Flash News
செய்திகள்
யாழ் பல்கலைக்கழக மாணவர் படுகொலை - கனடாவில் கண்டன ஆர்ப்பாட்டம்
[ Tuesday,25 October 2016, 13:59:21 ]   

யாழ்ப்பாணம் - கொக்குவிலில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து கனடாவில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டம் கனேடியத் தமிழர்கள் சார்பில் நாளை புதன் கிழமை  மாலை 3 மணி முதல் 7 மணி வரை டண்டாஸ் சதுக்கத்தில் இடம்பெறவுள்ளது.

ஸ்ரீலங்கா அரசின் இனப்படுகொலை அரங்கேறும் நிகழ்வுகளாகவே இந்த சம்பவத்தை தம்மால் பார்க்க முடியும் எனவும் இதற்கு ஒரு நியாயத்தினை ஸ்ரீலங்கா அரசு வழங்கும் என்பதில் தமக்கு நம்பிக்கையில்லை எனவும் கனடிய தமிழ் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இந்த கொலைக்கு சர்வதேசம் தலையிட்டு நீதியை பெற்றுத் தர வேண்டும் என கோரி இந்த ஆர்ப்பாட்டப் பேரணியை முன்னெடுக்க போவதாக இவர்கள் அறிவித்துள்ளனர்.

இந்த பேரணியில் கனடாவில் வாழும் அனைத்து தமிழ் மக்களையும்இ  மாணவர் சமூகத்தையும் இணைந்து நீதியை வேண்டி போராட அணிதிரளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கொக்குவில் குளப்பிட்டிச்சந்தியில் வைத்து கடந்த 21ஆம் திகதி வியழக்கிழமை இரவு 11.30 அளவில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற மாணவர்களான 24 வயதுடைய விஜயகுமார் சுலக்ஸன் மற்றும் 23 வயதான நடராசா கஜன் ஆகியோர் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


செய்தி சேவை
மெக்சிக்கோ நாட்டவர்கள் அதிகளவில் கனடாவில் கைது
[ Tuesday,25 October 2016, 13:59:21 ]
கனடாவின் எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகளால் இவ்வாண்டின் முதல் 67 நாட்களும் அதிகளவான மெக்ஸ்கோ பிரஜைகள் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.மெக்சிக்கோ பிரஜைகளுக்கான விசா விதிமுறைகளில் கனேடிய அரசாங்கம்
மேலும்...
ஒன்றாரியோவில் சங்கிலி தொடர்விபத்து: ஒருவர் பலி, 28 பேர் காயம்
[ Tuesday,25 October 2016, 13:59:21 ]
ஒன்றாரியோ நெடுஞ்சாலை 401 இல் இடம் பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 28 பேர் காயமடைந்துள்ளனர்.
மேலும்...
பிரிட்டிஷ் கொலம்பியாவில் குழாய் நீரை பயன்படுத்த வேண்டாம் : அரசு எச்சரிக்கை
[ Tuesday,25 October 2016, 13:59:21 ]
கனடா பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஒசோயூஸ் பகுதியில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் குழாய் நீரை பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும்...
ரொறான்ரோவை நோக்கி படையெடுக்கும் குடியேற்றவாசிகள்
[ Tuesday,25 October 2016, 13:59:21 ]
கனடாவில் குடியேறும் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை துரிதகதியில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும்...
அமெரிக்க ஜனாதிபதியை சந்திக்கவுள்ளார் கனேடிய பிரதமர்
[ Tuesday,25 October 2016, 13:59:21 ]
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை எதிர்வரும் திங்கட்கிழமை சந்திப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்...
கியுபெர்க் தாக்குதலில் உயிரிழந்த இருவரின் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு
[ Tuesday,25 October 2016, 13:59:21 ]
கனடாவின் கியுபெக் நகரில் அமைந்துள்ள இஸ்லாமிய கலாசார மையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த இரு அல்ஜீரியாவைச் சேர்ந்தவர்களின் உடல்கள் அவர்களின் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
மேலும்...
சிறப்புச் செய்திகள்
அறிவித்தல்கள்
பெ திருமதி அபிதகுசலாம்பிகை தியாகேந்திரன்
பி யாழ். பருத்தித்துறை
வா யாழ். பருத்தித்துறை
தி 28-02-2017
பெ திரு சூசைப்பிள்ளை கிளமென்ற் பெர்னான்டோபிள்ளை
பி யாழ். ஊர்காவற்துறை
வா யாழ். ஊர்காவற்துறை
தி 27-02-2017
பெ திருமதி குமாரவேலு நாகம்மா
பி யாழ். நெடுந்தீவு
வா யாழ். நெடுந்தீவு
தி 26-02-2017
பெ திரு சிவசுப்பிரமணியம் சிவகணேசன்
பி யாழ். ஏழாலை
வா யாழ். ஏழாலை
தி 26-02-2017
பெ செல்வி சுகண்யா சிவஞானம்
பி புத்தளம் முந்தல்
வா லண்டன் Kingston
தி 25-02-2017
பெ திருமதி வைரமுத்து சிகாமணி
பி யாழ். அளவெட்டி
வா நெதர்லாந்து
தி 25-02-2017
பெ Dr. வயித்திலிங்கம் பாலசேகரம்
பி யாழ். கரம்பன்
வா பிரித்தானியா Ilford
தி 25-02-2017
பெ திருமதி மரியாம்பிள்ளை கனகம்மா
பி யாழ். நீர்வேலி
வா யாழ். சாவகச்சேரி
தி 24-02-2017