Flash News
செய்திகள்
அவுஸ்திரேலியாவின் உதவிப் பயிற்றுவிப்பாராக பொண்டிங் நியமனம்
[ Monday,2 January 2017, 11:17:18 ]   

ஸ்ரீலங்காவிற்கு எதிரான சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளுக்கான அவுஸ்திரேலிய அணியின் உதவிப் பயிற்றுவிப்பாளராக முன்னாள் அணித் தலைவர் ரிக்கி பொண்டிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன்பிரகாரம் ஜெஸ்ரின் லாங்கர் மற்றும் ஜெசன் க்லஸ்பி ஆகியோருடன் இணைந்து அவுஸ்திரேலிய அணிக்காக ரிக்கி பொண்டிங் பணியாற்றவுள்ளார்.

இந்திய அணிக்கெதிரான நான்கு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடருக்கான ஒத்துழைப்பு பணியாளர்களாக குறித்த மூவரும் நியமிக்கப்பட்டிருந்தனர்.

அவுஸ்திரேலிய அணி தொடர்பான சர்வதேச பங்களிப்பை வழங்குவதற்கு தாம் தயாராக உள்ளதாக கடந்த நவம்பர் மாதம் ரிக்கி பொண்டிங் கூறியிருந்தார்.

அவுஸ்திரேலிய அணிக்கு பயிற்சி வழங்குவதற்கு அல்லது தேர்வாளராக செயற்படுவதற்கு பொண்டிங் விரும்பம் தெரிவித்திருந்த நிலையில், அவுஸ்திரேலிய அணியின் ஒத்துழைப்பு ஊழியராக அவர் இணைக்கப்பட்டுள்ளார்.

2012 ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் இருந்து ஒய்வுபெற்ற பின்னர் கிரிக்கெட் மற்றும் ஊடக ரீதியில் பல்வேறு பதவிகளை ரிக்கி பொண்டிங் வகித்திருந்தார்.

இறுதியாக கரீபியன் பிறிமியர் லீக் தொடரில் 2013 ஆம் ஆண்டு விளையாடியிருந்த ரிக்கி பொண்டிங், 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் ஐ.பி.எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்றுவிப்பாளராகவும் செயற்பட்டிருந்தார்.

அத்துடன் அவுஸ்திரேலியாவின் உள்ளுர் போட்டியான பிக் பாஸ் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் வர்ணணையாளராகவும் ரிக்கி பொண்டிங் பயணியாற்றிருந்தார்.

அவுஸ்திரேலிய மற்றும் ஸ்ரீலங்கா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட சர்வதேச 20 க்கு 20 கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.


செய்தி சேவை
இங்கிலாந்து அணி பீதி அடையும் என எதிர்பார்த்தேன்:விராட் கோஹ்லி
[ Monday,2 January 2017, 11:17:18 ]
இங்கிலாந்து அணி பீதி அடையும் என எதிர்பார்த்ததாக இந்திய அணித் தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.பூனேயில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் மூன்று விக்கெட்டுக்களால்
மேலும்...
ரோமானியாவின் டென்னிஸ் வீரரான டேனியல் கார்பனுக்கு ஆயுட்கால போட்டித்தடை
[ Monday,2 January 2017, 11:17:18 ]
ரோமானியாவின் பிரபல டென்னிஸ் வீரரான அலெக்ஸ்சான்ரு டேனியல் கார்பனுக்கு ஆயுட்கால போட்டித்தடை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் அறிவித்துள்ளது.
மேலும்...
தென்னாபிரிக்காவிற்கு எதிரான 3 டெஸ்டே் போட்டியில் வலுவிழந்த நிலையில் ஸ்ரீலங்கா அணி
[ Monday,2 January 2017, 11:17:18 ]
தென்னாபிரிக்காவிற்கு கிறிக்கற் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஸ்ரீலங்கா அணிக்கும் தென்னாபிரிக்க அணிக்கும் இடையிலான 3 ஆவது டெஸ்ட் கிரிக்கற் போட்டியில் ஸ்ரீலங்கா அணி 346 ஒட்டங்களினாலும் 6 விக்கட்களினாலும் பின்னிலையிலுள்ளத
மேலும்...
சிட்னி சர்வதேச டென்னிஸ் போட்டியின் இறுதி சுற்றுக்கு சானியா மிர்சா- பார்பரோ ஜோடி தகுதி
[ Monday,2 January 2017, 11:17:18 ]
அவுஸ்திரேலியாவில் சிட்னி நகரில் நடைபெற்று வரும் சர்வதேச டென்னிஸ் போட்டியில் பெண்களுக்கான இரட்டையர் பிரிவின் இறுதிப் போட்டிக்கு இந்தியாவின் சானியா மிர்சா - செக் குடியரசின் பார்பரோ ஸ்ரிகோவா ஜோடி தகுதி பெற்றுள்ளது.
மேலும்...
ஸ்ரீலங்கா அணிக்கெதிரான தொடரில் தென்னாபிரிக்க அணியில் அதிரடி மாற்றங்கள்
[ Monday,2 January 2017, 11:17:18 ]
ஸ்ரீலங்கா அணிக்கெதிரான 20 க்கு 20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள தென்னாபிரிக்க அணியில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
மேலும்...
மீண்டும் களமிறங்கவுள்ளார் மரியா ஷரபோவா
[ Monday,2 January 2017, 11:17:18 ]
ஊக்க மருந்து பாவனை தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் 15 மாத கால தடைவிதிக்கப்பட்ட ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை மரிய ஷரபோவாவின் தடைக்காலம் எதிர்வரும் ஏப்ரல் மாதத்துடன் முடிவடையவுள்ளது.
மேலும்...
சிறப்புச் செய்திகள்
அறிவித்தல்கள்
பெ திருமதி சந்திரசேகரம்பிள்ளை திருபுரிநாகேஸ்வரி அம்மா
பி யாழ். வட்டுக்கோட்டை
வா திருகோணமலை
தி 04-01-2017
பெ திருமதி பத்மினிதேவி பத்மநாபபிள்ளை
பி யாழ். கோண்டாவில்
வா அவுஸ்திரேலியா sydney
தி 04-01-2017
பெ திருமதி சரஸ்வதி கணேஸ்(மம்மி)
பி யாழ். சரசாலை
வா லண்டன்
தி 03-01-2017
பெ திரு சீமாம்பிள்ளை மரியநாயகம்
பி மன்னார் ஒலிமடு நானாட்டான்
வா மன்னார் ஒலிமடு நானாட்டான்
தி 02-01-2017
பெ திருமதி மங்களேஸ்வரி மேனன்
பி யாழ். சங்குவேலி
வா லண்டன்
தி 02-01-2017
பெ திருமதி இராஜேஸ்வரி சிறிஸ்கந்தராஜா(கெங்கா)
பி யாழ். நீராவியடி
வா ஜெர்மனி Kaufbeuren
தி 01-01-2017
பெ திரு கோவிந்தர் சோமசுந்தரம்
பி கிளிநொச்சி பூநகரி
வா கிளிநொச்சி பூநகரி
தி 26-12-2016
பெ திரு பாலசுப்பிரமணியம் அதீஸ்
பி கனடா
வா கனடா
தி 26-12-2016