Flash News
ஆண்டவன் கட்டளை திரை விமர்சனம்
[ Tuesday, 27 September 2016 ,08:18:17 ]

நடிகர்  : விஜய் சேதுபதி

நடிகை : ரித்திகா சிங்

இயக்குனர் : மணிகண்டன் எம்

இசை : கே

ஒளிப்பதிவு : ஷண்முக சுந்தரம் என்

குடும்பக் கஷ்டம் காரணமாக விஜய் சேதுபதி லண்டனுக்கு வேலை தேடிச் செல்ல முடிவெடுக்கின்றார். இவருடன் நண்பர் யோகி பாபுவும் லண்டனுக்கு செல்ல முடிவு செய்ய, இருவரும் கிராமத்தில் இருந்து சென்னைக்கு வருகின்றார்கள். 


சென்னையில் இருவரும் முகவர் மூலம் கடவுச்சீட்டு   எடுக்கின்றார்கள். கடவுச்சீட்டில் மனைவி பெயர் இருந்தால் விசா எளிதில் கிடைக்கும் என்று முகவர்கள் கூறுவதைக் கேட்டு, இருவரும் தங்களது கடவுச்சீட்டில் மனைவி இருப்பதாக கூறி ஒரு பொய்யான பெயரைப் போடுகிறார்கள்.

விஜய் சேதுபதி தனது கடவுச்சீட்டில் தனது மனைவியின்  பெயரை கார்மேகக் குழலி என்று குறிப்பிடுகின்றார். விசா நேர்முகத்தேர்வில் யோகி பாபுவுக்கு மட்டும் விசா கிடைக்கின்றது. விஜய் சேதுபதிக்கு கிடைக்கவில்லை. இதனால் விரக்தியில் இருக்கும் விஜய் சேதுபதி, நாசர் வைத்திருக்கும் நாடகக் கம்பனியில் வேலைக்குச் சேர்கிறார்.


இந்நிலையில் நாசர் லண்டனில் நாடகம் நடத்த விஜய் சேதுபதி உள்ளிட்ட தனது கலைஞர்களை அழைத்துக் கொண்டு போக முடிவுவெடுக்க, அப்போது, அனைவரிடமும் கடவுச்சீட்டை  தயார் செய்யும்படி தெரிவிக்கின்றார். அந்த நாடகக் கம்பனியில் வேலை செய்யும் பூஜா தேவாரியா, விஜய் சேதுபதியின் கடவுச்சீட்டைப் பார்த்து, அதில் குறிப்பிட்டிருக்கும் அவரது மனைவியைப் பற்றி கேட்கின்றார்.

அப்போது விஜய் சேதுபதி, தனக்கு இன்னும் திருமணமாகவில்லை என்றும், விசா எளிதில் கிடைக்கவேண்டும் என்பதற்காக முகவர் மூலமாக பொய்யான ஒரு தகவலை கடவுச்சீட்டில் பதிவு செய்திருப்பதாக தெரிவிக்கின்றார். இது பெரிய பிரச்சினையாகிவிடும் என்று விஜய் சேதுபதியை எச்சரிக்கும் பூஜா தேவாரியா, அந்த பெயரை எப்படியாவது நீக்கிவிடு என்று விஜய் சேதுபதியிடம் தெரிவிக்கின்றார்.

விஜய் சேதுபதியும் அந்த பெயரை எப்படி நீக்குவது என்று சட்டத்தரணியிடம் சென்று ஆலோசனை கேட்கின்றார். சட்டத்தரணி அந்த பெயருடைய பெண்ணை தேடிக் கண்டுபிடித்து, அவரை விஜய் சேதுபதியின் மனைவியாக நடிக்க வைத்து, விவகாரத்து வாங்கிவிட்டால் கடவுச்சீட்டில்  இருந்து பெயரை நீக்கிவிடலாம் என்று ஆலோசனை கூறுகின்றார்.


இதனால் கார்மேகக் குழலி என்ற பெயருள்ள பெண்ணைத்தேடி அலைகின்றார். அப்போது, தொலைக்காட்சியில் செய்தியாளராக வேலை செய்யும் ரித்திகா சிங்கின் பெயர் கார்மேக குழலி என்பதை அறிந்து, அவரை விஜய் சேதுபதியின் மனைவியாக நடிக்க வைக்க போராடுகின்றார்கள்.

இறுதியில் ரித்திகா சிங், விஜய் சேதுபதியின் மனைவியாக நடிக்க சம்மதித்தாரா, விஜய் சேதுபதி தனது குடும்பக்  கஷ்டத்தை தீர்க்க லண்டன் போனாரா என்பதே மீதிக்கதை. 

சமூகத்தில் நடக்கும் அவலங்களை இப்படத்தில் சுட்டிக்காட்டி யதார்த்த இயக்குனர் என்பதை மறுபடியும் நிரூபித்திருக்கிறார் மணிகண்டன். கடவுச்சீட்டில் எத்தனை முறைகேடுகள் நடைபெறுகின்றது. எதிலும் தவறான வழியை தேர்ந்தெடுத்தால் என்னென்ன பிரச்சினைகள் ஏற்படும் என்பதை இப்படத்தில் தெளிவாக சொல்லியிருக்கிறார்.

அதேபோல் சென்னையில் வீடு வாடகைக்கு கிடைப்பது எவ்வளவு கஷ்டம் என்பதையும் அழகாகக் காட்டியுள்ளார். அதேநேரத்தில் விவாகரத்து பற்றி இன்றைய சூழலில் வாழும் தம்பதிகளுக்கு அறிவுரை கூறிய விதமும் அருமை.


விஜய் சேதுபதி ஒரு இடத்திலும் குறைசொல்ல முடியாத அளவுக்கு தனது யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக, வாய் பேச முடியாதவராக இவர் நடிக்கும்போது திரையரங்கமே உற்சாகமடைகின்றது. எந்த கதாபாத்திரத்தையும் சாதாரணமாக செய்து முடிக்கும் விஜய் சேதுபதி, இந்த படத்திலும் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிகவும் செம்மையாக செய்திருக்கின்றார்.

இறுதிச்சுற்று நாயகி ரித்திகா சிங்கும், விஜய் சேதுபதிக்கு போட்டி போடும் வகையில் தனது நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றார். செய்தியாளராக  வரும் அவரது தோற்றம், ஒவ்வொரு காட்சிக்கும் அவரது முகபாவனை என ரசிக்க வைக்கின்றார். 

விஜய் சேதுபதியின் நண்பராக வரும் யோகி பாபு வரும் காட்சிகள் எல்லாம் கலகலப்பாக நகர்கின்றது. விசா கிடைத்தவுடன் விஜய் சேதுபதியை இவர் கேலி செய்யும் காட்சிகள் எல்லாம் சிரிப்புக்கு உத்தரவாதம்.


கேயின் இசையில் பாடல்கள் ஓரளவுக்கு நன்றாக இருக்கின்றது. பின்னணி இசையில் தனது முழுப் பலத்தையும் போட்டு உழைத்திருப்பது நன்றாகவே தெரிகின்றது. சண்முக சுந்தரத்தின் ஒளிப்பதிவு காட்சிகளை அழகாகவும், தெளிவாகவும் காட்டியிருக்கிறது.

மொத்தத்தில் ஆண்டவன் கட்டளை சமூக அக்கறையுள்ள திரைப்படம்.

சூரத்தேங்காய் திரை விமர்சனம்
[ Tuesday,10 January 2017, 15:35:44 ]
சிறு நகரமொன்றில் கதாநாயகன் குரு அரவிந்த் வாழைத்தார் கடை வைத்து நடத்தி வருகின்றார். குரு அரவிந்துக்கு அப்பா கிடையாது
மேலும்...
கத்தி சண்டை திரை விமர்சனம்
[ Tuesday,3 January 2017, 07:24:33 ]
படத்தின் ஆரம்பத்தில் கண்டெயினரில் வருகின்ற பணத்தை மடக்கி அதனை அரசிடம் ஒப்படைக்கின்றார் பொலிஸ் அதிகாரி..
மேலும்...
வீரசிவாஜி திரை விமர்சனம்
[ Monday,19 December 2016, 10:08:22 ]
பாண்டிச்சேரியில் டக்சி ஓட்டுநராக இருக்கின்றார் விக்ரம் பிரபு. இவருக்கு சொந்தமென்று சொல்வதற்கு யாருமில்லை
மேலும்...
சென்னை 600 028 II திரைவிமர்சனம்
[ Thursday,15 December 2016, 10:42:51 ]
சென்னை 600 028 முதல் பாகத்தில் ஷார்க்ஸ் அணியில் இருந்தவர்களில் சில வேலை காரணமாக பிரிந்துவிட, பத்து வருடங்களாக சிவா,
மேலும்...
இளமி திரை விமர்சனம்
[ Thursday,1 December 2016, 07:41:32 ]
1715ம் ஆண்டில் நடக்கும் ஜல்லிக்கட்டை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் படம் இளமி. மதுரை வட்டாரத்தில் இருக்கும்..
மேலும்...
சிறப்புச் செய்திகள்
அறிவித்தல்கள்
பெ திருமதி சந்திரசேகரம்பிள்ளை திருபுரிநாகேஸ்வரி அம்மா
பி யாழ். வட்டுக்கோட்டை
வா திருகோணமலை
தி 04-01-2017
பெ திருமதி பத்மினிதேவி பத்மநாபபிள்ளை
பி யாழ். கோண்டாவில்
வா அவுஸ்திரேலியா sydney
தி 04-01-2017
பெ திருமதி சரஸ்வதி கணேஸ்(மம்மி)
பி யாழ். சரசாலை
வா லண்டன்
தி 03-01-2017
பெ திரு சீமாம்பிள்ளை மரியநாயகம்
பி மன்னார் ஒலிமடு நானாட்டான்
வா மன்னார் ஒலிமடு நானாட்டான்
தி 02-01-2017
பெ திருமதி மங்களேஸ்வரி மேனன்
பி யாழ். சங்குவேலி
வா லண்டன்
தி 02-01-2017
பெ திருமதி இராஜேஸ்வரி சிறிஸ்கந்தராஜா(கெங்கா)
பி யாழ். நீராவியடி
வா ஜெர்மனி Kaufbeuren
தி 01-01-2017
பெ திரு கோவிந்தர் சோமசுந்தரம்
பி கிளிநொச்சி பூநகரி
வா கிளிநொச்சி பூநகரி
தி 26-12-2016
பெ திரு பாலசுப்பிரமணியம் அதீஸ்
பி கனடா
வா கனடா
தி 26-12-2016