Flash News
செய்திகள்
கனேடிய இலங்கையரிடம் அதிக வருமான ஆசை காட்டி பணத்தை சுருட்டிய சிங்களப் பெண் கைது
[ Saturday,5 November 2016, 10:06:20 ]   

அதிக வருமானத்தைப் பெற்றுக்கொடுப்பதாகக் கூறி கனடாவில் பலரின் பணத்தை ஏப்பம் விட்ட இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட 52 வயதுடைய சிங்களப் பெண் ஒருவருக்கு கனேடிய நீதிமன்றம், ஐந்து வருட சிறைத் தண்டனை வழங்கியுள்ளது.

 

அதேவேளை மூன்று மில்லியன் கனேடிய டொலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. 

 

முஸ்கொகா என்ற இடத்தில் ஆடம்பர விடுதிகளை அமைப்பதாகக் கூறி 2004 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை குறுகிய கால முதலீடுகளுக்கு 60 வீதத்திற்கும் அதிகமான இலாபத்தை பெற்றுக்கொடுப்பதாகக் கூறி 5 தசம் 5 மில்லியன் டொலர் பணத்தை, 60 பேரிடம் பெற்று அவர்களை ஏமாற்றியதாக ஜானகி என்றழைக்கப்படும் 52 வயதுடைய ஜயவதி உஸ்வத்தகே பெரேரா என்ற பெண் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருக்கின்றார். 

 

கனேடிய பிரஜாவுரிமையைக் கொண்ட இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட 52 வயதுடைய ஜயவதி உஸ்வத்தகே பெரேரா என்ற இந்தப் பெண், வீட்டு மனை வர்த்தகத்தில் முதலீட்டால் அதிக லாபம் உழைக்கலாம் என கூறியே, முதலீட்டாளர்களிடம் பணத்தைக் கரந்துள்ளார். 

 

சுழற்சி முறையிலான முதலீட்டு மோசடியிலேயே ஜானகி என்ற பெண் ஈடுபட்டுள்ளதாக அரச சட்டத்தரணி ரீனா வெய்ன்பேர்க் தெரிவித்துள்ளார். 

 

முதலில் சிலரிடம் அதிக வருமான ஆசையைக் காட்சி முதலீடுகளைப் பெற்றுக்கொண்டுள்ள இந்தப் பெண், அந்த முதலீடுகளுக்கான வருமானத்தை திருப்பிச் செலுத்துவதற்காக புதிதாக முதலீடுகளைப் பெற்றுக்கொண்டு அவர்களையும் ஏடாற்றியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். 

 

இதற்கமைய இவரது முதலீட்டுத் திட்டத்தில் ஆயிரம் டொலர் முதல், ஏழு லட்சத்து 76 ஆயிரம் டொலர் வரை முதலீட்டவர்களும் இருப்பதாகவும், இவர்களில் அநேகமானோர் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்றும் அரச சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார். 

 

அத்துடன் ஏமாற்றித் திரட்டிய பணத்தில் ஒரு இலட்சம் டொலரை முதல் வகுப்பு விமானப்பயணச் சீட்டுகளுக்காகவும், 92 ஆயிரம் டொலருக்கு சொகுசு பி.எம்.மபிள்யு கார் வாங்குவதற்கும், சொகுசு வீட்டிற்கான முன் பணத்தை செலுத்துவதற்கும், பயன்படுத்தியுள்ளார்.

 

தன்னை வெற்றிகரமான வர்த்தகர் என பிரபல்யப்படுத்திக்கொண்டுள்ள ஜானகி என்ற குறித்த பெண், தனது வாடிக்கையாளர்களை மகிழ்விப்பதற்காக தனது சொகுசு மாளிகையில் அடிக்கடி விருந்துபசாரங்களையும் வழங்கியுள்ளார். 

 

அதேவேளை லெமோசின்ஸ் என்றழைக்கப்படும் அதி சொகுசு கார்களை வாடகைக்கு அமர்த்தி அடிக்கடி சூதாட்ட நிலையங்களுக்கும் சென்றுள்ளதாக அரச சட்டத்தரணி வெயின்பேர்க் தெரிவித்துள்ளார்.

 

சில சந்தர்ப்பங்களில் தனது வாடிக்கையாளர்களில் சிலருக்கு இலங்கை சென்று வருவதற்கான விமானப் பயணச்சீட்டுக்களையும் வாங்கிக்கொடுத்துள்ளார். எனினும் திடீரென தனதுமுதலீட்டாளர்களுக்கான வருமானத்தையும், அவர்களது முதலீடுகளையும் திருப்பிக்கொடுக்காததை அடுத்தே ஜானகிக்க எதிராக முதலீட்டாளர்கள் முறைப்பாடை செய்துள்ளனர்.


இதற்கமைய 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி அவருக்கு எதிராக முதல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. எனினும் 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதமே முதலாவது சிறைத் தண்டனை ஜானகி என்ற பெண்ணுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. 



செய்தி சேவை
அமெரிக்க ஜனாதிபதியை சந்திக்கவுள்ளார் கனேடிய பிரதமர்
[ Saturday,5 November 2016, 10:06:20 ]
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை எதிர்வரும் திங்கட்கிழமை சந்திப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்...
கியுபெர்க் தாக்குதலில் உயிரிழந்த இருவரின் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு
[ Saturday,5 November 2016, 10:06:20 ]
கனடாவின் கியுபெக் நகரில் அமைந்துள்ள இஸ்லாமிய கலாசார மையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த இரு அல்ஜீரியாவைச் சேர்ந்தவர்களின் உடல்கள் அவர்களின் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
மேலும்...
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார் கியுபெக் பள்ளிவாசல் தாக்குதலின் தாக்குதல்தாரி
[ Saturday,5 November 2016, 10:06:20 ]
கனடாவில் கியுபெக் இஸ்லாமிய கலாச்சார மையத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட பிரதான சூத்திரதாரிகள் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளன
மேலும்...
க்யூபெக் பள்ளிவாசல் துப்பாக்கி பிரயோகம்:ஐவர் பலி, பலர் காயம்
[ Saturday,5 November 2016, 10:06:20 ]
கனடாவின் க்யூபெக் நகரிலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் பலர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.நேற்று மாலை தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது ஆயுததாரி, தாக்குதலை நடத்தியுள்ளதாக கனேடிய
மேலும்...
முஸ்லீம்கள் மீது பயங்கரவாத தாக்குதல் : கனேடிய பிரதமர் கண்டனம்
[ Saturday,5 November 2016, 10:06:20 ]
கனடாவின் கியூபெக் நகர பள்ளிவாசல் மீதான துப்பாக்கிப் பிரயோகம், முஸ்லீம்கள் மீதான பயங்கரவாத தாக்குதல் என அந்த நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடே தெரிவித்துள்ளார்.இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ள போதிலும்
மேலும்...
அமெரிக்கா வெளியேற்றும் அகதிகளுக்கு நாம் ஆதரவு அளிப்போம்: கனேடிய பிரதமர்
[ Saturday,5 November 2016, 10:06:20 ]
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் உத்தரவின் பெயரில் அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்படும் அகதிகளை கனடா ஆதரிக்கும் என கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ தெரிவிததுள்ளார்.
மேலும்...
சிறப்புச் செய்திகள்
அறிவித்தல்கள்
பெ திருமதி வேலுப்பிள்ளை மாரிமுத்து
பி யாழ். மிருசுவில்
வா யாழ். மிருசுவில்
தி 24-01-2017
பெ திருமதி தியாகராஜா மனோன்மணி
பி யாழ். வடமராட்சி கிழக்கு
வா யாழ். வடமராட்சி கிழக்கு
தி 23-01-2017
பெ திருமதி நேசமலர் காலிங்கராஜா
பி யாழ். இணுவில்
வா லண்டன்
தி 22-01-2017
பெ திரு சின்னத்துரை முருகேசு
பி யாழ். புத்தூர்
வா கனடா
தி 22-01-2017
பெ திருமதி சற்குணவதி தர்மராஜா (வனஜா)
பி கொழும்பு
வா நெதர்லாந்து Roermond
தி 21-01-2017
பெ திரு நாகேந்திரா நடராஜா
பி யாழ். உரும்பிராய்
வா கொழும்பு ரத்மலானை
தி 21-01-2017
பெ ஆறுமுகம் ரகுநாதன்
பி திருகோணமலை
வா திருகோணமலை
தி 19-01-2017
பெ திரு ஆறுமுகம் பசுபதிபிள்ளை
பி யாழ். புங்குடுதீவு
வா பிரான்ஸ்
தி 20-01-2017