நல்ல நட்புகளை தேர்ந்தெடுங்கள் உறவுகளே.. வாழ்க்கை அழகாகும்.!

12shares

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்

மேற்செனறு இடித்தற் பொருட்டு என சொல்லிச்சென்றான் தமிழர்தம் தனிப்பெருமை வள்ளுவப்பெருந்தகை. நட்பு என்பது சிரித்துமகிழ்வதற்காக அல்ல ; நண்பர்கள் நல்வழி தவறிச்செல்லும்பொழுது இடித்துரைத்துத் திருத்துவதற்காகும் என்பதுவே மேற்கண்ட குறளுக்கானவிளக்கம் ஆகும்.

ஆம், மனித வாழ்க்கைக்கு தாய் - தந்தை உள்ளிட்ட குடும்ப உறவுகள் எவ்வளவுஅவசியமோ, அதே அளவுக்கான அவசியம் நட்பு -நண்பர்கள். ஏனெனில் மனிதர்களின் குண இயல்புகளை அவன் வாழும் சூழல்கள் நிர்ணயிப்பதனைபோல, நட்பும் ; நண்பர்களும் நம் வாழ்வில் தாக்கத்தில் ஏற்படுத்தக்கூடியவர்கள். அதன்காரணமாகவே நண்பர்களை அடையாளம் கண்டு அவர்களுடன் உண்மையான நட்பினை நாம் பேணுதல்வேண்டும். அதுவே நம்மை நல்வழிக்கு இட்டுச்செல்லும்.

பாலில் துளி விஷம் கலந்தாலும் அது அதன்இயல்பு தன்மையை இழந்துபோகும். அதனைப்போல் தான் நட்பும். நம்மளவில் நாம்நல்லவர்களாகவே இருப்பினும் நாம் நட்புக்கொள்ளும் நபர்களின் இயல்புகள் நம்மைசேர்ந்துவிடும் ஆபத்துகள் அதிகம். அதன் காரணகமாவே நம்மோடு பழகுபவர்கள் குறித்துவிழிப்புடன் இருக்க அறிவுறுத்துகின்றனர் நம் பெற்றோர்கள்.

வானிலிருந்து பொழிகின்ற மழைத்துளிகள்தூயவை தான். ஆனால், அவை விழுகின்ற இடத்தினை பொறுத்து நாம்பருகிட ஏற்றதாகவோ, அல்லது எதற்கும் பயன்படுத்திடஇயலாததாகவோ ஆகிறது. இந்த உவமையை நாம் இங்கே குறிப்பிட்ட காரணம் நண்பர்கள் நமதுவாழ்வில் எத்தகைய ஆளுமையை செலுத்துகிறார்கள் என்பதனை உணர்த்திடவே.

உண்மையில் நடந்ததுவோ அல்லது கற்பனையோமஹாபாரதம் என்ற கதையாடலில் தன்னளவில் தூயவனான கர்ணனுக்கு அப்படியானதோர் முடிவுநேர்ந்திட காரணமாக அமைவது துரியோதனனுடன் அவன் கொண்ட நட்புதான். ஆக, நம் மேல் அக்கறை கொண்ட நபர்களை நண்பர்களாக ஆக்கிக்கொள்ளுங்கள்.போலிகளை கிஞ்சித்தும் யோசிக்காமல் வீசியெறியுங்கள். ஏனெனில், அவைகளால் நாம் இழக்கப்போவது எதனையும் அல்ல.

பிறர் போற்றுகிற வகையில் ; பார் போற்றுகிற வகையில் இந்த மண்ணில் நாம் வாழ்ந்திட, நமது இலட்சியத்தினை அடைந்திட வேண்டுமெனில், நம்மை ஊக்கப்படுத்துகிற, சோர்ந்துவிழுகிறவேளைகளில் தாங்கிப்பிடிக்கிற உறவுகளும், நட்புகளும்வேண்டும். அப்படியான உறவுகளும், நட்புகளும் அமைந்துவிட்டதெனில்நிச்சயம் நம் வாழ்க்கை அழகான ஒன்றாகும்.

நல்ல நண்பர்கள் தானாகவேஅமைந்திடுவார்கள் என்றில்லாமல், நமது நண்பர்களை நாம் நல்லவர்களாகமாற்றிட முனைவோம். பிறரின் நல்லவற்றை மட்டுமே எடுத்துக்கொண்டு தீயனவற்றை தூக்கிதூர எறிவோம். வாழ்வெனும் பாதை அழகாகும்.. நல்ல நட்புகள் அமைந்திட்டால்.


ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
ஈழத்தமிழர்களால் ரஜினிக்கு நேர்ந்த பரிதாப நிலை!

ஈழத்தமிழர்களால் ரஜினிக்கு நேர்ந்த பரிதாப நிலை!

இராணுவ கேர்ணலுக்கான பள்ளக்கு பிரியாவிடையின் பின்னணியை தெளிவுபடுத்தும் முதலமைச்சர்

இராணுவ கேர்ணலுக்கான பள்ளக்கு பிரியாவிடையின் பின்னணியை தெளிவுபடுத்தும் முதலமைச்சர்

போட்டோவுக்கு போஸ் கொடுத்த இளைஞருக்கு காத்திருந்த பயங்கர அதிர்ச்சி!

போட்டோவுக்கு போஸ் கொடுத்த இளைஞருக்கு காத்திருந்த பயங்கர அதிர்ச்சி!