Flash News
கடவுள் இருக்கான் குமாரு திரை விமர்சனம்
[ Thursday, 24 November 2016 ,11:38:13 ]

நடிகர் : ஜி வி பிரகாஷ்குமார்

நடிகை : நிக்கி கல்ராணி

இயக்குனர் : எம்.ராஜேஷ்

இசை : பிரகாஷ் குமார் ஜி வி

ஒளிப்பதிவு : சக்தி சரவணன்

ஜி.வி.பிரகாஷுக்கும் நிக்கி கல்ராணிக்கும் திருமண ஏற்பாடுகள் நடைபெறுகின்றது. திருமணத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு நண்பர்களுடன் விருந்து கொண்டாடுவதற்காக பாண்டிச்சேரி வரை செல்வதற்கு நிக்கி கல்ராணியின் காரை வாங்கிக் கொண்டு செல்கின்றார் ஜி.வி.பிரகாஷ் பாண்டிச்சேரியில் விருந்து கொண்டாடிவிட்டு சென்னை திரும்பும் வழியில், பொலிஸ் அதிகாரிகளான பிரகாஷ் ராஜ், சிங்கம்புலி, ரோபோ சங்கர் ஆகியோர் இவர்களது காரை வழிமறித்து சோதனை செய்கின்றார்கள்.

அவர்களது காரில் மது போத்தல்கள் இருப்பதை பார்த்ததும், அவர்களை கைது செய்யப்போவதாக பிரகாஷ் ராஜ் மிரட்டுகின்றார். உடனே பயந்துபோன ஜி.வி.யும், பாலாஜியும் அவர்களிடம் இருந்து தப்பித்து செல்கின்றார்கள். ஆனால், பாலாஜியின் மொபைல் சிங்கம் புலியிடம் சிக்குகிறது. அதைவைத்து பிரகாஷ் ராஜ் அவர்களை பின்தொடருகின்றார்.


இதற்கிடையில் ஜி.வி.யின் முன்னாள் காதலியான ஆனந்தியும், திருமணம் செய்து கொள்ளப்போகும் நிக்கி கல்ராணியும் அவருக்கு தொடர்ந்து போன் செய்துகொண்டே இருக்கின்றார்கள். ஆனந்தி ஜி.வி.யின் மீது பாசமாகவும், நிக்கி கல்ராணி மிகவும் கடுமையாகவும் நடந்து கொள்கின்றார்.

ஒருகட்டத்தில் ஜி.வி.பிரகாஷின் மனதில் சிறிய மாற்றம் ஏற்படுகிறது. நிக்கி கல்ராணியை திருமணம் செய்யலாமா அல்லது ஆனந்தியை திருமணம் செய்யலாமா என்ற குழப்பமும் ஏற்படுகின்றது. இறுதியில், ஜி.வி.யும், பாலாஜியும் பிரகாஷ் ராஜிடம் இருந்து தப்பித்தார்களா,  ஜி.வி. யாரை திருமணம் செய்தார் என்பதே மீதிக்கதை.

ஜி.வி.பிரகாஷ் வழக்கம்போல் நண்பர்களோடு அரட்டையடிப்பது, நாயகிகளுடன் இணைந்து டூயட் ஆடுவது என்பது இல்லாமல் இப்படத்தில் கொஞ்சம் நன்றாகவே நடித்திருக்கின்றார். நீண்ட வசனங்களைக்கூட சாதாரணமாக  பேசி அசர வைக்கின்றார். நிக்கி கல்ராணி, ஆனந்தி என இரு கதாநாயகிகளுடன் நெருங்கி நடிப்பதில் எந்தவித தயக்கமும் இல்லாமல் தாராளமாக நடித்திருக்கின்றார். அவர்களும் ஜி.வி.பிரகாஷுக்கு ஈடுகொடுத்து நடித்திருக்கின்றார்கள். 


படத்திற்கு படம் ஆனந்தி மெருகேறிக் கொண்டே வருகின்றார். நிக்கி கல்ராணியும் நடிப்பிலும் ஓகே சொல்ல வைக்கின்றார். ஆர்.ஜே.பாலாஜி, ராஜேஷ் படத்தில் சந்தானம் இல்லாத குறையை நீக்கியிருக்கின்றார். அவர் வரும் காட்சிகளில் எல்லாம் திரையரங்குகளில் ரசிகர்களின் கரவொலி காதை பிளக்கின்றது. 

படத்திற்கு மற்றொரு பெரிய பலம் பிரகாஷ் ராஜ். நகைச்சுவை  கலந்த வில்லத்தனத்தில் கலக்கியிருக்கிறார். மிகவும்  யதார்த்தமான நடிப்பில் அசர வைக்கின்றார். அவருக்கு ரோபோ சங்கரும், சிங்கம் புலியும் கைகொடுத்து உதவியிருக்கின்றார்கள். பேசுவதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியை நடத்தும் ஊர்வசியும், அந்த நிகழ்ச்சியை நடத்தும் இயக்குனராக வரும் மனோபாலாவும் நகைச்சுவையில் வயிறு குலுங்க வைத்திருக்கின்றார்கள்.

எம்.எஸ்.பாஸ்கர் கண்டிப்பான அப்பாவாக வந்து மிளிர்கின்றார். அதிகார தோரணையுடன் இவர் பேசும் வசனங்கள் அனைத்தும் ரசிக்க வைக்கின்றது. ஜி.வி.யின் அப்பாவாக வரும் டி.சிவாவும் தனது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கின்றார். 

இயக்குனர் எம்.ராஜேஷ் வழக்கம்போல நகைச்சுவை கலந்த ஒரு படத்தையே கொடுத்திருக்கின்றார். முந்தைய படங்களின் சாயல் இருந்தாலும் படத்தை ரசிக்கும்படி எடுத்திருப்பது சிறப்பு. ராஜேஷ் படங்கள் என்றாலே வயிறு குலுங்க சிரித்துவிட்டு வரலாம் என்பதற்கு இந்த படமும் சான்று. முதல்பாதி கலகலப்பாக சென்றாலும், இரண்டாம் பாதியில் பாடல் காட்சிகளை புகுத்தி ஊர் சுற்றி முடித்திருப்பது ஏனோ சற்று சலிப்பை தருகின்றது. அதை கொஞ்சம் தவிர்த்திருக்கலாம்.

ஜி.வி.யின் இசையில் பாடல்கள் ஏற்கெனவே வெற்றிபெற்றுள்ளன. திரையில் அதைப் பார்ப்பதற்கும், கேட்பதற்கும் அதிரடியாக இருக்கின்றது. சக்தி சரவணனின் ஒளிப்பதிவு காட்சிகளை மிகவும் அழகாக படம்பிடித்திருக்கின்றார். சண்டைக் காட்சிகளில் எல்லாம் இவரது கமரா பளிச்சிடுகிறது. 

மொத்தத்தில் கடவுள் இருக்கான் குமாரு நகைச்சுவையில் கலக்குவான்.

பகடி ஆட்டம் திரை விமர்சனம்
[ Monday,20 February 2017, 12:21:30 ]
நாயகன் சுரேந்தர் பெண்கள் விடயத்தில் ரோமியோ. பார்க்கின்ற பெண்களையெல்லாம் அடையவேண்டும் என்ற
மேலும்...
போகன் திரைவிமர்சனம்
[ Monday,6 February 2017, 10:16:41 ]
ஜெயம் ரவி உதவிக் கமிஷனராக பணிபுரிந்து வருகின்றார். இவருடைய அப்பா நரேன் வங்கியில் முகாமையாளராக பணியாற்றி வருகின்றார்
மேலும்...
சூரக்கோட்டை மர்மம் திரைவிமர்சனம்
[ Wednesday,25 January 2017, 11:10:14 ]
உலகத்தில் உள்ள அனைவருக்கும் ஒருநாள் என்பது 24 மணி நேரம் என்றால், சூரக்கோட்டை என்ற குக்கிராமத்தில் வாழும் மனிதர்களுக்கு
மேலும்...
சூரத்தேங்காய் திரை விமர்சனம்
[ Tuesday,10 January 2017, 15:35:44 ]
சிறு நகரமொன்றில் கதாநாயகன் குரு அரவிந்த் வாழைத்தார் கடை வைத்து நடத்தி வருகின்றார். குரு அரவிந்துக்கு அப்பா கிடையாது
மேலும்...
கத்தி சண்டை திரை விமர்சனம்
[ Tuesday,3 January 2017, 07:24:33 ]
படத்தின் ஆரம்பத்தில் கண்டெயினரில் வருகின்ற பணத்தை மடக்கி அதனை அரசிடம் ஒப்படைக்கின்றார் பொலிஸ் அதிகாரி..
மேலும்...
சிறப்புச் செய்திகள்
அறிவித்தல்கள்
பெ திருமதி அபிதகுசலாம்பிகை தியாகேந்திரன்
பி யாழ். பருத்தித்துறை
வா யாழ். பருத்தித்துறை
தி 28-02-2017
பெ திரு சூசைப்பிள்ளை கிளமென்ற் பெர்னான்டோபிள்ளை
பி யாழ். ஊர்காவற்துறை
வா யாழ். ஊர்காவற்துறை
தி 27-02-2017
பெ திருமதி குமாரவேலு நாகம்மா
பி யாழ். நெடுந்தீவு
வா யாழ். நெடுந்தீவு
தி 26-02-2017
பெ திரு சிவசுப்பிரமணியம் சிவகணேசன்
பி யாழ். ஏழாலை
வா யாழ். ஏழாலை
தி 26-02-2017
பெ செல்வி சுகண்யா சிவஞானம்
பி புத்தளம் முந்தல்
வா லண்டன் Kingston
தி 25-02-2017
பெ திருமதி வைரமுத்து சிகாமணி
பி யாழ். அளவெட்டி
வா நெதர்லாந்து
தி 25-02-2017
பெ Dr. வயித்திலிங்கம் பாலசேகரம்
பி யாழ். கரம்பன்
வா பிரித்தானியா Ilford
தி 25-02-2017
பெ திருமதி மரியாம்பிள்ளை கனகம்மா
பி யாழ். நீர்வேலி
வா யாழ். சாவகச்சேரி
தி 24-02-2017