Flash News
செய்திகள்
(2ம் இணைப்பு)
இறுதியுத்தத்தில் காணாமல் போனோர் தொடர்பில் எதுவும் தெரியாது; சாணக்க
[ Tuesday,3 January 2017, 04:21:35 ]   

நீதிமன்றக்கட்டளையும் மீறி பொய்யான ஆதாரங்களை சமர்ப்பித்த ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சாணக்க குணவர்த்தன தற்போது இறுதி யுத்தத்தில் வடக்கு கிழக்கில் காணமல்போனோர் தொடர்பில் எதுவும் தெரியாது என தெரிவித்துள்ளார்.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போகச்செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன் எனப்படும் சின்னத்துரை சசிதரன் உள்ளிட்ட பன்னிரண்டு பேரின் ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை இன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றது.



இந்த வழக்கு தொடர்பிலான விசாரணை இறுதியாக கடந்த செப்டெம்பர் மாதம் இடம்பெற்ற போது மனுதாரர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கே.எஸ்.இரத்தினவேல், 58 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் சானக்க குணவர்தனவை குறுக்கு விசாரணை செய்திருந்தார்.

 

இந்த விசாரணையின் போது மேஜர் ஜெனரல் சானக்க குணவர்தன முன்னர் தெரிவித்த கருத்துக்களுக்கும் தற்போது தெரிவிக்கும் கருத்துக்களுக்கும் முரண்பாடுகள் உள்ளதாக மனுதாரர் தரப்பு சட்டத்தரணி சுட்டிக்காட்டியிருந்தார்.

 

58 ஆவது படைப்பிரிவின் படைத் தளபதி, கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் நடைபெற்றவழக்கு விசாரணையின் போது, இராணுவத்தினரிடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர்களின் பெயர்ப் பட்டியல் தம்மிடம் இருப்பதாக கூறியதாக சட்டத்தரணி நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

 

எனினும் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகளின் பெயர் பட்டியலே தம்மிடம் இருப்பதாகவே முன்னர், தாம் நீதிமன்றில் தெரிவித்ததாகவும் மேஜர் ஜெனரல் சானக்க குணவர்த்தன சுட்டிக்காட்டியிருந்தார்.

 

எவ்வாறாயினும் இன்றைய தினம் நீதிமன்றில் சாட்சியமளித்த மேஜர் ஜெனரல் சானக்க குணவர்த்தன இறுதி யுத்தத்தின்போது வடக்கு கிழக்கில் காணமால்போனவர் தொடர்பில் எவ்வித ஆவணங்களும் தெரியாது என தெரிவித்துள்ளார்.

 

பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தையும் சட்டத்தையும் மதிப்பவர்கள் எனவும் நீதிமன்றின் ஊடாக தமக்கு நீதி கிடைக்கும் என நம்புவதாகவும் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

 

எழிலன் சார்பில் அவரது மனைவியான வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனுடன், கிருஷ்ணகுமார் ஜெயகுமாரி, விஸ்வநாதன் பாலநந்தினி, கந்தசாமி காந்தி, கந்தசாமி பொன்னம்மா ஆகியோரே இந்த ஆட்கொணர்வு மனுக்களை தாக்கல் செய்திருக்கின்றனர்.

முதலாம் இணைப்பு

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போகச்செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன் எனப்படும் சின்னத்துரை சசிதரன் உள்ளிட்ட ஐந்து பேரின் ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை இன்றும் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் இடம்பெறவுள்ளது.


எழிலன் சார்பில் அவரது மனைவியான வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனுடன், கிருஷ்ணகுமார் ஜெயகுமாரி, விஸ்வநாதன் பாலநந்தினி, கந்தசாமி காந்தி, கந்தசாமி பொன்னம்மா ஆகியோரே இந்த ஆட்கொணர்வு மனுக்களை தாக்கல் செய்திருக்கின்றனர்.


இந்த ஆட்கொணர்வு மனுக்கள் தொடர்பிலான வழக்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.எம். சம்சுதீன் முன்னிலையில் கடந்த செப்ரெம்பர் மாதம் 29 ஆம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிந்த போது நவம்பர் மாதம் 22 ஆம் திகதி மீண்டும் குறித்த வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்படும் என  நீதிபதி அறிவித்திருந்தார்.


எனினும் கடந்த நவம்பர் மாதம் 2 ஆம் திகதி குறித்த வழக்கு விசாரணையின் போது அரசதரப்பு சட்டத்தரணி மன்றிற்கு சமூகமளிக்க முடியாது என நீதிமன்றிற்கு அறிவித்திருந்தார்.


இதற்கமைய குறித்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளபடும் என நீதிபதி அறிவித்திருந்தார்.


இறுதியாக கடந்த செப்டெம்பர் மாதம் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது மனுதாரர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கே.எஸ்.இரத்தினவேல், 58 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் சானக்க குணவர்தனவை குறுக்கு விசாரணை செய்திருந்தார்.


இந்த விசாரணையின் போது மேஜர் ஜெனரல் சானக்க குணவர்தன முன்னர் தெரிவித்த கருத்துக்களுக்கும் தற்போது தெரிவிக்கும் கருத்துக்களுக்கும் முரண்பாடுகள் உள்ளதாக மனுதாரர் தரப்பு சட்டத்தரணி சுட்டிக்காட்டியிருந்தார்.


58 ஆவது படைப்பிரிவின் படைத் தளபதி, கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் நடைபெற்றவழக்கு விசாரணையின் போது, இராணுவத்தினரிடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர்களின் பெயர்ப் பட்டியல் தம்மிடம் இருப்பதாக கூறியதாக சட்டத்தரணி நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.


எனினும் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகளின் பெயர் பட்டியலே தம்மிடம் இருப்பதாகவே முன்னர், தாம் நீதிமன்றில் தெரிவித்ததாகவும் மேஜர் ஜெனரல் சானக்க குணவர்தன சுட்டிக்காட்டினார்.

செய்தி சேவை
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டம்
[ Tuesday,3 January 2017, 04:21:35 ]
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மூன்று அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இன்று இரண்டாவது நாளாக உணவுதவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும்...
ஸ்ரீலங்கா படையினர் குறித்து ஐநா சிறப்பு அறிக்கையாளர் அறிக்கை
[ Tuesday,3 January 2017, 04:21:35 ]
வடமாகாணத்தில் நிலைகொண்டுள்ள படையினரை குறைக்க வேண்டும் எனவும் ஸ்ரீலங்கா படையினர் வசமுள்ள பொதுமக்களுக்குச் சொந்தமான 6124 ஏக்கர் காணிகள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்றும் சிறுபான்மையினர் தொடர்பான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்
மேலும்...
வடக்கில் புத்தர் சிலை உடைப்பு; தென்னிலங்கை கும்பலொன்றே மேற்கொண்டது
[ Tuesday,3 January 2017, 04:21:35 ]
வடக்கில் புத்தர் சிலைகள் உடைக்கப்படுவதன் பின்னணியில் யெற்படும் சூத்தரதாரிகளைக் கண்டறிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜே.வி.பி வலியுறுத்தியுள்ளது.
மேலும்...
கேப்பாபுலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் கண்டனப் போராட்டம்
[ Tuesday,3 January 2017, 04:21:35 ]
ஸ்ரீலங்கா விமானப்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கேப்பாபுலவு மக்கள் முன்னெடுத்துள்ள போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்
மேலும்...
பாலியல் வன்கொடுமைகள் தொடர்பில் ஜெனீவாவில் ஸ்ரீலங்கா மீது கடும் கேள்விக்கணை
[ Tuesday,3 January 2017, 04:21:35 ]
ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐ.நா கூட்டத் தொடரில் ஸ்ரீலங்கா அரசு, பாலியல் வன்கொடுமைகள் உட்பட பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் இராணுவ மயமாக்கல் தொடர்பில் கடுமையான கேள்விகளுக்கு முகம்கொடுத்துள்ளது.
மேலும்...
யுத்தக் குற்ற விவகாரம் : தண்டனை வழங்காதிருக்க ஸ்ரீலங்கா பிடிவாதம்
[ Tuesday,3 January 2017, 04:21:35 ]
ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சர்வதேச சட்டத்தின் கீழ் இழைக்கப்பட்ட போர் குற்றங்களுக்கு சட்டவிலக்களிப்பை வழங்குவதில் ஸ்ரீலங்கா அரசாங்கம் பிடிவாதமாக உள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள
மேலும்...
சிறப்புச் செய்திகள்
அறிவித்தல்கள்
பெ திருமதி வேலுப்பிள்ளை மாரிமுத்து
பி யாழ். மிருசுவில்
வா யாழ். மிருசுவில்
தி 24-01-2017
பெ திருமதி தியாகராஜா மனோன்மணி
பி யாழ். வடமராட்சி கிழக்கு
வா யாழ். வடமராட்சி கிழக்கு
தி 23-01-2017
பெ திருமதி நேசமலர் காலிங்கராஜா
பி யாழ். இணுவில்
வா லண்டன்
தி 22-01-2017
பெ திரு சின்னத்துரை முருகேசு
பி யாழ். புத்தூர்
வா கனடா
தி 22-01-2017
பெ திருமதி சற்குணவதி தர்மராஜா (வனஜா)
பி கொழும்பு
வா நெதர்லாந்து Roermond
தி 21-01-2017
பெ திரு நாகேந்திரா நடராஜா
பி யாழ். உரும்பிராய்
வா கொழும்பு ரத்மலானை
தி 21-01-2017
பெ ஆறுமுகம் ரகுநாதன்
பி திருகோணமலை
வா திருகோணமலை
தி 19-01-2017
பெ திரு ஆறுமுகம் பசுபதிபிள்ளை
பி யாழ். புங்குடுதீவு
வா பிரான்ஸ்
தி 20-01-2017