Flash News
செய்திகள்
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்றுவதற்கு ஆர்வம் : கனேடிய பிரதமர்
[ Thursday,10 November 2016, 13:29:13 ]   

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்புடன் இணைந்து பணியாற்றுவதற்கு ஆர்வத்துடன் எதிர்பார்த்திருப்பதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.

கனாடாவில் நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடல் நிகழ்வொன்றின் போதே அவர் இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

சர்வதேச தலைவர்களில் பலர் ஜனநாயகக்கட்சி வேட்பாளரான ஹிலரி கிளிண்டனுக்கே தமது ஆதரவுகளை வழங்கியிருந்தனர்.

இந்நிலையில் கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி ட்ரம்ப் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதனால் அவர்கள் ட்ரம்பிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் கனேடிய பிரதமரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்ததோடு ட்ரம்புடன் இணைந்து பணிகளை முன்னெடுப்பதற்கு தயாராக உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

குறித்த கலந்துரையாடலில் தொடர்ந்து உரையாற்றிய அவர், ட்ரம்ப் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் வெற்றிபெற்றுள்ளார் எனவும் அவரின் வெற்றி ஒட்டு மொத்த சர்வ தேசத்தையும் ஒரு கணம் அதிர்ச்சியடைய வைத்தது எனவும் தெரிவித்திருந்தார்.

அத்துடன் கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளின் உறவுகளை பலப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன் ட்ரம்ப் தலைமையிலான அரசாங்கம் தமது நாடுகளுடன் உறவுகளை வலுப்படுத்துவதற்கு முன்னிற்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.


செய்தி சேவை
ரொரன்டோ உட்பட ஒன்றாரியோவின் தென்பிராந்தியங்களில் உறைபனி மழை
[ Thursday,10 November 2016, 13:29:13 ]
கனடாவின் ரொரன்டோ உட்பட ஒன்றாரியோவின் தென்பிராந்தியங்களில் உறைபனி மழை பெய்யும் என கனேடிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும்...
மது போதையில் விமானத்தை செலுத்த முற்பட்ட விமானி கைது
[ Thursday,10 November 2016, 13:29:13 ]
கனடாவில் மது போதையில் பயணிகள் விமானமொன்றை செலுத்த முற்பட்ட விமானியொருவர் அந்த நாட்டு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.கனடாவின் கல்கரியில் இருந்து மெக்சிக்கோ நோக்கி பயணிக்க இருந்த சலுகை அடிப்படையிலான சன்விங் என்ற
மேலும்...
கனடா பொலிஸ் உயர் அதிகாரி மீதுபாலியல் குற்றச்சாட்டு
[ Thursday,10 November 2016, 13:29:13 ]
கனடா வன்கூவர் நகரில் கடமையாற்றும் பொலிஸ் உயர் அதிகாரி மீது பாலியல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
மேலும்...
கனடா - ரொறன்ரோ பகுதியில் தொடர் பனிப்பொழிவு; மக்களின் இயல்புவாழ்க்கை பாதிப்பு
[ Thursday,10 November 2016, 13:29:13 ]
கனடா - ரொறன்ரோ நகரில் எதிர்பார்க்கப்பட்டதை விட பனிப்பொழிவு அதிகமாக காணப்படுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும்...
நெடுஞ்சாலைகளுக்கான கட்டண அதிகரிப்பிற்கான தீர்மானத்தினை நிராகரிக்குமாறு கோரிக்கை
[ Thursday,10 November 2016, 13:29:13 ]
கனடா ஒன்றாரியோ ஆளுநரினால் முன்வைக்கப்பட்ட நெடுஞ்சாலைகளுக்கான கட்டண அதிகரிப்பிற்கான தீர்மானத்தினை நிராகரிக்குமாறு புரோசொவிஸ் கன்சர்வேட்டிவ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும்...
ஒன்ராரியோவில் கத்திக்குத்து தாக்குதல் : சந்தேக நபரை தேடும் பொலிசார்
[ Thursday,10 November 2016, 13:29:13 ]
கனடாவின் ஒன்ராரியோ மாநிலத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் நபரொருவர் படுகாயமடைந்துள்ளார்.
மேலும்...
சிறப்புச் செய்திகள்
அறிவித்தல்கள்
பெ திருமதி சந்திரசேகரம்பிள்ளை திருபுரிநாகேஸ்வரி அம்மா
பி யாழ். வட்டுக்கோட்டை
வா திருகோணமலை
தி 04-01-2017
பெ திருமதி பத்மினிதேவி பத்மநாபபிள்ளை
பி யாழ். கோண்டாவில்
வா அவுஸ்திரேலியா sydney
தி 04-01-2017
பெ திருமதி சரஸ்வதி கணேஸ்(மம்மி)
பி யாழ். சரசாலை
வா லண்டன்
தி 03-01-2017
பெ திரு சீமாம்பிள்ளை மரியநாயகம்
பி மன்னார் ஒலிமடு நானாட்டான்
வா மன்னார் ஒலிமடு நானாட்டான்
தி 02-01-2017
பெ திருமதி மங்களேஸ்வரி மேனன்
பி யாழ். சங்குவேலி
வா லண்டன்
தி 02-01-2017
பெ திருமதி இராஜேஸ்வரி சிறிஸ்கந்தராஜா(கெங்கா)
பி யாழ். நீராவியடி
வா ஜெர்மனி Kaufbeuren
தி 01-01-2017
பெ திரு கோவிந்தர் சோமசுந்தரம்
பி கிளிநொச்சி பூநகரி
வா கிளிநொச்சி பூநகரி
தி 26-12-2016
பெ திரு பாலசுப்பிரமணியம் அதீஸ்
பி கனடா
வா கனடா
தி 26-12-2016