மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது

89shares

பத்தனை போகாவத்தை பகுதியில் உள்ள வீட்டில் சட்டவிரோதமாக விற்பனைக்காக வைக்கபட்டிருந்த 10 மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது செய்யபட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சந்தேகநபர் இன்று காலை 11 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

திம்புள்ள பத்தனை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விஷேட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 10 மதுபான போத்தல்களும் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

வெசாக் பூரணையை முன்னிட்டு மதுபானசாலைகள் மூடப்படும் நாட்களில் விற்பனை செய்வதற்காகவே குறித்த வீட்டில் இந்த மதுபான போத்தல்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் வருகின்றனர்.

இதையும் தவறாமல் படிங்க
நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார் குமாரசாமி ; வெளிநடப்பு செய்தது பாஜக.!

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார் குமாரசாமி ; வெளிநடப்பு செய்தது பாஜக.!

புதிதாக வந்துள்ள தம்பிகளுக்கு விடுதலைப் புலிகளின் வரலாறே தெரியாது - விளாசிய திருமா.!

புதிதாக வந்துள்ள தம்பிகளுக்கு விடுதலைப் புலிகளின் வரலாறே தெரியாது - விளாசிய திருமா.!

போதை தலைக்கேறியதில் தாய் தன் குழந்தைகளுக்கு செய்த கொடுமை!

போதை தலைக்கேறியதில் தாய் தன் குழந்தைகளுக்கு செய்த கொடுமை!