Flash News
செய்திகள்
சர்வதேச நீதிபதிகளை தவிர்க்க ஐ.நா இணங்கவில்லை - சிறிலங்காவின் கூற்றை ஐ.நா நிராகரிப்பு
[ Thursday,5 January 2017, 12:35:29 ]   

போர்க்குற்ற நீதிமன்ற விசாரணைப் பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகளை உள்வாங்குவதில்லை என்ற சிறிலங்காவின் நிலைப்பாட்டினை ஐ.நா ஏற்றுக்கொண்டிருந்ததாக சிறிலங்கா தெரிவித்திருந்தமையை ஐ.நா இன்று முற்றாக நிராகரித்திருக்கிறது.

ஐ.நா மனித உரிமை உயர்ஸ்தானிகர் செய்ட் ராத் அல் ஹுசைன் சிறிலங்கா போர்க்குற்ற கலப்பு நீதிமன்ற விசாரணைப் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளின் அதிகரித்த பங்களிப்பினையே எப்போதும் வலியுறுத்திவருவதாகவும், அந்த நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என்றும் ஐ.நா தெரிவித்திருக்கிறது.


நல்லிணக்கப் பொறிமுறை குறித்த மக்கள் கருத்தறியும் செயலணி தனது அறிக்கையில் சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித நேயத்திற்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்ட மோசமான குற்றங்கள் குறித்த குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்ய சர்வதேச நீதிபதிகள், பிரதிநிதிகளை உள்ளடக்கிய கலப்பு விசேட நீதிமன்றம் அமைக்கப்படவேண்டும் என்று பரிந்துரை செய்திருந்தது.

ஆனாலும் இந்தப் பரிந்துரையை ஏற்கப்போவதில்லை என்றும், உள்ளூர் நீதிவிசாரணைகளில் வெளிநாட்டு நீதிபதிகள் ஒருபோதும் உள்வாங்கப் படமாட்டார்கள் என்ற நிலைப்பாட்டிலிருந்து சிறிலங்கா ஒருபோதும் மாறாது என்று அமைச்சரவைப் பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரட்ண நேற்றையதினம் கூறியிருந்தார்.

அத்துடன் போர்க்குற்ற நீதிமன்ற விசாரணைப் பொறிமுறைகளில் வெளிநாட்டு நீதிபதிகளை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்ற சிறிலங்காவின் நிலைப்பாட்டினை ஐ.நா பிரநிதிகள் பலரும், குறிப்பாக கடந்த வருடம் பெப்பிரவரி மாதம் சிறிலங்காவிற்கு விஜயம் செய்திருந்த ஐ.நா மனித உரிமை உயர்ஸ்தானிகர் செய்ட் ராத் அல் ஹுசைன் அவர்களே ஏற்றுக்கொண்டிருந்ததாகவும் அவர் நேற்றையதினம் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்திருந்தார்.

அவரது இந்தக் கருத்தினை ஐ.நா மனித உரிமை பேரவை முற்றாக மறுதலித்திருக்கிறது.

இன்று அதிகாலை அது தனது டுவிட்டர் பதிவில், ஐ.நா மனித உரிமை உயர்ஸ்தானிகர் செய்த் ராத் அல் ஹுசைன் எப்போதுமே சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றப் பொறிமுறை ஒன்றினூடாகவே சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் குறித்த விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்று வலியுறுத்திவந்ததாகவும், அந்த நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை என்று ஐ.நா மனித உரிமை பேரவை தெரிவித்திருக்கிறது.

அதுமாத்திரமன்றி, வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றப் பொறிமுறை ஒன்றினையே நல்லிணக்கப் பொறிமுறை குறித்த மக்கள் கருத்தறியும் செயலணியும் பரிந்துரை செய்திருப்பதனை செய்த் ராத் அல் ஹுசைன் மகிழ்வுடன் வரவேற்றிருப்பதாகவும் ஐ.நா மனித உரிமை பேரவை தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்திருக்கிறது.

ஐ.நா மனித உரிமை பேரவையில் 2015 ஆம் ஆண்டு ஐ.நா தீர்மானத்திற்கு சிறிலங்கா இணை அனுசரணை வழங்கியிருந்தது. இந்தத் தீர்மானத்தில், சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றம் ஒன்று அமைக்கப்பட்டு போர்க்குற்றங்கள் குறித்த நீதிவிசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்று கண்டிப்பாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஐ.நா தீர்மானத்தினை முழுமையாக நிறைவேற்றுவதாக ஐ.நாவில் சிறிலங்கா உறுதிகூறியிருந்த போதிலும், சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் உள்ளூர் நீதிமன்ற விசாரணைகளில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்வாங்கப் போவதில்லை என்று திரும்பத்திரும்பக் கூறிவருகிறார்கள்.

இந்த நிலையில், கடந்த வருடம் பெப்பிரவரி மாதம் சிறிலங்கா விஜயம் செய்திருந்த ஐ.நா மனித உரிமை உயர்ஸ்தானிகர் செய்த் ராத் அல் ஹுசைன், சிறிலங்கா நீதித்துறையில் மிகவும் திறமைவாய்ந்த நீதிபதிகள் பலர் இருக்கிறார்கள் என்றாலும், கடந்த காலங்களில் சிறிலங்கா நீதித்துறை கடுமையாக அரசியல்மயப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது என்றும், இதனால் அது, அதன் நம்பிக்கைத் தன்மையினை இழந்திருக்கிறது என்றும் தெரிவித்திருந்தார். இதனாலேயே, யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கைகுரிய வகையில் சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றப் பொறிமுறை ஒன்றினூடாகவே போர்க்குற்ற விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.

செய்தி சேவை
சவேந்திர சில்வாவுக்கு அழைப்பாணை; அடுத்தமாதம் தீர்ப்பை அறிவிக்கும் நீதிமன்றம்
[ Thursday,5 January 2017, 12:35:29 ]
வன்னி இறுதிக்கட்ட போரில் சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பிலான வழக்கில் 58ஆவது படைப் பிரிவின் கட்டளைத் தளபதியாக செயற்பட்ட மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு அழைப்பாணை விடுப்பதா, இல்லையா என்பது குறித்த தீர்மானத்தை
மேலும்...
புறக்கோட்டை குண்டுத் தாக்குதல் : குற்றவாளிக்கு 20 வருட சிறை
[ Thursday,5 January 2017, 12:35:29 ]
புறக்கோட்டை புகையிரத நிலையத்தில் 2008 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த நபருக்கு 20 வருட கடுழீய சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேலும்...
ஸ்ரீலங்கா பிரஜைகளுக்கான அடிப்படை சம்பள அறிவிப்பு விரைவில்
[ Thursday,5 January 2017, 12:35:29 ]
ஸ்ரீலங்கா பிரஜை ஒவ்வொருவரும் மாதாந்தம் பெற வேண்டிய ஆகக்குறைந்த அடிப்படைச் சம்பளம் தொடர்பிலான அறிவிப்பை பிரதமர் விரைவில் முன்வைப்பாரென ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்
மேலும்...
போரின் போது ஆங்காங்கே குற்றங்கள் இடம்பெற்றது உண்மையே : கோட்டா
[ Thursday,5 January 2017, 12:35:29 ]
போரின் போது, அங்காங்கே சில குற்றச்செயல்கள் இடம்பெற்றன என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச ஏற்றுக் கொண்டுள்ளார்.சிறிலங்காவின் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது
மேலும்...
புதிய அரசியலமைப்புக்கு மக்களின் அங்கீகாரம் அவசியம்
[ Thursday,5 January 2017, 12:35:29 ]
அரசியலமைப்பிலுள்ள 13 ஆவது திருத்த சட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தி அனைத்து இன மக்களும் பயனடையும் பொருட்டு புதிய அரசியல் சாசனத்தை அமைப்பது குறித்து முன்னெடுப்புக்கள் இடம்பெற்று வருகின்றன.
மேலும்...
இராணுவ வீரர்களை சட்டத்தின் முன்நிறுத்த போவதில்லை
[ Thursday,5 January 2017, 12:35:29 ]
பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டை பாதுகாத்த இராணுவ வீரர்களை சட்டத்தின் முன் நிறுத்தப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
மேலும்...
சிறப்புச் செய்திகள்
அறிவித்தல்கள்
பெ திருமதி அபிதகுசலாம்பிகை தியாகேந்திரன்
பி யாழ். பருத்தித்துறை
வா யாழ். பருத்தித்துறை
தி 28-02-2017
பெ திரு சூசைப்பிள்ளை கிளமென்ற் பெர்னான்டோபிள்ளை
பி யாழ். ஊர்காவற்துறை
வா யாழ். ஊர்காவற்துறை
தி 27-02-2017
பெ திருமதி குமாரவேலு நாகம்மா
பி யாழ். நெடுந்தீவு
வா யாழ். நெடுந்தீவு
தி 26-02-2017
பெ திரு சிவசுப்பிரமணியம் சிவகணேசன்
பி யாழ். ஏழாலை
வா யாழ். ஏழாலை
தி 26-02-2017
பெ செல்வி சுகண்யா சிவஞானம்
பி புத்தளம் முந்தல்
வா லண்டன் Kingston
தி 25-02-2017
பெ திருமதி வைரமுத்து சிகாமணி
பி யாழ். அளவெட்டி
வா நெதர்லாந்து
தி 25-02-2017
பெ Dr. வயித்திலிங்கம் பாலசேகரம்
பி யாழ். கரம்பன்
வா பிரித்தானியா Ilford
தி 25-02-2017
பெ திருமதி மரியாம்பிள்ளை கனகம்மா
பி யாழ். நீர்வேலி
வா யாழ். சாவகச்சேரி
தி 24-02-2017