Flash News
செய்திகள்
நல்லிணக்க பொறிமுறை குறித்த செயலணியின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு
[ Tuesday,3 January 2017, 02:48:25 ]   

நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தற்கென மக்களின் கருத்துக்களை கேட்டறிய அமைக்கப்பட்ட செயலணியின் இறுதி அறிக்கை இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டவுள்ளது.

கடந்த ஆண்டில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெறப்பட்ட மக்களின் கருத்துக்களை அடிப்படையாக கொண்டு நல்லிணக்க பொறிமுறை தொடர்பான இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

நல்லிணக்கப் பொறிமுறை குறித்த கலந்தாலோசனைச் செயலணியின் மக்கள் கருத்தறியும் குழு கடந்த ஜனவரி மாதம் 26 ஆம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்டது.

கலாநிதி மனோரி முத்தேட்டுகம தலைமையிலான குறித்த குழுவினர்  நாடு முழுவதும் மக்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தனர்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள், போர்க்குற்ற விசாரணை தொடர்பில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என்றும், சர்வதேச விசாரணையே நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தனர்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட அமர்வுகளில் வழங்கப்பட்ட மக்கள் கருத்துக்களைத் தொகுத்து அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதுடன்,  அதில் பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

போர்க்குற்ற விசாரணைக்கு சர்வதேச விசாரணையே தேவை என்ற பரிந்துரையும் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த அறிக்கை இன்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேரில் கையளிக்கப்படவுள்ளதாக நல்லிணக்கப் பொறிமுறை குறித்த செயலணியின் பொதுச் செயலாளரும் மக்கள் கருத்தறியும் குழுவின் பணிப்பாளருமான பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்தார்.

இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, போர்க்குற்ற விசாரணையில் சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்குவதற்கு எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றமை நினைவில்கொள்ளத்தக்கது.

உண்மை மற்றும் நீதியைக் கண்டறிதல், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தல், அதற்கான இழப்பீடுகளை பெறுவதற்கு வழிவகைசெய்தல் போன்ற இலங்கையின் நல்லிணக்கப் பொறிமுறைகள் மற்றும் வழிவகைககள் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்வதற்காக நல்லிணக்கப்பொறிமுறைகள் குறித்த கலந்தாலோசனைச் செயலணி அமைக்கப்பட்டிருந்தது.

இந்த நோக்கங்களை அடைவதற்காக  1) காணமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம்  2) உண்மை, நீதி, நல்லிணக்கம் மற்றும் மீள நிகழாமைக்கான ஆணைக்குழு 3) விசேட நீதிமன்றத்தை உள்ளடக்கிய நீதிமன்ற பொறிமுறை 4) இழப்பீட்டிற்கான அலுவலகம் ஆகியவற்றை அமைக்க உத்தேசித்துள்ளதாக அரசாங்கம் ஏற்கனவே தகவல் வெளியிட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.


செய்தி சேவை
சவேந்திர சில்வாவுக்கு அழைப்பாணை; அடுத்தமாதம் தீர்ப்பை அறிவிக்கும் நீதிமன்றம்
[ Tuesday,3 January 2017, 02:48:25 ]
வன்னி இறுதிக்கட்ட போரில் சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பிலான வழக்கில் 58ஆவது படைப் பிரிவின் கட்டளைத் தளபதியாக செயற்பட்ட மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு அழைப்பாணை விடுப்பதா, இல்லையா என்பது குறித்த தீர்மானத்தை
மேலும்...
புறக்கோட்டை குண்டுத் தாக்குதல் : குற்றவாளிக்கு 20 வருட சிறை
[ Tuesday,3 January 2017, 02:48:25 ]
புறக்கோட்டை புகையிரத நிலையத்தில் 2008 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த நபருக்கு 20 வருட கடுழீய சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேலும்...
ஸ்ரீலங்கா பிரஜைகளுக்கான அடிப்படை சம்பள அறிவிப்பு விரைவில்
[ Tuesday,3 January 2017, 02:48:25 ]
ஸ்ரீலங்கா பிரஜை ஒவ்வொருவரும் மாதாந்தம் பெற வேண்டிய ஆகக்குறைந்த அடிப்படைச் சம்பளம் தொடர்பிலான அறிவிப்பை பிரதமர் விரைவில் முன்வைப்பாரென ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்
மேலும்...
போரின் போது ஆங்காங்கே குற்றங்கள் இடம்பெற்றது உண்மையே : கோட்டா
[ Tuesday,3 January 2017, 02:48:25 ]
போரின் போது, அங்காங்கே சில குற்றச்செயல்கள் இடம்பெற்றன என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச ஏற்றுக் கொண்டுள்ளார்.சிறிலங்காவின் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது
மேலும்...
புதிய அரசியலமைப்புக்கு மக்களின் அங்கீகாரம் அவசியம்
[ Tuesday,3 January 2017, 02:48:25 ]
அரசியலமைப்பிலுள்ள 13 ஆவது திருத்த சட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தி அனைத்து இன மக்களும் பயனடையும் பொருட்டு புதிய அரசியல் சாசனத்தை அமைப்பது குறித்து முன்னெடுப்புக்கள் இடம்பெற்று வருகின்றன.
மேலும்...
இராணுவ வீரர்களை சட்டத்தின் முன்நிறுத்த போவதில்லை
[ Tuesday,3 January 2017, 02:48:25 ]
பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டை பாதுகாத்த இராணுவ வீரர்களை சட்டத்தின் முன் நிறுத்தப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
மேலும்...
சிறப்புச் செய்திகள்
அறிவித்தல்கள்
பெ திருமதி அபிதகுசலாம்பிகை தியாகேந்திரன்
பி யாழ். பருத்தித்துறை
வா யாழ். பருத்தித்துறை
தி 28-02-2017
பெ திரு சூசைப்பிள்ளை கிளமென்ற் பெர்னான்டோபிள்ளை
பி யாழ். ஊர்காவற்துறை
வா யாழ். ஊர்காவற்துறை
தி 27-02-2017
பெ திருமதி குமாரவேலு நாகம்மா
பி யாழ். நெடுந்தீவு
வா யாழ். நெடுந்தீவு
தி 26-02-2017
பெ திரு சிவசுப்பிரமணியம் சிவகணேசன்
பி யாழ். ஏழாலை
வா யாழ். ஏழாலை
தி 26-02-2017
பெ செல்வி சுகண்யா சிவஞானம்
பி புத்தளம் முந்தல்
வா லண்டன் Kingston
தி 25-02-2017
பெ திருமதி வைரமுத்து சிகாமணி
பி யாழ். அளவெட்டி
வா நெதர்லாந்து
தி 25-02-2017
பெ Dr. வயித்திலிங்கம் பாலசேகரம்
பி யாழ். கரம்பன்
வா பிரித்தானியா Ilford
தி 25-02-2017
பெ திருமதி மரியாம்பிள்ளை கனகம்மா
பி யாழ். நீர்வேலி
வா யாழ். சாவகச்சேரி
தி 24-02-2017