Flash News
சூரத்தேங்காய் திரை விமர்சனம்
[ Tuesday, 10 January 2017 ,15:35:44 ]

நடிகர் : குரு அரவிந்த்

நடிகை : சாமந்தி

இயக்குனர் : அபூர்வா லாகியா

இசை : சக்தி

ஒளிப்பதிவு : ஹர்முக்

சிறு நகரமொன்றில் கதாநாயகன் குரு அரவிந்த் வாழைத்தார் கடை வைத்து நடத்தி வருகின்றார். குரு அரவிந்துக்கு அப்பா கிடையாது அம்மா மட்டும் தான். தானுண்டு தனது வேலையுண்டு என அமைதியாக இருக்கும் குரு அரவிந்த் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கின்றார்.



குரு அரவிந்தின் மாமன் மகள் சாமந்தி (கதாநாயகி) அதே ஊரில் பிளஸ் வன் படித்து வருகின்றார். சாமந்திக்கு குரு அரவிந்த் மீது காதல். அவரையே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என ஆசைப்படுகின்றார். ஆனால் நாயகன் குரு அரவிந்த் நாயகியைக் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து குடித்துக்கொண்டே இருக்கின்றார்.

அந்த ஊரின் கவுன்சிலர் தனது நான்கு தம்பிகளுடன் சேர்ந்து கட்டப்பஞ்சாயத்து, அடிதடி, சொத்து அபகரிப்பு போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றார். சிறு வயதில் குரு அரவிந்தின் தந்தையிடமிருந்து நிலத்தை அபகரிக்கும் கவுன்சிலர் அவரது தந்தையைக் கொன்று விடுகின்றார். இதனை நேரில் பார்க்கும் குரு அரவிந்த் இதன் காரணமாக மிகுந்த அமைதியுடன் தனது வேலைகளைப் பார்த்து வருகின்றார்.

ஒருகட்டத்தில் குரு அரவிந்த்தின் அம்மா குடியை விட்டுவிடும்படி மகனிடம் கெஞ்சுகின்றார். அம்மாவின் வார்த்தைகள் குரு அரவிந்தின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இதனால் குடியை விட்டு விடுகின்றார். 

மேலும் சாமந்தியிடமும் நன்றாகப் பேசி பழகுகின்றார். இருவரது வீட்டிலும் திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சாமந்தியின் பெற்றோர் இடத்தை கவுன்சிலர் தனது தம்பிகளுடன் சேர்ந்து அபகரிக்கப் பார்க்கின்றார். இதனால் குரு அரவிந்துக்கும், கவுன்சிலருக்கும் இடையில் மோதல் ஏற்படுகின்றது.

இந்த மோதலில் கவுன்சிலர் மற்றும் அவரது தம்பிகளை எதிர்த்து குரு அரவிந்த் வெற்றி பெற்றாரா, சாமந்தியைக் கரம் பிடித்தாரா என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகன் குரு அரவிந்த் நன்றாக நடித்திருக்கின்றார். நடனம், சண்டைக் காட்சிகளிலும் நன்றாக நடித்திருக்கின்றார். துடுக்குத்தனம் நிறைந்த பெண்ணாக நடித்திருக்கும் நாயகி சாமந்தி தனது கதாபாத்திரத்தை நிறைவாக செய்திருக்கின்றார். நாயகன் குரு அரவிந்த்தின் உறவினராக படம் முழுவதும் வரும் துணை நடிகர் ஜெயமணி படத்தில் நகைச்சுவை நடிகர் இல்லாத குறையைப் போக்கி படத்தின் கலகலப்புக்கு உத்தரவாதம் அளிக்கின்றார்.

சக்தியின் இசையில் படத்தின் பாடல்கள் மனதில் ஒட்டவில்லை. குடி தொடர்பாக இளைஞர்களின் வாழ்வு சீரழிவதை இயக்குனர் ஸ்ரீநிவாஸ் நன்றாக காட்சிப்படுத்தியிருக்கின்றார். ஆனால் பெரும்பாலான காட்சிகளில் அழுத்தம் இல்லை. இதனால் படத்தில் ஆங்காங்கே தொய்வு ஏற்படுகின்றது.


கத்தி சண்டை திரை விமர்சனம்
[ Tuesday,3 January 2017, 07:24:33 ]
படத்தின் ஆரம்பத்தில் கண்டெயினரில் வருகின்ற பணத்தை மடக்கி அதனை அரசிடம் ஒப்படைக்கின்றார் பொலிஸ் அதிகாரி..
மேலும்...
வீரசிவாஜி திரை விமர்சனம்
[ Monday,19 December 2016, 10:08:22 ]
பாண்டிச்சேரியில் டக்சி ஓட்டுநராக இருக்கின்றார் விக்ரம் பிரபு. இவருக்கு சொந்தமென்று சொல்வதற்கு யாருமில்லை
மேலும்...
சென்னை 600 028 II திரைவிமர்சனம்
[ Thursday,15 December 2016, 10:42:51 ]
சென்னை 600 028 முதல் பாகத்தில் ஷார்க்ஸ் அணியில் இருந்தவர்களில் சில வேலை காரணமாக பிரிந்துவிட, பத்து வருடங்களாக சிவா,
மேலும்...
இளமி திரை விமர்சனம்
[ Thursday,1 December 2016, 07:41:32 ]
1715ம் ஆண்டில் நடக்கும் ஜல்லிக்கட்டை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் படம் இளமி. மதுரை வட்டாரத்தில் இருக்கும்..
மேலும்...
கடவுள் இருக்கான் குமாரு திரை விமர்சனம்
[ Thursday,24 November 2016, 11:38:13 ]
ஜி.வி.பிரகாஷுக்கும் நிக்கி கல்ராணிக்கும் திருமண ஏற்பாடுகள் நடைபெறுகின்றது. திருமணத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு
மேலும்...
சிறப்புச் செய்திகள்
அறிவித்தல்கள்
பெ திருமதி சந்திரசேகரம்பிள்ளை திருபுரிநாகேஸ்வரி அம்மா
பி யாழ். வட்டுக்கோட்டை
வா திருகோணமலை
தி 04-01-2017
பெ திருமதி பத்மினிதேவி பத்மநாபபிள்ளை
பி யாழ். கோண்டாவில்
வா அவுஸ்திரேலியா sydney
தி 04-01-2017
பெ திருமதி சரஸ்வதி கணேஸ்(மம்மி)
பி யாழ். சரசாலை
வா லண்டன்
தி 03-01-2017
பெ திரு சீமாம்பிள்ளை மரியநாயகம்
பி மன்னார் ஒலிமடு நானாட்டான்
வா மன்னார் ஒலிமடு நானாட்டான்
தி 02-01-2017
பெ திருமதி மங்களேஸ்வரி மேனன்
பி யாழ். சங்குவேலி
வா லண்டன்
தி 02-01-2017
பெ திருமதி இராஜேஸ்வரி சிறிஸ்கந்தராஜா(கெங்கா)
பி யாழ். நீராவியடி
வா ஜெர்மனி Kaufbeuren
தி 01-01-2017
பெ திரு கோவிந்தர் சோமசுந்தரம்
பி கிளிநொச்சி பூநகரி
வா கிளிநொச்சி பூநகரி
தி 26-12-2016
பெ திரு பாலசுப்பிரமணியம் அதீஸ்
பி கனடா
வா கனடா
தி 26-12-2016