Flash News
செய்திகள்
புதிய அரசியலமைப்பு முன்மொழிவு நாட்டை துண்டாடும் ஆவணமல்ல :ஜனாதிபதி
[ Sunday,1 January 2017, 05:09:44 ]   

முன்மொழியப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பு நாட்டைத் துண்டாடும் ஆவணம் அல்லவென அஸ்கிரி மகாநாயக்க தேரர் முன்னிலையில் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

முன்மொழியப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பு வரைபில் நாட்டுக்குத் தீமையான எந்தவொரு அம்சமும் உள்ளடக்கப்படவில்லை எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

            

முன்மொழியப்பட்டுள்ள புதிய அரசியலமைப்புக்கு எதிராக சிலர் எத்தகைய கருத்துக்களை முன்வைத்தாலும், அதில் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு அல்லது புத்த சாசனத்திற்கு பாதிப்பான எந்தவொரு அம்சமும் கிடையாது என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தகையதொரு நடவடிக்கைக்கு தனது பதவிக் காலத்தில் இடமளிக்கப்படமாட்டாது என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதி அளித்துள்ளார்.

பிறக்கவிருக்கும் புத்தாண்டை முன்னிட்டு வரலாற்று சிறப்புமிக்க கண்டி தலதா மாளிகைக்கு நேற்று விஜயம் செய்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, அஸ்கிரி மகாநாயக்க தேரர் சங்கைக்குரிய வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரரை சந்தித்து அவரது சுக துக்கங்களைக் கேட்ட பின்னர் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மகா சங்கத்தினரின் ஆசிர்வாதமின்றி புதிய அரசியலமைப்பை வரைவதற்குத் தாம் தயாராக இல்லை எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, புதிய அரசியலமைப்பு ஒருபோதும் தனிப்பட்ட கருத்தின் அடிப்படையில் தயாரிக்கப்படும் ஒரு ஆவணமாகவன்றி மக்கள் பிரதிநிதிகள், கல்விமான்கள் , பொது மக்களின் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளைக் கருத்திற் கொண்டே தயாரிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

புதிய அரசியலமைப்பைத் தயாரிக்கும் போது மக்களின் கருத்துக்களை கேட்டறிய அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் தொடர்பில் மக்கள் சரியான முறையில் அறிந்திருக்கவில்லை என இதன்போது மகாநாயக்க தேரர் ஜனாதிபதியிடம் தெரிவித்தார்.

புதிய அரசியலமைப்பு தொடர்பாக பொது மக்களின் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளை முன்வைப்பதற்கு மீண்டும் சந்தர்ப்பத்தை பெற்றுக்கொடுப்பதாக ஜனாதிபதி இதன்போது உறுதி அளித்தார்.

செய்தி சேவை
கிளிநொச்சி திருவையாற்றில் முன்னாள் போராளி ஒருவர் கைது
[ Sunday,1 January 2017, 05:09:44 ]
கிளிநொச்சி திருவையாறு பகுதியைச் சேர்ந்த முன்னாள் பேராளியான இளைஞர் ஒருவர் நேற்றிரவு கைதுசெய்யப்பட்டுள்ளார். வாகனத்தில் வந்தவர்கள் மூவர் தம்மை வவுனியா பொலிஸார் என அடையாளப்படுத்தி, குறித்த இளைஞரை
மேலும்...
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளார் ; டெனிஸ்வரன்
[ Sunday,1 January 2017, 05:09:44 ]
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் உள்ளதாக வடமாகாண மீன்பிடி அமைச்சர் ப.டெனிஸ்வரன் தெரிவித்தார். தமிழ் மக்களுக்கான அடிப்படை உரிமை கிடைக்கும் போது தமிழீழ விடுதலைப் புலிக
மேலும்...
27 வருடங்களின் பின்னர் சொந்த ஊர் திரும்பிய மக்கள்
[ Sunday,1 January 2017, 05:09:44 ]
யாழ்ப்பாணம் வலிகாமம், வடக்கு ஊறணி படகுத்துறை மற்றும் சுமார் 400 மீற்றர் நீளமான கரையோர பகுதியும், தரையில் 2 ஏக்கர் நிலமும் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு அமைய தையிட்டி பிரதேசத்திலும் காங்கேசன்
மேலும்...
ஐ.பி.சி இசை நாளை முதல்
[ Sunday,1 January 2017, 05:09:44 ]
உலகம் முழுவதும் பரந்துவாழும் தமிழர்கள் தைப்பொங்கல் திருநாளை நாளைய தினம் கொண்டாடவுள்ள நிலையில், ஐ.பி.சி தமிழ் உலகத் தமிழர்களுக்காக புதிய தொலைக்காட்சி அலைவரிசையொன்றை ஆரம்பிக்கவுள்ளது.
மேலும்...
ஊரணி பிரதேசம் மக்கள் பாவனைக்காக நாளை கையளிப்பு
[ Sunday,1 January 2017, 05:09:44 ]
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள சில பிரதேசங்கள் மக்களின் பாவனைக்காக கையளிக்கப்படவுள்ளன. வலிகாமம்.வடக்கு ஊறணி படகுத்துறை மற்றும் அதனோடு இணைந்த சுமார் 300 தொடக்கம் 400 மீற்றர்
மேலும்...
சர்வதேச நீதிபதிகளின் பங்கு குறித்து அரசிற்குள்ளேயே முரண்பாடுகள்: லண்டனில் மங்கள சமரவீர
[ Sunday,1 January 2017, 05:09:44 ]
சர்வதேச நீதிபதிகளின் பங்கு குறித்து அரசிற்குள்ளேயே முரண்பாடுகள்: லண்டனில் மங்கள சமரவீர
மேலும்...
சிறப்புச் செய்திகள்
அறிவித்தல்கள்
பெ திருமதி சந்திரசேகரம்பிள்ளை திருபுரிநாகேஸ்வரி அம்மா
பி யாழ். வட்டுக்கோட்டை
வா திருகோணமலை
தி 04-01-2017
பெ திருமதி பத்மினிதேவி பத்மநாபபிள்ளை
பி யாழ். கோண்டாவில்
வா அவுஸ்திரேலியா sydney
தி 04-01-2017
பெ திருமதி சரஸ்வதி கணேஸ்(மம்மி)
பி யாழ். சரசாலை
வா லண்டன்
தி 03-01-2017
பெ திரு சீமாம்பிள்ளை மரியநாயகம்
பி மன்னார் ஒலிமடு நானாட்டான்
வா மன்னார் ஒலிமடு நானாட்டான்
தி 02-01-2017
பெ திருமதி மங்களேஸ்வரி மேனன்
பி யாழ். சங்குவேலி
வா லண்டன்
தி 02-01-2017
பெ திருமதி இராஜேஸ்வரி சிறிஸ்கந்தராஜா(கெங்கா)
பி யாழ். நீராவியடி
வா ஜெர்மனி Kaufbeuren
தி 01-01-2017
பெ திரு கோவிந்தர் சோமசுந்தரம்
பி கிளிநொச்சி பூநகரி
வா கிளிநொச்சி பூநகரி
தி 26-12-2016
பெ திரு பாலசுப்பிரமணியம் அதீஸ்
பி கனடா
வா கனடா
தி 26-12-2016