Flash News
சென்னை 600 028 II திரைவிமர்சனம்
[ Thursday, 15 December 2016 ,10:42:51 ]

நடிகர் : ஜெய்

நடிகை : விஜயலட்சுமி

இயக்குனர் : வெங்கட் பிரபு

இசை : யுவன் சங்கர் ராஜா

ஒளிப்பதிவு : ராஜேஷ் யாதவ்

சென்னை 600 028 முதல் பாகத்தில் ஷார்க்ஸ் அணியில் இருந்தவர்களில் சில வேலை காரணமாக பிரிந்துவிட, பத்து வருடங்களாக சிவா, நிதின் சத்யா, விஜய் வசந்த், அஜய் ராஜ், ஜெய், பிரேம்ஜி ஆகியோர் மட்டும் நெருக்கமான நண்பர்களாக பழகிவருகின்றார்கள். இதில் ஜெய், பிரேம்ஜிக்கு மட்டும் திருமணமாகவில்லை.


இந்நிலையில், ஜெய்யும் நாயகன் சானா அல்தாப்பும் காதலித்து வருகின்றார்கள். இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் பச்சைக் கொடி காட்டவே, நாயகியின் சொந்த ஊரான தேனி மாவட்டத்தில் இவர்களது திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றது. திருமண நிச்சயதார்த்தத்துக்கு தேனிக்கு தனது நண்பர்களுடன் செல்கின்றார் ஜெய்.

அந்த ஊரில் இவர்களை பிரிந்து சென்ற நண்பன் அரவிந்த் ஆகாஷை ஒரு அடிதடியில் சந்திக்கின்றார்கள். அப்போதுதான், அவருக்கும் அந்த ஊரில் கிரிக்கெட் விளையாட்டில் பெரிய ஆளாக இருக்கும் வைபவ்க்கும் பிரச்சினை என்று தெரிகின்றது. தனது நண்பனுக்காக வைபவ்வை எதிர்க்க முடிவு செய்கின்றார்கள்.

அரை இறுதி போட்டியில் இவர்களை எதிர்த்து விளையாடிய அணியை வீழ்த்தி இறுதிப் போட்டியில் வைபவ் அணியை எதிர்க்க தயாராகின்றார்கள். இவர்களின் விளையாட்டை பார்த்து அதிர்ந்துபோன வைபவ் அவர்களை அந்த போட்டியில் இருந்து எப்படி வெளியேற்றுவது என்று திட்டம் போடுகின்றார்.

அதன்படி போட்டிக்கு முந்தைய நாள் விருந்தில்  நண்பர்களுக்கு மதுவை ஊற்றிக் கொடுத்து ஜெய்யை மட்டும் மனிஷா யாதவ்வுடன் நெருக்கமாக இருப்பதுபோன்று புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டு போட்டியில் தோல்வியடைய வேண்டும் என்று மிரட்டுகின்றார். இதனால், அவர்களும் வேறு வழியின்றி போட்டியில் தோற்றுப்போகின்றார்கள்.

ஆனால் வைபவ்வின் நண்பன் ஒருவன் ஜெய், மனிஷா யாதவ்வுடன் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை  வெளியிட்டு விடுகின்றான். இது ஜெய்யின் காதலிக்கும், அவருடைய அப்பாவான சிவாவுக்கும் தெரியவர, இவர்களது திருமணம் நின்று போகின்றது. இறுதியில், ஜெய் இந்தப் பிரச்சனைகளை சமாளித்து நண்பர்களுடன் சேர்த்து எப்படி தீர்வு கண்டார் என்பதே படத்தின் மீதிக்கதை. 


சென்னை 600 028 முதல் பாகத்தைப்போல இரண்டாம் பாகத்தையும் மிகவும் சுவாரஸ்யமாகவும், ரகளையாகவும் கொண்டு சென்றிருக்கின்றார் வெங்கட் பிரபு. கிரிக்கெட், அதைச்சுற்றி நடக்கும் போட்டி மனப்பான்மை, நட்பு, செண்டிமென்ட், காதல், நகைச்சுவை என அனைத்தும் இந்தப் பாகத்திலும் தொடர்ந்திருக்கின்றது. 

பிரேம்ஜியைத் தவிர இப்படத்தில் நடித்திருக்கிற நாயகர்கள் அனைவருக்கும் ஜோடி உண்டு. அதேபோல், முந்தைய பாகத்தைவிட இந்த படத்தில் அதிக கதாபாத்திரங்களையும் சேர்த்திருக்கின்றார். அனைத்து கதாபாத்திரங்களுக்கும் ஒவ்வொரு முக்கியத்துவம் கொடுத்திருக்கின்றார்.

முதல் பாகத்தில் ஷார்க்ஸ் அணிக்கு எதிராக வரும் ரொக்கர்ஸ் அணியை இந்தப் பாகத்தில் இணைத்த விதம் சிறப்பு. முதல் பாகத்தைப் போலவே இதிலும் மூன்று கிரிக்கெட் போட்டிகள் விரிவாக வருகின்றது. ஷார்க்ஸ் அணியினர் கிரிக்கெட் ஆடும் அழகை அவர்களது மனைவிகளே கலாய்ப்பது, ஆலோசனை சொல்வது கலகலப்பு. 

படத்தில் ஜெய்க்கு கொஞ்சம் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்தப் பொறுப்பை அவர் உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கின்றார். மிர்ச்சி சிவாவுக்கு இது மிகச்சரியான மீள்வருகைப் படமாக இருக்கும் என்று சொல்லலாம். தனது பாணியிலான நகைச்சுவை வசனங்களில் அசத்தியிருக்கின்றார். இணையதள விமர்சகர்களை இவர் கலாய்த்திருக்கும் விதம் சிறப்பு.

வில்லனைப் போல் வரும், வைபவ் தேனி வட்டார வழக்கு பேச்சில் மட்டுமல்ல, நடை, உடை பாணியிலும் திமிர் கலந்த அடாவடி இளைஞனாக நம் மனதில் பதிந்திருக்கிறார். பிரேம்ஜி தனது வழக்கமான பாணியிலேயே நகைச்சுவை செய்தாலும் எங்கும் அலுப்பு ஏற்படவில்லை. நிதின் சத்யா, விஜய் வசந்த், அஜய்ராஜ், அரவிந்த் ஆகாஷ், மஹத், கார்த்திக், சுப்பு பஞ்சு, சந்தான பாரதி டி.சிவா என அனைவரும் தங்களது பங்கை சரியாக செய்திருக்கின்றார்கள். 

முதல் பாதியில் ஷார்க்ஸ் அணியை கடைசியில் தோற்கடிக்கும் அணியின் சிறுவனாக வந்த ஹரி பிரஷாந்த் இந்தப் படத்தில் இளைஞனாக வந்து தனி முத்திரை பதிக்கின்றார். சிவாவின் மனைவியாக வரும் விஜயலட்சுமி, நிதின் சத்யாவின் மனைவியாக வரும் கிருத்திகா, அஜய்ராஜின் மனைவியாக வரும் மகேஷ்வரி, ஜெய்யின் காதலி சானா அல்தாஃப், விஜய் வசந்தின் மனைவியாக வரும் அஞ்சனா கீர்த்தி ஆகியோரும் குறை சொல்ல முடியாத அளவுக்கு நடித்திருக்கின்றார்கள். 

யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை பிரமாதம். சொப்பன சுந்தரி பாடல் ஆட்டம் போட வைக்கின்றது. வர்றோம் சொல்லு தள்ளி நில்லு பாடல் ரசிக்க வைக்கின்றது. ராஜேஷ் யாதவ்வின் ஒளிப்பதிவு சென்னையையும் பசுமை நிறைந்த தேனியையும் சிறப்பாக படம்பிடித்துள்ளது. 

மொத்தத்தில் சென்னை 600 028 இரண்டாம் இன்னிங்ஸ் வெற்றிபெறும்.

சூரத்தேங்காய் திரை விமர்சனம்
[ Tuesday,10 January 2017, 15:35:44 ]
சிறு நகரமொன்றில் கதாநாயகன் குரு அரவிந்த் வாழைத்தார் கடை வைத்து நடத்தி வருகின்றார். குரு அரவிந்துக்கு அப்பா கிடையாது
மேலும்...
கத்தி சண்டை திரை விமர்சனம்
[ Tuesday,3 January 2017, 07:24:33 ]
படத்தின் ஆரம்பத்தில் கண்டெயினரில் வருகின்ற பணத்தை மடக்கி அதனை அரசிடம் ஒப்படைக்கின்றார் பொலிஸ் அதிகாரி..
மேலும்...
வீரசிவாஜி திரை விமர்சனம்
[ Monday,19 December 2016, 10:08:22 ]
பாண்டிச்சேரியில் டக்சி ஓட்டுநராக இருக்கின்றார் விக்ரம் பிரபு. இவருக்கு சொந்தமென்று சொல்வதற்கு யாருமில்லை
மேலும்...
இளமி திரை விமர்சனம்
[ Thursday,1 December 2016, 07:41:32 ]
1715ம் ஆண்டில் நடக்கும் ஜல்லிக்கட்டை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் படம் இளமி. மதுரை வட்டாரத்தில் இருக்கும்..
மேலும்...
கடவுள் இருக்கான் குமாரு திரை விமர்சனம்
[ Thursday,24 November 2016, 11:38:13 ]
ஜி.வி.பிரகாஷுக்கும் நிக்கி கல்ராணிக்கும் திருமண ஏற்பாடுகள் நடைபெறுகின்றது. திருமணத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு
மேலும்...
சிறப்புச் செய்திகள்
அறிவித்தல்கள்
பெ திருமதி சந்திரசேகரம்பிள்ளை திருபுரிநாகேஸ்வரி அம்மா
பி யாழ். வட்டுக்கோட்டை
வா திருகோணமலை
தி 04-01-2017
பெ திருமதி பத்மினிதேவி பத்மநாபபிள்ளை
பி யாழ். கோண்டாவில்
வா அவுஸ்திரேலியா sydney
தி 04-01-2017
பெ திருமதி சரஸ்வதி கணேஸ்(மம்மி)
பி யாழ். சரசாலை
வா லண்டன்
தி 03-01-2017
பெ திரு சீமாம்பிள்ளை மரியநாயகம்
பி மன்னார் ஒலிமடு நானாட்டான்
வா மன்னார் ஒலிமடு நானாட்டான்
தி 02-01-2017
பெ திருமதி மங்களேஸ்வரி மேனன்
பி யாழ். சங்குவேலி
வா லண்டன்
தி 02-01-2017
பெ திருமதி இராஜேஸ்வரி சிறிஸ்கந்தராஜா(கெங்கா)
பி யாழ். நீராவியடி
வா ஜெர்மனி Kaufbeuren
தி 01-01-2017
பெ திரு கோவிந்தர் சோமசுந்தரம்
பி கிளிநொச்சி பூநகரி
வா கிளிநொச்சி பூநகரி
தி 26-12-2016
பெ திரு பாலசுப்பிரமணியம் அதீஸ்
பி கனடா
வா கனடா
தி 26-12-2016