Flash News
வீரசிவாஜி திரை விமர்சனம்
[ Monday, 19 December 2016 ,10:08:22 ]

நடிகர் :  விக்ரம் பிரபு

நடிகை : ஷாமிலி

இயக்குனர் : கணேஷ் வினாயக்

இசை : இமான் டி

ஒளிப்பதிவு : சுகுமார் எம்

பாண்டிச்சேரியில் டக்சி ஓட்டுநராக இருக்கின்றார் விக்ரம் பிரபு. இவருக்கு சொந்தமென்று சொல்வதற்கு யாருமில்லை என்றாலும், வினோதினி இவரை தம்பி போல பார்த்துக் கொள்கின்றார். இவரும் வினோதினியை அக்கா என்று சொல்லி அவருக்கு உறுதுணையாக இருக்கின்றார்.

வினோதினிக்கு ஒரு குழந்தை இருக்கின்றது. இந்நிலையில் ஒரு நாள் விபத்தில் நாயகியை சந்திக்கும் விக்ரம் பிரபு பார்த்தவுடனேயே காதல் வயப்படுகின்றார். மோதலில் தொடங்கும் இவர்களின் சந்திப்பு நாளடைவில் காதலாக மாறுகிறது. அதைத் தொடர்ந்து யோகி பாபு, ரோபோ சங்கர் ஆகியோருடனும் இவருக்கு நட்பு ஏற்படுகின்றது.

இந்நிலையில் வினோதினியின் குழந்தைக்கு மூளையில் கட்டி வர, உடனே சத்திர சிகிச்சைக்கு 25 லட்சம் ரூபாய் தேவைப்படுகின்றது. உடனே, விக்ரம் பிரபு தன்னிடம் இருக்கும் டக்சியை விற்று 5 லட்சம் கொண்டு வருகின்றார். 

ஆனால், அந்த பணம் சிகிச்சைக்கு போதுமானதாக இல்லாததால் யோகி பாபு, ரோபோ சங்கரின் மூலம் குறைந்த பணத்துக்கு அதிக பணம் தருவதாக கூறும் ஜோன் விஜய்யை சந்திக்கின்றார்.

அவரிடம் தன்னிடம் இருக்கும் 5 லட்சத்தையும் கொடுக்கிறார் விக்ரம் பிரபு. மறுநாள் பணத்தை வாங்கிக் கொள்ளுமாறு கூறும் ஜோன் விஜய், மறுநாள் யாருக்கும் தெரியாமல் ஓடி விடுகின்றார். இதனால் என்னசெய்வதென்று தெரியாமல் விழிக்கும் விக்ரம் பிரபு, அவரை தேடிக் கண்டுபிடிக்க புறப்படுகின்றார். ஒருகட்டத்தில் ஜோன் விஜய்யை பிடித்து, தனக்கு சேரவேண்டிய மொத்த பணத்தையும் எடுத்துக் கொண்டு திரும்பி வரும் வேளையில், இவருடைய கார் எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளாகின்றது.

இந்த விபத்தில் விக்ரம் பிரபுவின் தலையில் அடிப்பட்டு, அவருக்கு பழைய நினைவுகள் எல்லாம் மறந்து போகின்றது. இறுதியில், விக்ரம் பிரபுவுக்கு பழைய நினைவுகள் திரும்பி வந்ததா, இவர் கொண்டு வந்த பணத்தை வைத்து குழந்தைக்கு சிகிச்சை நடந்ததா என்பதே மீதிக்கதை.


விக்ரம் பிரபு டக்சி டிரைவராக வந்தாலும், படம் முழுக்க கலர்புல் உடையுடனே வருகின்றார். இவருக்கு சண்டைக் காட்சிகள் எல்லாம் சிறப்பாக வருகிறது. ஆனால், ரொமான்ஸ் காட்சிகளில்தான் மிகவும்  சிரமப்பட்டு நடித்திருக்கின்றார். அதேபோல், கலகலப்பான காட்சிகளிலும் நடிக்க திணறியிருக்கின்றார்.

குழந்தை நட்சத்திரமாக ரசித்த ஷாமிலி நீண்ட வருடங்களுக்குப் பின்னர் தற்போது கதாநாயகியாக மாறியிருக்கின்றார். விஜய் ரசிகையாக வரும் இவருடைய நடிப்பு பரவாயில்லை. வழக்கமான ஹீரோயின்போல் காதல், டூயட்டுக்கு மட்டுமே பயன்பட்டிருக்கின்றார். 

படத்திற்கு மிகப்பெரிய பலமே யோகி பாபு, ரோபோ ஷங்கர் கூட்டணியின் நகைச்சுவைதான். ரமேஷ் - சுரேஷ் என வரும் இவர்களின் நகைச்சுவை படம் முழுக்க வந்து ரசிகர்களை கலகலப்பூட்டியிருக்கின்றது. ஜோன் விஜய், மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் வழக்கம்போல் சத்தம் போட்டுக்கொண்டே வந்து மிரட்டுகின்றார்கள். 


படத்தின் முதல்பாதியை மிகவும் கலகலப்பாக கொண்டு சென்றுள்ளார் இயக்குனர் கணேஷ் விநாயக். முதல் பாதி எதை நோக்கி பயணிக்கிறது என்பது தெரியாமலே நகர்ந்தாலும், குறிப்பிட்ட நேரத்திற்குப் பின்னர் சூடு பிடிக்கின்றது. படத்தில் நிறைய லொஜிக் மீறல்கள் இருக்கின்றன. கடைசியில் படத்தை எங்கு முடிப்பது என்று தெரியாமல் குழம்பி நின்றுள்ளார் இயக்குனர்.

இமான் இசையில் பாடல்கள் எல்லாம் சூப்பர். குறிப்பாக சொப்பன சுந்தரி பாடல் எழுந்து நின்று ஆட வைக்கின்றது. தாறுமாறு பாடலும் ரசிக்கும் ரகம். பின்னணி இசை சிறப்பாக இருக்கின்றது. சுகுமார் ஒளிப்பதிவு காட்சிகளை தெளிவாக படமாக்கியுள்ளார்.

மொத்தத்தில் வீர சிவாஜி வீரம் குறைந்தவர்.


பகடி ஆட்டம் திரை விமர்சனம்
[ Monday,20 February 2017, 12:21:30 ]
நாயகன் சுரேந்தர் பெண்கள் விடயத்தில் ரோமியோ. பார்க்கின்ற பெண்களையெல்லாம் அடையவேண்டும் என்ற
மேலும்...
போகன் திரைவிமர்சனம்
[ Monday,6 February 2017, 10:16:41 ]
ஜெயம் ரவி உதவிக் கமிஷனராக பணிபுரிந்து வருகின்றார். இவருடைய அப்பா நரேன் வங்கியில் முகாமையாளராக பணியாற்றி வருகின்றார்
மேலும்...
சூரக்கோட்டை மர்மம் திரைவிமர்சனம்
[ Wednesday,25 January 2017, 11:10:14 ]
உலகத்தில் உள்ள அனைவருக்கும் ஒருநாள் என்பது 24 மணி நேரம் என்றால், சூரக்கோட்டை என்ற குக்கிராமத்தில் வாழும் மனிதர்களுக்கு
மேலும்...
சூரத்தேங்காய் திரை விமர்சனம்
[ Tuesday,10 January 2017, 15:35:44 ]
சிறு நகரமொன்றில் கதாநாயகன் குரு அரவிந்த் வாழைத்தார் கடை வைத்து நடத்தி வருகின்றார். குரு அரவிந்துக்கு அப்பா கிடையாது
மேலும்...
கத்தி சண்டை திரை விமர்சனம்
[ Tuesday,3 January 2017, 07:24:33 ]
படத்தின் ஆரம்பத்தில் கண்டெயினரில் வருகின்ற பணத்தை மடக்கி அதனை அரசிடம் ஒப்படைக்கின்றார் பொலிஸ் அதிகாரி..
மேலும்...
சிறப்புச் செய்திகள்
அறிவித்தல்கள்
பெ திருமதி அபிதகுசலாம்பிகை தியாகேந்திரன்
பி யாழ். பருத்தித்துறை
வா யாழ். பருத்தித்துறை
தி 28-02-2017
பெ திரு சூசைப்பிள்ளை கிளமென்ற் பெர்னான்டோபிள்ளை
பி யாழ். ஊர்காவற்துறை
வா யாழ். ஊர்காவற்துறை
தி 27-02-2017
பெ திருமதி குமாரவேலு நாகம்மா
பி யாழ். நெடுந்தீவு
வா யாழ். நெடுந்தீவு
தி 26-02-2017
பெ திரு சிவசுப்பிரமணியம் சிவகணேசன்
பி யாழ். ஏழாலை
வா யாழ். ஏழாலை
தி 26-02-2017
பெ செல்வி சுகண்யா சிவஞானம்
பி புத்தளம் முந்தல்
வா லண்டன் Kingston
தி 25-02-2017
பெ திருமதி வைரமுத்து சிகாமணி
பி யாழ். அளவெட்டி
வா நெதர்லாந்து
தி 25-02-2017
பெ Dr. வயித்திலிங்கம் பாலசேகரம்
பி யாழ். கரம்பன்
வா பிரித்தானியா Ilford
தி 25-02-2017
பெ திருமதி மரியாம்பிள்ளை கனகம்மா
பி யாழ். நீர்வேலி
வா யாழ். சாவகச்சேரி
தி 24-02-2017