Flash News
செய்திகள்
பிரித்தானிய உடல்நிலையில் பிரச்சினையில்லை - இளவரசு ஆன்
[ Monday,2 January 2017, 10:46:54 ]   

பிரித்தானிய மகாராணியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவரது புதல்வியும் இளவரசியுமான ஆன் தெரிவித்துள்ளார்.

சன்ரிங்ஹேமில் நடைபெற்ற புதுவருட ஆராதனைகளில் மகாராணி கலந்துகொள்ளாத நிலையில் அவரின் உடல்நிலை குறித்து கேள்விகள் எழுந்திருந்தன.

இந்த நிலையில் தந்தையான இளவரசர் பிலிப், சகோதரரான இளவரசர் எட்வேட் மற்றும் அரச குடும்பத்தினருடன் புதுவருட ஆராதனைகளில் கலந்துகொண்ட பின்னர் தேவாலயத்திற்கு வெளியே நலன்விரும்பிகளிடம் இளவசரி ஆன் இந்த தகவலைத் தெரிவித்துள்ளார்.

மகாராணி, கடுமையான தடிமன் தொற்றில் இருந்து மீண்டு வருவதாக பெக்கிங்ஹேம் அரண்மனை தெரிவித்துள்ளது.

குளிர் மற்றும் மழை காலநிலையை கருத்தில் கொண்டு முன்எச்சரிக்கை நடவடிக்கையாக மகாராணி தேவாலய ஆராதனைகளில் பங்கேற்கவில்லை என கூறப்பட்டுள்ளது.

எனினும் ஆராதனைகளில் கலந்துகொள்ளாத காரணத்தால் அவரின் உடல்நிலை குறித்து கவலை கொள்ள வேண்டிய தேவையில்லை என அரண்மனைத் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

12 நாட்களுக்கு முன்னர் அறிக்கையொன்றை வெளியிட்ட பெக்கிங்ஹேம் அரண்மனை, மகாராணி மற்றும் எடின்பேர்க் இளவரசர் ஆகியோர் கடுமையான தடிமனால் பீடிக்கப்பட்டுள்ளதாகவும் சன்ரிங்ஹேமிற்கான பயணத்தை இரத்துச் செய்துள்ளதாகவும் அறிவித்திருந்தது.

எனினும் இளவரசர் பிலிப் அதன் பின்னர் முழுமையாக உடல்நிலை தேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பல வருடங்களுக்கு பின்னர் முதல் முறையாக நத்தார் தின ஆராதனைகளில் மகாராணி பங்கேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


செய்தி சேவை
பிரக்சிற் உடன்படிக்கை தொடர்பில் விளக்கமளிக்கவுள்ள பிரித்தானியா பிரதமர் தெரேசா மெ
[ Monday,2 January 2017, 10:46:54 ]
பிரக்சிற் உடன்படிக்கை தொடர்பான திட்டங்கள் குறித்து எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பிரித்தானியா பிரதமர் தெரேசா மெ விளக்கம் அளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்...
பிரித்தானியாவின் கிழக்கு கடற்கரையை தாக்கவிருந்த வெள்ளப்பெருக்கு அபாயம் நீங்கியது
[ Monday,2 January 2017, 10:46:54 ]
பிரித்தானியாவின் கிழக்கு கடற்கரையை தாக்கவிருந்த வெள்ளப்பெருக்கு அபாயம் தற்போது நீங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்...
வடக்கு அயர்லாந்தில் தொடர் பனி பொழிவு: தரை மற்றும் புகையிரத போக்குவரத்துக்கள் பாதிப்பு
[ Monday,2 January 2017, 10:46:54 ]
வடக்கு அயர்லாந்தில் ஏற்பட்டுள்ள தொடர் பனி பொழிவினால் தரை மற்றும் புகையிரத போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும்...
சத்தேர்ன் புகையிரத சாரதிகள் 3 ஆவது நாளாக இன்றும் வேலை நிறுத்தம்
[ Monday,2 January 2017, 10:46:54 ]
பிரித்தானியாவில் சத்தேர்ன் புகையிரத சாரதிகள் இந்த வாரத்தில் 3 ஆவது நாளாக இன்றும் வேலை நிறுத்தத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும்...
பிரித்தானியாவில் கடுமையான பனியுடன் கூடிய குளிர்காலநிலை ஏற்படலாம் என எச்சரிக்கை
[ Monday,2 January 2017, 10:46:54 ]
பிரித்தானியாவில் பல இடங்களில் பனியுடன் கூடிய குளிர் காலநிலை ஏற்படக்கூடும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும்...
லண்டன் நிலக்கீழ் தொடரூந்து வேலைநிறுத்தம்: பயணிகள் பெரும் அவஸ்தை
[ Monday,2 January 2017, 10:46:54 ]
லண்டன் நிலக்கீழ் தொடரூந்து வேலைநிறுத்தம்: பயணிகள் பெரும் அவஸ்தை
மேலும்...
சிறப்புச் செய்திகள்
அறிவித்தல்கள்
பெ திருமதி சந்திரசேகரம்பிள்ளை திருபுரிநாகேஸ்வரி அம்மா
பி யாழ். வட்டுக்கோட்டை
வா திருகோணமலை
தி 04-01-2017
பெ திருமதி பத்மினிதேவி பத்மநாபபிள்ளை
பி யாழ். கோண்டாவில்
வா அவுஸ்திரேலியா sydney
தி 04-01-2017
பெ திருமதி சரஸ்வதி கணேஸ்(மம்மி)
பி யாழ். சரசாலை
வா லண்டன்
தி 03-01-2017
பெ திரு சீமாம்பிள்ளை மரியநாயகம்
பி மன்னார் ஒலிமடு நானாட்டான்
வா மன்னார் ஒலிமடு நானாட்டான்
தி 02-01-2017
பெ திருமதி மங்களேஸ்வரி மேனன்
பி யாழ். சங்குவேலி
வா லண்டன்
தி 02-01-2017
பெ திருமதி இராஜேஸ்வரி சிறிஸ்கந்தராஜா(கெங்கா)
பி யாழ். நீராவியடி
வா ஜெர்மனி Kaufbeuren
தி 01-01-2017
பெ திரு கோவிந்தர் சோமசுந்தரம்
பி கிளிநொச்சி பூநகரி
வா கிளிநொச்சி பூநகரி
தி 26-12-2016
பெ திரு பாலசுப்பிரமணியம் அதீஸ்
பி கனடா
வா கனடா
தி 26-12-2016