Flash News
குற்றமே தண்டனை திரை விமர்சனம்
[ Monday, 5 September 2016 ,10:51:27 ]

நடிகர் : வித்தார்த்

நடிகை : ஐஸ்வர்யா ராஜேஷ்

இயக்குனர் : மணிகண்டன்

இசை : இளையராஜா

ஒளிப்பதிவு : மணிகண்டன்.எம்

குற்றங்களுக்கு தண்டனை கிடைக்காமல் போனாலும் மனசாட்சிப்படி தண்டனை நிச்சயம் கிடைக்கும் என்பதை மனதில் பதிய வைத்திருக்கும் படம் குற்றமே தண்டனை.


வங்கிக் கடன்களை வசூல் செய்யும் தனியார் நிறுவனத்தில் நாயகன் விதார்த், நாயகி பூஜா தேவாரியா இருவரும் வேலை பார்க்கின்றார்கள் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் விதார்த், எதிர்வீட்டில் குடியிருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் வீட்டைக் கடந்து செல்லும்போதெல்லாம் உன்னிப்பாக கவனித்தபடி செல்கின்றார். 

இந்நிலையில் பார்வைக் கோளாறால் அவதிப்படும் விதார்த், இதற்காக ஒரு வைத்தியரிடம் சென்று பரிசோதனை செய்கின்றார். அவர், கண் மாற்று சத்திரசிகிச்சை செய்ய வேண்டும் என்றும் இதற்கு 3 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவாகும் என்றும் கூறுகின்றார். பணத்தை எப்படி ஏற்பாடு செய்வது என்ற குழப்பத்தில் இருக்கையில், எதிர்வீட்டில் இருக்கும் ஐஸ்வர்யா கொலை செய்யப்படுகின்றார்.ஏற்கனவே அந்த வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்லும் ரகுமான் வீட்டில் இருக்கின்றார். விதார்த் சென்று கதவைத் தட்டி விசாரித்தபோது ஐஸ்வர்யா இறந்தது தெரியவருகின்றது. விதார்த்தைப் பார்த்து அதிர்ச்சியடையும் ரகுமான், தன்னை இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து காப்பாற்றும்படி கூறுகின்றார். விதார்த்தும் உதவி செய்வதாக கூறிவிட்டு செல்கின்றார். 

பொலிசார் விசாரணையை தொடங்கிய நிலையில், ரகுமானை தனியாக சந்தித்த விதார்த், தன்னுடைய கண் சிகிச்சைக்குப் பணம் கேட்கின்றார். அவரும் கேட்ட பணத்தை கொடுக்கின்றார். இதுதான் சமயம் என்று மருத்துவமனை நிர்வாகம் மேலும் பணம் கேட்கின்றது. அதன் பின்னர் ரகுமான் மற்றும் ஐஸ்வர்யா வீட்டுக்கு வந்துபோகும் மற்றொரு இளைஞர் ஆகிய இருவரிடமும் தனித்தனியாக பணம் வாங்குகின்றார். 


இப்படி லட்சக்கணக்கில் பணத்தை கறந்த விதார்த்துக்கு கண்பார்வை கிடைத்ததா? ஐஸ்வர்யா ராஜேஷ் கொலையில் விதார்த் மூக்கை நுழைக்க காரணம் என்ன? கொலையாளி யார்? என்பதே மீதிக் கதை.

நாயகன் விதார்த்திற்கு யதார்த்தமான கதாபாத்திரம். பார்வைக் கோளாறை சரிசெய்வதற்காக எடுக்கும் முயற்சி, சுயநலத்திற்காக மனசாட்சியை மீறி இரண்டு பேரை பலிகடாவாக்கி அடுத்தடுத்து செய்யும் குற்றங்கள் என அழுத்தமான நடிப்பை பதிவு செய்திருக்கின்றார். படம் முழுக்க அவரது கதாபாத்திரம் பேசுகின்றது.

நடுத்தர குடும்பத்துப் பெண்ணாக வரும் நாயகி பூஜாவுக்கு ஆடம்பரம் இல்லாத கதாபாத்திரம், சிறப்பாக நடித்திருக்கின்றார். மற்றொரு அழுத்தமான கதாபாத்திரம் ஐஸ்வர்யா ராஜேஷ். இடைவேளைக்குப் பின்னரே அவருக்கு வசனங்கள் வருகிறது. மாறுபட்ட கதாபாத்திரத்திற்கு ஏற்ப தனது பங்களிப்பை சரியாக கொடுத்திருக்கின்றார்.


பிரச்சனையில் சிக்கி வெளியே வருவதற்காக பணத்தை தண்ணியாக செலவு செய்யும் தொழிலதிபராக வரும் ரகுமான், விதார்த்துக்கு பக்கபலமான கதாபாத்திரத்தில் வரும் நாசர், குரு சோமசுந்தரம் ஆகியோரின் நடிப்பும் கதையை தொய்வில்லாமல் கொண்டு செல்கிறது.

காக்கா முட்டை படத்தில் இருந்து சற்று மாறுபட்டு, ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும் வகையில் திரில் கலந்த கிரைம் படத்தை கச்சிதமாக கொடுத்திருக்கிறார் மணிகண்டன். 

ஒளிப்பதிவிலும் அவரது கைவண்ணம் பளிச்சிடுகின்றது. பாடல்கள் இல்லாவிட்டாலும் இளையராஜாவின் பின்னணி இசை, காட்சிகளுக்கு பலம் சேர்த்திருக்கின்றது. 

மொத்தத்தில் குற்றமே தண்டனை மனசாட்சி.

பகடி ஆட்டம் திரை விமர்சனம்
[ Monday,20 February 2017, 12:21:30 ]
நாயகன் சுரேந்தர் பெண்கள் விடயத்தில் ரோமியோ. பார்க்கின்ற பெண்களையெல்லாம் அடையவேண்டும் என்ற
மேலும்...
போகன் திரைவிமர்சனம்
[ Monday,6 February 2017, 10:16:41 ]
ஜெயம் ரவி உதவிக் கமிஷனராக பணிபுரிந்து வருகின்றார். இவருடைய அப்பா நரேன் வங்கியில் முகாமையாளராக பணியாற்றி வருகின்றார்
மேலும்...
சூரக்கோட்டை மர்மம் திரைவிமர்சனம்
[ Wednesday,25 January 2017, 11:10:14 ]
உலகத்தில் உள்ள அனைவருக்கும் ஒருநாள் என்பது 24 மணி நேரம் என்றால், சூரக்கோட்டை என்ற குக்கிராமத்தில் வாழும் மனிதர்களுக்கு
மேலும்...
சூரத்தேங்காய் திரை விமர்சனம்
[ Tuesday,10 January 2017, 15:35:44 ]
சிறு நகரமொன்றில் கதாநாயகன் குரு அரவிந்த் வாழைத்தார் கடை வைத்து நடத்தி வருகின்றார். குரு அரவிந்துக்கு அப்பா கிடையாது
மேலும்...
கத்தி சண்டை திரை விமர்சனம்
[ Tuesday,3 January 2017, 07:24:33 ]
படத்தின் ஆரம்பத்தில் கண்டெயினரில் வருகின்ற பணத்தை மடக்கி அதனை அரசிடம் ஒப்படைக்கின்றார் பொலிஸ் அதிகாரி..
மேலும்...
சிறப்புச் செய்திகள்
அறிவித்தல்கள்
பெ திருமதி அபிதகுசலாம்பிகை தியாகேந்திரன்
பி யாழ். பருத்தித்துறை
வா யாழ். பருத்தித்துறை
தி 28-02-2017
பெ திரு சூசைப்பிள்ளை கிளமென்ற் பெர்னான்டோபிள்ளை
பி யாழ். ஊர்காவற்துறை
வா யாழ். ஊர்காவற்துறை
தி 27-02-2017
பெ திருமதி குமாரவேலு நாகம்மா
பி யாழ். நெடுந்தீவு
வா யாழ். நெடுந்தீவு
தி 26-02-2017
பெ திரு சிவசுப்பிரமணியம் சிவகணேசன்
பி யாழ். ஏழாலை
வா யாழ். ஏழாலை
தி 26-02-2017
பெ செல்வி சுகண்யா சிவஞானம்
பி புத்தளம் முந்தல்
வா லண்டன் Kingston
தி 25-02-2017
பெ திருமதி வைரமுத்து சிகாமணி
பி யாழ். அளவெட்டி
வா நெதர்லாந்து
தி 25-02-2017
பெ Dr. வயித்திலிங்கம் பாலசேகரம்
பி யாழ். கரம்பன்
வா பிரித்தானியா Ilford
தி 25-02-2017
பெ திருமதி மரியாம்பிள்ளை கனகம்மா
பி யாழ். நீர்வேலி
வா யாழ். சாவகச்சேரி
தி 24-02-2017