Flash News
செய்திகள்
கலப்பு நீதிமன்றம், சர்வதேச நீதிபதிகள் யோசனையை மீண்டும் நிராகரித்தது ஸ்ரீலங்கா
[ Wednesday,4 January 2017, 10:30:56 ]   

உள்ளக விசாரணையில் கலப்பு நீதிமன்றம் மற்றும் சர்வதேச நீதிபதி உள்வாங்கப்பட வேண்டும் என்று நல்லிணக்க செயலணி முன்வைத்திருக்கும் பரிந்துரைகளை ஏற்கமாட்டோம் என ஸ்ரீPலங்கா அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான ராஜித சேனாரத்ன ஆணித்தரமாக மீண்டும் கூறியுள்ளார். 

யார் எவ்வகையான பரிந்துரைகளை முன்வைத்தாலும் அதனை ஏற்பதா? இல்லையா? என்பது பற்றி அமைச்சரவையே இறுதி முடிவை எடுக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.


நல்லிணக்கப் பொறிமுறை தொடர்பான கருத்தறியும் செயலணியின் அறிக்கை நேற்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து அரசாங்கத்திடம் சமர்பிக்கப்பட்டது.

இதில் ஸ்ரீலங்காவில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கும் உள்நாட்டு பொறிமுறையில் கலப்பு நீதிமன்றம் ஒன்று அமைக்கப்படுவதோடு அதன் ஒவ்வொரு அமர்விலும் சர்வதேச நீதிபதி ஒருவராவது இடம்பெற வேண்டுமென நல்லிணக்க பொறிமுறை பற்றிய கலந்தாலோசனைக்கான செயலணி பரிந்துரை செய்துள்ளது.

கொழும்பு – நாரஹேன்பிட்டியிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்றைய தினம் நடைபெற்றது.

நல்லிணக்க செயலணியின் இந்தப் பரிந்துரை தொடர்பாக இதன்போது ஊடகவியலாளர்கள் வினவினர்.

“சில அமைப்புகளுக்கும், நிறுவனங்களுக்கும் பரிந்துரைகளை முன்வைக்க முடியும். ஆனால் உள்ளகப் பொறிமுறையில் வெளிநாட்டு பிரதிநிதித்துவம் சேர்க்கப்போவதில்லை என்ற உறுதியான நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் இருக்கின்றது. தொழில்நுட்ப உதவி மற்றும் ஆலோசனைகளை வெளிநாட்டு நிபுணர்கள் வழங்க முடியும். ஆனால் விசாரணைகளில் உள்நாட்டு நீதிபதிகளே பங்குகொள்வார்கள். நல்லிணக்க செயலணி போன்று பலரது அறிக்ககைள் காணப்படுகின்றன. சமர்பிக்கப்படுகின்ற அறிக்கைகளில் உள்ள விடயங்களை ஆராய தயாராகவே இருக்கின்றோம். ஆனால் அதிலுள்ள  எல்லாவற்றையும் முழுமையாக அமுல்படுத்த முடியாது. அதில் என்னென்ன விடயங்களை அனுமதிக்க முடியும் என்பதை அமைச்சரவையே தீர்மானிக்கும். வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதியோம் என்பதை ஸ்ரீலங்காவிற்கு விஜயம் செய்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரிடமும் தெரிவித்தோம். அதனை அவர் ஏற்றுக்கொண்டார். விசேட ஞானமுடைய அல்லது உலகளாவிய ரீதியலான நிபுணர்களை அல்ல, உள்நாட்டிலுள்ள சிலரையே இந்த செயலணிக்கு நாம் நியமித்தோம். அதன்படி அவர்கள் அறிக்கை சமர்பித்த பின்னர் அதிலுள்ள விடயங்களை ஏற்பதா? இல்லையா? என்பதை நாமே தீர்மானிப்போம்” - என்றார்.


செய்தி சேவை
கிளிநொச்சி திருவையாற்றில் முன்னாள் போராளி ஒருவர் கைது
[ Wednesday,4 January 2017, 10:30:56 ]
கிளிநொச்சி திருவையாறு பகுதியைச் சேர்ந்த முன்னாள் பேராளியான இளைஞர் ஒருவர் நேற்றிரவு கைதுசெய்யப்பட்டுள்ளார். வாகனத்தில் வந்தவர்கள் மூவர் தம்மை வவுனியா பொலிஸார் என அடையாளப்படுத்தி, குறித்த இளைஞரை
மேலும்...
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளார் ; டெனிஸ்வரன்
[ Wednesday,4 January 2017, 10:30:56 ]
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் உள்ளதாக வடமாகாண மீன்பிடி அமைச்சர் ப.டெனிஸ்வரன் தெரிவித்தார். தமிழ் மக்களுக்கான அடிப்படை உரிமை கிடைக்கும் போது தமிழீழ விடுதலைப் புலிக
மேலும்...
27 வருடங்களின் பின்னர் சொந்த ஊர் திரும்பிய மக்கள்
[ Wednesday,4 January 2017, 10:30:56 ]
யாழ்ப்பாணம் வலிகாமம், வடக்கு ஊறணி படகுத்துறை மற்றும் சுமார் 400 மீற்றர் நீளமான கரையோர பகுதியும், தரையில் 2 ஏக்கர் நிலமும் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு அமைய தையிட்டி பிரதேசத்திலும் காங்கேசன்
மேலும்...
ஐ.பி.சி இசை நாளை முதல்
[ Wednesday,4 January 2017, 10:30:56 ]
உலகம் முழுவதும் பரந்துவாழும் தமிழர்கள் தைப்பொங்கல் திருநாளை நாளைய தினம் கொண்டாடவுள்ள நிலையில், ஐ.பி.சி தமிழ் உலகத் தமிழர்களுக்காக புதிய தொலைக்காட்சி அலைவரிசையொன்றை ஆரம்பிக்கவுள்ளது.
மேலும்...
ஊரணி பிரதேசம் மக்கள் பாவனைக்காக நாளை கையளிப்பு
[ Wednesday,4 January 2017, 10:30:56 ]
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள சில பிரதேசங்கள் மக்களின் பாவனைக்காக கையளிக்கப்படவுள்ளன. வலிகாமம்.வடக்கு ஊறணி படகுத்துறை மற்றும் அதனோடு இணைந்த சுமார் 300 தொடக்கம் 400 மீற்றர்
மேலும்...
சர்வதேச நீதிபதிகளின் பங்கு குறித்து அரசிற்குள்ளேயே முரண்பாடுகள்: லண்டனில் மங்கள சமரவீர
[ Wednesday,4 January 2017, 10:30:56 ]
சர்வதேச நீதிபதிகளின் பங்கு குறித்து அரசிற்குள்ளேயே முரண்பாடுகள்: லண்டனில் மங்கள சமரவீர
மேலும்...
சிறப்புச் செய்திகள்
அறிவித்தல்கள்
பெ திருமதி சந்திரசேகரம்பிள்ளை திருபுரிநாகேஸ்வரி அம்மா
பி யாழ். வட்டுக்கோட்டை
வா திருகோணமலை
தி 04-01-2017
பெ திருமதி பத்மினிதேவி பத்மநாபபிள்ளை
பி யாழ். கோண்டாவில்
வா அவுஸ்திரேலியா sydney
தி 04-01-2017
பெ திருமதி சரஸ்வதி கணேஸ்(மம்மி)
பி யாழ். சரசாலை
வா லண்டன்
தி 03-01-2017
பெ திரு சீமாம்பிள்ளை மரியநாயகம்
பி மன்னார் ஒலிமடு நானாட்டான்
வா மன்னார் ஒலிமடு நானாட்டான்
தி 02-01-2017
பெ திருமதி மங்களேஸ்வரி மேனன்
பி யாழ். சங்குவேலி
வா லண்டன்
தி 02-01-2017
பெ திருமதி இராஜேஸ்வரி சிறிஸ்கந்தராஜா(கெங்கா)
பி யாழ். நீராவியடி
வா ஜெர்மனி Kaufbeuren
தி 01-01-2017
பெ திரு கோவிந்தர் சோமசுந்தரம்
பி கிளிநொச்சி பூநகரி
வா கிளிநொச்சி பூநகரி
தி 26-12-2016
பெ திரு பாலசுப்பிரமணியம் அதீஸ்
பி கனடா
வா கனடா
தி 26-12-2016