Flash News
செய்திகள்
நின்று கொண்டு செலுத்தக் கூடிய வகையிலான சக்கர நாற்காலி அறிமுகம்
[ Monday,12 September 2016, 16:56:22 ]   

ரீ வோக் எந்திரவியல் நிறுவனத்தின் ஸ்தாபகர் மிற் கோபர்,  தன்னுடைய முன்மாதிரியான கண்டுபிடிப்பான நின்று கொண்டு செலுத்தக் கூடிய வகையிலான சக்கர நாற்காலியை அறிமுகம் செய்துள்ளார்.

கடந்த வருடம் ஜேர்மனியில் இடம்பெற்ற வைத்திய மாநாடு ஒன்றில் இதனை முதன்முதலாகப் அவர் பரீட்சித்துப் பார்த்துள்ளார்.

ஜேர்மனியில் இடம்பெற்ற வைத்திய மாநாட்டின் போது தனது சகாக்களுடன் சாப்பிடுவதையும்  பானங்கள் அருந்துவதையும்  நின்றபடியே செய்யவேண்டியிருந்ததாகத் தெரிவித்துள்ள மிற் கோபர், அப்போது இந்த சக்கர நாற்காலியைப் பயன்படுத்திய  தான் மிகவும் ஆனந்தமடைந்ததாகத் தெரிவித்துள்ளார்.

மற்றவர்களைப் போல் தன்னாலும் நின்றுகொண்டு செயல்பட முடிந்ததாகவும் தெரிவித்துள்ள அவர் இது தனக்கொரு புதிய அனுபவமாக அமைந்திருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வெளி உலகைக் கண்டது போலவும் இருந்தது என்று மிற் கோபர் தெரிவித்துள்ளார். 

63 வயதுடைய இவர் 1997 ஆம் ஆண்டு வாகன விபத்தொன்றில் சிக்குண்டதன் பின்னர் சக்கர நாற்காலியின் துணையுடனேயே தனது அன்றாடப் பணிகளை மேற்கொண்டு வருகின்றார்.

புதிய உக்திகளைக் கையாண்டு பொருத்தப்பட்டுள்ள பாகங்களின் உதவியுடன் நின்று கொண்டு சக்கரநாற்காலியை இயக்கக் கூடிய வசதியும், உடலை நிறுத்தி வைக்கக் கூடிய வசதியும் இந்த சக்கர நாற்காலியில்  உள்ளது.

இவ்வகையான இயக்கம் வேறு சக்கரநாற்காலிகளில் இதுவரை பொருத்தப்பட்டிருக்கவில்லை என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

மின் பொருளியலாளரான கோபர், இடுப்புக்குக் கீழே செயலற்றுப் போனவர்கள் நடப்பதற்காக எக்சோ ஸ்கெலிடன் இயந்திரம் ஒன்றையும் பலவருடங்களின் முன்னர் கண்டுபிடித்திருந்தார்.

எனினும் விபத்தினால் கைகளின் இயக்கம் பகுதியாக முடக்கப்பட்டுள்ளதால் அதனை அவரால் பரீட்சித்துப்பார்க்க முடியவில்லை. ஆனால் தற்போதைய கண்டுபிடிப்பைத் தாமே பரீட்சித்துப்பார்க்க முடிந்ததில் அளவில்லா ஆனந்தம் கொள்வதாகவும் கோபார் தெரிவித்துள்ளார். அடுத்த வருடமளவில் சந்தைக்கு விடப்படும்படியாக திருத்தங்களுடன் இந்த சக்கர நாற்காலியை வடுவமைப்பதில் தற்போது இவர் ஈடுபட்டுள்ளார்.

செய்தி சேவை
அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருமாறு கோரி ஐவரி கோஸ்டில் இராணுவ அதிகாரிகள் போராட்டம்
[ Monday,12 September 2016, 16:56:22 ]
சம்பள உயர்வு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருமாறு கோரி ஐவரி கோஸ்டில் இராணுவ அதிகாரிகளும், வீரர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும்...
சீன உயரதிகாரியின் விஜயத்தை அடுத்து கொங்ஹொங்கில் பாதுகாப்பு தீவிரம்
[ Monday,12 September 2016, 16:56:22 ]
கொங்ஹொங்கில் என்றுமில்லாவாறு பாரிய அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும்...
குற்றப்பிரேரணைக்கு எதிராக இறுதி வரை போராடுவேன் - டில்மா ரூசெப்
[ Monday,12 September 2016, 16:56:22 ]
தம்மை பதவிநீக்கும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள குற்றப்பிரேரணைக்கு எதிராக இறுதிவரை போராடப் போவதாக பிரேசில் ஜனாதிபதி டில்மா ரூசெப் தெரிவித்துள்ளார்.வரவு செலவுத் திட்ட கணக்குகளில் மாற்றங்களைச் செய்ததாக டில்மா ரூசெப்பிற்கு
மேலும்...
சிறப்புச் செய்திகள்
அறிவித்தல்கள்
பெ திருமதி வேலுப்பிள்ளை மாரிமுத்து
பி யாழ். மிருசுவில்
வா யாழ். மிருசுவில்
தி 24-01-2017
பெ திருமதி தியாகராஜா மனோன்மணி
பி யாழ். வடமராட்சி கிழக்கு
வா யாழ். வடமராட்சி கிழக்கு
தி 23-01-2017
பெ திருமதி நேசமலர் காலிங்கராஜா
பி யாழ். இணுவில்
வா லண்டன்
தி 22-01-2017
பெ திரு சின்னத்துரை முருகேசு
பி யாழ். புத்தூர்
வா கனடா
தி 22-01-2017
பெ திருமதி சற்குணவதி தர்மராஜா (வனஜா)
பி கொழும்பு
வா நெதர்லாந்து Roermond
தி 21-01-2017
பெ திரு நாகேந்திரா நடராஜா
பி யாழ். உரும்பிராய்
வா கொழும்பு ரத்மலானை
தி 21-01-2017
பெ ஆறுமுகம் ரகுநாதன்
பி திருகோணமலை
வா திருகோணமலை
தி 19-01-2017
பெ திரு ஆறுமுகம் பசுபதிபிள்ளை
பி யாழ். புங்குடுதீவு
வா பிரான்ஸ்
தி 20-01-2017