Flash News
இளமி திரை விமர்சனம்
[ Thursday, 1 December 2016 ,07:41:32 ]

நடிகர் :  யுவன் பிரோஸ் கான்

நடிகை : அனு கிருஷ்ணா

இயக்குனர் : ஜூலியன் பிரகாஷ்

இசை : ஸ்ரீகாந்த் தேவா

ஒளிப்பதிவு : யுகா

1715ம் ஆண்டில் நடக்கும் ஜல்லிக்கட்டை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் படம் இளமி. மதுரை வட்டாரத்தில் இருக்கும் இரண்டு கிராமங்களுக்கிடையே சுமார் 200 ஆண்டுகளாக குல தெய்வத்தை யார் வைத்திருப்பது என்பதில் பிரச்சனை இருந்து வருகிறது. இதில் ஒரு ஊர் தலைவராக ரவி மரியா இருக்கிறார். இவரின் மகள் நாயகி அனுகிருஷ்ணா. இவர்கள் ஊரில் காளையை அடக்குபவர்களுக்குத்தான் பெண் கொடுப்பது வழக்கமாக இருந்து வருகிறது. ரவிமரியாவின் காளையை யாரும் அடக்க முடியாததால் இவரே வெற்றி பெற்று வருகிறார்.


மற்றொரு ஊரில் நாயகன்கள் யுவனும், அகிலும் வசிக்கிறார்கள். இதில் யுவன் விலங்குகளை வேட்டையாடுவதில் வல்லவர். அகில், காளையை சூழ்ச்சி செய்து தந்திரமாக அடக்குவதில் கில்லாடி. யுவனும் அனுகிருஷ்ணாவும் ஒருவரையொருவர் காதலித்து வருகிறார்கள்.

இந்நிலையில், ரவிமரியாவின் ஊரில் திருவிழா ஏற்பாடு நடைபெறுகின்றது. இரண்டு ஊருக்கும் ஒரே சாமி என்பதால், யுவன், அகில் இருக்கும் கிராமத்திற்கு மரியாதை கொடுக்காததால் கோபம் அடைகின்றார்கள். குல தெய்வத்தை தங்களுடைய கிராமத்திற்கு கொண்டுவர வேண்டும் என்றும், ரவிமரியாவின் காளையை அடக்கி அவரது மகளை திருமணம் செய்யவும் திட்டம் போட்டு சூழ்ச்சி செய்கிறார் அகில்.


முதலில் கிராம மக்களை ரவிமரியாவிற்கு எதிராக திருப்பி, திருவிழாவிற்கு வைத்திருக்கும் கலசத்தை திருடி கொண்டுவந்து விடுகிறார் அகில். இதனால் கோபத்தோடு கிராம மக்களோடு வரும் ரவிமரியாவிடம் கலசத்தை தரவேண்டும் என்றால், உன் காளையை எங்கள் கிராம மக்கள் அடக்கி விட்டால், குலதெய்வத்தை ஒப்படைப்பதுடன், உன் மகள் அனுகிருஷ்ணாவை திருமணம் செய்து தரவேண்டும் என சவால் விடுகிறார்கள். 

இந்த சவாலை ரவிமரியாவும் ஏற்கிறார். இந்த போட்டியில் குதிக்கும் யுவன், அனுகிருஷ்ணாவை திருமணம் செய்யும் ஆசையில் காளையை அடக்கும் முயற்சியில் இறங்குகிறார். இறுதியில், ரவிமரியாவின் காளையை அடக்கியது யார் யுவனும், அனுகிருஷ்ணாவும் காதலில் ஒன்று சேர்ந்தார்களா என்பதே மீதிக்கதை.


படத்தில் நாயகனாக நடித்திருக்கும் யுவன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். 18ம் நூற்றாண்டு பின்னணியில் கதை நகர்வதால், அந்த காலத்து இளைஞன் தோற்றத்திற்கு பொருந்தியிருக்கின்றார். அனுகிருஷ்ணாவுடன் காதல் காட்சி, காளையை அடக்க பயிற்சி பெறுவது என நடிப்பில் திறமையை காண்பித்திருக்கின்றார்.

மற்றொரு நாயகனாக வரும் அகில், கம்பீரமான வில்லனாக நடித்திருக்கின்றார். கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாகவே நடித்திருக்கின்றார் அகில். நாயகியாக வரும் அனுகிருஷ்ணாவின் நடிப்பு அபாரம். யதார்த்தமான நடிப்பை பதிவு செய்திருக்கின்றார். ஊர் தலைவராக வரும் ரவிமரியா, தளபதியாக வரும் கிஷோர் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாகவே செய்திருக்கின்றார்கள்.

ஜல்லிக்கட்டை மையமாக வைத்து பல படங்கள் வெளிவந்திருந்தாலும், இப்படத்தில் ஜல்லிக்கட்டின் வரலாற்றையும், அதன் பெருமையையும் மிகவும் நேர்த்தியாகவும் சிறப்பாகவும் சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஜூலியன் பிரகாஷ்.


காளையை அடக்குவதை தத்ரூபமாக காட்சிப்படுத்த முடியாததால், கிராபிக்ஸ் மூலம் அக்காட்சிகளை அழகாக சேர்த்திருக்கின்றார். எந்த கதாபாத்திரங்களையும் குறை சொல்ல முடியாதளவிற்கு வேலை வாங்கியிருக்கின்றார். ஜல்லிக்கட்டு மையமாக இருக்கும் படத்தில் காதலை புகுத்தி அதில் எதிர்பார்த்திராத கிளைமாக்ஸ் வைத்திருப்பது சிறப்பு.

ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடல் அனைத்து கேட்கும் ரகம். பின்னணி இசையும் சிறப்பு. யுகாவின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.

மொத்தத்தில் இளமி இளமை இனிமை.

சூரத்தேங்காய் திரை விமர்சனம்
[ Tuesday,10 January 2017, 15:35:44 ]
சிறு நகரமொன்றில் கதாநாயகன் குரு அரவிந்த் வாழைத்தார் கடை வைத்து நடத்தி வருகின்றார். குரு அரவிந்துக்கு அப்பா கிடையாது
மேலும்...
கத்தி சண்டை திரை விமர்சனம்
[ Tuesday,3 January 2017, 07:24:33 ]
படத்தின் ஆரம்பத்தில் கண்டெயினரில் வருகின்ற பணத்தை மடக்கி அதனை அரசிடம் ஒப்படைக்கின்றார் பொலிஸ் அதிகாரி..
மேலும்...
வீரசிவாஜி திரை விமர்சனம்
[ Monday,19 December 2016, 10:08:22 ]
பாண்டிச்சேரியில் டக்சி ஓட்டுநராக இருக்கின்றார் விக்ரம் பிரபு. இவருக்கு சொந்தமென்று சொல்வதற்கு யாருமில்லை
மேலும்...
சென்னை 600 028 II திரைவிமர்சனம்
[ Thursday,15 December 2016, 10:42:51 ]
சென்னை 600 028 முதல் பாகத்தில் ஷார்க்ஸ் அணியில் இருந்தவர்களில் சில வேலை காரணமாக பிரிந்துவிட, பத்து வருடங்களாக சிவா,
மேலும்...
கடவுள் இருக்கான் குமாரு திரை விமர்சனம்
[ Thursday,24 November 2016, 11:38:13 ]
ஜி.வி.பிரகாஷுக்கும் நிக்கி கல்ராணிக்கும் திருமண ஏற்பாடுகள் நடைபெறுகின்றது. திருமணத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு
மேலும்...
சிறப்புச் செய்திகள்
அறிவித்தல்கள்
பெ திருமதி சந்திரசேகரம்பிள்ளை திருபுரிநாகேஸ்வரி அம்மா
பி யாழ். வட்டுக்கோட்டை
வா திருகோணமலை
தி 04-01-2017
பெ திருமதி பத்மினிதேவி பத்மநாபபிள்ளை
பி யாழ். கோண்டாவில்
வா அவுஸ்திரேலியா sydney
தி 04-01-2017
பெ திருமதி சரஸ்வதி கணேஸ்(மம்மி)
பி யாழ். சரசாலை
வா லண்டன்
தி 03-01-2017
பெ திரு சீமாம்பிள்ளை மரியநாயகம்
பி மன்னார் ஒலிமடு நானாட்டான்
வா மன்னார் ஒலிமடு நானாட்டான்
தி 02-01-2017
பெ திருமதி மங்களேஸ்வரி மேனன்
பி யாழ். சங்குவேலி
வா லண்டன்
தி 02-01-2017
பெ திருமதி இராஜேஸ்வரி சிறிஸ்கந்தராஜா(கெங்கா)
பி யாழ். நீராவியடி
வா ஜெர்மனி Kaufbeuren
தி 01-01-2017
பெ திரு கோவிந்தர் சோமசுந்தரம்
பி கிளிநொச்சி பூநகரி
வா கிளிநொச்சி பூநகரி
தி 26-12-2016
பெ திரு பாலசுப்பிரமணியம் அதீஸ்
பி கனடா
வா கனடா
தி 26-12-2016