Flash News
செய்திகள்
கைச்சாத்திடப்பட்டது ஐரோப்பிய ஒன்றியத்திற்கும்-கனடாவிற்குமான வர்த்தக ஒப்பந்தம்
[ Sunday,30 October 2016, 12:53:36 ]   

ஐரோப்பிய ஒன்றியத்திற்கும்-கனடாவிற்கும் இடையிலான சர்ச்சைக்குறிய சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. 

 

கடும் எதிர்ப்புக்கு மத்தியில் கடந்த சில மாதங்களாக இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடும் நடவடிக்கை இழுபறியில் இருந்த நிலையிலேயே இன்று பெல்ஜியத்திற்கு விஜயம் செய்த கனெடிய பிரதமர், ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவருடன் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருக்கின்றார். 

 

ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் கனடாவிற்கும் இடையிலான பரந்து பட்ட பொருளாதாரத்திற்கான கூட்டு உடன்படிக்கை பெல்ஜியம் தலைநகர் பிரஸல்ஸில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத் தலைமையகத்தில் இன்று கைச்சாத்திடப்பட்டது.

 

இதன்மூலம் இரு நாடுகளிலும் ஏராளமான தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தவும், அண்மைக்காலமாக நெருக்கடிக்குள் முகம்கொடுத்துள்ள பொருளாதாரத்தை மேம்படுத்தவும் முடியும் என ஐரோப்பிய ஒன்றியம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. 

 

இன்றைய தினம் இடம்பெற்ற திறந்த பொருளாதார கூட்டு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட நிகழ்வில் உரையாற்றிய ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் ஜீன் க்ளவுட் ஜங்கர், நீண்ட கலந்துரையாடல்களுக்கு மத்தியில் சர்வதே தரத்திலான கொள்கைகள் மற்றும் சட்டங்களை வகுத்து இந்த உடன்படிக்கையை கைச்சாத்திட்டுள்ளதாகத் தெரிவித்தார். 

 

இதன்மூலம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இனிவரும் காலங்களில் வர்த்தக உடன்படிக்கைகளை செய்துகொள்ள வரும் தரப்பினருக்கு ஒரு வரையரை உருவாக்கிக்கொடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜங்கர் குறிப்பிட்டுள்ளார்.

 

ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் கனடாவுக்கும் இடையிலான இந்த கூட்டு ஒப்பந்தத்திற்கு ஐரோப்பிய நாடுகளில் தொடர் போராட்டங்கள் இடம்பெற்றிருந்தன.  

 

இந்த ஒப்பந்தத்தினால் அதிகளவு தொழில் வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்படும்  என்பது உண்மை என்ற போதிலும் இதனால் உணவு பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதிப்பு என பெரியளவிலான சவால்களை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் எதிர்கொள்ள வேண்டி ஏற்படும் என ஒப்பந்தத்திற்கு எதிரான தரப்பினர் குறிப்பிடுகின்றனர். 

 

இந்த நிலையில் பெல்ஜியத்திலுள்ள ஒரு பிராந்தியம், ஐரோப்பிய ஒன்றிய – கனேடிய ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பை தெரிவித்ததால் பெல்ஜியம் குறித்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அறிவித்தது. இதனால் கடந்த வியாழக்கிழமை இடம்பெறவிருந்த நிகழ்வு இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. எனினும் கடும் போராட்டங்களுக்கு மத்தியில் இறுதியில் பெல்ஜியமும் இணக்கம் தெரிவித்ததை அடுத்து கனேடாவுக்கும் – ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான திறந்த பொருளாதார கூட்டு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டிருக்கின்றது. 

 


செய்தி சேவை
மெக்சிக்கோ நாட்டவர்கள் அதிகளவில் கனடாவில் கைது
[ Sunday,30 October 2016, 12:53:36 ]
கனடாவின் எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகளால் இவ்வாண்டின் முதல் 67 நாட்களும் அதிகளவான மெக்ஸ்கோ பிரஜைகள் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.மெக்சிக்கோ பிரஜைகளுக்கான விசா விதிமுறைகளில் கனேடிய அரசாங்கம்
மேலும்...
ஒன்றாரியோவில் சங்கிலி தொடர்விபத்து: ஒருவர் பலி, 28 பேர் காயம்
[ Sunday,30 October 2016, 12:53:36 ]
ஒன்றாரியோ நெடுஞ்சாலை 401 இல் இடம் பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 28 பேர் காயமடைந்துள்ளனர்.
மேலும்...
பிரிட்டிஷ் கொலம்பியாவில் குழாய் நீரை பயன்படுத்த வேண்டாம் : அரசு எச்சரிக்கை
[ Sunday,30 October 2016, 12:53:36 ]
கனடா பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஒசோயூஸ் பகுதியில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் குழாய் நீரை பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும்...
ரொறான்ரோவை நோக்கி படையெடுக்கும் குடியேற்றவாசிகள்
[ Sunday,30 October 2016, 12:53:36 ]
கனடாவில் குடியேறும் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை துரிதகதியில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும்...
அமெரிக்க ஜனாதிபதியை சந்திக்கவுள்ளார் கனேடிய பிரதமர்
[ Sunday,30 October 2016, 12:53:36 ]
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை எதிர்வரும் திங்கட்கிழமை சந்திப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்...
கியுபெர்க் தாக்குதலில் உயிரிழந்த இருவரின் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு
[ Sunday,30 October 2016, 12:53:36 ]
கனடாவின் கியுபெக் நகரில் அமைந்துள்ள இஸ்லாமிய கலாசார மையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த இரு அல்ஜீரியாவைச் சேர்ந்தவர்களின் உடல்கள் அவர்களின் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
மேலும்...
சிறப்புச் செய்திகள்
அறிவித்தல்கள்
பெ திருமதி அபிதகுசலாம்பிகை தியாகேந்திரன்
பி யாழ். பருத்தித்துறை
வா யாழ். பருத்தித்துறை
தி 28-02-2017
பெ திரு சூசைப்பிள்ளை கிளமென்ற் பெர்னான்டோபிள்ளை
பி யாழ். ஊர்காவற்துறை
வா யாழ். ஊர்காவற்துறை
தி 27-02-2017
பெ திருமதி குமாரவேலு நாகம்மா
பி யாழ். நெடுந்தீவு
வா யாழ். நெடுந்தீவு
தி 26-02-2017
பெ திரு சிவசுப்பிரமணியம் சிவகணேசன்
பி யாழ். ஏழாலை
வா யாழ். ஏழாலை
தி 26-02-2017
பெ செல்வி சுகண்யா சிவஞானம்
பி புத்தளம் முந்தல்
வா லண்டன் Kingston
தி 25-02-2017
பெ திருமதி வைரமுத்து சிகாமணி
பி யாழ். அளவெட்டி
வா நெதர்லாந்து
தி 25-02-2017
பெ Dr. வயித்திலிங்கம் பாலசேகரம்
பி யாழ். கரம்பன்
வா பிரித்தானியா Ilford
தி 25-02-2017
பெ திருமதி மரியாம்பிள்ளை கனகம்மா
பி யாழ். நீர்வேலி
வா யாழ். சாவகச்சேரி
தி 24-02-2017