Flash News
காஷ்மோரா திரை விமர்சனம்
[ Tuesday, 1 November 2016 ,08:02:00 ]

நடிகர் :  கார்த்தி

நடிகை  : நயன்தாரா

இயக்குனர் : கோகுல்

இசை : சந்தோஷ் நாராயணன்

ஒளிப்பதிவு : ஓம் பிரகாஷ்

கார்த்தி தனது தந்தை விவேக் மற்றும் குடும்பத்துடன் சேர்ந்து பேய் ஓட்டிப் பிழைப்பை நடத்தி வருகிறார். ஆனால், உண்மையில் இவர் பேய் ஓட்டுபவர் கிடையாது. தனது குடும்பத்தில் உள்ளவர்களை வைத்து செட்டப்புகள் செய்து போலியாக இந்த வேலைகளை செய்து வருகிறார். மக்களும் இவருடைய சித்து விளையாட்டை உண்மையென்று நம்புகிறார்கள். 


இந்நிலையில், தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலமாக கார்த்தியின் புகழ் மேலும் பரவுகின்றது. பின்னர் எம்.எல்.ஏ. சரத் லோகித்சவாவின் வீட்டுக்குப் பேய் ஓட்டச் செல்லும் கார்த்தி, அங்கு செய்யும் சித்து விளையாட்டுகள் அவருக்கு சாதகமாக அமைய, லோகித்சவாவின் நம்பிக்கைக்கு பாத்திரமாகின்றார் கார்த்தி.

மறுநாளே லோகித்சவாவின் வீட்டுக்கு வருமான வரித்துறையின் சோதனை நடத்தவர, தன்னிடம் இருக்கின்ற கருப்புப் பணத்தையெல்லாம் கார்த்தியின் வீட்டில் கொண்டு வைக்க தனது ஆட்களுக்கு கட்டளையிடுகின்றார். அந்த சமயம் கார்த்தி, ஆந்திராவில் ஒரு பங்களாவுக்குள் இருக்கும் பேயை ஓட்டச் செல்கின்றார். 

அங்கு இருக்கும் உண்மையான பேய் அந்த பங்களாவை விட்டு இவரை வெளியே செல்லவிடாமல் தடுக்கின்றது. அதேநேரத்தில், கார்த்தி போலி சாமியார் என்பதையறியும் எம்.எல்.ஏ லோகித்சவா தனது ஆட்களை அனுப்பி, அவரையும், தன்னுடைய பணத்தையும் திருப்பி எடுத்துவர கட்டளையிடுகின்றார். ஆனால், கார்த்தியின் வீட்டுக்கு செல்லும் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகின்றது. 

இந்நிலையில் கார்த்தி ஆந்திராவில் இருப்பதை அறியும் எம்.எல்.ஏ.வின் ஆட்கள் அங்கு பயணமாகிறார்கள். அதேநேரத்தில், கார்த்தி மாட்டிக்கொண்ட பங்களாவுக்குள் விவேக் மற்றும் அவரது குடும்பமும் வந்து மாட்டிக் கொள்கின்றது. கார்த்தியை பங்களாவுக்குள் வைத்திருக்கும் அந்த பேய் யார் அவரை எதற்காக அங்கிருந்து செல்லவிடாமல் தடுக்கிறது என்பதே படத்தின் மீதிக்கதை. 


கார்த்தி இப்படத்தில் இரண்டுவிதமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். காஷ்மோரா கதாபாத்திரத்தில் அழகாக இருக்கின்றார். விவேக்குடன் இணைந்து இவர் செய்யும் கலாட்டாக்கள் எல்லாம் ரசிக்க வைக்கின்றன. முதல் பாதியை இவரது கதாபாத்திரம் மிகவும் கலகலப்பாக கொண்டு சென்றிருக்கிறது.

பெரிதும் எதிர்பார்த்த ராஜுநாயக் கதாபாத்திரம் நமது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கின்றது. பெண்கள் மீது மோகம் கொள்ளும் படைத்தளபதியாக வரும் ராஜு நாயக் கதாபாத்திரத்தில் கார்த்திக் கச்சிதமாக பொருந்தியிருக்கின்றார். இந்த கதாபாத்திரத்தில் கார்த்திக் செய்யும் அனைத்தும் ரசிக்க வைக்கின்றது. இதற்காக கார்த்தி கடுமையாக உழைத்திருப்பது நன்றாகவே தெரிகின்றது. அவருடைய கடின உழைப்புக்கு நல்ல பலனும் கிடைத்திருக்கின்றது. 


ரத்னமகாதேவியாக வரும் நயன்தாரா ராணியாகவே படத்தில் வாழ்ந்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.  நடை, உடை, கத்தி வீசும் தோரணை என அனைத்திலும் அசர வைக்கின்றார். இந்த படத்தில் கார்த்திக்கு இணையான கதாபாத்திரத்தில் நடித்திருப்பதால் தனது கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கின்றார்.

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் விவேக்கின் நகைச்சுவையை  ரசிக்க முடிகின்றது. இவர் பேசும் வசனங்கள் எல்லாம் திரையரங்கில் சிரிப்பலையை வரவழைத்திருககிறது. ஸ்ரீதிவ்யா அழகாக வந்துபோகின்றார். சில காட்சிகளே வந்தாலும் மனதில் எளிதில் பதிந்துவிடுகின்றார். எம்.எல்.ஏ.வாக வரும் சரத் லோகித்சவா, சாமியாராக வரும் மது சூதனன் ராவ் ஆகியோரும் தங்கள் கதாபாத்திரத்திற்குண்டான நடிப்பை சிறப்பாக செய்திருக்கின்றார்கள். 


ரௌத்திரம், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என படத்திற்கு படம் வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து இயக்கி வரும் கோகுல், மீண்டும் ஒரு வித்தியாசமான கதையை கொடுத்திருக்கின்றார். சரித்திர பின்னணியில் வரும் காட்சிகள் நம்பக்கூடியதாக இல்லாவிட்டாலும், அவற்றை காட்சிப்படுத்திய விதம் அருமை. திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பை கூட்டியிருக்கலாம் என்று தோன்றுகின்றது.

அதேபோல் மிகவும் எதிர்பார்த்த ராஜுநாயக் கதாபாத்திரத்தை இன்னும் கொஞ்சம் அழுத்தமாக சொல்லியிருக்கலாம். முதல்பாதி நகைச்சுவையாக நகர்கின்றது. பிற்பாதியில், சண்டை, போர்க் காட்சிகள் என பிரம்மாண்டப்படுத்தியிருக்கின்றார். படத்திற்கு கிராபிக்ஸ் காட்சிகளும் கைகொடுத்திருக்கின்றன.

சந்தோஷ் நாராயணன் இசையில் தமிழ் திக்கு திக்கு சார் பாடல் ஆட்டம் போட வைக்கின்றது. ஓயா ஓயா பாடல் அழகான மெல்லிசை. பின்னணி இசையிலும் மிரட்டியிருக்கிறார். ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு காட்சிகள் ஒவ்வொன்றையும் தெளிவாக படமாக்கியிருக்கின்றது. சண்டைக்காட்சிகளில் இவருடைய ஒளிப்பதிவு பிரம்மாண்டம் கூட்டியிருக்கின்றது. 

மொத்தத்தில் காஷ்மோரா ரசிக்கக்கூடியவன்.

சூரத்தேங்காய் திரை விமர்சனம்
[ Tuesday,10 January 2017, 15:35:44 ]
சிறு நகரமொன்றில் கதாநாயகன் குரு அரவிந்த் வாழைத்தார் கடை வைத்து நடத்தி வருகின்றார். குரு அரவிந்துக்கு அப்பா கிடையாது
மேலும்...
கத்தி சண்டை திரை விமர்சனம்
[ Tuesday,3 January 2017, 07:24:33 ]
படத்தின் ஆரம்பத்தில் கண்டெயினரில் வருகின்ற பணத்தை மடக்கி அதனை அரசிடம் ஒப்படைக்கின்றார் பொலிஸ் அதிகாரி..
மேலும்...
வீரசிவாஜி திரை விமர்சனம்
[ Monday,19 December 2016, 10:08:22 ]
பாண்டிச்சேரியில் டக்சி ஓட்டுநராக இருக்கின்றார் விக்ரம் பிரபு. இவருக்கு சொந்தமென்று சொல்வதற்கு யாருமில்லை
மேலும்...
சென்னை 600 028 II திரைவிமர்சனம்
[ Thursday,15 December 2016, 10:42:51 ]
சென்னை 600 028 முதல் பாகத்தில் ஷார்க்ஸ் அணியில் இருந்தவர்களில் சில வேலை காரணமாக பிரிந்துவிட, பத்து வருடங்களாக சிவா,
மேலும்...
இளமி திரை விமர்சனம்
[ Thursday,1 December 2016, 07:41:32 ]
1715ம் ஆண்டில் நடக்கும் ஜல்லிக்கட்டை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் படம் இளமி. மதுரை வட்டாரத்தில் இருக்கும்..
மேலும்...
சிறப்புச் செய்திகள்
அறிவித்தல்கள்
பெ திருமதி சந்திரசேகரம்பிள்ளை திருபுரிநாகேஸ்வரி அம்மா
பி யாழ். வட்டுக்கோட்டை
வா திருகோணமலை
தி 04-01-2017
பெ திருமதி பத்மினிதேவி பத்மநாபபிள்ளை
பி யாழ். கோண்டாவில்
வா அவுஸ்திரேலியா sydney
தி 04-01-2017
பெ திருமதி சரஸ்வதி கணேஸ்(மம்மி)
பி யாழ். சரசாலை
வா லண்டன்
தி 03-01-2017
பெ திரு சீமாம்பிள்ளை மரியநாயகம்
பி மன்னார் ஒலிமடு நானாட்டான்
வா மன்னார் ஒலிமடு நானாட்டான்
தி 02-01-2017
பெ திருமதி மங்களேஸ்வரி மேனன்
பி யாழ். சங்குவேலி
வா லண்டன்
தி 02-01-2017
பெ திருமதி இராஜேஸ்வரி சிறிஸ்கந்தராஜா(கெங்கா)
பி யாழ். நீராவியடி
வா ஜெர்மனி Kaufbeuren
தி 01-01-2017
பெ திரு கோவிந்தர் சோமசுந்தரம்
பி கிளிநொச்சி பூநகரி
வா கிளிநொச்சி பூநகரி
தி 26-12-2016
பெ திரு பாலசுப்பிரமணியம் அதீஸ்
பி கனடா
வா கனடா
தி 26-12-2016