Flash News
செய்திகள்
உள்ளக பொறிமுறையில் நம்பிக்கையில்லை; பரிந்துரையை செயற்படுத்த முடியும்
[ Friday,6 January 2017, 02:28:13 ]   

உள்நாட்டு பொறிமுறையில் நம்பக்கத் தன்மை இல்லை என்பதாலேயே சர்வதேச நீதிபதிகளையும், வழக்குத் தொடுணர்களையும், விசாரணையாளர்களையும் உள்ளடக்கசிய சர்வதேச நீதிப் பொறிமுறையை பாதிக்கப்பட்ட மக்கள் வலியுறுத்தியிருந்ததாக நல்லிணக்க பொறிமுறை பற்றிய கலந்தாலோசனை செயலணி வலியுறுத்தியுள்ளது.

இந்த நாட்டில் இதற்கு முன்னர் பல தடவைகள் இவ்வாறான ஆணைக்குழுக்களும், செயலணிகளும் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த அறிக்கைகளில் சுட்டிக்காட்டப்பட்ட விடயங்களை அரசு நிராகரித்தமையாலேயே உள்ளக விசாரணையில் நம்பத்தன்மை அற்றுப்போயுள்ளதாகவும் அந்த செயலணி சுட்டிக்காட்டியுள்ளது.

நல்லிணக்கச் செயலணி நேற்று அரச தகவல் திணைக்களத்தில் நடத்திய ஊட சந்திப்பிலேயே இந்த விடயங்கள் வலியுறுத்தப்பட்டன.

நல்லிணக்கச் செயலணி நேரடியாக மக்களின் கருத்துகளைப் பிரதிபளிக்ககின்ற அதேவேளை மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்திச் செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

சுயாதீனமாக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த விசாரணை அறிக்கையில் மக்களின் கருத்துகளை அரசு நிராகரிக்க முடியாது எனவும், அதற்கு சிவில் அமைப்புகள் இடமளிக்கக் போவதில்லை என்றும் கூறியுள்ளது.

இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முகமாக ஐ.நா. மனிதவுரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானத்தின் முக்கிய நான்கு அம்சங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் மக்கள் கருத்துகளைக் கோருவதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க பொறிமுறை பற்றிய கலந்தாலோசனை செயலணியின் அறிக்கை கடந்த 2ஆம் திகதி அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டது. 

இந்த அறிக்கையில் வடக்கு, கிழக்கு மக்கள் சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிப் பொறிமுறையின் மூலம் நம்பக்கத்தன்மையையும் பாதிக்கப்பட்ட நீதியையும் பெற்றுக்கொள்ள முடியுமென வலியுறுத்தியுள்ளனர்.

எனினும் சர்வதேச நீதிபதிகளையும், விசாரணையாளர்களையும் அரசு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என, வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் ராஜித சேனாரத்னகூறியிருந்தார்.

மேலும், அமைப்புகளுக்கும், நிறுவனங்களுக்கும் இவ்வாறான  பரிந்துரைகளை முன்வைக்க முடியும். எனினும் அரசே இறுதியில் தீர்மானிக்கும். அரசின் நிலைப்பாட்டில் ஒருபோதும் மாற்றம் ஏற்படாது என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையிலேயே நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட, செயலணியின் தலைவர் மனோரி முத்தெட்டுவகம விசாரணைப் பொறிமுறைகள் குறித்து மக்கள் பெருமளவில் நம்பிக்கை கொண்டிராதபோதும், தமது காயங்களுக்கு இந்த அரசாங்கத்தின் கீழ் தீர்வு வழங்கப்படாவிட்டால் அது ஒருபோதும் கிடைக்கப்போவதில்லையென கூறியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, நிலைமாறு கால நீதிப் பொறிமுறையை தலைமைதாங்கி முன்னெடுத்துச் செல்லும் பணியை அரசாங்கம் தற்போது மேற்கொள்ளவில்லை அச்செயலணியின் செயலாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்துள்ளார்.

தமது பரிந்துரைகளில் அரசாங்கம் நிலைமாறு கால பொறிமுறைகளை தலைமைதாங்கி முன்னெடுத்துச்செல்லவேண்டும் என்பதை வலுவாக வலியுறுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “நிலைமாறு நீதியை முன்னெடுத்துச்செல்லும் தலைமைப் பாத்திரத்தை அரசாங்கம் பொறுப்பெடுத்துச் செல்லவேண்டியது அவசியமாகும் என்பதை நாம் காத்திரமான முறையில் கூறுகின்றோம் இதுவரையில் அரசாங்கம் அதனைச் செய்யவில்லை அதனை அரசாங்கம் செய்யவேண்டும்.

பொறிமுறைகளை அமைப்பதற்கு முன்பாக மட்டுமன்றி அதன் பின்னரும் மக்களுடன் கலந்தாலோசனை செய்யவேண்டியது அவசியமாகும் இந்த ஒவ்வொரு பொறிமுறையும் வெளித்தொடர்பை கொண்டிருப்பதற்கான தொடர்பாடல் பிரிவொன்றைக் கொண்டிருக்க வேண்டியது அவசியமாகும். அப்போதுதான் மாறுபட்ட பொறிமுறைகள் மேற்கொள்ளும் பணிகள் தொடர்பாக மக்களுடன் தொடர்ச்சியான பரிமாற்றம் இருக்கும்.

எமது பரிந்துரைகளைப் பொறுத்தமட்டில் தொடர்பாடல் என்ற விடயத்தை நாம் வலுவாக வலியுறுத்தியுள்ளோம். ஏனெனில் அது மிகமிக அத்தியாவசியமாக தேவைப்படுகின்றது என்பதை நாம் கண்டறிந்தோம். அத்தோடு நிலைமாறு கால நீதிக்கு அரசியல் சாசன உரிமையை பெற்றுக்கொடுப்பது தொடர்பாகவும் கருத்துக்களை முன்வைத்துள்ளோம்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

​“நல்லிணக்க கலந்தாலோசனைச் செயலணி அறிக்கையை முன்வைத்துள்ளபோதும் அதன் பரிந்துரைகளை அரசாங்க அமைச்சர் ராஜித நிராகரித்திருந்தார். இந்த நிலையில் உங்களுடைய அறிக்கை முன்னர் பல்வேறு ஆiணைக்குழுக்களால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளைப் போன்று குப்பைக்கூடைக்குள் தூக்கி வீசிப்படமாட்டது என்பதற்கு என்ன உத்தரவாதம். இந்த அறிக்கை நடைமுறைப்படுத்தப்படும் என்பதில் நம்பிக்கை உள்ளதா?“ என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

"இரு வருடங்களுக்கு முன்பு இந்த நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதில் இந்த சிவில் சமூகமே பெரும் பங்கை வகித்திருந்தது. எங்கள் அறிக்கையை நிராகரித்த அரசாங்கத்திடம் அதனை ஏற்றுக்கொள்ளச் செய்யும் மாற்றத்தையும் எங்களால் ஏற்படுத்த முடியும் என்று நம்புகின்றோம்“)​ என செயலாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை, யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூறுவதற்கு சகலருக்கும் உரிமை உள்ளது. அவர்களின் நினைவு இடங்களுக்கு மேல் உள்ள கட்டடங்களை அகற்றி நினைவு கூறுவதற்கான இடம் வழங்கப்பட வேண்டும். நினைவு பூங்காங்கள் அமைப்பதன் ஊடாக நல்லிணக்கத்தை ஊக்கப்படுத்த முடியும் என்ற விடயத்தை தமது அறிக்கையில் முன்மொழிப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மாத்திரமன்றி தெற்கில் பல்வேறு வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் கூட சர்வதேச நிபுணர்கள் அல்லது விசாரணையாளர்களை விரும்புவதாகவும் அச்செயலணி சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்தி சேவை
கிளிநொச்சி திருவையாற்றில் முன்னாள் போராளி ஒருவர் கைது
[ Friday,6 January 2017, 02:28:13 ]
கிளிநொச்சி திருவையாறு பகுதியைச் சேர்ந்த முன்னாள் பேராளியான இளைஞர் ஒருவர் நேற்றிரவு கைதுசெய்யப்பட்டுள்ளார். வாகனத்தில் வந்தவர்கள் மூவர் தம்மை வவுனியா பொலிஸார் என அடையாளப்படுத்தி, குறித்த இளைஞரை
மேலும்...
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளார் ; டெனிஸ்வரன்
[ Friday,6 January 2017, 02:28:13 ]
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் உள்ளதாக வடமாகாண மீன்பிடி அமைச்சர் ப.டெனிஸ்வரன் தெரிவித்தார். தமிழ் மக்களுக்கான அடிப்படை உரிமை கிடைக்கும் போது தமிழீழ விடுதலைப் புலிக
மேலும்...
27 வருடங்களின் பின்னர் சொந்த ஊர் திரும்பிய மக்கள்
[ Friday,6 January 2017, 02:28:13 ]
யாழ்ப்பாணம் வலிகாமம், வடக்கு ஊறணி படகுத்துறை மற்றும் சுமார் 400 மீற்றர் நீளமான கரையோர பகுதியும், தரையில் 2 ஏக்கர் நிலமும் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு அமைய தையிட்டி பிரதேசத்திலும் காங்கேசன்
மேலும்...
ஐ.பி.சி இசை நாளை முதல்
[ Friday,6 January 2017, 02:28:13 ]
உலகம் முழுவதும் பரந்துவாழும் தமிழர்கள் தைப்பொங்கல் திருநாளை நாளைய தினம் கொண்டாடவுள்ள நிலையில், ஐ.பி.சி தமிழ் உலகத் தமிழர்களுக்காக புதிய தொலைக்காட்சி அலைவரிசையொன்றை ஆரம்பிக்கவுள்ளது.
மேலும்...
ஊரணி பிரதேசம் மக்கள் பாவனைக்காக நாளை கையளிப்பு
[ Friday,6 January 2017, 02:28:13 ]
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள சில பிரதேசங்கள் மக்களின் பாவனைக்காக கையளிக்கப்படவுள்ளன. வலிகாமம்.வடக்கு ஊறணி படகுத்துறை மற்றும் அதனோடு இணைந்த சுமார் 300 தொடக்கம் 400 மீற்றர்
மேலும்...
சர்வதேச நீதிபதிகளின் பங்கு குறித்து அரசிற்குள்ளேயே முரண்பாடுகள்: லண்டனில் மங்கள சமரவீர
[ Friday,6 January 2017, 02:28:13 ]
சர்வதேச நீதிபதிகளின் பங்கு குறித்து அரசிற்குள்ளேயே முரண்பாடுகள்: லண்டனில் மங்கள சமரவீர
மேலும்...
சிறப்புச் செய்திகள்
அறிவித்தல்கள்
பெ திருமதி சந்திரசேகரம்பிள்ளை திருபுரிநாகேஸ்வரி அம்மா
பி யாழ். வட்டுக்கோட்டை
வா திருகோணமலை
தி 04-01-2017
பெ திருமதி பத்மினிதேவி பத்மநாபபிள்ளை
பி யாழ். கோண்டாவில்
வா அவுஸ்திரேலியா sydney
தி 04-01-2017
பெ திருமதி சரஸ்வதி கணேஸ்(மம்மி)
பி யாழ். சரசாலை
வா லண்டன்
தி 03-01-2017
பெ திரு சீமாம்பிள்ளை மரியநாயகம்
பி மன்னார் ஒலிமடு நானாட்டான்
வா மன்னார் ஒலிமடு நானாட்டான்
தி 02-01-2017
பெ திருமதி மங்களேஸ்வரி மேனன்
பி யாழ். சங்குவேலி
வா லண்டன்
தி 02-01-2017
பெ திருமதி இராஜேஸ்வரி சிறிஸ்கந்தராஜா(கெங்கா)
பி யாழ். நீராவியடி
வா ஜெர்மனி Kaufbeuren
தி 01-01-2017
பெ திரு கோவிந்தர் சோமசுந்தரம்
பி கிளிநொச்சி பூநகரி
வா கிளிநொச்சி பூநகரி
தி 26-12-2016
பெ திரு பாலசுப்பிரமணியம் அதீஸ்
பி கனடா
வா கனடா
தி 26-12-2016