Flash News
செய்திகள்
கனடா மாணவர் கடனை மீள செலுத்துவதற்கான கால எல்லை நீடிப்பு
[ Monday,14 November 2016, 07:36:04 ]   

வருடாந்தம் குறைந்தது 25000 டொலர்களை வருமானமாகப் பெறும்வரை கனேடிய மாணவர்கள் பெற்றுள்ள கனடா மாணவர் கடனை மீள செலுத்த தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறை இம்மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ளதாக மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.

இரண்டாம் நிலை பட்டதாரிகள், அவர்களது மாணவர் கடன்களை சமாளிப்பதற்கான புதிய நடவடிக்கைகள் தொடர்பாக மத்திய அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பிலேயே இந்தவிடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர்களது வருமானம் மற்றும் குடும்ப அளவு போன்றனவற்றை அடிப்படையாகக் கொண்டு, தமது கடனைச் சாமளிக்க மாணவர்கள் உதவியை நாடலாம் எனவும் கூறப்படுகின்றது.

அதுமாத்திரமன்றி கடன் பெறுபவர்கள் மாதாந்த கடன் தொகையை குறைக்க அல்லது முற்றாக நீக்க விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அமைச்சர் மேரிஆன் மைகிசக்,

கனடாவின் எதிர்கால வளமானது, வேலை சந்தையில் இளம் கனேடியர்கள் சிறந்த கல்வி மற்றும் பயிற்சிகளை பெறுவதில் தங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை குறித்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள மேலதிக விடயங்களாக,

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சார்ந்த முழு நேர மாணவர்கள் வருடமொன்றிற்கு 2000 - 3000 டொலர்கள் வரை ஆதரவு தொகை பெறலாம்.

நடுத்தர வருமானம் பெறும் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் 800 - 1200 டொலர்கள் வரையும் பகுதி நேர குறைந்த வருமான குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் 1200 - 1800 டொலர்கள் வரை நிதி உதவி பெறலாம்.

இதனை விட கனடா மாணவர் கிராண்ட் 50 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் குறித்த அறிவிப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

2013 – 2014 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 750000 மாணவர்கள் கனடா மாணவர் கடனை மீளச் செலுத்தும் உதவித் திட்டத்தினால் நன்மை பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

இதேவேளை கடன் சுமையால் அவதிப்படும் மாணவர்கள், தமக்கு எத்தகைய நிதி உதவி தெரிவுகள் கிடைக்கும் என்பதை தேசிய மாணவர் கடன் சேவை மையத்துடன் தொடர்பு கொண்டு அறிந்துகொள்ளலாம் எனவும் அந்த அறிவிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

செய்தி சேவை
மெக்சிக்கோ நாட்டவர்கள் அதிகளவில் கனடாவில் கைது
[ Monday,14 November 2016, 07:36:04 ]
கனடாவின் எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகளால் இவ்வாண்டின் முதல் 67 நாட்களும் அதிகளவான மெக்ஸ்கோ பிரஜைகள் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.மெக்சிக்கோ பிரஜைகளுக்கான விசா விதிமுறைகளில் கனேடிய அரசாங்கம்
மேலும்...
ஒன்றாரியோவில் சங்கிலி தொடர்விபத்து: ஒருவர் பலி, 28 பேர் காயம்
[ Monday,14 November 2016, 07:36:04 ]
ஒன்றாரியோ நெடுஞ்சாலை 401 இல் இடம் பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 28 பேர் காயமடைந்துள்ளனர்.
மேலும்...
பிரிட்டிஷ் கொலம்பியாவில் குழாய் நீரை பயன்படுத்த வேண்டாம் : அரசு எச்சரிக்கை
[ Monday,14 November 2016, 07:36:04 ]
கனடா பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஒசோயூஸ் பகுதியில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் குழாய் நீரை பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும்...
ரொறான்ரோவை நோக்கி படையெடுக்கும் குடியேற்றவாசிகள்
[ Monday,14 November 2016, 07:36:04 ]
கனடாவில் குடியேறும் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை துரிதகதியில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும்...
அமெரிக்க ஜனாதிபதியை சந்திக்கவுள்ளார் கனேடிய பிரதமர்
[ Monday,14 November 2016, 07:36:04 ]
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை எதிர்வரும் திங்கட்கிழமை சந்திப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்...
கியுபெர்க் தாக்குதலில் உயிரிழந்த இருவரின் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு
[ Monday,14 November 2016, 07:36:04 ]
கனடாவின் கியுபெக் நகரில் அமைந்துள்ள இஸ்லாமிய கலாசார மையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த இரு அல்ஜீரியாவைச் சேர்ந்தவர்களின் உடல்கள் அவர்களின் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
மேலும்...
சிறப்புச் செய்திகள்
அறிவித்தல்கள்
பெ திருமதி அபிதகுசலாம்பிகை தியாகேந்திரன்
பி யாழ். பருத்தித்துறை
வா யாழ். பருத்தித்துறை
தி 28-02-2017
பெ திரு சூசைப்பிள்ளை கிளமென்ற் பெர்னான்டோபிள்ளை
பி யாழ். ஊர்காவற்துறை
வா யாழ். ஊர்காவற்துறை
தி 27-02-2017
பெ திருமதி குமாரவேலு நாகம்மா
பி யாழ். நெடுந்தீவு
வா யாழ். நெடுந்தீவு
தி 26-02-2017
பெ திரு சிவசுப்பிரமணியம் சிவகணேசன்
பி யாழ். ஏழாலை
வா யாழ். ஏழாலை
தி 26-02-2017
பெ செல்வி சுகண்யா சிவஞானம்
பி புத்தளம் முந்தல்
வா லண்டன் Kingston
தி 25-02-2017
பெ திருமதி வைரமுத்து சிகாமணி
பி யாழ். அளவெட்டி
வா நெதர்லாந்து
தி 25-02-2017
பெ Dr. வயித்திலிங்கம் பாலசேகரம்
பி யாழ். கரம்பன்
வா பிரித்தானியா Ilford
தி 25-02-2017
பெ திருமதி மரியாம்பிள்ளை கனகம்மா
பி யாழ். நீர்வேலி
வா யாழ். சாவகச்சேரி
தி 24-02-2017