கபாலி முழுக்க முழுக்க சூப்பர் ஸ்டார் ரஜினியை மட்டுமே குறிப்பிடும். அந்தளவுக்கு ரஞ்சித்தின் பங்கு இதில் குறைவுதான் என்று சொல்லவேண்டும். 

சந்தோஷ் நாராயணன் இசையில் ஏற்கெனவே பாடல்கள் ஹிட்டாயிருந்தாலும், திரையில் பார்க்கும்போது அந்த பாடல்களுக்கு ஜீவன் பிறந்திருக்கின்றது. பின்னணி இசையும் மிரட்டலாக இருக்கின்றது. முரளியின் ஒளிப்பதிவு மலேசியாவை அழகாக படம்பிடித்திருக்கின்றது. 

செட்டில் எடுக்கப்பட்ட காட்சிகளும் மிகவும் தத்ரூபமாக தெரிகிறது. ரஜினிக்கு அமைத்த மாஸ் காட்சிகளில் எல்லாம் இவரது கமரா அழகாக வேலை செய்திருக்கின்றது. 

மொத்தத்தில் கபாலி ரசிகர்களுக்கு 'மகிழ்ச்சி'


வைகை எக்ஸ்பிரஸ் திரை விமர்சனம்
[ Wednesday,29 March 2017, 13:48:37 ]
சென்னையில் இருந்து மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் புகையிரதத்தில் பயணிக்கும் மூன்று பெண்கள் மர்மமான முறையில்
மேலும்...
பகடி ஆட்டம் திரை விமர்சனம்
[ Monday,20 February 2017, 12:21:30 ]
நாயகன் சுரேந்தர் பெண்கள் விடயத்தில் ரோமியோ. பார்க்கின்ற பெண்களையெல்லாம் அடையவேண்டும் என்ற
மேலும்...
போகன் திரைவிமர்சனம்
[ Monday,6 February 2017, 10:16:41 ]
ஜெயம் ரவி உதவிக் கமிஷனராக பணிபுரிந்து வருகின்றார். இவருடைய அப்பா நரேன் வங்கியில் முகாமையாளராக பணியாற்றி வருகின்றார்
மேலும்...
சூரக்கோட்டை மர்மம் திரைவிமர்சனம்
[ Wednesday,25 January 2017, 11:10:14 ]
உலகத்தில் உள்ள அனைவருக்கும் ஒருநாள் என்பது 24 மணி நேரம் என்றால், சூரக்கோட்டை என்ற குக்கிராமத்தில் வாழும் மனிதர்களுக்கு
மேலும்...
சூரத்தேங்காய் திரை விமர்சனம்
[ Tuesday,10 January 2017, 15:35:44 ]
சிறு நகரமொன்றில் கதாநாயகன் குரு அரவிந்த் வாழைத்தார் கடை வைத்து நடத்தி வருகின்றார். குரு அரவிந்துக்கு அப்பா கிடையாது
மேலும்...
சிறப்புச் செய்திகள்
அறிவித்தல்கள்
பெ திருமதி அபிதகுசலாம்பிகை தியாகேந்திரன்
பி யாழ். பருத்தித்துறை
வா யாழ். பருத்தித்துறை
தி 28-02-2017
பெ திரு சூசைப்பிள்ளை கிளமென்ற் பெர்னான்டோபிள்ளை
பி யாழ். ஊர்காவற்துறை
வா யாழ். ஊர்காவற்துறை
தி 27-02-2017
பெ திருமதி குமாரவேலு நாகம்மா
பி யாழ். நெடுந்தீவு
வா யாழ். நெடுந்தீவு
தி 26-02-2017
பெ திரு சிவசுப்பிரமணியம் சிவகணேசன்
பி யாழ். ஏழாலை
வா யாழ். ஏழாலை
தி 26-02-2017
பெ செல்வி சுகண்யா சிவஞானம்
பி புத்தளம் முந்தல்
வா லண்டன் Kingston
தி 25-02-2017
பெ திருமதி வைரமுத்து சிகாமணி
பி யாழ். அளவெட்டி
வா நெதர்லாந்து
தி 25-02-2017
பெ Dr. வயித்திலிங்கம் பாலசேகரம்
பி யாழ். கரம்பன்
வா பிரித்தானியா Ilford
தி 25-02-2017
பெ திருமதி மரியாம்பிள்ளை கனகம்மா
பி யாழ். நீர்வேலி
வா யாழ். சாவகச்சேரி
தி 24-02-2017