Flash News
செய்திகள்
கனடா அல்பெர்ட்டா நகரின் முன்னாள் முதல்வர் ஜிம் பிரென்ரிஸ் விமான விபத்தில் பலி
[ Saturday,15 October 2016, 13:28:21 ]   

கனடாவின் அல்பெர்ட்டா நகரின் முன்னாள் முதல்வர் ஜிம் பிரென்ரிஸ் விமான விபத்தில் உயிரிழந்ததாக கன்சர்வேட்டிக் கட்சி உத்தியொகபூர்வமாக அறிவித்துள்ளது.

 

கடந்த வியாழக்கிழமை கனடா கெலோனாவிலிருந்து கல்கரியை நோக்கி பயணித்த விமானமே விபத்துக்குள்ளாகியுள்ளது.

 

இந்த விபத்தில் அல்பேர்ட்டாவின் முன்னாள் முதல்வர் ஜிம் பிரென்ரிஸ் உட்பட மூவர் உயரிழந்துள்ளனர். இவர்களில் கல்கரி நகரில் பிரபலமான  கண்சிகிச்சை வைத்தியர் டாக்டர் கென் கெலட்லியும் உயிரிழந்துள்ளார் என அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

குறித்த விமானம் கெலொனா சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுள்ளதுடன் இரவு 10.07 மணியளவில் 8.600அடி உயரத்தில் பறந்த போது ரேடாரை விட்டு மறைந்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

 

இதனைத் தொடர்ந்து விமானத்தின் சிதைவுகள் சில மணத்தியாலங்களின் பின்னர் கெலொனாவின் வடக்கிலுள்ள லேக் கவுன்ரியில் கண்டு பிடிக்கப்பட்டது.

 

புறோகிரசிவ் கொன்சவேட்டிவ் கட்சியின் தலைமை பதவியை 2014-ல் வென்ற பின்னர் பிரென்ரிஸ் அல்பேர்ட்டாவின் 16ஆவது முதல்வராக பதவி வகித்திருந்தார்.

 

இவரது உயிரிழப்பிற்கு கனடா பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ, அல்பேர்ட்டா முதல்வர் றேச்சல் நோட்லி மற்றும் பிரிட்டிஷ் கொலம்பிய முதல்வர் கிறிஸ்டி கிளாக் ஆகியோர் அதிர்ச்சி வெளியிட்டதோடு தமது ஆழ்ந்த அனுதாபங்களையும் வெளியிட்டுள்ளனர்.

 

செய்தி சேவை
ரொரன்டோ உட்பட ஒன்றாரியோவின் தென்பிராந்தியங்களில் உறைபனி மழை
[ Saturday,15 October 2016, 13:28:21 ]
கனடாவின் ரொரன்டோ உட்பட ஒன்றாரியோவின் தென்பிராந்தியங்களில் உறைபனி மழை பெய்யும் என கனேடிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும்...
மது போதையில் விமானத்தை செலுத்த முற்பட்ட விமானி கைது
[ Saturday,15 October 2016, 13:28:21 ]
கனடாவில் மது போதையில் பயணிகள் விமானமொன்றை செலுத்த முற்பட்ட விமானியொருவர் அந்த நாட்டு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.கனடாவின் கல்கரியில் இருந்து மெக்சிக்கோ நோக்கி பயணிக்க இருந்த சலுகை அடிப்படையிலான சன்விங் என்ற
மேலும்...
கனடா பொலிஸ் உயர் அதிகாரி மீதுபாலியல் குற்றச்சாட்டு
[ Saturday,15 October 2016, 13:28:21 ]
கனடா வன்கூவர் நகரில் கடமையாற்றும் பொலிஸ் உயர் அதிகாரி மீது பாலியல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
மேலும்...
கனடா - ரொறன்ரோ பகுதியில் தொடர் பனிப்பொழிவு; மக்களின் இயல்புவாழ்க்கை பாதிப்பு
[ Saturday,15 October 2016, 13:28:21 ]
கனடா - ரொறன்ரோ நகரில் எதிர்பார்க்கப்பட்டதை விட பனிப்பொழிவு அதிகமாக காணப்படுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும்...
நெடுஞ்சாலைகளுக்கான கட்டண அதிகரிப்பிற்கான தீர்மானத்தினை நிராகரிக்குமாறு கோரிக்கை
[ Saturday,15 October 2016, 13:28:21 ]
கனடா ஒன்றாரியோ ஆளுநரினால் முன்வைக்கப்பட்ட நெடுஞ்சாலைகளுக்கான கட்டண அதிகரிப்பிற்கான தீர்மானத்தினை நிராகரிக்குமாறு புரோசொவிஸ் கன்சர்வேட்டிவ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும்...
ஒன்ராரியோவில் கத்திக்குத்து தாக்குதல் : சந்தேக நபரை தேடும் பொலிசார்
[ Saturday,15 October 2016, 13:28:21 ]
கனடாவின் ஒன்ராரியோ மாநிலத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் நபரொருவர் படுகாயமடைந்துள்ளார்.
மேலும்...
சிறப்புச் செய்திகள்
அறிவித்தல்கள்
பெ திருமதி சந்திரசேகரம்பிள்ளை திருபுரிநாகேஸ்வரி அம்மா
பி யாழ். வட்டுக்கோட்டை
வா திருகோணமலை
தி 04-01-2017
பெ திருமதி பத்மினிதேவி பத்மநாபபிள்ளை
பி யாழ். கோண்டாவில்
வா அவுஸ்திரேலியா sydney
தி 04-01-2017
பெ திருமதி சரஸ்வதி கணேஸ்(மம்மி)
பி யாழ். சரசாலை
வா லண்டன்
தி 03-01-2017
பெ திரு சீமாம்பிள்ளை மரியநாயகம்
பி மன்னார் ஒலிமடு நானாட்டான்
வா மன்னார் ஒலிமடு நானாட்டான்
தி 02-01-2017
பெ திருமதி மங்களேஸ்வரி மேனன்
பி யாழ். சங்குவேலி
வா லண்டன்
தி 02-01-2017
பெ திருமதி இராஜேஸ்வரி சிறிஸ்கந்தராஜா(கெங்கா)
பி யாழ். நீராவியடி
வா ஜெர்மனி Kaufbeuren
தி 01-01-2017
பெ திரு கோவிந்தர் சோமசுந்தரம்
பி கிளிநொச்சி பூநகரி
வா கிளிநொச்சி பூநகரி
தி 26-12-2016
பெ திரு பாலசுப்பிரமணியம் அதீஸ்
பி கனடா
வா கனடா
தி 26-12-2016