Flash News
அம்மணி திரை விமர்சனம்
[ Friday, 21 October 2016 ,11:24:33 ]

நடிகர் : நிதின் சத்யா

நடிகை : லட்சுமி ராமகிருஷ்ணன்

இயக்குனர் : லஷ்மி ராமகிருஷ்ணன்

இசை : கே

ஒளிப்பதிவு : இம்ரான் அஹமத்

அரசு வைத்தியசாலையில் வேலை செய்து வருகின்றார் லட்சுமி ராமகிருஷ்ணன். இவருக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள். மகள் காதலித்தவனுடன் ஓடிப்போய் திருமணம் செய்துகொள்கின்றார். முதல் மகன் எந்நேரமும் குடியே கதியென்று கிடக்கின்றார். இளைய மகன் முச்சக்கரவண்டி  ஓட்டி பிழைப்பு நடாத்தி வருகின்றார்.


இவர்களுக்கு சொந்தமான வீட்டிலேயே அம்மணி பாட்டியும் வாடகைக்கு குடியிருக்கின்றார். அம்மணி பாட்டிக்கு உறவினர்கள் என்று யாரும் கிடையாது. வழியில் கிடைக்கும் பொருட்களை சேகரித்து, அதை கடையில் போட்டு அதில் கிடைக்கும் பணத்தை வைத்து தினமும் சாப்பிட்டு எந்த பிரச்சினையும் இல்லாமல் வாழ்ந்து வருகின்றார்.

இந்நிலையில் லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு தனது வீட்டு கடனைக் கட்ட பணம் தேவைப்படுகின்றது. இதனால், தன்னுடைய வேலையை ராஜினாமா செய்துவிட்டு, அதன்மூலம் வரும் பணத்தில் அந்த கடனை கொடுத்துவிட்டு மீதியை மகன்களுக்கு பிரித்துக் கொடுக்கலாம் என முடிவெடுக்கின்றார். அந்த நேரத்தில் அவரது மகன்கள், மகள் வழிப் பேரன் ஆகியோர் இவர்மீது பாசம் காட்டுகின்றார்கள். 

ஆனால் லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு வரும் பணம் கடனை கட்டுவதற்கே சரியாகப் போய்விடுகின்றது. இதனால், விரக்தியடைந்த அவருடைய இளைய மகன், தனது பெயரில் அந்த வீட்டை எழுதி வாங்கிக் கொண்டு, குடிகார அண்ணனையும், லட்சுமி ராமகிருஷ்ணனையும் வீட்டை விட்டு விரட்டுகின்றான்.

இதனால் லட்சுமி ராமகிருஷ்ணன் மிகவும் மனமுடைந்து போகிறார். இந்த சூழ்நிலையை அவர் எப்படி சமாளித்தார் என்பதே படத்தின் மீதிக்கதை

படம் முழுக்க லட்சுமி ராமகிருஷ்ணனே நிறைந்திருக்கின்றார். அவரைச் சுற்றியே கதை நகர்கின்றது. வைத்தியசாலையில்  வேலை செய்யும் பெண்ணாக, அந்தக் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கின்றார். பெரிய நட்சத்திரம் என்று பார்க்காமல் எந்த மாதிரியாகவும் தன்னால் நடிக்கமுடியும் என்பதை நிரூபித்திருக்கின்றார். உணர்வுபூர்வமான காட்சிகளில் எல்லாம் இவரது நடிப்பு மிகவும் சிறப்பு. 

ஒரு இயக்குனராகவும் லட்சுமி ராமகிருஷ்ணன் படத்திற்கு படம் மெருகேறியிருக்கின்றார். குடிசைப் பகுதியில் வாழ்பவர்களின் வாழ்க்கையை நம் கண்முன்னே கொண்டு வந்திருக்கின்றார். அதேபோல், பணம்தான் இன்றைய கால சூழ்நிலையில் முக்கியம் என்று இன்றைய தலைமுறையில் நடக்கும் நிகழ்வுகளை அழகாக எடுத்துச் சொல்லியிருக்கின்றார்.

அதேபோல் படத்தில் இடம்பெறும் வசனங்களும் படத்திற்கு பக்கபலமாக இருந்திருக்கின்றது. நெருக்கமான காதல் காட்சிகள், குத்தாட்டம்  இல்லாமல் மனங்களுக்குள் நடக்கும் போராட்டத்தை மட்டுமே வைத்து இப்படத்தை இயக்கியிருக்கிறார். இதற்காக லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கலாம்.

அம்மணி பாட்டியாக வரும் சுப்புலட்சுமி பாட்டியின் துறு துறு நடிப்பும் எம்மைக் கவர்கின்றது. அதேபோல், லட்சுமி ராமகிருஷ்ணனின் இளைய மகனாக வரும் நிதின் சத்யாவின் நடிப்பும் அழகாக இருக்கின்றது. அம்மாவிடம் கோபப்பட்டு இவர் பேசும் காட்சிகள் எல்லாம் பாராட்டுகளை பெறுகின்றது. 

இம்ரானின் ஒளிப்பதிவு மிகவும் அருமை. கேயின் இசையில் பாடல்கள் பரவாயில்லை, என்றாலும், பின்னணி இசை மென்மையாக வந்து வருடுகின்றது. 

மொத்தத்தில் அம்மணி அனைவருக்குமான திரைப்படம்.

சூரத்தேங்காய் திரை விமர்சனம்
[ Tuesday,10 January 2017, 15:35:44 ]
சிறு நகரமொன்றில் கதாநாயகன் குரு அரவிந்த் வாழைத்தார் கடை வைத்து நடத்தி வருகின்றார். குரு அரவிந்துக்கு அப்பா கிடையாது
மேலும்...
கத்தி சண்டை திரை விமர்சனம்
[ Tuesday,3 January 2017, 07:24:33 ]
படத்தின் ஆரம்பத்தில் கண்டெயினரில் வருகின்ற பணத்தை மடக்கி அதனை அரசிடம் ஒப்படைக்கின்றார் பொலிஸ் அதிகாரி..
மேலும்...
வீரசிவாஜி திரை விமர்சனம்
[ Monday,19 December 2016, 10:08:22 ]
பாண்டிச்சேரியில் டக்சி ஓட்டுநராக இருக்கின்றார் விக்ரம் பிரபு. இவருக்கு சொந்தமென்று சொல்வதற்கு யாருமில்லை
மேலும்...
சென்னை 600 028 II திரைவிமர்சனம்
[ Thursday,15 December 2016, 10:42:51 ]
சென்னை 600 028 முதல் பாகத்தில் ஷார்க்ஸ் அணியில் இருந்தவர்களில் சில வேலை காரணமாக பிரிந்துவிட, பத்து வருடங்களாக சிவா,
மேலும்...
இளமி திரை விமர்சனம்
[ Thursday,1 December 2016, 07:41:32 ]
1715ம் ஆண்டில் நடக்கும் ஜல்லிக்கட்டை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் படம் இளமி. மதுரை வட்டாரத்தில் இருக்கும்..
மேலும்...
சிறப்புச் செய்திகள்
அறிவித்தல்கள்
பெ திருமதி சந்திரசேகரம்பிள்ளை திருபுரிநாகேஸ்வரி அம்மா
பி யாழ். வட்டுக்கோட்டை
வா திருகோணமலை
தி 04-01-2017
பெ திருமதி பத்மினிதேவி பத்மநாபபிள்ளை
பி யாழ். கோண்டாவில்
வா அவுஸ்திரேலியா sydney
தி 04-01-2017
பெ திருமதி சரஸ்வதி கணேஸ்(மம்மி)
பி யாழ். சரசாலை
வா லண்டன்
தி 03-01-2017
பெ திரு சீமாம்பிள்ளை மரியநாயகம்
பி மன்னார் ஒலிமடு நானாட்டான்
வா மன்னார் ஒலிமடு நானாட்டான்
தி 02-01-2017
பெ திருமதி மங்களேஸ்வரி மேனன்
பி யாழ். சங்குவேலி
வா லண்டன்
தி 02-01-2017
பெ திருமதி இராஜேஸ்வரி சிறிஸ்கந்தராஜா(கெங்கா)
பி யாழ். நீராவியடி
வா ஜெர்மனி Kaufbeuren
தி 01-01-2017
பெ திரு கோவிந்தர் சோமசுந்தரம்
பி கிளிநொச்சி பூநகரி
வா கிளிநொச்சி பூநகரி
தி 26-12-2016
பெ திரு பாலசுப்பிரமணியம் அதீஸ்
பி கனடா
வா கனடா
தி 26-12-2016