Flash News
செய்திகள்
கனடாவின் வர்த்தக உடன்படிக்கைக்கு எதிரான ஆர்ப்பாட்ட பேரணி பிரான்ஸில்
[ Sunday,16 October 2016, 14:56:07 ]   

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் கனடாவுக்கு இடையில் கைச்சாத்திட திட்டமிடப்பட்டுள்ள பொருளாதார வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிராக நேற்று சனிக்கிழமை ஆர்ப்பாட்ட பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த பேரணியில் பல தொழிற்சங்கங்கள், எதிர்கட்சிகள் மற்றும் சுற்றுச்சூழல் குழுக்களைச் சேர்ந்த சுமார் ஐந்தாயிரம் பேர் பங்கேற்றிருந்தனர்.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் - கனடாவுக்கும் இடையில் கைச்சாத்திட திட்டமிடப்பட்டுள்ள பொருளாதார வர்த்தக ஒப்பந்தமானது செயற்படுத்தப் பட்டால் நாட்டின் விவசாயம் மற்றும் பொதுச் சேவைகளுக்கு தீங்கு ஏற்படும் என்பதுடன் ஐனநாயகத்தை சீர் குலைக்கும் என ஆர்பாட்டக்காரர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இதன்போதுஇ ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் கனடாவுக்கு இடையில் மேற்கொள்ளப்படவுள்ள பாரிய பொருளாதார வர்த்தக ஒப்பந்தம் மூலம் அதிகளவு தொழில்வாய்ப்புள் ஏற்படுத்தப்படும் என்கின்ற போதிலும் உணவு பாதுகாப்புஇ சுற்றுச்சூழல் பாதிப்பு என பெரியளவிலான சவால்களை எதிர்கொள்ள வேண்டி ஏற்படும் என்றும் தெரிவித்திருந்தனர்.

இதேவேளை இந்த வர்த்தக ஒப்பந்தத்தை ஐரோப்பிய நாடுகள் ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் மக்கள் மற்றும் நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்க முடியாது என பிரான்ஸ் உயரதிகாரி ஒருவர் கருத்து கூறியுள்ளார்.

அத்துடன் இந்த பொருளாதார வர்த்தக ஒப்பந்தத்தினால் வெளிநாட்டு முதலிடு்டாளர்களின் முதலீடு அதிகரிக்கும் எனவும் இதனால் ஜனநாயகத்தை நேரிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் பரந்த பொருளாதார வர்த்தக ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக அமைச்சர்களின் முழுமையான ஆதரவு தேவை.

எனவே எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இது தொடர்பான வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் கனடாவுக்கு இடையிலான பரந்த பொருளாதார வர்த்தக ஒப்பந்தம் எதிர்வரும் 27 ஆம் திகதி பிறேஸில் தலைநகர் பிரசல்ஸில் கைச்சாத்திடப்படவுள்ளது சுட்டிக்காட்டதக்கது.

இந்நிலையில் பிரஸல்ஸில் நடைபெறவுள்ள இந்த வாக்கெடுப்பில் பிரான்ஸ் அரசு தனது எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் என்று ஆர்பாட்டக்காரர்கள் வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இதற்கிடையில் கடந்த வியாழக்கிழமை கனடிய பிரதமர் ஜஸ்டின் ருடே ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் கனடாவுக்கு இடையிலான பரந்த பொருளாதார வர்த்தக ஒப்பந்தத்தை செயற்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளதுடன் அவ்வாறு செயற்படுத்த தவறுமானால் பேரழிவிற்கான பாதையில் அழைத்துச்செல்லும் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

                             

செய்தி சேவை
மெக்சிக்கோ நாட்டவர்கள் அதிகளவில் கனடாவில் கைது
[ Sunday,16 October 2016, 14:56:07 ]
கனடாவின் எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகளால் இவ்வாண்டின் முதல் 67 நாட்களும் அதிகளவான மெக்ஸ்கோ பிரஜைகள் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.மெக்சிக்கோ பிரஜைகளுக்கான விசா விதிமுறைகளில் கனேடிய அரசாங்கம்
மேலும்...
ஒன்றாரியோவில் சங்கிலி தொடர்விபத்து: ஒருவர் பலி, 28 பேர் காயம்
[ Sunday,16 October 2016, 14:56:07 ]
ஒன்றாரியோ நெடுஞ்சாலை 401 இல் இடம் பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 28 பேர் காயமடைந்துள்ளனர்.
மேலும்...
பிரிட்டிஷ் கொலம்பியாவில் குழாய் நீரை பயன்படுத்த வேண்டாம் : அரசு எச்சரிக்கை
[ Sunday,16 October 2016, 14:56:07 ]
கனடா பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஒசோயூஸ் பகுதியில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் குழாய் நீரை பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும்...
ரொறான்ரோவை நோக்கி படையெடுக்கும் குடியேற்றவாசிகள்
[ Sunday,16 October 2016, 14:56:07 ]
கனடாவில் குடியேறும் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை துரிதகதியில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும்...
அமெரிக்க ஜனாதிபதியை சந்திக்கவுள்ளார் கனேடிய பிரதமர்
[ Sunday,16 October 2016, 14:56:07 ]
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை எதிர்வரும் திங்கட்கிழமை சந்திப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்...
கியுபெர்க் தாக்குதலில் உயிரிழந்த இருவரின் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு
[ Sunday,16 October 2016, 14:56:07 ]
கனடாவின் கியுபெக் நகரில் அமைந்துள்ள இஸ்லாமிய கலாசார மையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த இரு அல்ஜீரியாவைச் சேர்ந்தவர்களின் உடல்கள் அவர்களின் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
மேலும்...
சிறப்புச் செய்திகள்
அறிவித்தல்கள்
பெ திருமதி அபிதகுசலாம்பிகை தியாகேந்திரன்
பி யாழ். பருத்தித்துறை
வா யாழ். பருத்தித்துறை
தி 28-02-2017
பெ திரு சூசைப்பிள்ளை கிளமென்ற் பெர்னான்டோபிள்ளை
பி யாழ். ஊர்காவற்துறை
வா யாழ். ஊர்காவற்துறை
தி 27-02-2017
பெ திருமதி குமாரவேலு நாகம்மா
பி யாழ். நெடுந்தீவு
வா யாழ். நெடுந்தீவு
தி 26-02-2017
பெ திரு சிவசுப்பிரமணியம் சிவகணேசன்
பி யாழ். ஏழாலை
வா யாழ். ஏழாலை
தி 26-02-2017
பெ செல்வி சுகண்யா சிவஞானம்
பி புத்தளம் முந்தல்
வா லண்டன் Kingston
தி 25-02-2017
பெ திருமதி வைரமுத்து சிகாமணி
பி யாழ். அளவெட்டி
வா நெதர்லாந்து
தி 25-02-2017
பெ Dr. வயித்திலிங்கம் பாலசேகரம்
பி யாழ். கரம்பன்
வா பிரித்தானியா Ilford
தி 25-02-2017
பெ திருமதி மரியாம்பிள்ளை கனகம்மா
பி யாழ். நீர்வேலி
வா யாழ். சாவகச்சேரி
தி 24-02-2017