Flash News
செய்திகள்
அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு எதிராக அரசிற்குள்ளேயே சதி:விக்ரமபாகு
[ Saturday,31 December 2016, 08:53:57 ]   

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் முயற்சித்து வருகின்ற நிலையில் அதனை தவிடுபொடியாக்குவதற்கு அரசாங்கத்திற்குள்ளேயே சில பிரிவினர் முயற்சி செய்துவருவதாக நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

இந்தக் குழப்பகரமான சூழ்நிலையை சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொண்டு அதிகாரத்தை காண்பித்து ஆட்சியைக் கைப்பற்றிக்கொள்ளும் முயற்சியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கங்கனம் கட்டிக்கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.


இனவாதத்தை தோற்கடிப்போம் ஜனநாயகத்தை வலுப்படுத்துவோம் என்ற தொனிப்பொருளில் நவ சமசமாஜக் கட்சியின் 39ஆவது நிறைவாண்டு நிகழ்வு நேற்றைய தினம் கொழும்பு புதிய நகர மண்டபத்தில் நடைபெற்றது.

கட்சித் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கட்சி உறுப்பினர்களான அருட்தந்தை சத்திவேல், திருநாவுக்கரசு, சுந்தரம் மகேந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

அங்கு உரையாற்றிய விக்கிரமபாகு கருணாரத்ன “ஜனநாயகவாத அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில் அதனை தடுப்பதற்கான முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசாங்கத்திற்குள் இருக்கின்ற பிரிவினரும் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். சிலர் கொண்டுவருகின்ற யோசனைகளும் பிழையானதாகவே உள்ளன. அதனை தடுப்பதற்கு இதர தரப்பினரின் உதவிகளும் பெறப்பட்டு அதற்கெதிராக போராடவேண்டும். புதிய அரசியலமைப்பு உருவாக்கி நீதித்துறையை வலுப்படுத்த வேண்டும். அபிவிருத்தி தொடர்பில் அதிகாரமுடைய குழு அல்லது நபரை நியமிக்கும் யோசனை ஒன்றை ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் முன்வைக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பு ஒன்றை உருவாக்காமல் அபிவிருத்தியை வலுப்பெறச் செய்யும் யோசனை கொண்டுவருவது எதற்காக என்ற கேள்வி சமூகத்தில் எழுந்துள்ளது. இதற்கான காரணமும் விளங்கவில்லை. ஜனநாயக ரீதியில் அரசியலமைப்பை வலுப்பெறச் செய்யாமல் அபிவிருத்திப் பயணத் தீர்மானங்களை மேற்கொள்வது முட்டாள்தனமானது. 2020ஆம் ஆண்டில் மீண்டும் ஆட்சிக்கு வருவேன் என மஹிந்த ராஜபக்ச கூறுகின்றார். அது வெறும் கனவுதான் என நான் கூறுகின்றேன். எனினும் அவர் வெறுமனே அதனை கூறவில்லை. அதிகாரத்தைக் கூறி ஆட்சியைப் பெறவே முயற்சிக்கின்றார். மற்றவர்களிடையே அதிகாரப்போட்டி இருந்தால் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆட்சிக்கு வருபவரை சுற்றிலும் மக்கள் திரண்டுகொள்வார்கள்” - என்றார்.செய்தி சேவை
கடற்படையின் படகு மோதி விடத்தல்தீவில் மீனவர் பலி
[ Saturday,31 December 2016, 08:53:57 ]
மன்னார் விடத்தல்தீவு கடற்பகுதியில் ஸ்ரீலங்கா கடற்படையினரின் படகு மோதி மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இரு கடற்படையினரும் அடம்பன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்...
ஸ்ரீலங்கா தொடர்பிலான தீரமானம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்
[ Saturday,31 December 2016, 08:53:57 ]
ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு ஐ.நா தீர்மானங்களை அமுல்படுத்துவதற்காக மேலும் கால அவகாசம் வழங்கும் தீர்மானம் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும்...
கூலிப்படையை பாவித்து 551 பேரை கோட்டாவே கொன்றார்:மனோ அதிரடி சாட்சியம்
[ Saturday,31 December 2016, 08:53:57 ]
கொழும்பு நகரிலும், அதன் புறநகரங்களிலும் தமிழ் இளைஞர்கள் உட்பட 551 பேர் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவினால் கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாக தேசிய கலந்துரையாடல் மற்றும் நல்லிணக்க அமைச்சர் பகிரங்கமாக
மேலும்...
ஸ்ரீலங்கா தொடர்பான மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை மீதான விவாதம் இன்று
[ Saturday,31 December 2016, 08:53:57 ]
ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசைன் ஸ்ரீலங்கா தொடர்பாக அண்மையில் வெளியிட்ட அறிக்கை தொடர்பான விவாதம் இன்றைய தினம் மனித உரிமை பேரவையில் நடைபெறவுள்ளது.
மேலும்...
கலப்பு நீதிமன்றம், வெளிநாட்டு நீதிபதிகள் கோரிக்கைக்கு இணங்கவில்லை ;ரணில்
[ Saturday,31 December 2016, 08:53:57 ]
கலப்பு நீதிமன்றத்தை அமைப்பதற்கோ அல்லது வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்பை பெற்றுக்கொள்வதாகவோ ஐ.நா மனித உரிமைகள் பேரவையிடம் ஒருபோதும் ஒத்துக்கொள்ளவில்லை என்று ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அடித்துக் கூறியுள்
மேலும்...
போரில் 150,000 மக்கள் கொல்லப்பட்டனர்;இரா சம்பந்தன் இந்தியாவில் தெரிவிப்பு
[ Saturday,31 December 2016, 08:53:57 ]
வன்னியில் இடம்பெற்ற மூன்றுதசாப்தகால போரில் 150,000 இற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
மேலும்...
சிறப்புச் செய்திகள்
அறிவித்தல்கள்
பெ திருமதி அபிதகுசலாம்பிகை தியாகேந்திரன்
பி யாழ். பருத்தித்துறை
வா யாழ். பருத்தித்துறை
தி 28-02-2017
பெ திரு சூசைப்பிள்ளை கிளமென்ற் பெர்னான்டோபிள்ளை
பி யாழ். ஊர்காவற்துறை
வா யாழ். ஊர்காவற்துறை
தி 27-02-2017
பெ திருமதி குமாரவேலு நாகம்மா
பி யாழ். நெடுந்தீவு
வா யாழ். நெடுந்தீவு
தி 26-02-2017
பெ திரு சிவசுப்பிரமணியம் சிவகணேசன்
பி யாழ். ஏழாலை
வா யாழ். ஏழாலை
தி 26-02-2017
பெ செல்வி சுகண்யா சிவஞானம்
பி புத்தளம் முந்தல்
வா லண்டன் Kingston
தி 25-02-2017
பெ திருமதி வைரமுத்து சிகாமணி
பி யாழ். அளவெட்டி
வா நெதர்லாந்து
தி 25-02-2017
பெ Dr. வயித்திலிங்கம் பாலசேகரம்
பி யாழ். கரம்பன்
வா பிரித்தானியா Ilford
தி 25-02-2017
பெ திருமதி மரியாம்பிள்ளை கனகம்மா
பி யாழ். நீர்வேலி
வா யாழ். சாவகச்சேரி
தி 24-02-2017