Flash News
எம் எஸ் தோனி திரைவிமர்சனம்
[ Tuesday, 4 October 2016 ,09:00:07 ]

நடிகர் :  சுஷாந்த் சிங் ராஜ்புட்

நடிகை : கியாரா அத்வானி

இயக்குனர் : நீரஜ் பாண்டே

இசை : அமல் மாலிக்

ஒளிப்பதிவு : சந்தோஷ் துண்டியயில்

கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவின் புகழை மேலும் உச்சத்திற்கு கொண்டு சென்ற பெருமைக்குரிய தலைவர்   எம்.எஸ்.தோனி. அவருடைய தலைமையில் இந்திய அணி பல்வேறு சர்வதேச தொடர்களை வெற்றிபெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளது. அப்படிப்பட்ட தோனியின் வாழ்க்கையை மையமாக வைத்து வெளிவந்துள்ள படமே எம்.எஸ்.தோனி.


இப்படத்தில் தோனி எங்கு பிறந்தார், எப்படி வளர்ந்தார், எப்படி கிரிக்கெட்டுக்குள் நுழைந்தார் என்பது முதல் தொடங்கி, அவர் இந்தியாவுக்கு உலகக்கோப்பை வாங்கிக் கொடுத்ததோடு படம் முடிகின்றது. 

படத்தில் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாற்றை அங்குலம் அங்குலமாக ஆராய்ந்து படமாக்கியிருக்கிறார் இயக்குனர் நீரஜ் பாண்டே. 

தோனியின் வாழ்க்கை வரலாறு பெரும்பாலோனருக்கு தெரிந்த விடயம்தான். என்றாலும், இந்த படத்தில் விறுவிறுப்பான திரைக்கதை மூலம் அழகாக படமாக்கி அவரைப் பற்றி தெரிந்தவர்கள்கூட ஆச்சர்யப்பட வைக்கும் வகையில் அவரது வாழ்க்கை வரலாற்றை விளக்கியிருக்கிறார்.

படத்தில் தோனி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சுஷாந்த் சிங் ராஜ்புட் பாராட்டப்பட வேண்டியவர். இவர் செய்கிற ஒவ்வொரு செய்கையும் தோனியை ஒத்துப்போவது ஆச்சர்யமளிக்கிறது. குறிப்பாக கிரிக்கெட்டில் தோனியின் ஸ்பெஷல் ஷொட்டான  ஹெலிகாப்டர் ஷொட், அவருடைய நடை என அச்சு அசலாக செய்து அசத்தியிருக்கிறார். இதற்காக அவர் கஷ்டப்பட்டது வீண் போகவில்லை. 

இவர் படத்தில் நடித்திருக்கிறார் என்று சொல்வதைவிட தோனியாகவே வாழ்ந்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். அவ்வளவு தத்ரூபமாக இருக்கின்றது இவருடைய நடிப்பு. அதேபோல், செண்டிமென்ட் காட்சிகளில் எல்லாம் நம்மையும் கண்கலங்க வைத்திருக்கிறார்.

விளையாட்டு தொடர்பான காட்சிகளில், தோனி விளையாடும் அசல் காட்சிகளில் அவருடைய முகத்தில் கதாநாயகன் ராஜ்புத் முகத்தை ஒட்டி மார்பிங் செய்திருப்பது சிறப்பு. கிராபிக்ஸ் என்று தெரியாத அளவுக்கு அந்த காட்சிகள் அமைந்துள்ளன.

படத்தின் நீளம் 3 மணி நேரத்துக்கும் மேலாக இருந்தாலும், படம் சலிக்காதவாறு காட்சிப்படுத்தியிருப்பது சிறப்பு. படத்தில் எந்தவொரு காட்சியையும் குறை சொல்ல முடியாத அளவுக்கு இயக்குனரின் கைவண்ணம் கச்சிதமாக அமைந்திருக்கிறது. 

இதுதவிர தோனியின் காதல் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. கிரிக்கெட்டில் ஆக்ரோஷமாக இருக்கும் தோனியால் இப்படியும் காதல் செய்யமுடியுமா என்று ஆச்சர்யப்பட வைக்கிறது அந்த காதல் காட்சிகள். 


மேலும் படத்தில் தோனியின் அக்காவாக பூமிகா நடித்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு திரையில் அவருக்கு மிகப்பெரிய கதாபாத்திரம். தனக்குரிய கதாபாத்திரத்தை அவர் சிறப்பாக செய்திருக்கிறார். தோனியின் அப்பா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அனுபம் கெர்ரும் தனது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். 

அமல் மாலிக்கின் இசையில் பாடல்கள் எல்லாம் அருமை. இந்தியில் இருந்து தமிழுக்கு வரும் பாடல்கள் அவ்வளவாக ரசிக்கும்படி இருக்காது. ஆனால், இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிக்கும்படியாக இருப்பது சிறப்பு. சஞ்சய் சௌத்ரியின் பின்னணி இசையும் பெரிதாக பேசும்படி இருக்கிறது. சந்தோஷ் துண்டியாயில் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம். 

மொத்தத்தில் எம்.எஸ்.தோனி சதமடிப்பார்.

பகடி ஆட்டம் திரை விமர்சனம்
[ Monday,20 February 2017, 12:21:30 ]
நாயகன் சுரேந்தர் பெண்கள் விடயத்தில் ரோமியோ. பார்க்கின்ற பெண்களையெல்லாம் அடையவேண்டும் என்ற
மேலும்...
போகன் திரைவிமர்சனம்
[ Monday,6 February 2017, 10:16:41 ]
ஜெயம் ரவி உதவிக் கமிஷனராக பணிபுரிந்து வருகின்றார். இவருடைய அப்பா நரேன் வங்கியில் முகாமையாளராக பணியாற்றி வருகின்றார்
மேலும்...
சூரக்கோட்டை மர்மம் திரைவிமர்சனம்
[ Wednesday,25 January 2017, 11:10:14 ]
உலகத்தில் உள்ள அனைவருக்கும் ஒருநாள் என்பது 24 மணி நேரம் என்றால், சூரக்கோட்டை என்ற குக்கிராமத்தில் வாழும் மனிதர்களுக்கு
மேலும்...
சூரத்தேங்காய் திரை விமர்சனம்
[ Tuesday,10 January 2017, 15:35:44 ]
சிறு நகரமொன்றில் கதாநாயகன் குரு அரவிந்த் வாழைத்தார் கடை வைத்து நடத்தி வருகின்றார். குரு அரவிந்துக்கு அப்பா கிடையாது
மேலும்...
கத்தி சண்டை திரை விமர்சனம்
[ Tuesday,3 January 2017, 07:24:33 ]
படத்தின் ஆரம்பத்தில் கண்டெயினரில் வருகின்ற பணத்தை மடக்கி அதனை அரசிடம் ஒப்படைக்கின்றார் பொலிஸ் அதிகாரி..
மேலும்...
சிறப்புச் செய்திகள்
அறிவித்தல்கள்
பெ திருமதி அபிதகுசலாம்பிகை தியாகேந்திரன்
பி யாழ். பருத்தித்துறை
வா யாழ். பருத்தித்துறை
தி 28-02-2017
பெ திரு சூசைப்பிள்ளை கிளமென்ற் பெர்னான்டோபிள்ளை
பி யாழ். ஊர்காவற்துறை
வா யாழ். ஊர்காவற்துறை
தி 27-02-2017
பெ திருமதி குமாரவேலு நாகம்மா
பி யாழ். நெடுந்தீவு
வா யாழ். நெடுந்தீவு
தி 26-02-2017
பெ திரு சிவசுப்பிரமணியம் சிவகணேசன்
பி யாழ். ஏழாலை
வா யாழ். ஏழாலை
தி 26-02-2017
பெ செல்வி சுகண்யா சிவஞானம்
பி புத்தளம் முந்தல்
வா லண்டன் Kingston
தி 25-02-2017
பெ திருமதி வைரமுத்து சிகாமணி
பி யாழ். அளவெட்டி
வா நெதர்லாந்து
தி 25-02-2017
பெ Dr. வயித்திலிங்கம் பாலசேகரம்
பி யாழ். கரம்பன்
வா பிரித்தானியா Ilford
தி 25-02-2017
பெ திருமதி மரியாம்பிள்ளை கனகம்மா
பி யாழ். நீர்வேலி
வா யாழ். சாவகச்சேரி
தி 24-02-2017