Flash News
உச்சத்துல சிவா திரை விமர்சனம்
[ Wednesday, 21 September 2016 ,14:40:20 ]

நடிகர் : கரண்

நடிகை : நேகா ரத்னாகரன்

இயக்குனர் : ஜேபீ

இசை : வித்யாசாகர்

ஓளிப்பதிவு : ஹார்முக்

நாயகன் கரண் ஒரு டாக்சி ஓட்டுநர். ஒருநாள் இரவு இவர் சவாரியை இறக்கிவிட்டு காரில் சென்று கொண்டிருக்கும் நிலையில், நாயகி நேகா ரத்னாகரன் மணக்கோலத்தில் ஒருவருடன் நடுரோட்டில் ஓடி வந்துகொண்டிருக்கின்றார். அவர்களை ஒரு ரவுடிக் கும்பல் துரத்தி வருகின்றது. 

அப்போது, நேகாவுடன் வந்தவரை அந்த ரவுடிக் கும்பல் சுட்டு வீழ்த்துகின்றது. அத்தோடு ரவுடிக் கும்பல் வந்த காரும் விபத்துக்குள்ளாகி, அதில் உள்ள அனைவரும் இறக்கின்றார்கள்.


அப்போது அந்த வழியில் வந்த கரண், இதையெல்லாம் பார்த்து அவரை தனது காரில் ஏற்றி அழைத்து செல்கின்றார். அப்போது கரணிடம், நாயகி நேகா அப்பாவின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்துகொண்டதால், ரவுடிகளை வைத்து தன்னை கொலை செய்ய அவரது அப்பா முயற்சி செய்கின்றார் என்று தெரிவிக்கின்றார்.

இதனால் அவரைக் காப்பாற்றுவதற்காக தன்னுடைய காரில் ஏற்றிக் கொண்டு சுற்றி வருகின்றார். குண்டு பாய்ந்து இறந்துபோன நேகாவின் காதல் கணவரும், அவரை சுட்டுக் கொன்ற ரவுடி கும்பலும் ஒரே இடத்தில் இறந்து கிடப்பதை பார்க்கும் பொலிசார் இதற்கெல்லாம் யார் காரணம் என்பதை அறிய தீவிர விசாரணையில் இறங்குகின்றார்கள்.

அவரை காரில் வைத்து சுற்றி வரும்போதே அவர்மீது காதல் கொள்கின்றார் நாயகன் கரண். இந்நிலையில், இவர்கள் பயணிக்கும் காரில் நேகாவின் திருமணத்துக்கு உறுதுணையாக இருந்த அவரது  அண்ணனும் ஏறிக் கொள்கிறார்.

இதையறிந்த, நரேன் மற்றும் அவரது கூட்டாளிகள் இவர்களுடைய காரை துரத்துகின்றார்கள். அப்போது, நேகாவின் அண்ணன் மட்டும் காரில் இருந்து இறங்கி தப்பி ஓட நினைக்கின்றார். அவரைத்  துரத்தும் ரவுடிக் கும்பல் அவரை சுட்டு வீழ்த்துகின்றது.

இதையெல்லாம் பார்த்து இவர்களிடமிருந்து நாயகியை காப்பாற்ற பொலிசாரிடம் சென்று நடந்தவற்றையெல்லாம் சொல்ல முடிவெடுக்கின்றார். ஆனால், நாயகியோ இதற்கு மறுப்பு தெரிவிக்கிறார். இறுதியில், நரேன் மற்றும் அவரது கூட்டாளிகளிடமிருந்து நாயகியை கரண் எப்படி காப்பாற்றினார், பொலிசாரிடம்  செல்ல ஏன் நாயகி தயங்குகின்றார் என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகன் கரண் நடிப்பில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் வெளிவரும் படம் என்பதால், இப்படம் கரணுக்கு ஒரு நல்ல திருப்புமுனையாக அமைய வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக இருந்தது. அதை உணர்ந்து இந்த படத்தில் சிறப்பானதொரு நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றார் கரண். படத்தில் பார்க்கும்போது இன்னும் கொஞ்சம் இளமையாகவே தெரிகின்றார். 


நாயகி நேகா ரத்னாகரனை சுற்றித்தான் கதையே நகர்கின்றது. சென்டிமென்ட் காட்சிகள், உருக்கமான காட்சிகளில் எல்லாம் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றார். இவருக்கு அடுத்தபடியாக நரேன் வில்லத்தனம் கலந்த கதாபாத்திரம். அதை அவர் சிறப்பாக செய்திருக்கின்றார். கோவை சரளாவின் குரல் மட்டுமே படத்தில் ஒலிக்கின்றது. இருப்பினும், குரலிலேயே அவரது முத்திரையை தனியாக பதித்து விடுகின்றார்.

மற்றபடி, படத்தில் சிறு சிறு கதாபாத்திரங்கள் நகைச்சுவை என்ற பெயரில் கடுப்பைத்தான் வரவழைத்திருக்கின்றன. ஒருநாள் இரவிலேயே நடக்கும் கதையை விறுவிறுப்பாக சொல்ல நினைத்திருக்கிறார் இயக்குனர் ஜேப்பி.

ஆனால், விறுவிறுப்பான திரைக்கதை இல்லாதது பெரிய குறை. கார் , ரவுடிக் கும்பலிடம் இருந்து தப்பிப்பது இந்த மாதிரியான காட்சிகள் வைத்தாலே விறுவிறுப்பாகிவிடும் என்று தப்புக் கணக்கு போட்டிருக்கின்றார். 

வித்யாசாகர் இசையில் பாடல்கள் பரவாயில்லை. பின்னணி இசை கொஞ்சம் பலம் சேர்த்திருக்கிறது.  ஹார்முக் ஒளிப்பதிவு படத்திற்கு கொஞ்சம் பலமாக இருந்திருக்கின்றது.

பகடி ஆட்டம் திரை விமர்சனம்
[ Monday,20 February 2017, 12:21:30 ]
நாயகன் சுரேந்தர் பெண்கள் விடயத்தில் ரோமியோ. பார்க்கின்ற பெண்களையெல்லாம் அடையவேண்டும் என்ற
மேலும்...
போகன் திரைவிமர்சனம்
[ Monday,6 February 2017, 10:16:41 ]
ஜெயம் ரவி உதவிக் கமிஷனராக பணிபுரிந்து வருகின்றார். இவருடைய அப்பா நரேன் வங்கியில் முகாமையாளராக பணியாற்றி வருகின்றார்
மேலும்...
சூரக்கோட்டை மர்மம் திரைவிமர்சனம்
[ Wednesday,25 January 2017, 11:10:14 ]
உலகத்தில் உள்ள அனைவருக்கும் ஒருநாள் என்பது 24 மணி நேரம் என்றால், சூரக்கோட்டை என்ற குக்கிராமத்தில் வாழும் மனிதர்களுக்கு
மேலும்...
சூரத்தேங்காய் திரை விமர்சனம்
[ Tuesday,10 January 2017, 15:35:44 ]
சிறு நகரமொன்றில் கதாநாயகன் குரு அரவிந்த் வாழைத்தார் கடை வைத்து நடத்தி வருகின்றார். குரு அரவிந்துக்கு அப்பா கிடையாது
மேலும்...
கத்தி சண்டை திரை விமர்சனம்
[ Tuesday,3 January 2017, 07:24:33 ]
படத்தின் ஆரம்பத்தில் கண்டெயினரில் வருகின்ற பணத்தை மடக்கி அதனை அரசிடம் ஒப்படைக்கின்றார் பொலிஸ் அதிகாரி..
மேலும்...
சிறப்புச் செய்திகள்
அறிவித்தல்கள்
பெ திருமதி அபிதகுசலாம்பிகை தியாகேந்திரன்
பி யாழ். பருத்தித்துறை
வா யாழ். பருத்தித்துறை
தி 28-02-2017
பெ திரு சூசைப்பிள்ளை கிளமென்ற் பெர்னான்டோபிள்ளை
பி யாழ். ஊர்காவற்துறை
வா யாழ். ஊர்காவற்துறை
தி 27-02-2017
பெ திருமதி குமாரவேலு நாகம்மா
பி யாழ். நெடுந்தீவு
வா யாழ். நெடுந்தீவு
தி 26-02-2017
பெ திரு சிவசுப்பிரமணியம் சிவகணேசன்
பி யாழ். ஏழாலை
வா யாழ். ஏழாலை
தி 26-02-2017
பெ செல்வி சுகண்யா சிவஞானம்
பி புத்தளம் முந்தல்
வா லண்டன் Kingston
தி 25-02-2017
பெ திருமதி வைரமுத்து சிகாமணி
பி யாழ். அளவெட்டி
வா நெதர்லாந்து
தி 25-02-2017
பெ Dr. வயித்திலிங்கம் பாலசேகரம்
பி யாழ். கரம்பன்
வா பிரித்தானியா Ilford
தி 25-02-2017
பெ திருமதி மரியாம்பிள்ளை கனகம்மா
பி யாழ். நீர்வேலி
வா யாழ். சாவகச்சேரி
தி 24-02-2017