Flash News
வெள்ளிக்கிழமை 13ம் தேதி திரை விமர்சனம்
[ Wednesday, 3 August 2016 ,11:04:41 ]

நடிகர் : ரத்தன் மௌலி

நடிகை : ஸ்ரவியா

இயக்குனர் : புகழ்மணி

இசை : தாஜ் நூர்

ஒளிப்பதிவு : செல்வராஜ் கேஎஸ்

தன்னுடைய பொருளை யாரும் தொடக்கூடாது என்ற பிடிவாத குணம், மற்றும் தைரியம், பாசத்துடன் வளர்ந்து வருகின்றார் நாயகி ஸ்ரவியா. இவரது அப்பா சித்ரா லட்சுமணன் மகள் எது கேட்டாலும் அதை செய்துகொடுக்க தயாராக இருக்கின்றார். இந்நிலையில், ஸ்ரவியாவின்  பெயரில் ஒரு நிலத்தை வாங்கி, அதில் திருமண மண்டபம் கட்ட சித்ரா லட்சுமணன் முடிவு செய்கின்றார்.

இதற்கிடையில் ஸ்ரவியா, ஒருவரை  காதலிப்பதாகவும் அவரையே திருமணம் செய்ய முடிவு செய்துள்ளதாகவும் தனது பெற்றோரிடம் தெரிவிக்கின்றார். அவர்களும் மகளின் விருப்பத்திற்கேற்ப அவர் காதலித்தவரையே திருமணம் செய்துவைக்க முடிவு செய்கின்றார்கள். 

திருமணம் மண்டபம் கட்டும் பணி நடந்துகொண்டிருப்பதால் மண்டபம் கட்டி முடிந்ததும் தனது மகள் திருமணத்தை முதன்முதலாக அந்த மண்டபத்தில் நடத்த சித்ரா லட்சுமணன் முடிவு செய்கின்றார்.


மண்டபமும் கட்டி முடிக்கப்பட்டு திருமண ஏற்பாடுகளும் நடக்கின்றது. இந்நிலையில், ஸ்ரவியாவின் தாய்மாமனுக்கு அவரை  எப்படியாவது திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று ஆசை. ஆனால், வேறொருவனுடன் அவருக்கு திருமணம் நடப்பதை பொறுத்துக் கொள்ள முடியாதவன், திருமணத்துக்கு முந்தைய நாள் மண்டபத்திற்கு தீவைத்து கொளுத்தி விடுகின்றான்.

இந்த சம்பவத்தில் ஸ்ரவியா உள்ளிட்ட 13 பேர் அந்த மண்டபத்திலேயே இறந்துபோகின்றார்கள். மண்டபமும் எரிந்து நாசமாகிறது. இதன்பின்னர் இறந்துபோன 13 பேரும் அந்த மண்படத்திற்குள்ளேயே ஆவியாக சுற்றுகிறார்கள். அங்கிருந்து அந்த ஆவிகளை விரட்டி, மண்டபத்தை புதுப்பிக்க பல்வேறு முயற்சிகள் செய்கிறார்கள் எதுவும் நடந்தபாடில்லை.

கடைசியாக மந்திரவாதி ஒருவர்  ஒரு இளம் தம்பதிகளுக்கு அந்த மண்டபத்தில் திருமணம் செய்துவைத்தால் அந்த ஆவிகள் அனைத்தும் அங்கிருந்து ஓடிவிடும் என்று ஆலோசனை கூறுகின்றார். அதன்படி, ஸ்ரவியாவின் அண்ணனான ராம்ஜி, நாயகன் ரத்தன் மௌலி, எம்.எஸ்.பாஸ்கர், சாம்ஸ் உள்ளிட்டவர்களை மண்டபத்தை புதுப்பிக்கும் பணிக்கு நியமிக்கின்றார்.

அங்கு சென்று அவர்கள் மண்டபத்தை புதுப்பித்து திருமணத்தை நடத்தி ஆவிகளை விரட்டினார்களா அல்லது அந்த ஆவிகள் இவர்களுக்கு எந்தமாதிரியான பிரச்சினையை கொடுத்தது என்பதே படத்தின் மீதிக்கதை. 


இயக்குனர் புகழ்மணியின் இயக்கத்தில் ஏற்கெனவே வெளிவந்த 13ம் பக்கம் பார்க்க படத்தின் ஹீரோ ரத்தன் மௌலிதான் இந்த படத்திற்கும் கதாநாயகன். காதல் காட்சிகளிலும், ஆவிகளுக்கும் பயந்து நடுங்கும் காட்சிகளிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றார்.

கதாநாயகி ஸ்ரவியாவுக்கு படத்தில் சிறப்பான கதாபாத்திரம். பிடிவாத குணம், துணிச்சலான பெண் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கின்றார். ஆவியாக வரும் காட்சிகளிலும் சிறப்பாக நடித்திருக்கின்றார். இன்னொரு கதாநாயகியாக வரும் சுஜாகுமார் இடைவேளைக்குப் பின்னர்தான் கதைக்குள் வருகின்றார். கடைசி கட்டத்தில் இவருடைய நடிப்பும் உள்ளது.

சிவாஜி ரசிகராக வரும் லிவிங்ஸ்டன், அவர் ஸ்டைலில் பேசி நடிக்கும் காட்சிகள் எல்லாம் கலகலப்பாக இருக்கின்றது. மற்றபடி, எம்.எஸ்.பாஸ்கர், சாம்ஸ், வையாபுரி, மனோபாலா என நகைச்சுவைக்கு நிறையப் பேர் இருந்தாலும் பெரியதாக நகைச்சுவை ஒன்றும் இல்லை. 

ஏற்கெனவே ஒரு பேய்ப் படத்தை இயக்கி அனுபவமடைந்துள்ள இயக்குனர் புகழ்மணி மீண்டும் ஒரு பேய்ப் படத்தை கொடுத்திருக்கின்றார். 

தனது முந்தைய படத்திற்கும் இதற்கும் பெரிய மாற்றத்தை கொடுத்திருக்கின்றார். நிறைய பேய்ப் படங்களை பார்த்து அனுபவப்பட்டுவிட்ட நமக்கு, இந்த படத்தில் வரும் பேய்கள் பெரிதாக அச்சுறுத்தவில்லை. அதேபோல், நகைச்சுவையும் பெரிய அளவில் கைகொடுக்கவில்லை.

தாஜ்நூரின் பின்னணி இசை படத்திற்கு பக்கபலமாக பொருந்தியிருக்கின்றது. பாடல்கள் ஓரளவு பரவாயில்லை. கே.எஸ்.செல்வராஜின் ஒளிப்பதிவில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.

மொத்தத்தில் ‘வெள்ளிக்கிழமை 13ஆம் தேதி திகில் கொஞ்சம் குறைவுதான்.

வைகை எக்ஸ்பிரஸ் திரை விமர்சனம்
[ Wednesday,29 March 2017, 13:48:37 ]
சென்னையில் இருந்து மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் புகையிரதத்தில் பயணிக்கும் மூன்று பெண்கள் மர்மமான முறையில்
மேலும்...
பகடி ஆட்டம் திரை விமர்சனம்
[ Monday,20 February 2017, 12:21:30 ]
நாயகன் சுரேந்தர் பெண்கள் விடயத்தில் ரோமியோ. பார்க்கின்ற பெண்களையெல்லாம் அடையவேண்டும் என்ற
மேலும்...
போகன் திரைவிமர்சனம்
[ Monday,6 February 2017, 10:16:41 ]
ஜெயம் ரவி உதவிக் கமிஷனராக பணிபுரிந்து வருகின்றார். இவருடைய அப்பா நரேன் வங்கியில் முகாமையாளராக பணியாற்றி வருகின்றார்
மேலும்...
சூரக்கோட்டை மர்மம் திரைவிமர்சனம்
[ Wednesday,25 January 2017, 11:10:14 ]
உலகத்தில் உள்ள அனைவருக்கும் ஒருநாள் என்பது 24 மணி நேரம் என்றால், சூரக்கோட்டை என்ற குக்கிராமத்தில் வாழும் மனிதர்களுக்கு
மேலும்...
சூரத்தேங்காய் திரை விமர்சனம்
[ Tuesday,10 January 2017, 15:35:44 ]
சிறு நகரமொன்றில் கதாநாயகன் குரு அரவிந்த் வாழைத்தார் கடை வைத்து நடத்தி வருகின்றார். குரு அரவிந்துக்கு அப்பா கிடையாது
மேலும்...
சிறப்புச் செய்திகள்
அறிவித்தல்கள்
பெ திருமதி அபிதகுசலாம்பிகை தியாகேந்திரன்
பி யாழ். பருத்தித்துறை
வா யாழ். பருத்தித்துறை
தி 28-02-2017
பெ திரு சூசைப்பிள்ளை கிளமென்ற் பெர்னான்டோபிள்ளை
பி யாழ். ஊர்காவற்துறை
வா யாழ். ஊர்காவற்துறை
தி 27-02-2017
பெ திருமதி குமாரவேலு நாகம்மா
பி யாழ். நெடுந்தீவு
வா யாழ். நெடுந்தீவு
தி 26-02-2017
பெ திரு சிவசுப்பிரமணியம் சிவகணேசன்
பி யாழ். ஏழாலை
வா யாழ். ஏழாலை
தி 26-02-2017
பெ செல்வி சுகண்யா சிவஞானம்
பி புத்தளம் முந்தல்
வா லண்டன் Kingston
தி 25-02-2017
பெ திருமதி வைரமுத்து சிகாமணி
பி யாழ். அளவெட்டி
வா நெதர்லாந்து
தி 25-02-2017
பெ Dr. வயித்திலிங்கம் பாலசேகரம்
பி யாழ். கரம்பன்
வா பிரித்தானியா Ilford
தி 25-02-2017
பெ திருமதி மரியாம்பிள்ளை கனகம்மா
பி யாழ். நீர்வேலி
வா யாழ். சாவகச்சேரி
தி 24-02-2017