Flash News
கத்தி சண்டை திரை விமர்சனம்
[ Tuesday, 3 January 2017 ,07:24:33 ]

நடிகர் : விஷால்

நடிகை : தமன்னா

இயக்குனர் : சுராஜ்

இசை : ஹிப் ஹொப் தமிழா ஆதி

ஓளிப்பதிவு : ரிச்சர்ட் எம்.நாதன்

படத்தின் ஆரம்பத்தில் கண்டெயினரில் வருகின்ற பணத்தை மடக்கி அதனை அரசிடம் ஒப்படைக்கின்றார் பொலிஸ் அதிகாரி ஜெகபதி பாபு. அதற்கு அடுத்த காட்சியில் நாயகன் விஷால் வருகின்றார். அப்பாவியாக வரும் நாயகன் விஷால், நாயகி தமன்னாவைக் காதலிக்க அவருக்கு பல்வேறு சோதனைகள் நடத்தி தனது தங்கையின் மாப்பிள்ளையாக தேர்வு செய்கின்றார் ஜெகபதி பாபு.

திடீரென ஜெகபதி பாபுவை ஒரு கும்பல் கடத்தி விடுகின்றது. அந்த கும்பல் ஜெகபதி பாபுவிடம் 10 கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டுகின்றனர். பணம் கொடுக்கவில்லையென்றால் உனது குடும்பத்திற்கு தான் பாதிப்பு என அந்த கும்பல் ஜெகபதி பாபுவை மிரட்ட, அவர் விஷாலுக்கு போன்செய்து வீட்டின் குறிப்பிட்ட பகுதியில் உள்ள டைல்ஸ்க்கு அடியில் பணம் இருக்கின்றது எடுத்து வா எனக் கூறுகின்றார். ஜெகபதி பாபு கூறியதுபோல பணத்தை எடுத்து செல்லும் விஷால் பணத்தைக் கொடுக்காமல் வில்லன்களிடம் சண்டை போட்டு ஜெகபதி பாபுவைக் காப்பாற்றி விடுகின்றார். 


விஷால் திடீரென ஒருநாள் ஜெகபதி பாபுவிடம் நான் ஒரு சிபிஐ அதிகாரி அன்று வந்த கண்டய்னரில் 300 கோடி பணம் வந்தது. ஆனால் நீ அரசாங்கத்திடம் ஒப்படைத்தது வெறும் 50 கோடிதான் என்று தனது அடையாள அட்டையைக் காட்டி மிரட்டுகின்றார். 

இதற்கிடையில் வில்லன் தருண் அரோரா, ஜெகபதி பாபு இருவரும் ஓரிடத்தில் சந்திக்கின்றனர். அப்போது தருண் அரோரா ஜெகபதி பாபுவிடம் நீ நினைக்கிற மாதிரி விஷால் சிபிஐ அதிகாரி  கிடையாது. அவன் என்னுடன் சிறையில் இருந்தான். கண்டயினரில் வந்த பணத்தைக் கொள்ளையடிக்க நான் திட்டம் போட்டேன். ஆனால் அவன் என்னுடைய திட்டத்தை ஒட்டுக்கேட்டு எனக்கு முன்னரே வந்து உன்ன மிரட்ட ஆரம்பித்துவிட்டான் என்று கூறுகின்றார். இதற்குப்பின் ஜெகபதி பாபு, தருண் அரோரா இருவரும் விஷாலைத் தேடி வருகின்றனர். 

அதே நேரத்தில் விஷால் யார் என்னும் விவரம் நாயகி தமன்னாவிற்கு தெரிந்து விடுகின்றது. இதனால் விஷாலிடம் தமன்னா சண்டை போட விஷால்-தமன்னா இருவருக்குமான காதலில் விரிசல் விழுகின்றது. 

திடீரென நடைபெறும் சிறிய விபத்தில் நாயகன் விஷால் தனது நினைவுகளை இழந்து விடுகின்றார்.விஷால் இழந்துவிட்ட பழைய நினைவுகளை மீட்க வரும்வரும் வைகைப்புயல் வடிவேலு இரண்டாம் பாதியில் வருகின்றார்.

 

இழந்த நினைவுகளை விஷால் மீண்டும் பெற்றாரா, உண்மையில் விஷால் யார், தமன்னா-விஷால் இருவரும் ஜோடி சேர்ந்தார்களா என்பதே மீதிக்கதை. 

நாயகன் விஷால் நடனம், நகைச்சுவை, சண்டைக்காட்சிகளில் நன்றாக நடித்திருக்கின்றார். குறிப்பாக சண்டைக்காட்சிகளில் ரசிக்க வைக்கின்றார். நாயகி தமன்னா கவர்ச்சியான உடைகளில் காதல் மற்றும் பாடல் காட்சிகளில் வந்து செல்கின்றார். எனினும் உளவியல் மாணவியாக வரும் தமன்னாவின் நடிப்பு மனதில் பதியவில்லை. படத்தின் முதல்பாதி காட்சிகளில் சூரியும், இரண்டாம் பாதி காட்சிகளில் வடிவேலுவும் ரசிகர்களை சிரிக்க வைக்கின்றனர். குறிப்பாக வடிவேலு வரும் காட்சிகளில் ரசிகர்கள் கரகோஷம் எழுப்புகின்றனர்.


வழக்கமாக தனது படங்களில் நகைச்சுவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குனர் சுராஜ் இந்த படத்தையும் நகைச்சுவையை மையமாக வைத்தே எடுத்திருக்கின்றார். படத்தில் வடிவேலு, சூரி என முன்னணி நகைச்சுவை நடிகர்களை சிறப்பாக கையாண்டிருக்கின்றார்.

திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவனமெடுத்திருந்தால் படம் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும். திரைக்கதையை சரியாக கையாளாததால் படத்தின் ஒருசில இடங்களில் சற்றே தொய்வு ஏற்படுகின்றது.

 

ஹிப்ஹாப் ஆதியின் இசையில் நான் கொஞ்சம் கருப்பு தான் பாடல் காட்சி ரசிக்க வைக்கின்றது. மற்ற பாடல்கள் எதுவும் மனதில் ஒட்டவில்லை. பின்னணி இசையில் ஹிப்ஹாப் ஆதி தனது திறமையை நிரூபித்துள்ளார். பாடல், சண்டைக்காட்சிகளுக்கு ஒளிப்பதிவாளர் ரிச்சர்டு எம்.நாதன் தனது பங்கை சிறப்பாக செய்திருக்கின்றார்.

மொத்தத்தில் கத்தி சண்டை நகைச்சுவைச் சண்டை


பகடி ஆட்டம் திரை விமர்சனம்
[ Monday,20 February 2017, 12:21:30 ]
நாயகன் சுரேந்தர் பெண்கள் விடயத்தில் ரோமியோ. பார்க்கின்ற பெண்களையெல்லாம் அடையவேண்டும் என்ற
மேலும்...
போகன் திரைவிமர்சனம்
[ Monday,6 February 2017, 10:16:41 ]
ஜெயம் ரவி உதவிக் கமிஷனராக பணிபுரிந்து வருகின்றார். இவருடைய அப்பா நரேன் வங்கியில் முகாமையாளராக பணியாற்றி வருகின்றார்
மேலும்...
சூரக்கோட்டை மர்மம் திரைவிமர்சனம்
[ Wednesday,25 January 2017, 11:10:14 ]
உலகத்தில் உள்ள அனைவருக்கும் ஒருநாள் என்பது 24 மணி நேரம் என்றால், சூரக்கோட்டை என்ற குக்கிராமத்தில் வாழும் மனிதர்களுக்கு
மேலும்...
சூரத்தேங்காய் திரை விமர்சனம்
[ Tuesday,10 January 2017, 15:35:44 ]
சிறு நகரமொன்றில் கதாநாயகன் குரு அரவிந்த் வாழைத்தார் கடை வைத்து நடத்தி வருகின்றார். குரு அரவிந்துக்கு அப்பா கிடையாது
மேலும்...
வீரசிவாஜி திரை விமர்சனம்
[ Monday,19 December 2016, 10:08:22 ]
பாண்டிச்சேரியில் டக்சி ஓட்டுநராக இருக்கின்றார் விக்ரம் பிரபு. இவருக்கு சொந்தமென்று சொல்வதற்கு யாருமில்லை
மேலும்...
சிறப்புச் செய்திகள்
அறிவித்தல்கள்
பெ திருமதி அபிதகுசலாம்பிகை தியாகேந்திரன்
பி யாழ். பருத்தித்துறை
வா யாழ். பருத்தித்துறை
தி 28-02-2017
பெ திரு சூசைப்பிள்ளை கிளமென்ற் பெர்னான்டோபிள்ளை
பி யாழ். ஊர்காவற்துறை
வா யாழ். ஊர்காவற்துறை
தி 27-02-2017
பெ திருமதி குமாரவேலு நாகம்மா
பி யாழ். நெடுந்தீவு
வா யாழ். நெடுந்தீவு
தி 26-02-2017
பெ திரு சிவசுப்பிரமணியம் சிவகணேசன்
பி யாழ். ஏழாலை
வா யாழ். ஏழாலை
தி 26-02-2017
பெ செல்வி சுகண்யா சிவஞானம்
பி புத்தளம் முந்தல்
வா லண்டன் Kingston
தி 25-02-2017
பெ திருமதி வைரமுத்து சிகாமணி
பி யாழ். அளவெட்டி
வா நெதர்லாந்து
தி 25-02-2017
பெ Dr. வயித்திலிங்கம் பாலசேகரம்
பி யாழ். கரம்பன்
வா பிரித்தானியா Ilford
தி 25-02-2017
பெ திருமதி மரியாம்பிள்ளை கனகம்மா
பி யாழ். நீர்வேலி
வா யாழ். சாவகச்சேரி
தி 24-02-2017