Flash News
செய்திகள்
பிரித்தானியாவைச் சேர்ந்த விண்வெளி வீரர் அமெரிக்காவில் காலமானார்
[ Saturday,24 December 2016, 13:32:57 ]   

பிரித்தானியாவைச் சேர்ந்த, நாசாவின் முன்னாள் விண்வெளி வீரரும் சிறந்த காலநிலை விஞ்ஞானியுமான பியர்ஸ் செல்லர்ஸ் தனது 61 ஆவது வயதில் உடல் நலக்குறைவினால் உயிரிழந்துள்ளார்.

 

பியர்ஸ் கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் நேற்றையதினம் தினம் ஹுஸ்டன் நகரில் உயிரிழந்துள்ளார் எனவும் நாசா அறிவித்துள்ளது.

 

பிரித்தானியாவின் கிழக்கு சசெக்ஸ் பகுதியில் பிறந்த பியர்ஸ், 1982 ஆம் ஆண்டு அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவில் பணியாற்றி பின்னர் 1996 ஆம் தொடக்கம் விண்வெளி வீரர் பயிற்சிக் குழுவில் இணைந்தார்.

 

கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு 3 விண்வெளி பயணங்களை மேற்கொண்டிருந்தார்.

 

பிரித்தானியாவில் பிறந்தவரான பியர்ஸ் விண்வெளி ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்காக 1991ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவின் குடியுரிமையை பெற்றார்.

 

கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பியர்ஸ் இந்த ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்காவின் பிரபலமான பத்திரிகையான நியூயோர்க் டைம்ஸில் கட்டுரைகள் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இவருடைய மறைவு குறித்து நாசா வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக் குறிப்பில், கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் பியர்ஸ் கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதாகவும், அவரின் நோய்த்தாக்கம் அதிகரித்து 4ஆம் நிலையை அடைந்த நிலையில் உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



செய்தி சேவை
பிரக்சிற் உடன்படிக்கை தொடர்பில் விளக்கமளிக்கவுள்ள பிரித்தானியா பிரதமர் தெரேசா மெ
[ Saturday,24 December 2016, 13:32:57 ]
பிரக்சிற் உடன்படிக்கை தொடர்பான திட்டங்கள் குறித்து எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பிரித்தானியா பிரதமர் தெரேசா மெ விளக்கம் அளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்...
பிரித்தானியாவின் கிழக்கு கடற்கரையை தாக்கவிருந்த வெள்ளப்பெருக்கு அபாயம் நீங்கியது
[ Saturday,24 December 2016, 13:32:57 ]
பிரித்தானியாவின் கிழக்கு கடற்கரையை தாக்கவிருந்த வெள்ளப்பெருக்கு அபாயம் தற்போது நீங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்...
வடக்கு அயர்லாந்தில் தொடர் பனி பொழிவு: தரை மற்றும் புகையிரத போக்குவரத்துக்கள் பாதிப்பு
[ Saturday,24 December 2016, 13:32:57 ]
வடக்கு அயர்லாந்தில் ஏற்பட்டுள்ள தொடர் பனி பொழிவினால் தரை மற்றும் புகையிரத போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும்...
சத்தேர்ன் புகையிரத சாரதிகள் 3 ஆவது நாளாக இன்றும் வேலை நிறுத்தம்
[ Saturday,24 December 2016, 13:32:57 ]
பிரித்தானியாவில் சத்தேர்ன் புகையிரத சாரதிகள் இந்த வாரத்தில் 3 ஆவது நாளாக இன்றும் வேலை நிறுத்தத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும்...
பிரித்தானியாவில் கடுமையான பனியுடன் கூடிய குளிர்காலநிலை ஏற்படலாம் என எச்சரிக்கை
[ Saturday,24 December 2016, 13:32:57 ]
பிரித்தானியாவில் பல இடங்களில் பனியுடன் கூடிய குளிர் காலநிலை ஏற்படக்கூடும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும்...
லண்டன் நிலக்கீழ் தொடரூந்து வேலைநிறுத்தம்: பயணிகள் பெரும் அவஸ்தை
[ Saturday,24 December 2016, 13:32:57 ]
லண்டன் நிலக்கீழ் தொடரூந்து வேலைநிறுத்தம்: பயணிகள் பெரும் அவஸ்தை
மேலும்...
சிறப்புச் செய்திகள்
அறிவித்தல்கள்
பெ திருமதி சந்திரசேகரம்பிள்ளை திருபுரிநாகேஸ்வரி அம்மா
பி யாழ். வட்டுக்கோட்டை
வா திருகோணமலை
தி 04-01-2017
பெ திருமதி பத்மினிதேவி பத்மநாபபிள்ளை
பி யாழ். கோண்டாவில்
வா அவுஸ்திரேலியா sydney
தி 04-01-2017
பெ திருமதி சரஸ்வதி கணேஸ்(மம்மி)
பி யாழ். சரசாலை
வா லண்டன்
தி 03-01-2017
பெ திரு சீமாம்பிள்ளை மரியநாயகம்
பி மன்னார் ஒலிமடு நானாட்டான்
வா மன்னார் ஒலிமடு நானாட்டான்
தி 02-01-2017
பெ திருமதி மங்களேஸ்வரி மேனன்
பி யாழ். சங்குவேலி
வா லண்டன்
தி 02-01-2017
பெ திருமதி இராஜேஸ்வரி சிறிஸ்கந்தராஜா(கெங்கா)
பி யாழ். நீராவியடி
வா ஜெர்மனி Kaufbeuren
தி 01-01-2017
பெ திரு கோவிந்தர் சோமசுந்தரம்
பி கிளிநொச்சி பூநகரி
வா கிளிநொச்சி பூநகரி
தி 26-12-2016
பெ திரு பாலசுப்பிரமணியம் அதீஸ்
பி கனடா
வா கனடா
தி 26-12-2016